Shadow

சினிமா

தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம்

தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
எதிரிகளான பறவைகளும் பன்றிகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, பறவைத் தீவையும், பன்றித் தீவையும் அழிக்க நினைக்கும் கழுகுத் தீவின் ஜெட்டாவிடமிருந்து எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி முதற்பாகத்தையும் விட அதிக கலகலப்புக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் துரோப் வேன் ஆர்மன். படம் கதையிலும், கலகலப்பிலும் மட்டும் கவனம் செலுத்தாமல், கதாபாத்திரங்களின் குண இயல்பையும் கணக்கில் கொண்டுள்ளதுதான் முதற்பாகத்தை விடவும் ஈர்க்கக் காரணம். ‘பறவைத் தீவைக் காக்கும் சூப்பர் ஹீரோ’வாக தான் என்றுமே புகழப்பட வேண்டும் என நினைக்கிறது ரெட்; பகையை மறந்து அமைதி ஒப்பந்தத்திற்குத் தூது விடுகிறது பன்றித் தீவின் லியானார்டோ; தன் பயந்த சுபாவத்தை மறைத்து ‘மைட்டி ஈகிள்’ என்ற பெயர் மட்டுமே போதுமெனத் தனிமையில் வாழ்கிறது ஈத்தன் கழுகு; கல்யாணத்தன்று பயந்து ஓடிவி...
ஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்

ஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்

சினிமா, திரைத் துளி
சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி சாருஹாசன், நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் 'பீட்ரூ' முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது, 'பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)' என்ற நகைச்சுவை த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, "எனக்கு பி.ஆர்.ஓ. நிகில் முருகன் அர்ஜூமனை அறிமுகம் செய்தார். சீயான் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஓர் ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு, நடனம், சண்ட...
பிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

பிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

சினிமா, திரைச் செய்தி
ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார். இயக்குநர் அமீர், "எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாகப் பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகைத் தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாய...
மீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

மீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

சினிமா, திரைச் செய்தி
ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார். அவ்விழாவில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், " 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கிறவன் பார்த்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும் இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது. இப்ராஹிம் ராவுத்தர், நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இ...
பக்ரீத் விமர்சனம்

பக்ரீத் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பக்ரீத் கொண்டாட்டத்திற்காக ஒட்டகம் ஒன்றை வாங்குகிறார் மீஞ்சூர் பாய். அந்த தாய் ஒட்டகத்தோடு, குட்டி ஒட்டகமும் ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது. குட்டியை என்ன செய்ய என பாய் யோசிக்கும் பொழுது, ரத்தினம் அதை தான் வளர்ப்பதாகச் சொல்லி வாங்கிக் கொள்கிறான். அந்த ராஜஸ்தான் ஒட்டகத்திற்கும், அதை அன்பாக வளர்க்கும் விவாசய பின்புலம் கொண்ட தமிழ்க் குடும்பத்திற்கும் இடையே உருவாகும் பிணைப்பும், அதைப் பிரிய நேரும் பொழுதும் எழும் துயரும் தான் படத்தின் மையக் கரு. பெட்டிக் கடைகளுக்கு மிக்சர், முறுக்கு, வற்றல் முதலிய நொறுக்குத் தீனிகளை சப்ளை செய்பவராக தினேஷ் பிரபாகர் நடித்துள்ளார். மலையாள நெடியுடன் பேசும் அவர், நாயகனின் உற்ற நண்பராக நடித்துள்ளார். சின்னச் சின்ன உடல் அசைவுகளிலும், முக பாவனைகளிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மிகச் சிறந்த குணசித்திர நடிகராகப் பரிணமிக்கக் கூடிய அனைத்து லட்சணங்களும் பெற்...
பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

சினிமா, திரைத் துளி
உலகத் திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. ரசிகர்களுக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கே.ஜி.எஃப். யாஷ் ஆகியோரும், இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் வானளாவிய சாதனையை வாயார வாழ்த்திப் புகழ்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். எனவே சப்-டைட்டிலுடன் படத்தை ஆஸ்கார் விருது தேர்வுக்கு அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் தன் வாழ்த்துச் செய்தியில், ‘ஏற்கெனவே ஒற்றைப் பாத்திரமாகப் ப...
மைதான் – கால் பந்தாட்டத்தின் பொற்காலம்

மைதான் – கால் பந்தாட்டத்தின் பொற்காலம்

சினிமா, திரைத் துளி
இந்தியக் கால்பந்து அணியின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள படம் “மைதான்”. அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தில், இந்த ஆண்டு தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்குகின்றனர். 2020 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற படமான ‘பாதாய் ஹோ’வின் அமித் ரவீந்தர்நாத் சர்மா இப்படத்தை இயக்கயுள்ளார். திரைக்கதை சைவின் குவாட்ரோஸ் மற்றும் வசனங்களை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளனர். "மைதான்" போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணாவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்....
தண்டகன் – ராமாயணக் கதாபாத்திரத்தின் பெயரிலொரு படத்தலைப்பு

தண்டகன் – ராமாயணக் கதாபாத்திரத்தின் பெயரிலொரு படத்தலைப்பு

சினிமா, திரைத் துளி
புகழ் பெற்ற இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை 'தண்டகன்' படம் பார்த்தால்தான் உணர முடியும். இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். இப்படத்திற்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே. மகேந்திரன். இவருக்குச் சொந்த ஊர் திருப்பூர். தொழிற்துறையில் முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே, கலைத்துறையில் தண்டகன் மூலம் தடம் பதிக்க வந்துள்ளார். தண்டகன் எனும் தீய குணம் கொண்ட ஒருவனின் பல கொடூரமான செயல்களினால், இந்தச் சமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்ற மிகச் சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்தத் தண்டகன் திரைப்படம். பார்வையாளர்...
சூர்யா வெளியிட்ட கன்னி மாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சூர்யா வெளியிட்ட கன்னி மாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சினிமா, திரைத் துளி
நடிகர் போஸ் வெங்கட் தன் திரைவாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை இயக்குநராகத் துவங்கி உள்ளார். இயக்குநர் அவதாரத்தால் மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உள்ள போஸ் வெங்கட் தன் 'கன்னி மாடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். கன்னி மாடம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி, "இப்படத்தின் டிசைன்ஸ் பார்ப்பதற்குத் தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில் பங்கேற்க வில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதற்கு நாங்கள் சூர்யாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததினால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட ...
முனிரத்னா குருஷேத்திரம் விமர்சனம்

முனிரத்னா குருஷேத்திரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரண்ணா எனும் கன்னடக் கவியின் ‘கதாயுதா’ எனும் கவிதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு J.K.பைரவி எழுதிய திரைக்கதையை இயக்கியுள்ளார் நாகண்ணா. இது துரியோதனனைப் பாட்டுடை நாயகனாகக் கொண்ட கவிதை நூலாகும். 1964 இலேயே, கர்ணன் போன்ற காவியத்தைப் படைத்துவிட்டது தமிழகத் திரையுலகம். 1988 இல் தூர்தர்ஷனில் தொடராகவும், 2013 இல் ஸ்டார் குழுமத்திலும் பிரம்மாண்டமான முறையில் தொலைக்காட்சித் தொடராக வெளியிடப்பட்டு, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2019 இல், குருஷேத்திரம் 3டி-இல் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. கன்னட நடிகர்கள் பலர் நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் அறிந்த முகமாக, கர்ணனாய் நடிக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும், அர்ஜுனனாய் நடிக்கும் சோனு சூட்டும் தான். துரியோதனனாக நடித்துள்ள தர்ஷன், அப்பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. அவர...
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம்

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
லியானார்டோ டி காப்ரியோ, பிராட் பிட் என ஹாலிவுட்டின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம். அதை விட ஈர்ப்பான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ என்பதேயாகும். ஹாலிவுட்டில் 1969 இல் நடக்கின்ற பீரியட் ஃபிலிம். டைட்டானிக் நாயகன் லியானார்டோ சொன்னது போல், ’இப்படம், 60 களின் ஹாலிவுட்க்கு டாரன்டினோ எழுதிய காதல் கடிதம்’ என்பதே சரி. செம கிளாஸான படம். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ரிக் டால்டன் தனது இறங்குமுகத்தில் உள்ளார். அவரது உற்ற நண்பரான க்ளிஃப் பூத், ரிக்கிற்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுகிறவர். ரிக் டால்டனின் பக்கத்து வீட்டுக்காரராக ரோமன் பொலான்ஸ்கியும், அவரது மனைவி ஷரோன் டேட்டும் வசிக்கின்றனர். இவ்விடத்தில் ஒரு செய்தி: உலகை உலுக்கிய கொடூரமான மரணங்கள் பட்டியலில், ஹிப்பிகளால் கொலையுண்ட மிக அழகான நாயகியான ஷரோன் டேட்டின் வழக்கும் ஒன்று....
ஜி.எஸ்.எம்.இன் தேனாம்பேட்டை மகேஷ்

ஜி.எஸ்.எம்.இன் தேனாம்பேட்டை மகேஷ்

சினிமா, திரைத் துளி
ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பூஜை ஆகஸ்ட் 17 அன்று நடைப்பெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் திரு.கே.பாக்கியரஜ், திரு. ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், கவிஞர் சினேகன், ஜான் விஜய் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இப்படம் குறித்து இயக்குநர் எம்.சித்திக் கூறும்போது, "எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்குத் தெரிய வருகிறது. அதன் பின் மகேஷின் வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்பதை திரைக்கதையாக உர...
இது என் காதல் புத்தகம் – பெண்களுக்குக் கல்வி அவசியம்

இது என் காதல் புத்தகம் – பெண்களுக்குக் கல்வி அவசியம்

சினிமா, திரைத் துளி
ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'இது என் காதல் புத்தகம்'. அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ, இப்படத்தின் கதாநாயகியான தேவயாணி கதாபாத்திரத்தை ஏற்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது. கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர், "விவசாயம் செய்வதற்கும், திருமணம் முடித்து பிள்ளை பெறுவதற்கும் உங்களுக்கு எதற்கடா கல்வி?" என்று சொல்லுகிறார். ஆனால் அவரது ஒரே மகளான தேவயாணிக்கு படிப்பின் மீது நாட்டம் ஏற்படுகிறது. அதனால் தந்தையின் சிந்தனைக்கு எதிராகச் செயல்படத் தொடங்குகிறாள்....
கோமாளி விமர்சனம்

கோமாளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ட்ரெய்லர் வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியை நீக்கி, நாஞ்சில் சம்பத்தை மாற்றாக அக்காட்சியில் கொண்டு வந்துள்ளது படக்குழு. அதோடு நில்லாமல், கீழே எழுத்தாக, கோமாளி படத்தில் இருந்து ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கம் எனப் பதிந்து, படையப்பா ரஜினி செந்திலைக் கலாய்ப்பது போல் ரஜினி ரசிகர்களைச் சாமர்த்தியமாகக் கலாய்த்துள்ளது படக்குழு. ஒரு விபத்தில் 16 வருடங்கள் கோமாவில் விழுந்து விடுகிறான் ரவி. அவன் அதிலிருந்து மீண்டதும், அசுர மாற்றம் அடைந்திருக்கும் அனைத்தையும் பார்த்துக் குழம்பி, 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?' என இந்த உலகத்தைப் பார்த்து கோமாளி போல் கேள்வி எழுப்புகிறான். கோமாளி ரவிக்குச் சொந்தமான சிலை ஒன்று, எம்.எல்.ஏ. தர்மராஜிடம் இருப்பது தெரிய வர, அதை மீட்டெடுத்து அவரால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரி செய்ய முடிகின்றதா என்பதுதான் படத்தின் கதை. முதல் பாதி ஜால...