சினிமா

சிவகார்த்திகேயனின் இமேஜ்க்கு வரிகள் – யுகபாரதி
பாடல் வரிகள் என்பவை வெறும் வார்த்தைகள் மட்டும் இல்லை, அதையும் தாண்டி படத்தில் இயல்பாக அமைய வேண்டும். இந்த விஷயத்தில், இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன், டி.இமான் கூட்டணிக்கு, பாடலாசிரியர் யுகபாரதி தான் அவர்களுக்குச் சாலப் பொருந்துவார். 'ரஜினி முருகன்' மற்றும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பாடல்களை கேட்டாலே எல்லோருக்கும் இது புரியும்.
'சீமராஜாவிலும்' இந்தக் கூட்டணியின் மாயாஜாலம் தொடர்கிறது. "இதனை மாயாஜாலம் எனக் குறிப்பிடுவதை விட, இந்தக் குழுவில் எங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளதாகவே நான் கூறுவேன். சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் டி.இமான் உடனான என் பயணம் சீமாராஜாவில் என் வேலையை மேலும் எளிதாக்கியிருக்கிறது" என்றார் யுகபாரதி.
"நாங்கள் எல்லோரும் இந்தப் படத்தில் ஒன்றாக ஒப்பந்தமான உடனே எங்கள் உடலில் திருவிழா அதிர்வு பரவியது. மேலும், சிவகார்த்திகேயனுடன் ப...

மூன்று பயணங்கள் – ஒரு வண்டி – ஹைப்பர் லிங் கதை
வண்டியைக் கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'வண்டி'. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி நடித்திருக்கிறார்கள். சூரஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார். இயக்குநரும் தயாரிப்பாளரும் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்க் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும், ரொம்ப யதார்த்தமாக, ரியலாக எடுக்கணும்னு ஆசைப்பட்டோம். இந்த வண்டி படத்தில் நிறைய இடங்களில் பல கேமராக்கள் கொண்டு மறைத்து வைத்தெல்லாம் எடுத்திருக்கிறோம். இந்த வகையில் தமிழில் முதல் படமாக இருக்கும் என்று நினைக்கிறேன், தொடர்ந்து நிறைய தமிழ்ப் படங்கள் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றார் தயாரிப்பாளர் ஹஷீர்.
"இந்த படம் ஒரு ஹைப்பர் லிங் கதையமைப்பை கொண்ட படம். இதில் 3 பயணங்கள் உள்ளன, அதில் நானும் ஒரு கதையில்...

சீமராஜாவின் திருவிழா – கலை இயக்குநர் முத்துராஜ்
கிராமப்புறத் திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது, மிகவும் எளிதாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். பச்சைப்பசேலென வயல் வெளிகள், அமைதியான ஏரிகள், தெளிவான சிற்றோடைகள், வண்ணமயமான திருவிழாக்கள், இனிமையான குயில் சத்தம் ஆகியவை மட்டுமே கிராமத்துப் படங்களின் ஆதாரம் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால் உண்மையில், தொழில்நுட்பக் குழுவின் இமாலய உழைப்புத் தேவைப்படுகிறது.
குறிப்பாக, 'கலை இயக்குநர்' பங்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. ஒரு 'திருவிழா' படம் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால் அந்தத் திருவிழா அனுபவத்தைத் திரையில் கொண்டு வருவது மலையை இழுப்பதற்குச் சமம். சிவகார்த்திகேயன் - சமந்தா நடித்துள்ள சீமராஜாவில் கலை இயக்குநர் முத்துராஜின் உழைப்பு அபரிமிதமானது.
சீமராஜா படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கலை இயக்குநர் முத்...

“கமல் இப்படிச் செய்யலாமா?” – சுரேஷ் காமாட்சி
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’.
அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, "ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்றன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கமர்ஷியலாகப் படமெடுத்துச் சம்பாதித்து விட்டுப் போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனைப் பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலைத் தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ்த் ...

பரியேறும் பெருமாள்: முன்னோக்கி இழுக்கப்படும் தேர் – பா.ரஞ்சித்
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதற்படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஷ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாகப் புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினை...

பரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ராம் பேசுகையில், "எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக் காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப் போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் த...

பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்தப் படத்தில் என்னைத் தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன். பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள். இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. இந்தப் படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர்ப்பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கிறத...

மரகதக்காடு – சமரசமில்லாப் படம்
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அஜய், ரஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
கவிஞர் வெண்ணிலா பேசும்போது, "எனது நண்பன் இயக்குநர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குநர் பாரதிராஜாவைச் சந்திப்பதற்க...

வஞ்சகர் உலகம் விமர்சனம்
வஞ்சகர் சூழ் உலகிற்கு, சமூகத்தின் சில பிற்போக்குத்தனமான பார்வைகளும், பகுத்தறிவற்ற நம்பிக்கைகளும், காலாவதியான சட்டங்களுமே காரணமாக அமைகின்றன என்பது மிகவும் துரதிர்ஷ்டம். காலமாற்றமும் அதற்குத் தோதான சட்டங்களும், சக மனிதன் மீதான பார்வையை, மேலும் கரிசனத்துடனும் நட்புடனும் மாற்றும் என நம்புவோமாக!
படம் மெதுவான தாள லயத்தில் பயணிக்கிறது. இந்த லயத்திற்கு, இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் என்பது மிக நீண்ட நேரமாய்த் தோற்றமளிக்கிறது. போதைப்பொருள், மணி லாண்டரிங் போன்ற சட்டவிரோத செயல்களை நிழலில் இருந்து இயக்கும் துரைராஜைப் பிடிப்பது, இளம்பெண் மைதிலியைக் கொன்றது யாரென விசாரிப்பது என்று கதை இரண்டு குதிரைகளின் மேல் ஒரே நேரத்தில் சவாரி செய்கிறது. மைதிலியின் கொலையில் இருந்து படம் தொடங்குவதால், அந்த ஒன்றின் மீதே இயக்குநர் மனோஜ் பீதாவும், கதாசிரியர் V.விநாயக்கும் சவாரி செய்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு க...

மிஸ்டர் பீனின் ஜானி இங்கிலீஷ் 3
மிஸ்டர் பீனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இறவா நகைச்சுவைக் கதாபாத்திரத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ரோவன் அட்கின்சனே அதில் நடித்திருப்பார். 1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பட்ட தொடரான மிஸ்டன் பீன் (Mr. Bean), இன்று வரையும் ரசிக்கப்படும் மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி. மிஸ்டர் பீன் பாணியிலேயே, ஜேம்ஸ் பாண்aட் படங்களைப் பகடி செய்து 2003 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த படம் “ஜானி இங்கிலீஷ்”. அதன் அடுத்த பாகம், “ஜானி இங்கிலீஷ் ரீபார்ன்” என 2011இல் வந்தது. தற்போது, அதன் மூன்றாவது பாகமான “ஜானி இங்கிலீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகெயின்” திரைப்படம், இந்திய நகரங்களில் செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
ஒரு ஹேக்கரின் கைங்கரியத்தால், நிழல் உளவாளிகளின் அடையாளங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடுகின்றன. பணி ஓய்வில் இருந்து அழைக்கப்பட்டு, ஜானி இங்கிலீஷிடம் இந்தப் பொறுப...






