Shadow

சினிமா

காற்றின் மொழி விமர்சனம்

காற்றின் மொழி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'தும்ஹாரி சுலு' எனும் ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமாக வந்துள்ளது 'காற்றின் மொழி' திரைப்படம். சுலோச்சனாவாக நடித்த வித்யாபாலனின் பாத்திரத்தில் விஜயலக்‌ஷ்மியாக ஜோதிகா நடித்துள்ளார். நாயகியை மையப்படுத்திய படமாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு. ஒரே மாதிரியான அம்சம் பொருந்திய கதைகளிலேயே உழலாமல், ஜோதிகாவைப் போல், முன்னணி நாயகர்களும் படத்தைத் தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்கும்? பன்னிரெண்டாம் வகுப்பு தேறாத விஜியலக்‌ஷ்மிக்கு எதிர்பாராத விதமாக ஹலோ எஃப்.எம்.-இல் ஆர்ஜே-வாக (RJ - Radio Jockey) வேலை கிடைக்கிறது. அதனால் அவர் குடும்பத்தில் என்ன சிக்கல்கள் எழுகிறது என்றும், அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கரும், குமரவேலும் படத்தில் உள்ளனர். மொழி படத்தினைப் போலவே எம்.எஸ்.பாஸ்கருக்கு ஓர் அழுத்தமான பாத்திரம். மூலக்கதையில், ஒரு காட்ச...
திமிரு புடிச்சவன் விமர்சனம்

திமிரு புடிச்சவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் ஆண்டனி முதல் முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார். ஆனால், ஒரு போலீஸ் படமாக இல்லாமல், 2018 இல் வந்த மிகச் சிறந்த பக்திப் படமென்ற புகழையே திமிரு புடிச்சவன் பெறும். படத்தில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தின் பெயர் முருகவேல். இயக்குநரின் பெயர் கணேஷா. நம்பியார் எனும் படத்தை இயக்கியவர். படத்தின் தொடக்கமே கொஞ்சம் அதிர வைக்கிறது. பிளேடைக் கொண்டு மிகக் கொடூரமான கொலை ஒன்றைப் புரிகிறார் விஜய் ஆண்டனியின் தம்பி. தனது தம்பி தான் அந்தக் கொலையைச் செய்தான் என்றும், மேலும் எட்டுக் கொலைகளைச் செய்துள்ளான் என்றும், அடுத்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், ஒரு குழந்தையும் கொலை செய்ய உள்ளான் எனத் தெரிய வருகிறது விஜய் ஆண்டனிக்கு. நீதி, நேர்மை தவறாத நல்லவர், நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் உத்தமரான எஸ்.ஐ. முருகவேல்...
உத்தரவு மகாராஜா விமர்சனம்

உத்தரவு மகாராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரவியின் காதுக்குள், 'நிற்காமல் ஓடிக்கொண்டே இரு'க்கும்படி உத்தரவிடுகிறார் இரண்டாம் இராஜராஜச் சோழன். அந்த உத்தரவை ரவி மீறினால், செவிப்பறையை அலறச் செய்யும் பலமான ஒலி எழுந்து, ரவியை நிலைகுலையச் செய்துவிடும். மகாராஜாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர ரவிக்கு வேறு மார்க்கம் இல்லை. ஏன் அந்த ஒலி எழுகிறது, யார் அந்த ஒலியை எழுப்புகின்றனர், எப்படி அதிலிருந்து ரவி மீண்டான் என்பதுதான் படத்தின் கதை.  படத்தின் முதற்பாதியில், இரண்டாம் ராஜராஜச் சோழனும் அவனது வீரர்களும் குதிரையில் வருகின்றனர். அஸெல் மீடியாவின் 3டி கிராஃபிக்ஸில் அவை இயல்பாய்ப் பொருந்துகின்றன. ட்ரெய்லரிலேயே அந்த மங்கலான குதிரைகளைப் பார்க்கலாம். அவை படத்தில் அழகாகப் பொருந்தி, நாயகனின் காதில் கேட்கும் அமானுஷ்யக் குரல்களுக்கான நேர்த்தியான உருவங்களாக உள்ளன. அமெச்சூரான கிராஃபிக்ஸ் என்ற எண்ணம் எழாததற்குக் காரணம், ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்...
தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் விமர்சனம்

தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
அமிதாப் பச்சனும், அமீர் கானும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம். 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பாலிவுட்டின் மிகப் பிரம்மாண்டமான படம். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' போல ஒரு இந்தியப் படம் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தது படத்தின் ட்ரெய்லர். தக்ஸ் என்பது கொலை, கொள்ளையில் ஈடுபடும் கும்பலுக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். அப்படி இந்துஸ்தானின் விடுதலைக்காகப் புரட்சி செய்யும் ஒரு குழுவிற்கு, தக்ஸ் என முத்திரையிட்டு, அதை அடக்கி ஒடுக்க நினைக்கிறார் ஜான் க்ளைவ் எனும் ஆங்கிலேயர். அது அவருக்குச் சாத்தியமானதா என்பதுதான் படத்தின் கதை. இளவரசி ஜஃபிராவின் கண் முன்பே ஜான் க்ளைவ், அவள் அண்ணன், அம்மா, அப்பா ஆகிய மூவரையும் நம்ப வைத்து, துரோகமிழைத்துக் கொன்று விடுகிறார். பதினோரு ஆண்டுகள் கழித்து தனது வஞ்சத்தை ஜஃபிரா எப்படித் தீர்த்துக் கொள்கிறார் என்பதே படத்தின் முடிவு. நல்லவனாய் வாழப் ப...
ஸ்பைடர் வலையில் சிக்கிய பெண் ஹேக்கர்

ஸ்பைடர் வலையில் சிக்கிய பெண் ஹேக்கர்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
மில்லினியம் சீரிஸ் என்பது, ஸ்வீடன் எழுத்தாளர் ஸ்டீக் லார்ஸனால் தொடங்கப்பட்ட 10 பாகங்களுடைய க்ரைம் நாவல் தொடர். ஆனால், அவரது எதிர்பாராத மரணத்தால், இது மூன்று பாகங்களோடு நின்றது. அந்த மூன்று பாகங்களுமே கூட அவரது மரணத்திற்குப் பின்பே வெளியானது. மில்லினியம் என்பது ஒரு பத்திரிகையின் பெயர். அதன் புலனாய்வு பத்திரிகையாளர் மிகேல் பிளான்க்விஸ்ட், மற்றும் லிஸ்பெத் சலாண்டர் ஆகிய இருவரும் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். இந்த சீரிஸின், நான்காவது பாகத்தை டேவிட் லாகர்கிரான்ட்ஸ் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த சீரிஸின் முதல் பாகமான, ‘தி கேர்ள் வித் தி ட்ராகன் டேட்டூ’ என்ற பெயரில் 2011 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் டேனியல் க்ரெய்க் தான் அப்படத்தின் நாயகன். தற்போது, மில்லினியம் சீரிஸின் நான்காவது நாவலான ‘தி கேர்ள் இன் தி ஸ்பைடர்’ஸ் வெப்’, திரைப்படமாக வெளிவரவுள்லது. டேனியல் க...
ட்ரீம் வாரியர் பிக்சர்சின் 21வது படத்தில் ஜோதிகா

ட்ரீம் வாரியர் பிக்சர்சின் 21வது படத்தில் ஜோதிகா

சினிமா, திரைத் துளி
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இரண்டாவது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு அவர் நடித்த '36 வயதினிலே' படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படமும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றிப் போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டுமெனக் கவனமாக இருக்கிறார். இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களைத் தன்வசப்படுத்தி வருகிறார். அதற்குச் சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம். இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பைக் குறிப்பாக பெண்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஜோதிகாவை வைத்த...
மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி

மெளனகுரு சாந்தகுமாரின் மகாமுனி

சினிமா, திரைத் துளி
ஸ்டூடியோ க்ரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தைத் தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். சண்டைப் பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “க்ரைம் த்ரில்லர் ஜானரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகைய...
விருதுக்குத் தயாராய் அழியாத கோலங்கள்- 2

விருதுக்குத் தயாராய் அழியாத கோலங்கள்- 2

சினிமா, திரைத் துளி
நட்பையும் காதலையும் இதை விட புனிதப்படுத்தி விட முடியாது என்கிற மாதிரியான ஒரு அழுத்தத்தை மனசுக்குள் ஏற்படுத்தும் அழியாத கோலங்கள் - 2 திரைப்படம் படத்தில், ஓர் எழுத்தாளராக வாழ்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்; போலீஸ் வேடத்தில் காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்துள்ளார் நாசர்; பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க முடியும் என்கிற மாதிரியான காதாபாத்திரத்தில் ரேவதி அழகாக நடித்துள்ளார். இப்படி நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து அழுத்தமான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் M.R.பாரதி. “அடிதடி இல்லை. குத்துப்பாட்டு இல்லை. காமெடி இல்லை. டூயட் இல்லை. இதெல்லாம் தான் கமர்ஷியல் ஃபார்முலா என்றால், இது எதுவும் இல்லாமல் இரண்டு மணி நேரம் திரையை நோக்கியே நம் கண்கள் இருக்கும் என்றால் அது அதிசயம் தானே! அந்த அதிசயத்தை அழியாத கோலங்கள் 2 நிகழ்த்தி இருக்கிறது. கொண்...
செய் – பட வெளியீட்டில் என்ன குழப்பம்?

செய் – பட வெளியீட்டில் என்ன குழப்பம்?

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின் படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப்பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் “செய்”. இந்தப் படத்தில் நகுல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. ‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாயகன் நகுல் பேசுகையில், “இந்தப் படத்தை நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியிடலாம் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தது. நாங்கள் இந்தப் படத்தை கேரளாவிலும் வெளியிடுவதால் அங்கு இதற்கான விளம்பரப்படு...
தயாரிப்பாளர் சங்கத்துக்கு ’96 தயாரிப்பாளரின் எச்சரிக்கை

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ’96 தயாரிப்பாளரின் எச்சரிக்கை

சினிமா, திரைத் துளி
விஷால் நடித்த கத்திசண்டை படத்திற்குப் படம் வெளியிடுவதற்கு முன்பே விஷால் அவர்களுக்கு பணம் செட்டில் செய்யப் பட்டு விட்டது. ‘96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஊதிய பாக்கி இருப்பதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நந்தகோபால், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். இதுவரை நான் எடுத்த அனைத்துத் திரைப்படங்களிலும் எனது மனசாட்சிக்கு உட்பட்டுச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், ‘96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில் வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்க நிர...
KGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை

KGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
தென்னியாவில், கோலிவுட், டாலிவுட், மாலிவுட் போல் சாண்டல்வுட் தனது பிராந்தியத்தைத் தாண்டிப் பெரிதும் சலனத்தை ஏற்படுத்தவில்லை. விதிவிலக்கான சில படங்களைத் தவிர்டத்து, சாண்டல்வுட் தத்தித் தத்தியே நடை பழகி வந்தது. தற்போது, கன்னடத் திரையுலகமும் தனது பிராந்தியத்தை விட்டுத் தாவிப் பாயத் தொடங்கியுள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தாலே அது தெரியும். கே.ஜி.எஃப் (KGF) என்பது கோலார் கோல்ட் ஃபீல்ட் (கோலார் தங்க வயல்) என்பதன் சுருக்கமாகும். அக்டோபரில் வெளியான, வில்லன் எனும் கன்னடத் திரைப்படம் தான் இதுவரை வெளியான கன்னட படங்களிலேயே அதிக பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டது. அதனுடைய பட்ஜெட் சுமார் 45 கோடி ஆகும். டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள கே.ஜி.எஃப் அந்தச் சாதனையை முறியடிக்கவுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 90 கோடியாகும். எப்படிப் பாலிவுட்டில், 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’...
சர்கார் விவகாரத்தில் அதிமுகவினரின் அடாவடி கண்டிக்கத்தக்கது – கருணாஸ் காட்டம்

சர்கார் விவகாரத்தில் அதிமுகவினரின் அடாவடி கண்டிக்கத்தக்கது – கருணாஸ் காட்டம்

சமூகம், சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையைக் கிளப்பித் திரையரங்கப் பதாகையைக் கிழித்துப் போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினார். இது வன்முறையான கண்டிக்கத்தக்க அநாகரிகச் செயலாகும்.   சர்கார் திரைப்படம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டுத் தணிக்கைக் குழுவின் ஆட்சேபணையின்றி வெளிவந்த வேலையில் அத்திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்கச் சொல்லிப் போராடுவது சட்டவிரோதச் செயலாகும். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்பியடிதான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதைத் தணிக்கைக்குழு விரும்பாத படமாகத்தான் படம் எடுக்க முடியும். இவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, “வீட்டுக்குள் புருஷங்காரன் பொண்டாட்டிய அடிக்கத் திண்னையில் கிடக்கிறவன்...
களவாணி மாப்பிள்ளை விமர்சனம்

களவாணி மாப்பிள்ளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எந்த வாகனமும் ஓட்டத் தெரியாத தேவாவிற்கு, பைக்கில் பறக்கும் துளசி மீது காதல் வந்துவிடுகிறது. துளசிக்கும் தேவாவைப் பிடித்துப் போய் விட, கல்யாணப் பேச்சை எடுக்கின்றனர். துளசியின் அம்மாவான பணக்கார ராஜேஸ்வரிக்கு ஒரே ஒரு நிபந்தனை தான். மாப்பிள்ளைக்குக் காரோட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே அது. அங்குத் தொடங்கும் மாப்பிள்ளையின் களவாணித்தனம் எங்குக் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. படம் ஸ்பூஃப் படம் போல் தெரிகிறது. நாயகியின் அம்மாவாக நடிக்கும் தேவயாணியின் பெயர் ராஜேஸ்வரி. மாப்பிள்ளை படத்தில் ஸ்ரீவித்யாவின் பெயர் ராஜராஜேஸ்வரி ஆகும். ஆனால், ஸ்ரீவித்யாவின் அந்த மிடுக்கும் கம்பீரமும் தேவயாணியிடம் சுத்தமாக மிஸ்ஸிங். காருக்கு பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும்படி அறிமுகமாகிறார் நான் கடவுள் ராஜேந்திரன். ஓரத்தில் ஒரு பையன், சட்டையைத் தரையில் வீசி அதை எதிரிலுள்ள கட்டையில் 'ஆட்டியூட்'-உடன் போடுகிற...
பில்லா பாண்டி விமர்சனம்

பில்லா பாண்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜீத்தின் தீவிர ரசிகர் பில்லா பாண்டி. அவரும், அவரது அத்தை மகள் சாந்தினியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, பாண்டியை ஒருதலையாகக் காதலிக்கும் இந்துஜாவால் பாண்டிக்கு மிகப் பெரும் பிரச்சனை எழுகிறது. சூழ்நிலைகள்மிக மோசமாகி, 'தல'ச்சாமியின் அருள் அவரை எப்படிக் காப்பாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதை இடைவேளையில் தான் தொடங்குகிறது. அதுவரை, மேஸ்திரியாக வரும் தம்பி ராமையாவின் 'மீ டூ' அத்தியாயங்கள் கொலையாகக் கொல்கிறது. 'கருப்பட்டி மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் போதும். யாரை வேண்டுமானாலும் சம்மதிக்க வைத்துவிடுவேன்' என படத்தின் 35% நீளம் அவருக்காக மட்டுமே ஒதுக்கப்படுகிறது. படத்தின் நீளம் குறைந்தாலும் பரவாயில்லையென, நகைச்சுவை என்ற பெயரில் தம்பி ராமையா செய்யும் அசட்டுத்தனங்களைக் கத்தரித்து எறிந்திருக்க வேண்டும் படக்குழு. காமெடியனுக்கும், வில்லனுக்கும்  கேரக்டர் டீட்டெயிலிங்கில் பெரிய வித்தியாசம...