32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 135 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 135)
பாரம் – சொன்னதைச் செய்த மிஷ்கின் சினிமா

பாரம் – சொன்னதைச் செய்த மிஷ்கின்

சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தனித்துவமான படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது. சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது, முதல் ஆளாகப் பார்க்கவும் பாராட்டவும் தவறுவதில்லை. “பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘பாரம் படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காகத் தெருவில் […]

23/02/2020 Dinesh R
ஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம் சினிமா

ஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்

ஓம் எனத் தொடங்கப்பட்ட படத்தை, ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளனர். மகனால், லண்டன் ஓல்ட் ஏஜ் ஹோமில் சேர்க்கப்படுகிறார் பாரதிராஜா. அங்கே அவரது நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரளிக்கும் உயிலை உரியவரிடம் சேர்க்க ஸ்காட்லாந்திற்குக் கிளம்புகிறார். இடையில், தற்கொலைக்கு முயலும் ராசி நட்சத்திராவிடம் ஆதரவாகப் பேசி, அவரைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்கிறார். தன்னுடன் ஸ்காட்லாந்து வரை பயணித்தால், தற்கொலை எண்ணம் விலகும் எனக் கூறி ராசி நட்சத்திராவுடன் பயணிக்கிறார். பயணத்தின் முடிவில் என்னாகிறது […]

23/02/2020 Dinesh R
மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம் சினிமா

மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

மாஃபியா – குற்றத்தை நிறுவனமயப்படுத்தும் ஓர் இயக்கம் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, போதைப் பொருள் கடத்துவதை நிறுவனமயப்படுத்தும் திவாகர் குமரனைப் பிடிக்க நினைக்கிறார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆரியன். இதுதான் மாஃபியா படத்தின் கதை. Ground to Earth பெர்ஸ்னாலிட்டியாக நடித்துள்ளார் பிரசன்னா. டிகே (DK) எனும் திவாகர் குமரன், பெரிய சிண்டிகேட்டின் லோக்கல் தலைவராக இருந்தும், யாரையாவது மிரட்ட, தானே நேரடியாகக் களம் இறங்குகிறார். அவரது அலட்டலில்லாத அமைதி ரசிக்க வைக்கிறது. […]

22/02/2020 Dinesh R
பாரம் விமர்சனம் சினிமா

பாரம் விமர்சனம்

தேசிய விருது பெற்ற இப்படத்தின் தலைப்பே சற்று குழப்பம்தான். உடம்பு முடியாமல் படுத்துவிடும் முதியவர்களை தான் ‘பாரம்’ எனத் தலைப்பு சுட்டுகிறதோ என எண்ண வேண்டியுள்ளது. தலைக்கூத்தல் (Thalaikkoothal – தலைக்கு ஊத்தல்) என்பது பற்றி ஆன்லைனில் படிக்க நேரிடும் இயக்குநர் பிரியா கிருஷ்ணாசாமிக்கு, மேலும் அது சம்பந்தமான ஒரு உண்மைக் கதையும் தெரிய வருகிறது. இது கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியதென முடிவுக்கு வந்து, திரைப்படமாக எடுக்க ஆய்வு மேற்கொள்கிறார். இப்படமும் டாக்குமென்ட்ரி டிராமா வகையைச் சார்ந்ததே! […]

21/02/2020 Dinesh R
காட் ஃபாதர் விமர்சனம் சினிமா

காட் ஃபாதர் விமர்சனம்

எளிமையில் எண்ணற்ற வலிமையுண்டு என்பதை நிரூபித்து இருக்கிறது காட்ஃபாதர். ஒரு சாதாரண அப்பாவிற்கும், மற்றொரு தாதா அப்பாவிற்கும் முட்டல் வந்தால் முடிவு என்னாகும் என்பதைத் தான் காட்ஃபாதர் பேசி இருக்கிறது. திரைக்கதை அமைப்பில் வலுவாக இருக்கிறார் காட்ஃபாதர். அமைதியை விரும்பும் நட்டிக்கு மகன் என்றால் உயிர். அந்த மகனின் உயிரைத் தன் மகனுக்காக வாங்க நினைக்கிறார் வில்லன் லால். நட்டி தன் மகனைக் காப்பாற்ற அப்பார்ட்மென்ட் உள்ளிருந்தே எடுக்கும் முயற்சிகள், அதற்கு லால் எதிர்வினையாற்றும் செயல்கள் என […]

21/02/2020 Dinesh R
கன்னிமாடம் விமர்சனம் சினிமா

கன்னிமாடம் விமர்சனம்

கன்னிப் பெண்கள், கர்ப்பினிப் பெண்கள், பெண் துறவிகள் என பெண்கள் தனியே தங்கும் இடத்திற்குப் பெயர் கன்னிமாடம் ஆகும். இந்தப் படத்தின் நாயகியான மலர்க்கோ தங்க ஓரிடம் இல்லா மல் தவிக்கிறார். படத்தின் தகிப்பிற்குக் காரணமோ, படம் தொட்டுள்ள ஆணவக்கொலை எனும் விஷயமாகும். நாயகன் அன்புவின் தங்கையை, அவனது தந்தையே சாதி ஆணவத்தில் படுகொலை செய்து விடுகிறார். தன் குடும்பமே சிதைந்துவிட்டது என வருத்தத்தில் இருக்கும் அன்பு, சென்னைக்கு ஓடி வரும் மலர் – கதிர் ஜோடியை […]

21/02/2020 Dinesh R
இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’ சினிமா

இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’

சென்ற வாரம் வெளியான படங்களில் ‘ஓ மை கடவுளே’ படம் வெற்றியை அடைந்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களிடம் இப்படம் பற்றிய ரிசல்ட்டைக் கேட்டபோது, “வெள்ளிக்கிழமை ஓப்பனிங்கில் படம் பெரிதாக பிக்கப் ஆகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இருநாட்களிலும் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களால் ரசிகர்கள் குவியத் துவங்கினார்கள். குறிப்பாக திங்கள் செவ்வாக்கிழமை கூட தியேட்டருக்கு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்” என்றனர். மேலும், இப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி […]

19/02/2020 Dinesh R
ஏற்றத்தாழ்வினைப் பேசும் பாராசைட் அயல் சினிமா

ஏற்றத்தாழ்வினைப் பேசும் பாராசைட்

‘பாராசைட் (Parasite)’ என்பது ஒட்டுண்ணியைக் குறிக்கும். மற்றொரு உயிரினத்தை ஒட்டி வாழும் உயிரை ஒட்டுண்ணி என்பர். படத்தின் கருவை உணர்த்தும் குறியீட்டுப் பெயராக, ‘பாராசைட்’ எனும் தலைப்பினைக் கொள்ளலாம். இந்தக் கொரியன் படம் மொத்தமாக 4 ஆஸ்கார் விருதுகளை அள்ளியிருக்கிறது. அதுவும் சிறந்த படம், சிறந்த சர்வதேச படம் எனும் இரண்டு முக்கிய கேட்டகரியிலும் வென்றதால் வியத்தகு பாராட்டுகளையும், கடுமையான விமர்சனங்களையும் சம அளவில் சந்தித்து வருகிறது. ஆஸ்கார் விருதுகளில் லாபி அதிகம், அதே போல ஹாலிவுட் […]

17/02/2020 Dinesh R
கன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை சினிமா

கன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை

முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார் போஸ் வெங்கட். அவர் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருப்பவர். தற்போது புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். விழாவில் பேசிய ரோபோ சங்கர், “நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாகப் பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னைப் பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் […]

16/02/2020 Dinesh R
வானம் கொட்டட்டும் விமர்சனம் சினிமா

வானம் கொட்டட்டும் விமர்சனம்

தேனி மாவட்டத்தில் பாசமான அண்ணன் தம்பி பாலாஜி சக்திவேலும், சரத்குமாரும். ஒரு உள்ளூர் தேர்தல் பிரச்சனையில் பாலாஜி சக்திவேலை வெட்ட, அண்ணனுக்காக எதிராளிகளை வெட்டிவிட்டு 20 வருடங்கள் சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். ராதிகா தனி ஆளாக இருந்து விக்ரம் பிரபுவையும், ஐஸ்வர்யா ராஜேஷையும் வளர்க்கிறார். விக்ரம் பிரபு கோயம்பேடு மார்கெட்டில் வாழைக்காய் மண்டி வைக்கிறார். 20 வருடங்கள் கழித்துச் சிறையில் இருந்து வரும் சரத்குமாரை விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷும் வெறுக்கிறார்கள். இதே நேரம் சரத்குமாரால் இறந்து […]

08/02/2020 Dinesh R
கடவுளாக நடிக்கும் விஜய் சேதுபதி – ஓ மை கடவுளே சினிமா

கடவுளாக நடிக்கும் விஜய் சேதுபதி – ஓ மை கடவுளே

“ஓ மை கடவுளே” எனும் திரைப்படம் காதலர் தினச் சிறப்புத் திரைப்படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரைகையாளர்கள் சந்திப்பில் பேசிய நாயகன் அசோக் செல்வன், “என் அக்கா அபிநயா செல்வம், என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். அவர் தைரியமாக இப்படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்குப் பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம். லியான் ஜேம்ஸ் பாதி […]

08/02/2020 Dinesh R
மாயநதி விமர்சனம் சினிமா

மாயநதி விமர்சனம்

அட்வைஸ் கேட்டகரியில் வரும் படங்கள் நல்ல கலைத்தன்மையோடு இருப்பதில்லை என்ற விமர்சனம் சமீபகாலமாக அதிகமாக வைக்கப்படுகிறது. அந்த விமர்சனத்திற்கு வலு சேர்ப்பது போல் தான் சில படங்களும் வெளியாகின்றன. “ஆ, ஊ”ன்னா சாட்டையைச் சுழட்டி விடுகிறார்கள். ஆனால் மாயநதி அதிலிருந்து விலகி ஒரு தனித்துவத்தைth தொட முயற்சி செய்துள்ளது. நாயகி வெண்பா, அப்பாவின் கனவைத் தன் நினைவெனக் கருதி 12-ஆம் வகுப்பில் முதலாவதாகத் தேர்ச்சி பெறப் படிக்கிறார். அவருக்குள் காதலனாக நுழைந்த ஆட்டோ டிரைவர் அபி சரவணன் […]

01/02/2020 Dinesh R
சைக்கோ விமர்சனம் சினிமா

சைக்கோ விமர்சனம்

கண் பார்வையற்ற காதலனின் கண் எதிரே அவரது காதலி, சைக்கோ கொலைகாரனால் கடத்தப்படுகிறார். காதலியை மீட்க நாயகன் போராடி எழுவது தான் இப்படத்தின் கதை. படத்தின் முதல் ஜீவன் இளையராஜா தான். அவரின் இசை இன்றி இப்படத்தோடு நிச்சயம் ஒன்ற முடியாது என்பது உறுதி. அடுத்து ரன்வீரின் அட்டகாசமான ஒளிப்பதிவு. இவை இரண்டும் தான் சைக்கோவின் கடவுள்கள். பெண்களின் தலையை வெட்டும் வித்தியாச சைக்கோ, கண்பார்வையற்ற ஹீரோ, வீல்சேரில் அமர்ந்தும் சிங்கமாக கர்ஜிக்கும் கதையின் நாயகி, ஒரே […]

26/01/2020 Dinesh R
தர்பார் விமர்சனம் சினிமா

தர்பார் விமர்சனம்

முருகதாஸ் இயக்கியிருந்தாலும், இது ரஜினி படமாக மட்டுமே உள்ளது. ரஜினி படம், ரஜினி படமாக இல்லாமல் இருந்தால்தான் ஏமாற்றமளிக்கும். ரஜினி எனர்ஜியாக, ஸ்டைலாக, அழகாகத் தெரிகிறார் திரையில். தர்பார் என்பது அரசவையைக் குறிக்கும். தனது தர்பாருக்கு உட்பட்ட மும்பையைக் காவல் பரிபாலனம் செய்யும் ஐபிஎஸ் அதிகாரியான ஆதித்யா அருணாச்சலத்தின் மகள் கொல்லப்படுகிறார். மரணத்தால் மிகுந்த மனச்சோர்வில் உழலுகிறார். யாரால் அவர் மகள் கொல்லப்பட்டார் என்று கண்டுபிடிப்பதும், எவ்வாறு தன் மகளின் மரணத்திற்குக் காரணமானவரைப் பழிவாங்கினார் என்பதும்தான் படத்தின் கதை. […]

10/01/2020 Dinesh R
தி க்ரட்ஜ் விமர்சனம் அயல் சினிமா

தி க்ரட்ஜ் விமர்சனம்

‘ஜு-ஆன்: தி க்ரட்ஜ்’ என 2002 இல் வெளிவந்த ஜப்பானியப் படத்தின் ரீமேக்காக, ஆங்கிலத்தில் ‘தி க்ரட்ஜ்’ எனும் படம் 2004 இல் வெளியானது. அதைத் தொடர்ந்து, ‘தி க்ரட்ஜ் 2 (2006)’, ‘தி க்ரட்ஜ் 3 (2009)’ ஆகிய படங்கள் வெளிவந்தன. ஜப்பானில் இருந்து ஒரு சாபத்தைத் தன்னோடு அமெரிக்கா கொண்டு வருகிறாள் நர்ஸ் ஃபியோனா லேண்டர்ஸ். இப்படத்தினை, 2004 இல் வெளிவந்த ‘தி க்ர்டஜ்’ படத்தின் இணைப்பாகமாகக் (sidequel) கொள்ளலாம். 2004 இல் லேண்டர்ஸ் […]

05/01/2020 Dinesh R