Shadow

சினிமா

பெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’

பெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’

சினிமா, திரைச் செய்தி
  மிக மிக அவசரம் - பெண் காவலர்கள் சந்திக்கும் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. ஆனால் இந்தப்படம் போலீஸாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படமாக இருக்குமோ என்கிற எண்ணம் பலர் மத்தியில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் அதை தனது வித்தியாசமான அணுகுமுறையால் உடைத்தெறிந்து விட்டார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. காவலர் தினமான நேற்று, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் சுமார் 200 பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி. இந்நிகழ்வு குறித்த விரிவாகப் பகிர்ந்துகொண்ட சுரேஷ் காமாட்சி, “இது ஏதோ பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் படம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் கதைதான். அந்தவகையில் இந்தப்படத்தின் கதைக்களமாக போலீஸ் துறையைப் பின்...
தொரட்டி – இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் கதை

தொரட்டி – இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் கதை

சினிமா, திரைத் துளி
1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின்  அடிப்படையில் தொரட்டி தமிழ்த் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்தக் கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.  படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்காக அந்தப் பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து, அப்பகுதி மக்களுடன் இரண்டரக் கலந்து படத்தில் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, காதலை, உறவுகளின் உணர்வுகளை , கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்ட...
கூர்கா படத்தில் கனடா மாடல் எலிஸ்ஸா

கூர்கா படத்தில் கனடா மாடல் எலிஸ்ஸா

சினிமா, திரைத் துளி
யோகி பாபுவின் கூர்கா படத்துக்குள் புதுப்புது ஆட்கள் வந்தவாறு இருக்கிறார்கள். சமீபத்தில் நவநாகரீக விஷயம் ஒன்றும் நடந்திருக்கிறது. ஆம், சாம் ஆண்டன் இயக்கும் கூர்கா படத்தில் வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஒரு செய்தி இருந்தது. தற்போது அது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்கத் தூதர் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் சாம் ஆண்டன் இந்தக் கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களைப் பார்த்து, இறுதியாக எலிஸ்ஸா தான் சரியான தேர்வு என்று அவரைத் தேர்வு செய்திருக்கிறார்.  இது குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, "கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையைச் சரியாகப் புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்தப் படவாய்ப்பை தன் வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்...
சண்டக்கோழி 2 விமர்சனம்

சண்டக்கோழி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2005 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் சண்டக்கோழி. சண்டைக்கு முந்தி நிற்கும் ஆளெனத் தலைப்பைப் பொருள் கொள்ளலாம். ஒரு கொலையால், வேட்டைக் கருப்புக் கோவிலின் திருவிழா ஏழு வருடங்களாக நடைபெறாமல் தடைப்படுகிறது. மீண்டும் அத்திருவிழா நடைபெற்றால், அன்பு எனும் இளைஞனைத் திருவிழாவில் வைத்துக் கொல்ல, வரலக்‌ஷ்மி குடும்பத்தினர் காத்திருகின்றனர். அன்புவையும் காப்பாற்றி, திருவிழாவையும் எப்படி ராஜ்கிரணும் விஷாலும் நடத்துகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு மீரா ஜாஸ்மின் மிக முக்கிய காரணம். அதை மனதில் வைத்துக் கொண்டு, கீர்த்தி சுரேஷை மீரா ஜாஸ்மின் ஆக்கிடப் படாதபாடு பட்டுள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் தூக்கி வீசிடுவேன் என்ற மதமதப்போடே வளைய வருகிறார் விஷால். எப்படியும் அனைவரையும் துவம்சம் செய்துவிடுவார் என்று ரசிகர்களுக்குத் தெரியாதா? அதைச் சுவாரசியமாகச் சொல்லவேண்டாமா?...
வடசென்னை விமர்சனம்

வடசென்னை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் துரோகம், வளர்த்து விட்டவருக்கு அவரது பிள்ளைகள் செய்யும் துரோகம், நட்பெனும் போர்வையில் நம்பியவர்களுக்குச் செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம், பழிவாங்க உறவாடிக் கெடுக்கும் துரோகம் என துரோகத்தின் அத்தனை வடிவங்களையும் கொண்டுள்ளது வடசென்னை. இப்படம், மெட்ராஸ் போலவும், காலா போலவும், 'நிலம் எங்கள் உரிமை' என்பதையே பேசுகிறது. வளர்ச்சியெனும் பேரில் மீனவக் குப்பங்களும், அதன் மனிதர்களும் எப்படி அந்நியப்படுத்தப்பட்டு நசுக்கப்படுவார்கள் என அமீர் பேசும் அரசியலைச் சேலம் எட்டு வழி பாதை திட்டத்தோடு பொருத்திப் பார்த்தால் படத்தில் இழையோடும் அரசியலின் வீரியம் புரியும். அமீரின் பாத்திரம் தெறி! வெற்றிமாறன், மேக்கிங்கிலும் கதைசொல்லும் பாணியிலும் மிகுந்த சிரத்தை எடுத்து அசத்தியுள்ளார். ஒரு நேர்க்கோட்டுக் கதையை, பல அத்தியாயங்களாகப் பிரித்து, மூன்று கதாபாத்திரங்களுக்குள் உள்ள தொடர்பாகத...
எழுமின் விமர்சனம்

எழுமின் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"எழுமின்! விழிமின்! குறி சாரும்வரை நில்லாது செல்மின்!" என்பது விவேகானந்தரின் வாக்கு. விஸ்வநாதன், அர்ஜுன் ஸ்போர்ட்ஸ் அகாடெமி தொடங்கும் பொழுது, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விவேகானந்தரின் இவ்வாக்கை மேற்கோள் காட்டியே உரையாற்றுகிறார். இது மாணவர்களுக்கான படம். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அப்துல் கலாமும், பதாகைகளில் வலம் வருகிறார். மாணவர்களுக்குத் தற்காப்புக் கலை ஏன் அவசியம் என்றும், விளையாட்டுத் துறையில் நிலவும் ஊழல் குறித்தும் படம் பேசுகிறது. அஜய் குங் ஃபூவிலும், கபின் கராத்தேவிலும், வினீத்தும் அர்ஜுனும் பாக்ஸிங்கிலும், சாரா ஜிம்னாஸ்டிக்கிலும், ஆதிரா சிலம்பத்திலும் திறமைசாலிகள். இவர்கள் ஆறு பேரும் நண்பர்கள். இதில் நான்கு பேர் ஏழைக்குடும்பத்தில் இருந்து வருபவர்கள். 'படிக்காமல் என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு?' என்ற எண்ணமுடைய அவர்களின் பெற்றோர்களைச் சமாதானம் செய்து, மாணவர்கள் விருப்பப்ப...
ஆரா சினிமாஸ் – பெங்களூரு

ஆரா சினிமாஸ் – பெங்களூரு

சினிமா
பெங்களூருவின் வொயிட்ஃபீல்டில் உள்ள பார்க் ஸ்கொயர் மாலில் எஸ்பிஐ (SPI) சினிமாஸ், இதுவரை அனுபவித்திராத புத்தம் புதிய திரையரங்க அனுபவத்தை அளிக்கும் வகையில் நான்கு அட்டகாசமான திரைகள் கொண்ட அரங்கத்தைத் திறந்துள்ளது. மொத்தம் 696 இருக்கைகள் கொண்ட அத்திரையரங்கம், மாலினுடைய மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் உள்ளன. இந்தியாவிலேயே, SLS ரிப்பன் டெக்னாலஜி எனும் அதி நவீன தொழில்நுட்பம் உடைய இரண்டாவது திரையரங்கம், ஆரா சினிமாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 4K ரெசலூஷன், 3டி டெக்னாலஜி, டால்பி அட்மாஸ் என ரசிகர்களின் படம் பார்க்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு ஆரா சினிமாஸ் நகர்த்தியுள்ளது. எஸ்பிஐ-இன் அடையாளங்களில் ஒன்றான பாப்கார்னுடன், மிஷேலின் நட்சத்திர செஃப்பான மைக்கேள் பெஸ்ஸியின் சுவையான கோல்ட் காஃபியும், நாவில் கரையும் டோனட்டும் ஆரா சினிமாஸின் மெனுவில் பிரதான இடம் பிடித்துள்ளன. வரிசையில் நின்று டிக்கெட...
கூஸ்பம்ப்ஸ்: புத்தகத்துக்குள் பொதிந்திருக்கும் ஆபத்து

கூஸ்பம்ப்ஸ்: புத்தகத்துக்குள் பொதிந்திருக்கும் ஆபத்து

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
2015 இல், வெளியான கூஸ்பம்ப்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு தொடர் சங்கிலியாக அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது! தி ப்ராஸ் பாட்டில் (The Brass Bottle, 1964; தமிழில், பட்டணத்தில் பூதம், 1967), ப்ளாக் பியர்ட்ஸ் கோஸ்ட் (Black Beard’s Ghost, 1968), கூஸ்பம்ப்ஸ் (Goosebumps, 2015) போன்ற படங்களில் முறையே ஜாடியிலிருந்தோ, மாயாஜால கதைகளை அலசும் புத்தகங்களிலிருந்தோ முறையே ஒரு பூதமோ, விசேடக் குணாதிசயங்களும் விசித்திரமான வடிவமைப்புகள் கொண்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் உயிர்த்தெழுந்து உலா வரும் அதி அற்புத காட்சிகளைப் பல படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம்! புத்தம்புதியதாகப் புதுப்பொலிவுடன் பவனி உலா வருகிறது, கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன். வார்டன்க்ளிஃப் என்கிற ஒரு சிறிய ஊரில், சானி க்வின் (ஜெரமி ரே டெய்லர்) மற்றும் சாம் கார்டர் ஆகிய இருவர், ஆர்.எல்.ஸ்டைன் (ஜ...
காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கேரளத்து நாடோடிப் பாடல்களின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் 19 ஆம் நூற்றாண்டு காயங்குளம் கொச்சுண்ணி. கள்வரென்றாலும், சுரண்டல்காரர்களான பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுக்கும் நல்லவர். காலங்கள் கடந்தும், செவி வழியாக மக்களின் மனங்களில் நுழைந்து, இன்றளவும் தன் நாயக பிம்பத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சகாப்தம் அவர். தன் தந்தையைப் போல் திருடனாகி விடக்கூடாதென ஒரு மளிகைக் கடையில் பணி புரிகிறார் கொச்சுண்ணி. மனதில் பேராசையும் வஞ்சகமும் நிறைந்த பிராமணர்கள், ஒரு பொய் குற்றச்சாட்டினைக் கொச்சுண்ணி மீது சுமத்தி, நையப்புடைத்து, மரத்தில் தலைகீழாகத் தொங்க விடுகின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கும் கொள்ளைக்காரரான 'இத்திக்கர பக்கி', கொச்சுண்ணியை மீட்டு, பார் போற்றும் கொள்ளைக்காரர் காயங்குளம் கொச்சுண்ணியாக உருவாக்குகிறார். அதன் பின், அவர் சந்திக்கும் தொடர் துரோகங்களைக் கடந்து, காயங்கு...
ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்

ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்

சினிமா, திரைச் செய்தி
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது."இயக்குநர் ராம்குமார் அண்ணன் 2 வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையோடு வந்தார். முண்டாசுப்பட்டி இயக்குந்ர் என்பதைக் கேள்விப்பட்ட உடனே அதை ஓகே செய்தார் டில்லி பாபு சார். பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது தான் இப்போதைய மிகப்பெரிய சவால். அதிர்ஷ்டவசமாக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் கையில் படம் போய் சேர்ந்தது எங்கள் பாக்கியம். சின்ன கம்பெனி என்பதையும் தாண்டி எங்களை நம்பி...
ஃபர்ஸ்ட் மேன் விமர்சனம்

ஃபர்ஸ்ட் மேன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
"இது, மனிதனுக்கு ஒரு சின்ன அடி எடுத்து வைத்தல், மனித குலத்திற்கோ இது மிகப் பெரும் நகர்வு" என்ற வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை நிலவில் கால் வைக்கும்பொழுது சொன்னார் நீல் ஆர்ம்ஸ்ட்ராங். மனித குலம், பூமியில் நீடிக்கும் நாள் வரை அவரது பெயர் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கும். அவரது சரிதத்தை, 2005 ஆம் ஆண்டு, 'ஃபர்ஸ்ட் மேன்: தி லைஃப் ஆஃப் நீல் A.ஆர்ம்ஸ்ட்ராங்' எனும் நூலாகக் கொண்டு வந்தார் ஜேம்ஸ் R.ஹன்ஸென். அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, 'லா லா லேண்ட்' படத்தை இயக்கிய டேமியன் சஸெல், "ஃபர்ஸ்ட் மேன்" படத்தை இயக்கியுள்ளார். படத்தில், அமெரிக்கக் கொடியை நடுவது போல் காட்சியை வைக்கவில்லை இயக்குநர் டேமியன். அதனால் பலத்த சர்ச்சைகள் எழுந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட, "மிகவும் துரதிர்ஷ்டவசமானது இது. அமெரிக்காவின் சாதனையைச் சொல்வதைக் கூடப் படக்குழுவினர் சங்கடமாகக் கருதுகின்றனர். மிகவும் மோசம...
மனுஷங்கடா விமர்சனம்

மனுஷங்கடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் முடிவில், "நாங்களும் மனிதர்கள் தான்டா!" என்று கையறு நிலையில் இடுகாட்டில் அழுது புரண்டு அரற்றுகிறார் கோலப்பன். பரியேறும் பெருமாள் படத்தினைத் தொடர்ந்து, தலித்கள் அனுபவிக்கும் கொடுமையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பேசுகிறது 'மனுஷங்கடா' திரைப்படம். இந்தப் படம் முடிந்து வெளிவந்ததும், இரண்டு பேர் பேசிக் கொண்டது. "இன்னுமா இப்படிலாம் இருக்கு? என்னமோ படம் எடுக்கிறாங்க!" என்று அலுத்துக் கொண்டார் ஒருவர். அவருடன் வந்த நண்பர், "இன்னும் எங்க கிராமத்தில் இப்படித்தான்ங்க. வேட்டியைக் கூட மடிச்சுக் கட்டக்கூடாது" என்றார். பூனை கண்ணை மூடிக் கொண்டு, உலகம் இருட்டாகிவிட்டது என நினைத்துக் கொள்ளுமாம். அது போல், சமூகம் என்பது தனக்குத் தெரிந்த நான்கு சுவர்கள் மட்டுமே என்ற அறியாமையில் மக்கள் உழல்கின்றனர். அவர்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல, இது போன்ற படங்கள் மிகவும் அவசியமாகிறது. வழக்கமான திரைப்படம் போலன்...
எ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்

எ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் வில்லியம் A.வெல்மேன், 1937இல் எழுதி இயக்கிய படம் 'எ ஸ்டார் இஸ் பார்ன்'. 1954 இல் ஒருமுறையும், 1976 இல் மறுமுறையும் ஹாலிவுட்டிலேயே இப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தைத் தழுவி பாலிவுட்டில் கூட ஆஷிக்கி 2 எனும் படம் வெளிவந்தது. அஃபிஷியலாக இப்படம் நான்காம் முறையாக இம்முறை ரீமேக் செய்யப்படுள்ளது. பார்வையாளர்கள் நிரம்பி வழியும் மேடையில், ஜாக்ஸன் மெய்ன் எனும் புகழ்பெற்ற இசைக் கலைஞனின் அறிமுகம் நிகழ்கிறது. அடுத்த கணமே அவன் போதை வஸ்துக்களுக்கு அடிமையானவன் என்பதையும் அதற்கான அவனது பிரயத்தனங்களுமாய் கதை நகரத் துவங்குகிறது. என்றேனும் பெரிய ஸ்டார் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையோடு மதுபான விடுதி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும் ஆலியை ஜாக்ஸன் சந்திக்க, அவளது அசாத்திய குரல் வளத்தைக் கேட்டு அசந்து போகிறான். அன்றைய இரவு முழுவதும் இருவரும் தங்கள் விருப்பு வெறுப்புக்களைப் பரஸ்பரம்...