Shadow

சினிமா

காஞ்சனா – 3 விமர்சனம்

காஞ்சனா – 3 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஞ்சனாவில் லட்சுமி ராய் என்ற ஒரே ஒரு கதாநாயகி; காஞ்சனா-2 இல், டாப்ஸி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள்; இப்போழுது காஞ்சனா-3 இல், வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி என மூன்று கதாநாயகிகள். உலகக் கோப்பை கிரிக்கெட் போல, 4 வருஷத்துக்கு ஒரு தடவை முனி சீரிஸ் வருகிறது. 2023 இல் வரப் போகும், காஞ்சனா-4 இல் கண்டிப்பாக நான்கு கதாநாயகிகளை எதிர்பார்க்கலாம். அந்த நான்கு கதாநாயகிகள் இடுப்பிலும், நாயகனான ராகவா லாரன்ஸ் ஜம்ப் பண்ணி உட்காரப் போகிறார். நகைச்சுவையாமாம்!! இந்தப் படத்தில், ஒரு இயக்குநராக பல புது முயற்சிகளைச் செய்துள்ளார் லாரன்ஸ். அதில் முக்கியமானது, பேய்ப் படமான காஞ்சனா franchise-ஐ அப்படியே நகர்த்தி சாமிப்படமாகவும், பக்திப்படமாகவும் முன்னெடுத்துள்ளார். காஞ்சனா படத்தில், நரசிம்மரிடம் பேரம் பேசுவார் சரத்குமார். இந்தப் படத்தில் அகோரிகள், காளிதேவியையே வர வைத்து பேய்க்கு அனுக்கிரகம் செய்கிறார்கள். பேய...
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் வில்லன் (!?) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன பாதிக்கும் மேற்பட்ட மனித இனத்தை மீட்க, எஞ்சியிருக்கும் அவெஞ்சர்ஸ் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். இறுதியில் சூப்பர் ஹீரோகளுக்கே வெற்றி! முடிவு சுபம் தான் எனினும், அந்த வெற்றியை அடைய அவர்கள் மேற்கொள்ளும் அந்த உணர்ச்சிகரமான பயணம், இந்தப் படத்தைத் திரையுலக வரலாற்றின் மிக முக்கியமான படமாக உயர்த்துகிறது. ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில், சூப்பர் ஹீரோ படம் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும். அவெஞ்சர்ஸில் சிலர் அதி சக்தி படைத்தவர்கள், சிலர் மிகவும் புத்திசாலிகள், சிலர் நவீன உபகரணங்களுடன் தங்கள் பராக்கிரமத்தை உயர்த்திக் கொண்டவர்கள். அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு புள்ளி என்றால், ஒரு குடும்பமாக இணைந்து உலகைக் காக்கவேண்டுமென்ற அவர்களது எண்ணமே. எத்தனை புரிதலின்மைகள் உருவாகி உரசிக் கொண்டாலும், இறுதியில் ஒற்றும...
மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளையராஜாவின் அதி தீவிர விசிறியான ஜீவாவிற்கு மெஹந்தியைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. அந்தக் காதல் அவர்களுக்கிடையே நிகழ்த்தும் சர்க்கஸ் விளையாட்டுதான் படத்தின் கதை. ஒளிப்பதிவாளர் செல்வக்குமார் பொயட்டிக் டோனைப் படத்திற்கு செட் செய்துள்ளார். கதை பூம்பாறையில் நடக்கிறது. கூடவே பின்னணியில் இளையராஜாவின் இசை. காதலர்கள் ஓடிப் போகக் காரணமான இளையராஜா A1 அக்யூஸ்ட் என்றும், ராஜகீதம் மியூசிக்கல்ஸ் வைத்திருக்கும் ஜீவா A2 என்றும் வசனம் வைத்து, இளையராஜாவின் இசையையும் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வர முயன்றுள்ளார் இயக்குநர் சரவண ராஜேந்திரன். ஆனால், இளையராஜாவின் இசை கதையோடு இயைந்து ஒரு மாயத்தை நிகழ்த்தத் தவறி விடுகிறது. அரசியல் பேசும் ஒத்தவெடி கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.விக்னேஷ், நாயகனின் நண்பராக நடித்துள்ளார். ஆனால் நகைச்சுவைக்கோ, அரசியல் நையாண்டிக்கோ பெரிதும் அவர் உதவவில்லை. படத்தின் குறைகளில் ஒன்று, எந்த...
மெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்

மெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்

சினிமா, திரைச் செய்தி
“மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஷான் ரோல்டன் இசையில் வச்சு செஞ்சிருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது; ஷான் ரோல்டன் இசை ஒரு இடத்தில். இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன், இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு. சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப் படத்தில் என் கேரக்டரான ஒத்த வெடி அப்படி" என்றார் ஆர்.ஜே விக்னேஷ் காந்த். "மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா ச...
மெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்

மெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்

சினிமா, திரைச் செய்தி
ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கனத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களைத் தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், "ஏன் சமைய...
முள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்

முள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்

சினிமா
மகேந்திரனுக்குப் புனைவுகளைப் பற்றிய நுண்மையானதொரு புரிதல் இருந்தது. அதைப் பார்வையாளனை உள்ளிழுக்கும் விதமாகத் திரைமொழியாக மாற்றும் வித்தை இயல்பாக அமைந்திருந்தது. புதுமைப்பித்தனிடமிருந்து அவர் உந்துதல் பெற்று உதிரிபூக்கள் எழுதினார் என்பது ஒன்றே அவருடைய படைப்பூக்கத்தின் மேன்மைக்கு சான்று. உதிரி பூக்கள் தமிழ் சினிமாவிற்கான அடையாளத்தில் ஒன்று. அவருக்கு மிகச் சிறப்பான திரைமொழி ஞானம் இருந்தது. அது அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது. ‪‘முள்ளும் மலரும்’ குறுநாவலாக பரிசு பெற்ற படைப்பு. ஆனால் மகேந்திரனின் திரைக்கதை அமைப்பில் அது இன்னமும் சில உச்சங்களைக் கண்டது. ‬ காளிக்குத் தன்னுடைய மேலதிகாரி மீது தீராத எரிச்சல். அவர் பேசும் இறுக்கமான சட்டதிட்டங்கள் அவனுடைய சாதாரண வாழ்க்கையைக் குறையுள்ளதாகக் காட்டுகிறது. ஆனால் அந்த அதிகாரியும் காளியின் தங்கையும் ஒருவர்பால் ஒருவர் ஈர்ப்புக் கொள்கிறார்கள். இதை சாதாரண...
நல்ல கதையம்சமும், நல்ல கதாபாத்திரமும் – கார்த்திகா

நல்ல கதையம்சமும், நல்ல கதாபாத்திரமும் – கார்த்திகா

சினிமா, திரைத் துளி
தூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து, "கருவாப்பையா கருவாப்பையா" என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை கார்த்திகா. தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்பிற்காகச் சிறிது காலம் மும்பையில் இருந்தார். தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்குப் படம் பார்க்கச் சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்து கொண்ட ரசிகர்கள் ‘கருவாப்பையா கார்த்திகா’ என்று சூழ்ந்து கொண்டனர். தன்னை மறக்காத ரசிகர்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார். பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது. ‘திரைப்படங்களில் தான் நடிப்பேன்’ என்று உறுதியாக...
குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ்

குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ்

சினிமா, திரைத் துளி
ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியான படம் குடிமகன். “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை இயக்குநர் இயக்கி இருந்தார். இதில் ஜெய்குமார் நாயகனாகவும், ‘ஈரநிலம்’ ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.அவர் கூறியதாவது, "குடிமகன் திரைப்படம் மூன்று வெற்றி அடைந்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி. படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், ...
காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo

காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo

சினிமா, திரைத் துளி
DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களைக் கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரைப் பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. பாடலாசிரியர் மற்றும் DooPaaDoo-வின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, "இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017இல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரைச் சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதி...
உறியடி 2 விமர்சனம்

உறியடி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2016 இல் வெளியான உறியடி மிக ஃப்ரெஷான அரசியல் படமாக ரசிகர்களைக் கவர்ந்தது. பிரித்தாளும் அரசியல்வாதிகள் Vs ஒற்றுமையான மாணவர்கள் என்பதாகப் படம் மறக்கவியலாததொரு அனுபவத்தை அளித்தது. இப்படமும் அப்படியே மனதில் தங்கும். போபால் விஷ வாயு கசிவைக் கண் முன் கொண்டு வந்து மிகப் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளார். மக்களின் உயிரை மயிறுக்குச் சமானமாக நினைக்கும் கொழுத்த தொழிலதிபர்தான் படத்தின் வில்லன். மக்கள் ஏன் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகின்றனர், மக்களுக்கான அரசாங்கம் எப்படி தொழிலதிபருக்காகச் சேவகம் செய்கிறது என்ற குரூரமான யதார்த்தத்தையும் படம் சித்தரிக்கிறது. படம் தொட்டுள்ள களத்தின் தீவிரம் தாங்கமுடியாததாய் உள்ளது. ஆனால், முதற்பாகம் போல் திரைக்கதை அவ்வளவு இன்டென்சாக இல்லை. காரணம், முதற்படத்தில் விஷத்தைக் கக்கும் அரசியல்வாதிகள், கண்ணுக்குத் தெரியாமல் நம் அருகிலேயே உள்ளவர்களாக இருந்த...
ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆஸ்கர் விருது வாங்கிய செளண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி நடிகராக அறிமுகமாகும் முதற்படமிது என்பது குறிப்பிட்டத்தக்கது. ரசூல் பூக்குட்டிக்கு, திருச்சூர் பூரம் திருவிழாவின் முழு இசையையும் ஒலிப்பதிவு செய்யவேண்டுமென ஆசை. அது அவருக்கு சாத்தியமானாதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படம் டாக்குமென்ட்ரி வகைமையைச் சேர்ந்தது. பத்துக்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுக்க, முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்க, ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் இந்தியாவின் மிகப் பெரும் திருவிழா. அவ்விழாவின் இசையை முழுவதுமாக ஒலிப்பதிவு செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை. முடியால் மலையைக் கட்டியிழுக்கும் மிகப் பெரிய சமாச்சாரம். 80க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களை ஒருங்கிணைத்து, 'The Sound Story' என்ற பிராஜெக்ட்டை முடிக்கிறார் ரசூல். 'தி செளண்ட் ஸ்டோரி' என்ற தலைப்பிலேயே மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகிறத...
குப்பத்து ராஜா விமர்சனம்

குப்பத்து ராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எதற்கும் அலட்டிக் கொள்ளாத ராக்கெட் குப்பத்திற்கே ராஜாவாகச் சுற்றி வருகிறான். திடீரென ஒருநாள் அவன் தந்தை இறந்துவிட, ராஜா நிலைகுலைகிறான். அவனது தந்தையைக் கொன்றது யாரெனவும், அக்குப்பத்தில் நிகழும் அசாம்பாவிதங்களுக்கும் காரணம் எதுவென்பதும்தான் படத்தின் கதை. ஊர் நியாயம் என்ற கதாபாத்திரத்தில் G.V.பிரகாஷின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். மகனின் மீது பாசம் பொழிவதையும், குடிப்பதையும் தவிர வேறொன்றும் அறியாத மனிதர். அவரது மரணத்தில் இருந்துதான் படத்தின் கதை தொடங்குகிறது. படத்தின் முதற்பாதி முழுவதும் கதையே இல்லாமல், காதல், நண்பர்களுடன் ஜாலியாய் ஊர்ச் சுற்றுதல், குடி, கும்மாளம், குதூகலம் என்று காட்சிகள் விரிகிறது. முதற்பாதியின் கலகலப்பிற்கு யோகி பாபுவின் கவுன்ட்டர்கள் உதவுகின்றன. நாயகனால் வருங்காலம் என அழைக்கப்படும் கமலா கதாபாத்திரத்தில் பாலக் லால்வானி நடித்துள்ளார். நாயகனைத் தவிர வேறு யோசனைய...
குடிமகன் விமர்சனம்

குடிமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறேழு கி.மீ. தள்ளிப் போய்க் குடித்துக் கொண்டிருந்ததற்கும், ஊர்க்குள்ளேயே டாஸ்மாக் கொண்டு வந்ததற்கும், என்ன வேறுபாடு எனப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்கிறது 'குடிமகன்' படம். ஒரு ஊருக்குள் டாஸ்மாக் வருகின்றது. குடிப்பழக்கமில்லாத கந்தனுக்கு குடியைப் பழக்குகின்றனர் அவன் நண்பர்கள். குஇப்பழக்கத்திற்கு அடிமையாகும் கந்தனின் குடும்பம் எந்தக் கதிக்கு உள்ளானது என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டாய் நாயகனைக் குடிக்க வைக்கும் அவனது நண்பர்கள், நாயகனின் வீழ்ச்சிக்குச் சாட்சியாகிறார்கள். அரசாங்கமே மக்களின் குடிப்பழக்கத்தை நம்பித்தான் இயங்குகிறது என்னும் வாதம் எவ்வளவு அபத்தமானது? ஆபத்தானது? எத்தனையோ குடும்பத்தின் சிதைவிற்கு ஓர் அரசே காரணமாய் இருப்பதை விட மிகப் பெரிய கேவலம் வேறொன்று உண்டா? படத்தின் தொடக்கமே ஒரு கவிதை போலுள்ளது. தன் மகன் ஆகாஷைச் சுமந்து கொண்டு கந்தன் செல்லும் அந்தக் கிராமத்துப் பாதை ரம்மியாக...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4

சினிமா, திரை விமர்சனம்
தியாகராஜன் குமாரராஜாவின் உலகத்தில், வேம்பு, ஷில்பா, துளசி, லீலா என 4 பெண் கதாபாத்திரங்கள் பிரதான இடம்பெறுகின்றனர். படைப்பாளன் அவர்களுக்கு அளித்துள்ள குணம் (!?- குற்றம்), வாழ்விடம், தண்டனை குறித்து நான்-லீனியரில் அடுக்கினால், படைப்பாளனின் அரசியலைப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். குணவார்ப்பு: வேம்பு, தனது முன்னாள் காதலனுடன் உடலுறவு கொள்கிறார். ஷில்பா சர்வைவலுக்காகப் பிச்சை எடுக்கிறார், பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார், குழந்தைகளைக் கடத்தி விற்கிறார். ஜோதி - நெருப்பு; பதிவிரதை; படி தாண்டாப் பத்தினி. லீலா, பார்ன் (Porn) படங்களில் நடித்து லீலைகள் புரிந்தவர். வாழ்விடம்: வேம்பு - நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். லிஃப்ட் வசதி உள்ள குடியிருப்பில் வசிப்பவர். ஷில்பா - சமூகத்தை விட்டு ஓடிப்போனவர். ஜோதி - பாரம்பரியமான வீட்டில். லீலா - குடிசை மாற்றுக் குடியிருப்பில். இனி தான் சூப்பர் டீலக்ஸின் விளைய...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3

சினிமா, திரை விமர்சனம்
எந்த ஒரு தமிழ்ப்படமும் தந்திராத அனுபவத்தைத் தந்துள்ளதால், சூப்பர் டீலக்ஸ் மிகப் பெரிய விவாதத்தைப் பொதுவெளியில் திறந்துவிட்டுள்ளது. படத்தினை விடப் பார்வையாளர்களின் கோணங்கள் வெகு சுவாரசியமாய் உள்ளது. ரசனையில் முதிர்ந்தோரை, இந்தத் தமிழ்த் திரையுலகம் தான் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது? ஷில்பாவை சக உயிராகப் பார்க்காமல் ஒரு ஜடமாகப் பார்த்துள்ளார் என்ற எனது குறைப்பாட்டிற்குக் கிடைத்த ஒரு மறுமொழி இது: 'மீட்சிக்காக, பாவமன்னிப்பிற்காகப் பயணம் போற ஒரு ஜீவன் ஷில்பா. சுனாமியில் தப்பித்து, ஏன் தப்பித்தோமெனத் தெரியாமல் குழம்பி, உள்ளம் உந்த மும்பை ஓடி, பெண்ணாக மாறி, பிழைப்பிற்காக அந்தப் பிள்ளைகளைப் பிடித்துக் கொடுத்து, தான் செய்த செயலோட தீவிரத்தை உணரும் தருணத்தில் பாவமன்னிப்பு வேண்டி, தன் வீடடைந்து, கடைசியில் தான் மட்டும் தான் புறக்கனிக்கப்பட்டவன் அப்படிங்கற சுயபச்சாதாபத்தை விட்டு வெளிய வந்து தன் மனைவ...