Shadow

சினிமா

தணிக்கை அதிகாரியைக் கன்னாபின்னாவெனக் கண்டிக்கும் தியா

தணிக்கை அதிகாரியைக் கன்னாபின்னாவெனக் கண்டிக்கும் தியா

சினிமா, திரைத் துளி
‘கன்னா பின்னா’ படத்தின் இயக்குநர் தியா, ‘நாளைய இயக்குனர்’ குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர். இந்தப் படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், திருமணம் செய்துகொள்வேன் என அழகான பெண்களைத் தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’. இதை அக்மார்க் காமெடிப் படத்தை இயக்கியுள்ள தியா தனது படத்திற்கு உரிய சென்சார் சான்றிதழ் பெறப் போராடி வருகிறார். “ஜனரஞ்சகமான காமெடிப் படத்தையே நான் இயக்கியுள்ளேன். அதுவும் சென்சார் விதிகளுக்கு உட்பட்டுத்தான். ஆனால் தணிக்கை அதிகாரியான மதியழகன், இந்தப் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் தான் தருவேன் எனக் கூறியதோடு, விளக்கம் கேட்ட என்னை அவமானப்படுத்தி வெளியே நிற்கவைத்துவிட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசுகிறார். தணிக்கை என்கிற அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சினிமாவை அழிக்க...
குற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன்

குற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன்

சினிமா, திரைத் துளி
"ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நண்பர் இந்தெர் குமாரின் நீண்ட நாள் கனவு. நல்லதொரு கதைக்களமமும், அந்தக் கதைக்களத்தில் இறங்கி விளையாடும் திறமையான கூட்டணிக்காகவும் காத்திருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். அதன் படி இயக்குநர் அறிவழகன் செதுக்கி இருக்கும் குற்றம் 23 படத்தின் காட்சிகள் அனைத்தும் அற்புதமான முறையில் உருவாகி நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாதமாக வர, பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்தெர் குமார். சமீபத்தில் குற்றம் 23 படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த எங்கள் இருவருக்கும், எப்படி எங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. ஒரு கதாநாயகனாக நான் மேற்கொண்ட பத்து மாத கால கடின உழைப்பிற்கு, தற்போது பலன் கிடைத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் இந்தெர் குமார் என்னைப் பாராட்டிய போது மிக உற்சாகமாக இருந்தது. குற்றம் 23 படத்தின் ஆரம்ப கட்ட...
விழித்திரு – புத்தாண்டுக் கொண்டாட்டப் பாடல்

விழித்திரு – புத்தாண்டுக் கொண்டாட்டப் பாடல்

சினிமா, திரைத் துளி
இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றும் தான் ஒரு செயலில் வெற்றி பெறுவதற்கு, அதுவும் திரையுலகில் நிலையான வெற்றி பெறுவதற்கு முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுகிறது.....அத்தகைய சிறப்பம்சங்களை பின்பற்றி வரும் இயக்குநர் - தயாரிப்பாளர் மீரா கதிரவன், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய 'விழித்திரு' படத்தின் 'STAY AWAKE' பாடலை துபாயில் மிக பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார். "என்னைப் பொறுத்தவரை நேரம் தான் இந்த உலகத்தில் எல்லாமுமாக இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி, திரையுலகின் மூத்த நபர் அபிராமி ராமநாதன் அவர்கள் துபாயில் 'நட்சத்திர கலை விழா' என்னும் விமர்சையான கலை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். ஒட்டுமொத்த துபாயும் அன்றிரவு நட்சத்திரங்களின் வருகையால் 'விழித்திரு' க்கும். அப்படி ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் எங்களின் 'விழித்திரு’ பாடலை வெளியிட வேண்டும் என்று தான் நான் பல நாட்கள் ...
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
காலமும் மரணமும் மனித இனத்தின் மீதான அவமானம் எனக் கருதுகிறான் கெசிலீயஸ். அந்த அவமானத்தைக் களைய வேறொரு பரிமாணத்தில் இருக்கும் டொர்மாமுவைப் பூமிக்கு அழைக்கிறான். அண்டத்தைக் கைப்பற்றும் இச்சையுடைய டொர்மாமுவிடமிருந்து பூமியை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்பவர் ஓர் அமெரிக்க நியூரோ சர்ஜன். மேற்கின் மேட்டிமையில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு திமிர் பிடித்த திறமைசாலி விஞ்ஞானி இவர். விதிகளை மீறுவது பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல், காரியத்தை முடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட லட்சியவாதியும் கூட! அவருக்கு மிக மோசமான ஒரு விபத்து நிகழ்கிறது. கை விரல்கள், பலத்த சேதத்திற்கு உள்ளாகி எந்தப் பொருளையும் நடுக்கமின்றிப் பிடிக்கும் பலமற்றுப் போய் விடுகிறது. நவீன மருத்துவம் கைவிட்ட நிலையில், கமார்-தாஜ் எனும் இடத்தைத் தேடி காத்மாண்டுக்குப் பயணிக்கிறார்...
கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

திரை விமர்சனம்
காலங்காலமாய் முடிவே இல்லாமல் நிகழும் விவாதத்திற்கு விடை கண்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ். கடவுள் இருக்கிறாரா இல்லையா என ஆத்திகர்களும் நாத்திகர்களும் தங்களுக்குள் சண்டை போடாத நாளே இல்லை. ஆனால் ராஜேஷ், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மிகச் சுலபமாய் இந்தப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறார். த்ரிஷா அல்லது நயன்தாரா, இருவரில் ஒருவரோடு குமாருக்கு திருமணம் நிச்சயமாகி விட்டால் கடவுள் உள்ளார் எனப் பொருள். இத்தகைய உயரிய தத்துவ விசாரணையை உடையதுதான் படத்தின் கதை. த்ரிஷா, நயன்தாரா என்ற பெயர்களைச் சம்பந்தப்பட்ட நடிகைகளோடு பொருத்தி நேரடி பொருள் கொள்ளக் கூடாது. அது ஓர் அழகான குறியீடு. எந்தப் பொழப்பும் இல்லாத விர்ஜின் பையனுக்கு, காதலிக்க எந்தப் பெண் கிடைத்தாலும் தேவதைதான். தேவதையை நேரில் பார்த்திராத யதார்த்தவாதியான நாயகன், நடிகைகளின் பெயரைக் கொண்டு தான் பார்க்கும் பெண்ணை ஒப்பீடு செய்து கொள்கிறான். அப்படி குமாரு...
கண்ல காச காட்டப்பா – படக்குழுவினர்

கண்ல காச காட்டப்பா – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> அரவிந்த் ஆகாஷ் >> எம்.எஸ்.பாஸ்கர் >> விச்சு விஸ்வநாத் >> யோகி பாபு >> அஸ்வதி >> சாந்தினி >> கல்யாண்பணிக்குழு:>> தயாரிப்பு - சுகர், கல்யாண், அரவிந்த், மேஜர் கெளதம் >> திரைக்கதை இயக்கம் - 'மேஜர்' கெளதம் >> ஒளிப்பதிவு - அரவிந்த் >> படத்தொகுப்பு - செல்வம் >> இசை - திவாகர் சுப்ரமணியம் >> கதை - S.G.சேகர் (SGS) >> வசனம் - ராதாகிருஷ்ணன் >> நடனம் - கல்யாண், கிருஷ்ணா >> கலை - P.A.ஆனந் >> பாடல் - விக்கி சுபோ, திவாகர் சுப்ரமணியம் >> மக்கள் தொடர்பு - நிகில்...
மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

சினிமா, திரைச் செய்தி
ப்ரேக் டான்ஸராக இருந்து நடிகராக மாறிய ‘மேஜர்’ கெளதம் தற்போது இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்நேரத்தில் ‘மேஜர்’ கெளதமும் அவரது குழுவும் மட்டும் மகிழ்ச்சியாக உள்ளனர். காலத்தின் அவசியம் உணர்ந்த வைக்கப்பட்டது போல், “கண்ல காச காட்டப்பா” என அவர்களின் படத் தலைப்பு அமைந்துவிட்டதே அதற்குக் காரணம். தலைப்பு மட்டுமன்று, படத்தின் கருவும் கறுப்புப் பணத்தை மையப்படுத்தியே! படத்தைப் பார்த்து விட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, “இரண்டரை மணி நேரம் ரசிகர்கள் கலகலப்பாக இருக்கப் போவது உறுதி” என்கிறார். S.G.சேகர் என்பவர் கதையை, இயக்குநர் கெளதம் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். ‘ஹெலிகேம் (Helicam)’ ஷாட்ஸ்கள் படத்தில் பிரமாதமாக உள்ளதென ஒளிப்பதிவாளர் அரவிந்தைப் பாராட்டினார் வெங்கட்பிரபு. படத்தின் நாயகனான அரவிந்த் ஆகாஷும், “மலேஷியாவில்...
குழந்தைகளைப் பாதிக்கும் பாலியல் சீண்டல் – நமீதா

குழந்தைகளைப் பாதிக்கும் பாலியல் சீண்டல் – நமீதா

சினிமா, திரைத் துளி
சாயா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நமீதா, "இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்ததில் மகிழ்ச்சி. சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன். இந்தப் படம் குழந்தைகள் பேரன்டிங் பற்றியும், கல்வி பற்றியும் எடுக்கப்பட்டுள்ளதெனத் தெரிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம், நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன். எனக்கு அவங்கதான் குழந்தைகள். சாக்லேட், கேரமெல், லட்டு என்பது என்னுடைய பப்பீஸ்களின் பெயர். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக் கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன். ஒரு விஷயம், ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். ந...
ஒற்றுமை அவசியம் – நடிகர் ஸ்ரீகாந்த்

ஒற்றுமை அவசியம் – நடிகர் ஸ்ரீகாந்த்

சினிமா, திரைத் துளி
குழந்தைகள் தினத்தன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். ஜாக்குவார் தங்கமும், நடிகைகள் நமீதாவும் வசுந்தராவும் பெற்றுக் கொண்டனர். பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, ''எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும். இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்கு போக்கு சொல்லி பொய்யான காரணம் சொல்லித் தவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். இதை எண்ணி வேதனை அடைந்திருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன். விழா நடத்துபவர்கள் பலரது தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன். அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன். நான்...
இதுவரை வந்திராத கதை – சாயா படம்

இதுவரை வந்திராத கதை – சாயா படம்

சினிமா, திரைச் செய்தி
“இதுவரை தமிழ்ப்படங்களில் சொல்லப்படாத வித்தியாசமான கதை” என்பதில் மிக உறுதியாக உள்ளார் சாயா படத்தின் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல். ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் மின்காந்த அலைகள் இருக்கும்; அதை ஆரா என்பார்கள்; ஆராவின் ஒளியைக் கொண்டே, உடலிலுள்ள நோயினை அறிய முடியுமெனப் படத்தைப் பற்றிக் கூறும் பொழுது இயம்பினார் இயக்குநர். இந்தப் படத்தின் நாயகன், மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஆராவைக் காணக் கூடிய சக்தி பெற்றவர் என படத்தின் ட்ரெயிலரில் இருந்து யூகிக்க முடிகிறது. நாயகன் இறந்தவர்களுக்கே உயிர் கொடுப்பது போல் முன்னோட்டத்தில் காட்சிகள் வருகிறது. மேலும், ''ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘சாயா’ படம் பதிலளிக்கும்'' என்றார் இயக்குநர். இந்தப் படம் அமானுஷ்யமான பேய்ப் படமென நினைத்துக் கொள்ள வேண்டாம்....
அற்புதமான மிருகங்களை எங்குக் காணலாம்?

அற்புதமான மிருகங்களை எங்குக் காணலாம்?

அயல் சினிமா, திரைத் துளி
‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம் (FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM)’ எனும் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தெலுங்கிலும் நவம்பர் 18 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிப் பெரும்புகழை அடைந்த பெண் எழுத்தாளர் J. K. ரெளலிங்கின் கற்பனையில் இருந்து உதித்த மற்றொரு படமிது. அதை விட, திரைக்கதையாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் முதல் படமிது என்பது இப்படத்திற்கான கூடுதல் சிறப்பு. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இனைத்துக் கொண்டுள்ளார். ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ ஃபைண்ட் தெம்’ என்பது ஒரு புத்தகத்தின் பெயர். ஹாரி பாட்டர் பாடப் புத்தகமான தன் கையில் வைத்திருக்கும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் நியூட் ஸ்கேமண்டர். அந்தக் கதாப்பாத்திரம் தான் இந்தப் படத்தின் ஹீரோ. நியூட் ஸ்கேமண்டராக நடித்துள்ளார் எடி ரெட்மெய்ன். எந்தக் கதாப்பாத்திரத்தில் நடி...
அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கல்லூரி முடிச்சுட்டு வேலைக்குப் போகாதவனாகவும், தங்கையின் தோழியைக் காதலிப்பவனாகவுமே உங்க படத்தின் ஹீரோக்கள் இருக்காங்களே! உங்க டெம்ப்ளட் மாத்த மாட்டீங்களா?' என்ற கேள்விக்கு, "இதான் எனக்குத் தெரியும். அது நல்லாவும் வருது. சோ, நான் இதையே பண்றேன்" எனப் பதிலளித்தார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். மேலும், "ஒருத்தன் நல்லா தண்ணியடிச்சுட்டு, என்ன படம்னே தெரியாம தியேட்டர்க்குப் போயிட்டு, படம் ஆரம்பிச்ச 2 ஃப்ரேம்ல, முழுப் போதையில் இது கெளதம் படம்னு கண்டுபிடிக்கணும்" என்றும் தன் விருப்பத்தை வலியுறுத்தினார். எஸ்.டி.ஆர். மஞ்சிமா மோகனைக் காதலிக்கிறார். மஞ்சிமாவின் குடும்பத்தை ஒரு பெரும் பிரச்சனை சூழ்கிறது. காதலுக்காகவும், காதலிக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் எந்த எல்லைக்குப் போகிறார் என்பதே படத்தின் ஒரு வரிக் கதை. "முதல் பாதி ரொமான்ட்டிக்காக இருக்கும்; இரண்டாம் பாதியில் மாஸ் விஷயம்னு சொல...