32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 122 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 122)
KGF சாப்டர் 2 ட்ரெய்லர் – மார்ச் 27 முதல் சினிமா

KGF சாப்டர் 2 ட்ரெய்லர் – மார்ச் 27 முதல்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ‘கேஜிஎஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கேஜிஎஃப் சாப்டர் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் […]

26/03/2022 Dinesh R
“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம் சினிமா

“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம்

வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் “பூ சாண்டி வரான்” படத்தை வெளியிடுகிறார். ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. JK விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை […]

25/03/2022 Dinesh R
RRR விமர்சனம் சினிமா

RRR விமர்சனம்

ஒரு படைப்பாளி, பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு, அதைத் தன் பார்வையாளர்களுக்கு, விஷுவல் அழகினை மேம்படுத்திக் கொடுத்தால்? ரத்தம் – ரணம் – ரெளத்திரம் பாகுபலி எனும் அதி பிரம்மாண்டத்திற்குப் பிறகு, ராஜமெளலியின் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு. பாகுபலியில் பேரருவியின் அழகு விஷுவலில் திரைக்குள் ஈர்க்கும் ராஜமெளலி, இப்படத்தில், பெருங்கூட்டத்திற்குள் ஒற்றை ஆளாய்ப் பாயும் ராம்சரணின் தீரத்தில் நம்மைத் தூக்கி உள்ளே போட்டுவிடுகிறார். சாத்தியமில்லாத ஒரு காட்சியைச் சாத்தியமாக்கி, அவரது மேஜிக்கிற்குக் கட்டுண்ட வைக்கிறார். படத்தின் முதற்பாதி […]

25/03/2022 Dinesh R
“இதயம் சொல்வதைக் கேளுங்கள்” – சூர்யா சினிமா

“இதயம் சொல்வதைக் கேளுங்கள்” – சூர்யா

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் […]

02/03/2022 Dinesh R
“இனி வில்லன் ரூட்க்குத் தயார் கண்ணு!” – எதற்கும் துணிந்த சத்யராஜ் சினிமா

“இனி வில்லன் ரூட்க்குத் தயார் கண்ணு!” – எதற்கும் துணிந்த சத்யராஜ்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் […]

02/03/2022 Dinesh R
சூர்யா: நடிப்பு நாயகன் – புரட்சி நாயகன் சினிமா

சூர்யா: நடிப்பு நாயகன் – புரட்சி நாயகன்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் […]

02/03/2022 Dinesh R
கடைசி விவசாயி விமர்சனம் சினிமா

கடைசி விவசாயி விமர்சனம்

பேச்சிலும் எழுத்திலும் முதல் இடத்தில் வைக்கப்படும் விவசாயிகள், அவர்களுக்கான தேவைகளின் போது கடைசி இடத்திலே வைக்கப்படுகிறார்கள். “உழவன் தான் உலகின் வேர்” என்று கவித்துவமாகச் சொன்னாலும் அவர்களின் பாடுகள் அப்படி இல்லை. கடைசி விவசாயி படத்தில் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருந்தும், அதை மிக நுணுக்கமாகத் தவிர்த்து ஒரு 83 வயது விவசாயினுடைய வாழ்வைக் கண்முன்னே நிறுத்தி அசத்தி இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். உசிலம்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் குளிக்கவும் கணக்குப் பார்த்து செலவு […]

12/02/2022 Dinesh R
மகான் விமர்சனம் சினிமா

மகான் விமர்சனம்

காந்தியக் கொள்கைகளின்பால் பிடிப்புக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், நாயகனுக்கு ‘காந்தி மகான்’ எனப் பெயர் வைக்கப்படுகிறது. அச்சிறுவனின் முதுகு தோள் உரிக்கப்பட்டு காந்தியக் கொள்கைகள் திணிக்கப்படுகிறது. உள்ளூற உணர்ந்து, விருப்பத்துடன் இல்லாமல் கடமைக்கெனக் காந்தியத்தைக் கடைபிடிக்கப்படுவதால் ஏற்படும் அழுத்தம், ஒருநாள் நீர்க்குமிழி போல் வெடிக்கிறது. அதன் பின் காந்தி மகான் வாழ்க்கை எதிர்பாராத திசையில் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது. அவ்வெள்ளத்தைத் தடுக்கும் அணையாக, மகானின் மைந்தன் ‘தாதா’பாய் நெளரோஜி வந்து சேருகிறான். காந்தியக் கொள்கைகளைத் தூக்கி […]

10/02/2022 Dinesh R
சாயம் திரைப்படம் – அதிகரிக்கும் திரையரங்குகள் சினிமா

சாயம் திரைப்படம் – அதிகரிக்கும் திரையரங்குகள்

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்தப் படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா (அபி சரவணன்) கதாநாயகனாக நடிக்க,  ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பைக் […]

08/02/2022 Dinesh R
பன்றிக்கு நன்றி சொல்லி – ஹீரோ நிஷாந்த் ரூஸோ சினிமா

பன்றிக்கு நன்றி சொல்லி – ஹீரோ நிஷாந்த் ரூஸோ

சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், சோனி லிவ் தளத்தில், ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ எனும் திரைப்படத்தை வெளியிட்டது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சினிமாவில் இயக்குனராகப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிஷாந்த் ரூஸோ (Nishanth Russo). கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்ட நிஷாந்த் ரூஸோவிற்கு நண்பர் ஒருவர் மூலமாக 2018இல் ‘ஆண்டனி’ என்கிற படத்தில் கதாநாயகனாகவும், சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாகவும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த […]

08/02/2022 Dinesh R
Bro Daddy விமர்சனம் OTT

Bro Daddy விமர்சனம்

தொடக்கப் புள்ளியில் இருந்து ஒரு புன்முறுவல், அவ்வப்போது வெடிச்சிரிப்பு என்று ஒரு இதமான அனுபவம் கிடைக்க வேண்டில் இந்தப் படத்துக்காக ஒதுக்குங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பொச்சடிப்பை நாக்குத் தருவது போல Bro Daddy பார்த்து முடித்ததும் இதே நினைப்பில் என்னைப் போல நீங்களும் சுற்றக் கூடும். மகனின் தோளில் கை போட்டுக் கலாய்த்துப் பேசும் நண்பனின் தந்தையைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த ரம்மியமான நினைவுகளையும் கிளப்பியது. லூசிபர் படைப்பு […]

29/01/2022 Dinesh R
மகான் – தந்தை மகனின் அதிரடிப் பயணம் சினிமா

மகான் – தந்தை மகனின் அதிரடிப் பயணம்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோரும் நடித்துள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம். சீயான் விக்ரம் தன் மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் […]

24/01/2022 Dinesh R
அகண்டா விமர்சனம் அயல் சினிமா

அகண்டா விமர்சனம்

அகண்டம் என்றால் முழுமை, பரம்பொருள், கடவுள் எனப் பொருள்படும். படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு இரண்டு வேடங்கள். அகண்டா ருத்ர சிக்கந்தர் அகோரி, மற்றும் ஊருக்கு நல்லது செய்யும் பணக்காரர் முரளி கிருஷ்ணா. பாலய்யா படத்தில் ஆடியன்ஸ் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை மட்டும் தந்தால் போதுமென்ற அதி தெளிவுடன் படத்தை இயக்கியுள்ளார் பொய்யபதி ஸ்ரீனு (Boyapati Srinu). அகண்டா அறிமுகமாகும் பொழுது 40 பேரைக் கொல்கிறார். க்ளைமேக்ஸில் 150 பேரைக் கொல்கிறார். பாலய்யா என்றாலே அதிநாயகன் (சூப்பர் ஹீரோ) தானே! […]

22/01/2022 Dinesh R
ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலில் ‘ஜெய்பீம்’ சினிமா

ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலில் ‘ஜெய்பீம்’

ஆஸ்கர் விருது குழு, விருது பெறும் கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் “சூரரைப் போற்று” 93 ஆவது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியான நொடியிலிருந்தே, […]

21/01/2022 Dinesh R