Shadow

சினிமா

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கதை சொல்லட்டுமா? திருவாரூர் தொகுதியில், அமமுக கட்சியின் வேட்பாளர் பெயர் எஸ்.காமராஜ். அமமுக-விற்குக் குக்கர் சின்னம் கிடைக்கவிடாமல் செய்த அதிகார மையம், அதே தொகுதியில் சுயேட்சையாக நிற்கும் B.காமராஜ்க்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கிக் குழப்பத்தை உண்டு செய்ய முயல்கிறது. தோட்டத்து வாசல் மூலம் உள்ளே நுழைவதில் பெரும் பிரேமை கொண்டவர்களின் தர்மம் (தேவை), இப்படியான குழப்பத்தை ஏற்படுத்துவதில் இருந்தே தொடங்கும். 'தென்னந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம்’ தொடங்க உதவி செய்து தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய ‘ரெட் டீ’ நாவல் எழுதிய பி.எச்.டேனியலை அசிங்கப்படுத்துவது போல மருத்துவர் பரிசுத்தம் கதாபாத்திரத்தினைப் பரதேசி படத்தில் அமைத்திருப்பார் இயக்குநர் பாலா. பி.எச்.டேனியல் எனும் மனிதர் வாழ்நாளெல்லாம், தொழிலார்களுக்காகப் போராடி, அவர்களுக்கு உரிமையையும் அடிப்படை வசதியும் மீட்டதோடு, தே...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1

சினிமா
சூப்பர் டீலக்ஸ், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ள படம் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை. குத்துப்பாட்டு, சண்டை என ஒரே மாதிரியான திரையிலக்கணத்தில் படங்கள் பார்த்துச் சலித்துவிட்ட ரசிகர்களுக்குப் புத்தம் புதியதொரு உலகத்தைத் திறந்துவிட்டுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. ஒவ்வொரு ஃப்ரேமும், முழுமையாக அவரது கிரியேட்டிவ் கட்டுப்பாட்டிற்குள் உருவாகியுள்ளது. ஒரு வீட்டினைக் காட்டுகிறார் என்றால், அந்த வீட்டின் சுவரின் நிறம், அங்குள்ள பொருட்கள், அவற்றின் நிறம், அவை வைக்கப்பட்டிருக்க வேண்டிய இடமெனச் சகலத்தையும் கவனமாகச் சிருஷ்டிக்கிறார். ஒரு முழுப்படத்திற்குமே இது சாத்தியமாக, சினிமா மீது விவரிக்க இயலாக் காதலும், வேலையில் அதீத அர்ப்பணிப்பும் தேவைப்படும். பொதுவாக, கிடைத்த லொக்கேஷனில், லைட் உள்ளவரை படப்பிடிப்பு, பட்ஜெட்டுக்கேத்த இசை என்ற சமரசங்களில் தான் சினிமா உலகம் இயங்கிக் கொண்டுள்ளது...
சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும் நீளமான படம். மணமாகிவிட்ட வேம்பு, தனது கல்லூரிக் காதலனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் இறந்து விடுகிறான்; பள்ளியைக் கட்டடித்து விட்டு பிட் படம் பார்க்கும் பள்ளி மாணவர்களின் ஒருவனது அம்மா அந்தப் படத்தில் தோன்றுகிறார்; வீட்டை விட்டு ஓடிப் போய்விட்ட தந்தையை முதல்முறையாகப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவன் முன் ஷில்பா வந்து இறங்குகிறாள்; தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி சுனாமியில் சிக்கிய தன்னைக் காப்பாற்றிய ஒரு சிலையை ஆண்டவராக எண்ணி சதா பிரார்தித்துக் கொண்டிருக்கிறான் தனசேகர். இப்படி நான்கு கிளைக்கதைகளை ஒன்றிணைக்கும் தரமான கலகலப்பான அடலட் (A) மூவியாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது. நீளத்தை மட்டும் கத்தரித்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு கூடி சலிப்பு தட்டாமல், முதல் பாதியைப் போலவே இரண்டாம் பாதியையும் ரசித்திருக்க இயலும். முக்கி...
உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

சினிமா, திரைச் செய்தி
2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், “இந்த படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தைக் கெடுக்கும். அதுபோன்ற வீரியமுள்ள படைப்பு இது” என்றார். படத்தின் இயக்குநர் விஜய் குமார் பேசுகையில், “இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது; திறமை இருக்க வேண்டும்; டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுள் இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைக் கோவிந்த...
ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்

ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன் படத்தின் முதற்பாகம் 2010இலும், இரண்டாம் பாகம் 2014இலும், தற்போது மூன்றாம் பாகமும் வெளியாகியுள்ளன. டிராகன்களைக் கொல்லும் டிராகன் வேட்டையனான கிரிம்மலிடம் இருந்து தப்பிக்க, புதிய பாதுகாப்பான மறைவான வசிப்பிடத்தைத் தேடுகிறான் ஹிக்கப். ஹிக்கப்பின் டிராகனான டூத்லெஸ் எனும் நைட் ஃப்யூரி, லைட் ஃப்யூரியைச் சந்திக்கிறது. அதன் தொடர்ச்சியாய், டிராகன்கள் மட்டும் வசிக்கும் பிரத்தியேகமான டிராகன் உலகத்தைக் கண்டடைகின்றனர். கிரிம்மலிடமிருந்து அனைவரும் எப்படிப் பாதுகாப்பாகத் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. முந்தைய பாகங்களைப் போல் ஃபன் எலமென்ட் (fun element), இப்படத்தில் கம்மியென்றே சொல்லவேண்டும். ஆனால், படத்தின் முடிவில் மனதைக் கனக்கச் செய்துவிடுகின்றனர். ஒரு ட்ரைலாகியை முடிக்க அற்புதமான முடிவாக இப்படத்தைக் கொள்ளலாம். இரண்டாம் பாகத்திற்கும், மூன்றாம் பாகத்திற்குமே ஐந்து...
எம்பிரான் விமர்சனம்

எம்பிரான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எம் + பிரான் என்பதற்கு 'எனது தேவன்' எனப் பொருள்படும். ஜெயாவிற்குப் பிரியன் மீது ஒருதலையாகப் பயங்கரமான காதல். எவ்வளவு முயற்சி செய்தும், தனது காதலை வெளிப்படுத்தும் தைரியம் அவளுக்கு ஏற்படுவதே இல்லை. காதலைச் சொல்லும் முன், அவள் கோமாவிற்குச் சென்று விடுகிறாள். ஜெயாவின் காதல், பிரியனை எப்படிப் போய்ச் சேர்ந்தது என்பதுதான் படத்தின் கதை. படம் லோ-பட்ஜெட் என்றாலும், கதாபாத்திர வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். உதாரணமாக, கதாநாயகி வீட்டில் அவளும், அவளது தாத்தாவும் என இரண்டு பேர்தான் உள்ளனர். தாத்தாவும் இறந்துவிட, கோமாவிக் ஹாஸ்பிட்டலில் இருக்கும் கதாநாயகியைப் பார்த்துக் கொள்ளக்கூட யாருமில்லை. உறவினர்கள், நண்பர்கள் என ஒரு எக்ஸ்ட்ரா பாத்திரமும் இல்லை. யார் நாயகியின் மருத்துவச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றது, கவனித்துக் கொண்டது என எந்தத் தர்க்கத்திற்குள்ளும் செல்ல இயக்குநர் விரும்பவில்லை. நா...
எம்பிரான் – ரொமெடிப் படம்

எம்பிரான் – ரொமெடிப் படம்

சினிமா, திரைத் துளி
“முற்றிலும் வேறுபட்ட சூழலில் இருந்து வரும் இருவரின் இடையே வரும் காதலைப் பற்றிய நகைச்சுவைப் படம். ரொமான்ஸும், காமெடி கலந்த படங்களை 'ரொமெடி' எனும் வகையின் கீழ் வரும். திரைக்கதை முற்றிலும் மாறுபட்டவை, வசனங்களைக் காட்டிலும் காட்சிகளின் மூலமே கதையைக் கொண்டு செல்கிறோம். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி காதலைச் சேர்த்து வைப்பது போல கதை அமைந்துள்ளது. ஜெயா மற்றும் பிரியனின் கதாபாத்திரங்களில் ராதிகா பிரீத்தி மற்றும் ரெஜித் மேனன் நன்றாக நடித்துள்ளனர். கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்துள்ள ராதிகா ப்ரீத்தி, இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். விக்ரமின் ‘நினைத்தது யாரோ' படத்தின் மூலம் அறிமுகமான ரெஜித் மேனன் இந்தப் படத்தில் முன்னனி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் சந்திர மௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ் மற்றும் வள்ளியப்பா நடித்துள்ளனர்” என்றார் இயக்குநர் கிருஷ்ண பாண்டி. இந்தத் தி...
ஆதி, ஹன்சிகாவின் ‘பாட்னர்’

ஆதி, ஹன்சிகாவின் ‘பாட்னர்’

சினிமா, திரைத் துளி
நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும். RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான "பாட்னர்" என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம், அரவான், யு டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் நடிகர் ஆதியும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் 'மகா' நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹன்சிகாவும் இணையும் பார்ட்னர் படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். இவர் குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் படத்தின் முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், விடிவி கணேஷ், ஜா...
கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம்

கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம்

சினிமா, திரைத் துளி
ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகள் மட்டுமன்று. உணர்வுபூர்வமான சில தருணங்களும் கூட! தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து ‘96 படத்தைத் தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை இயக்குநர் ப்ரேம் பெற இருக்கிறார். தெலுங்கு சினிமா உலகம் மட்டும் இல்லாமல் மொத்த இந்தியத் திரையுலகமே இந்த விருதை மிகவும் உணர்வுபூர்வமான விசயமாகக் கருதுகின்றனர். அதற்கான காரணமும் இருக்கிறது. அது 1992-ம் ஆண்டு! தனது முதல்படமான 'பிரமே புஸ்தகம்' என்ற படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிருஷ்டவசமாகக் காலமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார். ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மரணம் தழுவிக்கொண்ட அந்தப் ...
அகவன் விமர்சனம்

அகவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அகவன் என்றால் உள்ளிருப்பவன் எனப் படத்தின் உபத்தலைப்பிலேயே விளக்கம் உள்ளது. ஏகனான சிவன், அனைத்து உயிரினங்களுள்ளும் அநேகனாய் உறைந்துள்ளான் என்பதே படத்தலைப்பின் பொருள். பெருவெள்ளம் ஏற்பட்ட காலத்தில், லிங்கோத்பவராய் உயர்ந்து நிற்கும் சிவனின் ஓவியத்தைக் கண்ட ராஜராஜ சோழனுக்கு ஓரெண்ணம் எழுகிறது. அதன் படி, ஒவ்வொரு கோயிலின் ராஜ கோபுரத்திலும் சில ரகசிய ஏற்பாடுகளை அமைக்கிறார். அதென்ன ரகசியம் என்பதும், அந்த ரகசியத்தை அறிந்து கொண்ட தீயவர்களின் சதித்திட்டம் எப்படிக் கலையப்படுகின்றது என்பதும்தான் படத்தின் கதை. தத்துவச் சாயலுடைய தலைப்பெனினும், படம் நல்லதொரு த்ரில்லராய் ஈர்க்கிறது. மூன்று பொண்டாட்டிக்காரராக வரும் தம்பி ராமய்யாவின் காட்சிகளைக் கத்தரித்து, படத்தின் நீளத்தைச் சுருக்கி, முழு நீள த்ரில்லராய்த் தொடக்கம் முதலே கொண்டு போயிருக்கலாம் இயக்குநர் APG. ஏழுமலை. சிராஸ்ரீ, நித்யா ஷெட்டி எனப் படத்தில் இரண...