Shadow

சினிமா

கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்

கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்

சமூகம், சினிமா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக கவிஞர் சினேகன் அறிவிக்கப்பட்டால், அதில் கிடைக்கும் பரிசுத்தொகையான ரூபாய் ஐம்பது லட்சத்தைக் கொண்டு அவரது சொந்த கிராமமான தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டியிலனைத்து வசதிகளையும் கொண்ட நவீன நூலகம் கட்டுவதாகாறிவித்தார். உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் சினேகனின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சினேகன் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்படாவிட்டாலும், அவரது கனவு நிறைவேறுவதற்காகப் பல்வேறு தொண்டு அமைப்புகளும், திரைப்படத் துறையினரும், தொழிலதிபர்களும் முன் வரத் தயாராக உள்லனர். அதில் முதல் நபராக நடன இயக்குநரும் நடிகரும் சமூக ஆர்வலருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள், ரூபாய் பத்து லட்சம் நன்கொடையாக சினேகனின் சினேகம் செயலகத்தின் "மக்கள் நூலக"ப் பணிகளுக்காக வழங்கியுள்ளார். இவரின் முழுஒத்துழைப்போடு, சினேகனின் லட்சியம...
தேசிய விருது இயக்குநரை மயக்கிய நாயகன் ரங்கா

தேசிய விருது இயக்குநரை மயக்கிய நாயகன் ரங்கா

கட்டுரை, திரைத் துளி
தேசிய விருது பெற்ற ஜோக்கர் இயக்குநர் ராஜுமுருகன் கதை, வசனம் எழுத, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான அவரது அண்ணன் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். ‘ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னுமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது, ரங்கா எப்படி இந்தப் படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தைச் சுவாரஷ்யமாகச் சொன்னார். “எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது. இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத...
தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சதுரங்க வேட்டை இயக்குநரின் அடுத்த படைப்பு என்ற ஆவல் ஒரு பக்கம் என்றால், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் போலீஸைக் கெளரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்று எதிர்பார்ப்பு மறுபக்கம். இந்த ஆவலையும் எதிர்பார்ப்பையும் இயக்குநர் வினோத் நூறு சதவிகிதம் பூர்த்திச் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாக, நெடுஞ்சாலையில் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் நடக்கும் கொடூரமான கொலை, கொள்ளைகளைத் துப்புத் துலக்கி, அதற்குக் காரணமானவர்களை எப்படிக் கஷ்டப்பட்டு கொள்ளையர்களின் வேரைத் தீரன் திருமாறன் கலைகிறார் என்பதே படத்தின் கதை. ராஜஸ்தானின் பவேரியர்கள் செய்தது திருட்டில் வராது; வழிப்பறிக் கொலையில் வரும். ஐந்தல்லது ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டால் அது வழிப்பறி (Dacoity) ஆகும். பவேரியர்கள் கொடூரமாக அடித்துக் கொல்கிறார்கள் என்ற சித்தரிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், அம்மனநிலைக்கான பின்புலத்தை...
‘அறம்’ ராமசந்திரன்

‘அறம்’ ராமசந்திரன்

சினிமா, திரைத் துளி
வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெறும் ஒரு படத்தின் பின்னணியில் இருப்பது அந்தப் படத்தின் கதை, இயக்கம், முன்னணி நடிகரின் நடிப்பு, இசை ஆகிய அம்சங்களைத் தாண்டிக் கதைக்குத் தூண்களாக விளங்கும் மற்ற கதாபாத்திரங்களின் பங்களிப்பும் தான். அந்த வகையில் தற்போது திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி பெற்று, அனைவரையும் கவர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் 'அறம்' திரைப்படத்தில், குழிக்குள் விழுந்த குழந்தையின் தந்தையாக நடித்த ராமசந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. யார் இவர் என்று எல்லோரையும் யோசிக்க வைத்த இவர் அடிப்படையில் ஒரு உதவி இயக்குநர். "நான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன். 17 வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்தேன். முதலில் ஒளிப்பதிவுத் துறையில் தான் பயில வந்தேன். ஆனால் காலம் என்னைத் துணை இயக்குநராக ஆக்கி விட்டது. அப்படியே சில படங்களில் சின்னச் சின்ன கதா பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித...
சென்சார் போர்டின் மர்மமென்ன?

சென்சார் போர்டின் மர்மமென்ன?

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராகேஷ், “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” எனும் படம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர். எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா இப்படத்தைத் தயாரித்துள்ளனர். “இந்தத் தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. இன்று பெண்கள் தாங்கள் தங்கள் சுதந்திரத்தோடு இயங்கும்போது, பலவிதமான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். சமூகத்தில் ஒரு ஆண் எதிர்கொள்ளக் கூடிய சுதந்திரத்தின் எல்லை பெண்களுக்கு உண்டா என்று கேட்டால் இல்லை. இன்னும் பாரதியின் கனவு முழுமை பெறவில்லை. இன்னும் பயத்தோடுதான் பெண்கள் வெளியில் நடமாடும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். காதல், காமம், கற்பழிப்பு, கந்து...
அறம் விமர்சனம்

அறம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் ஆந்திர எல்லையில் இருக்கும் காட்டூர் எனும் கிராமத்தில், தன்ஷிகா எனும் நான்கு வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறாள். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மதிவதனி, எப்பாடுபட்டாவது சிறுமியை மீட்டு விட வேண்டுமெனப் போராடுகிறார். கண் கலங்காமல், இப்படத்தைப் பார்த்து விடுவது இயலாததொரு காரியம். சுபமான முடிவு தானெனினும், ஒரு சிறுமியை மீட்க கலெக்டர் தலைமையிலான அரசாங்க ஊழியர்கள் திணறுவதைப் பார்க்கப் படபடப்பாக உள்ளது. இது படமாக இல்லாமல், பார்வையாளர்களின் கண் முன்னே உண்மையிலேயே நடப்பது போன்று மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள படம். அந்தப் பெற்றோரின் தவிப்பை, ஊர் மக்களின் கோபத்தை, கலெக்டரின் கையறு நிலையை, ஃபையர் சர்வீஸ் ஆட்களின் இயலாமையை, ஆளுங்கட்சியின் ‘பவர் பாலிட்டிக்ஸ்’ குறுக்கீட்டை எனப் படம் அத்தனை விஷயங்களையும் உணர வைக்கிறது. படம் பதைபதைப்...
இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ குறிப்பிடும்படி இல்லை. ஆனால், சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்படக் கூடிய அறிவே படையின் ஒரே ஆயுதம். அதைக் கொண்டு, 'சோட்டா ராஜ்' எனும் பயங்கரவாதியின் சதித் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை. மூன்று வருடங்களுக்கு ஒரு படமென்ற ரீதியில் வந்துள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனின் மூன்றாவது படம். நேர்த்தியான திரைக்கதையால் படத்தைச் சுவாரசியப்படுத்துள்ளார். அதையும் மீறி, படத்தில் இவரது வெற்றி என்பது, பரோட்டா சூரியின்  ஒரே மாதிரியான, பார்ப்பவர்களை  இம்சிக்கும் நடிப்பை முடிந்த அளவு மாற்றி, சூரியையும் ரசிக்கும்படி திரையில் காட்டியிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். காமெடியனாக அவரது பாத்திரத்தை மட்டுபடுத்தி இருந்தாலும், நல்லதொரு துணை நடிகராக அவரை உபயோகப்படுத்தி இருப்பது சிறப்பு. இப்படத்தில் எந்த வேடத்தை யார் ஏற்றிருந்த...
நட்புனா என்னானு தெரியுமா – படக்குழுவின் பரிசுப் போட்டி

நட்புனா என்னானு தெரியுமா – படக்குழுவின் பரிசுப் போட்டி

சினிமா, திரைத் துளி
லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் நட்புனா என்னானு தெரியுமா. விஜய் டிவி புகழ் கவின் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவம்பர் 12 ஆம் தேதி அன்று சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாகக் கலந்து கொள்ளலாம். ‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல அற்புதமான பரிசுகளையும் அள்ளிச் செல்லலாம்.. பரிசுப்பொருட்கள் விபரம்: • 32 கிராம் தங்க காசுகள் • 6 நாட்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணம் (விமானம்,...
தல பொங்கலாக வரும் பில்லா பாண்டி

தல பொங்கலாக வரும் பில்லா பாண்டி

சினிமா, திரைத் துளி
தாரை தப்பட்டை, மருது, ஹரஹர மஹாதேவகி எனப்படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக "பில்லா பாண்டி" எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார். மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக இறுதிகட்டப் பணிகளை நெருங்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும், படம் பொங்கல் அன்று வெளியிடப் படவுள்ளதாகவும் தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது...
அவள் விமர்சனம்

அவள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிறைவேறாத ஆசையுடன் இருக்கும் ஆவியொன்று, 80 வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டில் குடி புகுபவர்கள் மூலமாகத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறது. இந்தக் கதைக்கு, 'அவள்' என்பதை விட இன்னும் பொருத்தமான தலைப்பைச் சூட்டியிருக்கலாம். பேய்கள் என்றாலே, அவை பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்ற டெம்ப்ளட்டை வலுவாக்கும் விதம் உள்ளது தலைப்பு. ஆண்ட்ரியா சித்தார்த் முதல் சந்திப்பை, அது காதலாக மாறுவதை, அவர்களுக்கு இடையேயான அன்யோன்யத்தை எனப் படத்தின் தொடக்கம் க்யூட்டானதோர் அத்தியாயமாக எடுக்கப்பட்டுள்ளது. பேய்ப் படம் என்றால் காமெடிப் படமென அந்த ஜானருக்கே புது அடையாளம் கொடுத்துவிட்டார்கள் தமிழ் சினிமாவில். அதிலிருந்து விலகி, சீரியசனாதொரு படமாக இது உள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சித்தார்த்தாலும், இயக்குநர் மிலிந் ராவாலும் எழுதப்பட்ட கதை இது. கதாசிரியர்களாக இருவரின் கூட்டணி அபார வெற்றி பெற்றிரு...