சினிமா

திட்டிவாசல் விமர்சனம்
திட்டிவாசல் என்றால் பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய திறப்பு அல்லது வாயில் ஆகும். கோயில், கோட்டை முதலியவை அடைத்திருக்கும் போது ஆட்கள் உள்ளே சென்று வருவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே திட்டிவாசல். படத்தின் தலைப்போ, மத்திய சிறைச்சாலையின் உட்கதவான திட்டிவாசலைக் குறிக்கிறது. படத்தின் டைட்டில் அனிமேஷனே, சிறைச்சாலை திட்டிவாசலில் இருந்து பான்-அவுட் (Pan-Out) ஆகி மத்தியச் சிறைச்சாலையின் முகப்பிற்கு வந்து நிற்பதுதான்.
சிலரின் பகாசூரப் பேராசைக்கு, முள்ளம்பாறை எனும் மலைக்கிராம மக்கள் எப்படி பலியாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
மகேந்திரன், வினோத் கின்னி என இரண்டு நாயகர்கள் படத்தில். அவர்களுக்கு தனு ஷெட்டியும், ஐஸ்வர்யாவும் முறையே ஜோடிகள். இயற்கையைக் கூறு போடும் சுரண்டலைப் பற்றிப் படம் பேசுவதால், பிரதான பாத்திரங்களான இவர்களுக்குக் காதலிப்பதைத் தவிர வேறு வேலையில்லை. என்றாலும், செம்பருத்தியா...

விழித்திரு விமர்சனம்
'ஓர் இரவில் நான்கு கதைகள்' என்பதுதான் படத்தின் உபத்தலைப்பே!
திருநெல்வேலிக்கு ஊர் திரும்ப வேண்டிய ஒருவனின் பர்ஸ் சென்னையில் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது. அன்றிரவு அவனுக்கு என்னென்னவெல்லாம் நிகழ்கிறது என்பதுதான் படத்தின் கதை.
விதார்த், வெங்கட் பிரபு, ராகுல் பாஸ்கரன் எனப் படத்தில் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் இருந்தாலும், கிருஷ்ணா தான் படத்தின் நாயகன். பர்ஸைக் கிருஷ்ணா தொலைப்பதில் இருந்தே கதை தொடங்குகிறது. அவரது படபடவென்ற மேனரிசத்துக்கு ஏற்ற பாத்திரம்.
திருடன் சந்திர பாபுவாக விதார்த். திருடி சரோஜா தேவியாக சாய் தன்ஷிகா. இருவரது அறிமுகமும், ஒருவரை ஒருவர் ஏய்க்கப் பார்க்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. வெடுக் வெடுக்கெனப் பேசும் கதாபாத்திரத்தில் சாய் தன்ஷிகா அசத்தியுள்ளார். ஆனால், இத்தகைய சீரியசான படத்துக்கு தம்பி ராமையாவின் அசட்டு நகைச்சுவையும், விஜய டி.ராஜேந்தரின். குத்துப் பாட்டும் அவச...

இப்படம் ஜெயிக்கும்
‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, “முதல் முறையாக நான் உதய் கூட நடிக்கிறேன். புதுசா நடிக்க வர்றப்ப ஒரு பயம் இருந்திருக்கும். ஆனா இப்ப நல்லா நடிக்கிறார். மானிட்டர் பார்த்து, சரியா நடிச்சிருக்கேனே எனப் பார்த்து சரி பண்ணிக்கிறார். எனக்கு மானிட்டர் பார்க்கும் பழக்கமில்லை. ஏன்னா எண்பதுகளில் நாங்க நடிக்கிறப்ப மானிட்டரோ கேரவனோ இல்லை. நான் பஸ் ஓட்டணும் எனச் சொன்னாங்க. நான் ஏன் பஸ் ஓட்டணும்? டூப் போட்டு எடுத்துக்கலாம்லன்னு கேட்டேன். இல்ல, அதுஒரு ஸ்ட்ராங் கேரக்டர் நீங்க தான் பண்ணணும்னு கெளரவ் சொன்னார். ‘உங்களுக்காக இந்தக் கேரக்டரை இப்படிச் செஞ்சிருக்கோம்!’ என ஒரு டைரக்டர் சொல்றப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப பெருமையாகவும் இருக்கு. அவர் கேட்டதால், நானே பஸ் ஓட்டிட்டேன். கொஞ்சம் பக்கு பக்குன்னு இருந்தது. ஏன்னா என்னை நம்பி பஸ்சில் 20 பேர் உட்கார்ந்தாங்க...

மேயாத மான் மேஜிக் பாதிரியார்
தீபாவளி பண்டிகையன்று வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் மேயாத மான் படத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற காட்சிகளில் ஒன்று, மருத்துவமனையில் ஹீரோவும், அவரது நண்ரும் சண்டை போடும் போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இடையே வந்து சமரசம் செய்வது. ஒட்டு மொத்த திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைக்கும் அந்தக் காட்சியில் கிறிஸ்தவ பாதரியாக நடித்த டாக்டர் மேஜிக் சரவணகுமார் தியேட்டரில் கைதட்டல் வாங்கியதோடு, நேரில் பலரிடம் பாராட்டும் பெற்று வருகிறார்.
மேஜிக் கலைஞராகவும், சிறந்த பேச்சாளருமாக இருக்கும் டாக்டர் மேஜிக் சரவணகுமார், தனது பேச்சாற்றலுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். மேஜிக் ஷோ நடத்துவது, சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது என்று இருந்த இவர், தற்போது பிஸியான நடிகராகவும் ஆகிவிட்டார்.
‘ஜாக்சன் துரை’, ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’ உள்ளிட்ட பல படங்களி...

கதை பறையும் ரசூல் பூக்குட்டி
கலைத் துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்கள் மிகச் சிலரே! அந்த மிகச் சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற செளண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது செளண்ட் டிசைன்கள் உலக பிரசித்திப் பெற்றவை. தற்பொழுது, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்தப் படத்தில் திருச்சூரில் வருடா வருடம் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு செளண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தை 'பாம் ஸ்டோன் மல்ட்டிமீடியா (Palm Stone Multimedia)' ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குநர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ''இந்தப் படம் இதுவரை யாரு...

பிளேட் ரன்னர் 2049 விமர்சனம்
படத்தின் கதை 2049இல் நடக்கிறது. 1982இல் வந்த இப்படத்தின் முதல் பாகமான 'பிளேட் ரன்னர்' 2019 இல் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தின் தொடர்ச்சி தான் என்றாலும், சுருக்கமாக முன் கதை போல் ரெப்ளிகன்ட்ஸ் என்றால் யார், பிளேட் ரன்னர்களின் வேலையென்ன என்று படத்தின் தொடக்கத்திலேயே எழுத்துக்களாகப் போட்டு விடுவது சிறப்பு. அதனால் முதல் பாகம் பார்க்கவில்லையென்றாலும் கதை நன்றாக புரியத் தொடங்கிவிடும்.
ரெப்ளிகன்ட்ஸ் என்றால் மனிதர்களின் வேலைக்காரர்கள் எனக் கொள்ளலாம். மனிதர்களை விட வலிமையான ரெப்ளிகன்ட்ஸின் உடல், ரத்தம் சதை எலும்புகளால் ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்படும். 2019 இல், அதாவது முதல் பாகத்தில் வரும் ரெப்ளிகன்ட் எல்லாம் நெக்சஸ்-6 வகையைச் சார்ந்தது. அதன் வாழ்நாட்களே மொத்தம் நான்கு வருடங்கள்தான். அதற்கு மேல் உயிர் வாழவிட்டால், அவர்களின் உணர்ச்சிகள் விழித்தெழுந்து விட்டால் மனிதர்களின் இருத்தல...

விழித்திரு நாயகன் ராகுல் பாஸ்கரன்
மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விழித்திரு' வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது.
இது ஒரு ஆன்த்தாலஜி (Anthology) படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் பல உயரங்களைத் தொடத் திறமையுள்ளவர். மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின் ட்ரான்ஸ்ஃபர் நிறைந்த வேலையால், இந்தியா முழுவதும் பயணம் செய்து வாழ்ந்தவர். ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பைப் பார்த்து மீரா கதிரவனும் பாராட்டும் விதமாகத் தட்டிக் கொடுத்துள்ளார்.
விழித்திரு படத்தில் தானேற்ற கதாபாத்திரம் குறித்து நடிகர் ராகுல் பாஸ்கரன் பேசுகையில், ''இப்படத்தில் பிரபல மாடலான எரிக்கா பெர்னாண்டஸுடன் ஜோடியாக நடித்துள்ளேன். பணக்கஷ்டம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூடத் தெரியாத ஒரு பெரிய கோடிஸ்வரரின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளேன். பல கதைகள் ஒன்று சேரும் ...

“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த்
சித்தார்த்தின் சினிமா மீதான காதல் தான் அவரை ஏடாகி எண்டர்டெயின்மென்ட் எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கச் செய்தது. முதல் தயாரிப்பான ஜில் ஜங் ஜக் படத்திலேயே, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தைத் தொட்டுச் சோதனை முயற்சி செய்தார். அத்தகைய தைரியமான முயற்சி தான், நவம்பர் 3 வெளியாகவுள்ள "அவள்" திரைப்படமும்! இப்பட இயக்குநர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தில் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். 'வயாகாம் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை சித்தார்த் தயாரித்துள்ளார்.
விக்ரம் வேதா போன்ற பல வெற்றி படங்களை ரிலீஸ் செய்து தனக்கெனப் பெரும் பெயரையும் மதிப்பையும் சம்பாதித்திருக்கும் 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் அவர்கள் 'அவள்' படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடவுள்ளார்.
'அவள்' குறித்து சித்தார்த் பேசுகையில், ''திகில் படங்களின் தீவிர ரசிகனான எனக்கு இந்திய சினிமாவில் நம்மை உண்...

களத்தூர் கிராமம் விமர்சனம்
திடீரென்று ஒரு படம் நல்லதொரு ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு படம் தான் ‘களத்தூர் கிராமம்’.
பழி வாங்கும் கதை என மூன்றே வார்த்தையில் படத்தின் கதையைச் சுருக்கி விடலாம். ஆனால், எந்தச் சமயத்தில் யார் யாரைப் பழி வாங்குகிறார்கள் என்பதும், கதைக்களமும் காலமும் தான் படம் ஏற்படுத்தும் ஆச்சரியத்திற்குக் காரணம். ஒரு மகன் தனது தந்தையைக் கொல்ல நினைக்கின்றான்; தந்தையின் மரணத்தித்திற்காக ஓர் ஊரையே காவு வாங்க நினைக்கின்றான் அதிகாரத்தில் இருக்கும் ஒரு மகன்; தனது திருமணம் நின்றதற்குக் காரணமாக இருந்ததால் நண்பனைப் பழி வாங்குகிறான் சபலன் ஒருவன்; தனக்கொரு பிரச்சனை என வந்த பொழுது உதவாதவனை நேரம் பார்த்துச் சிக்கலில் மாட்டி விடுகிறான் பூசாரி; மகன் சாவிற்குக் காரணமான ஒருவனை அவனது மகனைக் கொண்டே கொல்லத் துடிக்கும் ஒரு முதிய தம்பதி; தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்க நினைக்கும் பண்ணையார் மகன் எனப் படத்தில் அத்த...

ஜாக்கி சானின் தி ஃபாரீனர்
ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜாக்கி சானின் ஆக்ஷன் படம் ஒன்று ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘தி ஃபாரீனர்’. இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம், இப்படத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து, 007 ஆகக் கலக்கிய பியர்ஸ் பிராஸ்னனும் நடித்துள்ளார்.
ஸ்டீஃபன் லெதர் எழுதிய 'தி சைனா மேன்' எனும் நாவலைத் தழுவித் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் டேவிட் மார்கோனி. பிரபல ஹாலிவுட் இயக்குநர் இயக்குநர் மார்டின் கேம்பெல் படத்தை இயக்கியுள்ளார். 2006இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'கேசினோ ராயல்' படத்தை இயக்கியவர் கேம்பெல் என்பது குறிப்பிடத்தக்கது. பியார்ஸ் பிராஸ்னன் 007 ஆக நடித்த 'கோல்டன் ஐ' படத்தை இயக்கியவரும் இவரே! 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பியர்ஸ் பிராஸ்னனுடன் இணைகிறார்.
க்வான் (Quan) என்பவர் லண்டனைச் சேர்ந்த தொலிழதிபர். அவரது பதின் வயது மகள் ஒரு வெடி விபத்தில் இறந்து விடுகிறாள். அரசியல் கா...

மெர்சல் விமர்சனம்
மெர்சலாயிட்டேன் என்றால் மிரண்டு விட்டேன் எனப் பொதுவாக பொருள் கொள்ளலாம். இந்தத் தலைப்பை அட்லி, இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தின் மெர்சலாயிட்டேன் பாடலின் வரிகளில் இருந்து 'இன்ஸ்பையர்' ஆகி எடுத்திருக்கச் சாத்தியங்கள் உள்ளன. கபிலனின் அந்தப் பாடல் வரிகளைப் பார்த்தால், பயத்தால் மிரள்வது மெர்சல் அல்ல என்று புரியும். ஒரு திகைப்பில், ஆச்சரியத்தில் எழும் பரவச உணர்வு என்பதாக மெர்சலுக்குப் பொருள் வருகிறது.
படத்தில் அத்தகைய மெர்சல் உணர்வு மூன்று நபர்களுக்கு எழுகிறது. முதலாவதாக, ஃபிரான்ஸ் கேஃபே-வில் காஜல் அகர்வாலுக்கு. கையிலிருக்கும் ஒரு பணத் தாளில் இருந்து, விஜய் நிறைய பணம் வர வைக்கும் பொழுது. இரண்டாவதாக, நியூஸ் சேனல் வாசலில் நிற்கும் சமந்தாவிற்கு. பந்து பொறுக்கிப் போடும் தம்பி தான் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் எனத் தெரிய வரும் பொழுது. மூன்றாவதாக, கிராமத்தில் பெரிய மருத்துவமனைக் கட்டடத்தை டீன் எஸ்.ஜே.சூர்யா...

மேயாத மான் விமர்சனம்
மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன் பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. 'ஸ்ரீவள்ளி (1945)' படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் கரெக்ட் செய்யப் பாடும் பாடலில், வள்ளியினது கற்பைப் போற்றும் வகையில் வரும் பதம்தான் 'மேயாத மான்'. அதாவது படி தாண்டா விர்ஜின் கேர்ள் என்பதன் கவித்துவ பதம் தான் மேயாத மான். ஆனால் இதையே இயக்குநர் ரத்ன குமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார். ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச் சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன் புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச் சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.!
ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்கி...

சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்
படத்தின் கதை கோயம்புத்தூரில் நடந்தாலும், கோவைக்கு மாற்றலாகும் சென்னையில் ஒரு நாள் படத்தின் கதாபாத்திரமான காவல்துறை உயரதிகாரி சுந்தரபாண்டியனைச் சுற்றி கதை நிகழ்கிறது. ஆனால் இது முந்தைய படத்தின் தொடர்ச்சியோ நீட்சியோ இல்லை. இப்படம் துருவங்கள் பதினாறு போல் ஒரு க்ரைம் த்ரில்லர். அந்தப் படத்தின் தாக்கத்தையும் படத்தில் உணர முடிகிறது.
'ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா?' எனக் கோவை முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்படுகிறது. ஏஞ்சல் பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் காவல் அதிகாரி சுந்தரபாண்டியன் வீட்டிற்கு வருகிறது. சென்னையில் இருந்து கோவை வரும் ஏஞ்சல் எனும் பெண் கடத்தப்படுகிறாள். இது மூன்று சம்பவங்களுக்கும் காரணகர்த்தா யார் எனத் துப்பு துலக்குவது தான் படத்தின் கதை. ராஜேஷ்குமாரின் நாவலொன்றினைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் என கிரெடிட் கொடுத்திருப்பது சிறப்பு.
படம் முழுவதும் சுந்தரபாண்டியனாக நடித்திருக்கும் சரத்குமார்...

100 தொட்ட சிம்பு
நடிகர், பாடகர், பாடலாசிரியர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட சிம்பு, "என் ஆளோட செருப்பக் காணோம்" படத்தின் மூலம் 100 பாடல்கள் பாடிய பெருமையைப் பெற்றிருக்கிறார். 1999இல் வெளியான "மோனிஷா என் மோனோலிசா" படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் சக ஹீரோக்கள், வளரும் நடிகர்களின் படங்களிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பதுதான் இதில் சிறப்பம்சம்.
100 பாடல்கள் என்ற மைல் கல்லை எட்டியிருக்கும் சிம்பு அதைப் பற்றிக் கூறும்போது, "பாடல்கள் பாடுவது எப்போதுமே எனது ஆர்வம். என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 பாடல்களைப் பாடியிருக்கிறேன் என்பதை உணரவே இல்லை. இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், உடன் பாடிய பாடகர்கள் ஆகியோருக்கு என் மனதார நன...


