சினிமாபிழை விமர்சனம்
குழந்தைகளை மையப்படுத்தி வரும் படங்களில், கதையினூடாக மறைமுகமாகவோ, நேராகவோ பாடம் புகட்டுதலும் இருக்கும். பிழை படமும் அப்படியான ஒரு முயற்சி தான். ஆனால் பிழை ஒரு நல்ல பாடத்தைத் தாங்கி வந்திருந்தாலும் ஒரு நல்லபடமாக உருபெற சற்றே திணறுகிறது. வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு கல்வி என்பது கசப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால், அக்குழந்தை மாணவர்கள் மட்டம் தட்டப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சென்னை வர, அதன் பின் அவர்களுக்கு […]













