Shadow

சினிமா

சர்கார் விமர்சனம்

சர்கார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாகப் போட்டு விடுவதால், செக்‌ஷன் 49 P-இன் படி, மீண்டும் சட்டத்தின் உதவியோடு பேலட் ஓட்டைப் போடுகிறார் சுந்தர் ராமசாமி. கள்ள ஓட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு போட, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் சுந்தரைச் சீண்டி விட, தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார் சுந்தர். செங்கோலினை நிறுவ நல்லதொரு சர்க்கார் அமையவேண்டுமென விரும்புகிறார் சுந்தர் ராமசாமி. செங்கோல் என்றால் நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி. சர்க்கார் என்றால் அரசாங்கம். மக்களுக்கு நல்லது செய்யத் தடையாக இருக்கும் அரசு இயந்திரத்தின் சக்கரங்களான ஆளுங்கட்சியை எப்படி ஓரங்கட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. சினிமா என்பது கனவுத்தேசம்தானே! நல்ல சர்க்காரைத் தன்னால் தான் உருவாக்க முடியுமென்ற ஒரே கனவைப் பலர் காணலாம். கனவு மட்டும் காணாமல் செயலில் இறங்குகிறார் சுந்தர் ராம...
2.0 எனும் அதி பிரம்மாண்டம்

2.0 எனும் அதி பிரம்மாண்டம்

சினிமா, திரைச் செய்தி
300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது என்கிறார் ரஜினி. ஆனாலும், படம் அதனை வசூலித்துவிடும் என்கிறார் ரஜினி மிக நம்பிக்கையுடன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, மூன்று முறை எடிட்டிங் செய்துள்ளார். ஒன்று, அனிமேஷன் வடிவிலான ப்ரீ-விஷுவலைசேஷன்; இரண்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல்; மூன்றாவது, விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் என மொத்தம் மூன்று முறை முழுப் படத்தையும் தொகுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படியே! படம் தொடங்கும் முன் ஒருமுறை, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல் மற்றொரு முறை, தற்போது, அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு ஈடு செய்யும் வகையில் இசையமைத்து வருகிறார். உலகத்திலேயே முதல் முறையாக, செளண்ட் டிசைனிங்கில் 4டி (4D - SRL) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி. உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை விட, உருவாக்கியுள்ளார் என்பதே சரி. தங்களது புதிய பரிமாணத்திற்கு...
விக்ரம் பிரபுவின் அசுரகுரு

விக்ரம் பிரபுவின் அசுரகுரு

சினிமா, திரைத் துளி
திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்று இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்தீப் இயக்கி வெளிவரயிருக்கும் படம் ‘அசுரகுரு'. இயக்குநர் ராஜ்தீப் அவர்களுக்குத் தமிழக அரசு சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாள் டப்பிங்கில் விக்ரம் பிரபு அவர்கள் பேசிய வசனம், 'மக்களை நான் காப்பாற்றுவேன்'. இந்த வசனத்திற்கேற்றாற்போல் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. நடிகர்கள்: >> விக்ரம் பிரபு >> மகிமா நம்பியார் >> மனோபாலா >> யோகி பாபு >> ஜெகன் >> ராமதாஸ் >> சுப்புராஜ் >> நாகிநீடு >> குமரவேல் பணிக்குழு: >> இயக...
சந்தோஷத்தில் கலவரம் விமர்சனம்

சந்தோஷத்தில் கலவரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து ஆண்களும், நான்கு பெண்களுமாக நண்பர்கள் குழு ஒன்று, மலைத்தொடரின் நடுவில் அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதொரு பெரிய வீட்டில், விக்கியின் பிறந்தநாளைக் கொண்டாடச் செல்கிறது. அக்குழுவை அமானுஷ்ய சக்தி ஒன்று தாக்குகிறது. அதிலிருந்து மீண்டு எப்படி உயிருடன் வீடு திரும்புகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. மகிழ்ச்சியாகத் தொடங்கிய நண்பர்களின் பயணம் எப்படிக் கலவரமாகிறது என்பதும், அக்கலவரத்தால் விளையும் நன்மைகள் என்னவென்பதும் தான் படத்தின் கதை. படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத், இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருவதற்காக பெங்களூருவில் 'பெஸ்ட் யூத்' விருது பெற்றவர். மேலும், அவர் ஒரு யோகா பயிற்றுநரும் கூட! இந்த இரண்டு விஷயத்தையும் படத்தின் திரைக்கதையில் உணரலாம். ஒரு பேய்க்கதையில் தன்னை ஒரு நாயகனாகப் பொருத்திப் பார்த்து திரைக்கதை அமைத்துள்ளார். ஆம், படத்தின் பிரதான கதாபாத்திரமான வே...
வெள்ளி விழா காணும் ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’

வெள்ளி விழா காணும் ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’

சினிமா, திரைச் செய்தி
ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-பும் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாகப் படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுக்காரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா என நிறைய படங்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். அதன் பின்பு லத்தீப்-உம் நானும் இணைந்து தனியாகப் "பொற்காலம்" படத்தை விநியோகம் செய்தோம். அந்தப் படத்தைப் பாராட்டி எழுதாத பத்திரிகைகளே கிடையாது. தமிழ்நாட்டோட பெரிய ஏரியான்னு சொல்ற NSC- இல் படங்களை வெளியிட்டோம். அவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும், நாங்க படத்தை மட்டும் தியேட்டருக்குக் கொண்டுபோய் சேர்த்தோம். அந்தப் படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோனது பத்திரிகைத்துறை தான். அஜித் உடன் வாலி, வில்லன், முகவரி, ஆரம்பம் என நிறைய வெற்றிப் படங்களை விநியோகம் செய்தோம். விஜய் உடன் சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல் எனப் பிரமிக்கிற வ...
’96 என்னுடைய கதை – இயக்குநர் ப்ரேம்குமார்

’96 என்னுடைய கதை – இயக்குநர் ப்ரேம்குமார்

சினிமா, திரைச் செய்தி
'96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், "இந்தக் கதை என்னுடையது தான். இந்தக் கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில், '96 என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்தக் கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்குப் பிறகு தயாரிப்பாளர்...
வன்முறைப்பகுதி விமர்சனம்

வன்முறைப்பகுதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும் பொழுது, சில படங்கள் பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு படமிது. மிகக் குறைவான பட்ஜெட், அறிமுக இயக்குநர் என்பதெல்லாம் மீறிப் படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்தே படத்தில் தெரியும் நேட்டிவிட்டி ரசிக்க வைக்கிறது. வீட்டுக்கோ, ஊருக்கோ, எவருக்குமோ அடங்காத காலிப்பயல் முனியசாமி. சகோதரர்களான சன்னாசியும், வேலுவும் சொந்த சித்தப்பாவையே குத்திச் சாய்க்கும் சண்டியர்கள். அவர்களின் தங்கை தவமணிக்கு முனியசாமியை நிச்சயம் செய்கின்றனர். கல்யாணம் நின்று விட, முனியசாமிக்கும் சண்டியர்களான சகோதரர்களுக்கும் முட்டிக் கொள்கிறது. அதன் விளைவு மிகக் கொடூரமானதாய் இருக்கிறது. மேலே சொல்லப்பட்ட ஒரு வரிக் கதைக்கருவைப் பார்த்தால் வன்முறைப்பகுதி என்ற பெயர் சரியானதாகப்படும். ஆனால், படத்தின் மிகப் பெரிய பலவீனமே அதன் தலைப்புத்தான். படத்தின் கன்டென்ட்டையும் கருவையும் சிதைக்கும் கொடும...
கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம்

கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம். மயிர்க்கூச்சு என்றால் பயத்தினாலோ, குளிரினாலோ உடலிலுள்ள முடிகள் குத்திட்டு நிற்கும் நிலை. சானியும் சாமும், பொக்கிஷம் எனக் கருதி ஒரு பெட்டியைத் திறக்க, ஒரு புத்தகம் கிடைக்கிறது. அதைத் திறந்ததும் ஸ்லாப்பி எனும் டம்மி பொம்மை திடீரென அவர் முன் தோன்றுகிறது. அதன் பாக்கெட்டில் உள்ள சிறு பேப்பரை எடுத்து, அதிலுள்ள மந்திரத்தை உச்சரித்து, தெரியாத்தனமாக ஸ்லாப்பிக்கு உயிர் கொடுத்துவிடுகின்றனர். உயிர் கிடைத்ததால் ஹேப்பியாகும் ஸ்லாப்பி, சானியிடமும், அவள் சகோதரி சாராவிடமும், தான் அவர்களது சகோதரன் என்றும், நாமெல்லாம் ஒரு குடும்பம் என்றும், அது தன் வீடு என்றும் சொல்கிறது. ஸ்லாப்பியின் மந்திர சக்தியும், அதை அது பயன்படுத்தும் விதத்தாலும் பயப்படும் சாரா, அந்த உயிருள்ள டம்மி பொம்மையை வீட்டில் இருந்து அகற்ற நினைக்கிறது. ஸ்லாப்பியோ மீண்டும் தோன்றி, தனக்கு ஓர்...
ஜருகண்டி விமர்சனம்

ஜருகண்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜருகண்டி என்றால் நகருங்க எனப் பொருள்படும். 'இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அதற்காக ஓடிக் கொண்டே இருப்பார்கள்' எனத் தலைப்புக்கு விளக்கமளித்துள்ளார் இயக்குநர் பிச்சுமணி. இவர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கியில் பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்துக் கடன் வாங்குகிறார் ஜெய். அதனால் எழும் பிரச்சனையைச் சமாளிக்க்க, ரெபா மோனிகா ஜானைக் கடத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பிரச்சனையைத் தீர்க்கப் பார்க்கிறார். கடத்தப்பட்ட பெண் பணத்துடன் மிஸ் ஆக, ஜெய்யின் பிரச்சனைகள் இரட்டிப்பாகிறது. பிரச்சனைகளை இருந்து நகராமல், ஓடி ஒளியாமல் எப்படி அதைத் தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை. பெரிய பிரச்சனையில் சிக்கினாலும், அதை மி...
ஜீனியஸ் விமர்சனம்

ஜீனியஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜீனியஸ் என்பதற்கு மேதை எனப் பொருள் கொள்ளலாம். யார் மேதை, எது மேதைத்தன்மை அல்லது மேதையாய் இருப்பது அவசியமா என்ற கேள்விகளைப் படம் எழுப்புகிறது. ஏழாவது வரை ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் குமாரை, அவனது தந்தை ராம் மூர்த்தி தினேஷைக் கூண்டிலடித்து, படிப்பைத் தவிர வேறெதுவும் இல்லை என அவனது பதின்பருவத்தைச் சிறைபிடித்து விடுகிறார். ஒருநாள், அவன் வளர்ந்து நல்ல வேலையில் இருக்கும் பொழுது, அவனது மூளை ஷட்-டவுன் ஆகிவிடுகிறது. தனக்குள் பேசிக் கொண்டிருப்பது, எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது என அவன் மனம் பிறழ்கிறது. அதிலிருந்து எப்படி தினேஷ் குமார் மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. ஆச்சரியப்படுத்துவதற்கு சுசீந்திரன் எப்பொழுதும் தவறுவதில்லை. ஒன்று அசத்தி ஆச்சரியப்படுத்துவார் அல்லது பயங்கரமாகச் சொதப்பி ஆச்சரியப்படுத்துவார். நூறு நிமிடங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட படம். படி, படி எ...
ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்

ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘ஹாலோவீன்’ என்ற பெயரில், 40 வருடங்களுக்கு முன் வந்த படத்தின் 11வது பாகம் இது. இந்தப் பாகத்தின் விசேஷம் என்னவென்றால், 1978இல் வந்த முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இடையில் வந்த மற்ற பாகங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. 1978 இல் வந்த ஹாலோவீன் படத்தில், மைக்கேல் மையர்ஸ் என்பவன், ஹாலோவீன் இரவு அன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபிசிட்டர்களைக் கொல்கிறான். அவனிடம் இருந்து தப்பிய லாரீ ஸ்ட்ரோடை, 40 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொல்ல வருகிறான் மைக்கேல் மையர்ஸ். ஆனால், இம்முறை லாரீ அம்முகமூடி கொலைக்காரனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளாள். 105 நிமிடங்கள் கால அளவு கொண்ட படத்தின் முடிவில், மைக்கேல் மையர்ஸிடம் இருந்து லாரீ ஸ்ட்ரோட் தப்பினாளா என்பதற்கான விடையுடன் படடம் நிறைவுறுகிறது. ஒன்பது வருடங்களுக்குப் பின் இத்தொடரின் அடுத்த படம் வருவதாலும், முதல் பாகத்தின...
ஷேடஸ் ஆஃப் ஷாஹோ – பிரபாஸின் பிறந்தநாள் பரிசு

ஷேடஸ் ஆஃப் ஷாஹோ – பிரபாஸின் பிறந்தநாள் பரிசு

சினிமா, திரைத் துளி
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த பிரத்தியேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ஆம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான 'சாஹோ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் பிரத்தியேக முன்னோட்டத்தை வெளியிட்டார். இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்குப் பிறகு  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபா...
விஜய் ‘சேதுபதி’ – குற்றாலம் டூ தாய்லாந்து

விஜய் ‘சேதுபதி’ – குற்றாலம் டூ தாய்லாந்து

சினிமா, திரைத் துளி
பாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் பட நிறுவனமான கே புரொடக்சன்ஸ், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து சூப்பர் ஹிட்டான பியார் பிரேமா காதல் வெற்றிப் பபடத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். "இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. 40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி வெளி நாட்டில் படமாகிறது என்பது சிறப்பம்சம். அந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்துகிறோம்" என்றார் இயக்குநர் அருண்க...