Shadow

சினிமா

தப்பு தண்டா ஸ்ரீகண்டன்

தப்பு தண்டா ஸ்ரீகண்டன்

சினிமா, திரைச் செய்தி
பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர் இயக்குநர் ஸ்ரீகண்டன். அந்தப் பட்டறையில் இருந்து வெளிவரும் முதல் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. "படத்தின் தலைப்பும், டிரைலரும் சற்று திரில்லர் பாணியில் இருந்தாலும், இந்தப் படத்தை எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் தான் உருவாக்கி இருக்கின்றேன். 'தப்பு தண்டா' ஒரு டார்க் காமெடி படம். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோரின் நடிப்பு நிச்சயமாக அனைவராலும் பாரட்டப்படும். தப்பு தண்டா படத்திற்குப் பிறகு அஜய் கோஷின் வில்லன் அடையாளம் தமிழ்த் திரையுலகில் மேலும் வலு பெறும். இந்த மே மாதத்தில் எல்லோராலும் பேசப்படும் படமாக எங்களின் தப்பு தண்டா இருக்கும். நான் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவன். அவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் மனைவி அகிலா அம்மா வந்து என்னை வாழ்த்தியது என...
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 'தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஆரம்பமே அதகளமான கார் ரேஸில் தொடங்குகிறது. ரசிகர்கள், இந்தத் தொடர் படங்களில் இருந்து என்ன எதிர்பார்ப்பார்களோ அதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் திரைக்கதையாசிரியர் க்றிஸ் மார்கன். கதை, லாஜிக் எல்லாம் இரண்டாம் பட்சமே! ரோலர் கோஸ்டரில் இரண்டு சுற்று போய் வந்தது போன்ற உணர்வை தரக்கூடிய பொழுதுபோக்குச் சித்திரம். அதனால் தான் உலகளவில் வசூலில் ரெக்கார்ட் பிரேக் சாதனை புரிந்து வருகிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்றாலே விர்ர்ரூம் எனச் சீறும் கலர் கலரான கார்கள் தானே ஞாபகம் வரும். இப்படத்தில் ஒரு படி மேலே சென்று, "கார் மழை"யைப் பொழிந்துள்ளார் இயக்குநர் கேரி க்ரே. விஷூவலால் வாயடைக்க வைக்கின்றனர். 'தெறி மாஸ்' என்ற பதம் இப்படத்திற்கு மிகப் பொருந்தும். வில்லனாய் உள்ளே வந்த ஜேஸன் ஸ்டாத்தமை, டொமினிக் டீமு...
மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மையத்தை நோக்கி சோம்பலாக நீந்தும் பம்மாத்துக்கள் எதுவும் இல்லாத நேரடியான கதை. ஏற்கெனவே ஏசியாநெட்டிலும் இன்ன பிற தொலைக்காட்சிகளிலும் அலசப்பட்ட கரு. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஈராக்கில் பணிபுரிந்து ஐஎஸ் தீவிரவாதிகளின் பிணைக்கதிகளாகச் சிக்கி மீட்கப்பட்டவர்களின் கதைதான் இது என்று தெளிவாகக் கதையின் க்ளைமாக்ஸையே சொல்லி விட்டுத் தொடங்கும் படம். வெறும் செய்தியாக மட்டுமே இந்த நிகழ்வுகளைப் பார்த்தவர்களுக்கு அந்தச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் உறைந்து போன நிமிடங்களை, அதிலிருந்த பயத்தை, அந்த நாட்களின் வேதனையை, விட்டு வருவதா அங்கேயே இறப்பதா என்ற ஊசலாட்ட மனநிலையின் வலியை ஆழமாகக் கடத்துவதில்தான் ஒரு தேர்ந்த இயக்குநர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்து முதன்முறையாக இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் மகேஷ் நாராயணன், தன் முதல் படத்திலேயே தன்னைத் தேர்ந்த இயக்கு...
விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

சினிமா, திரைச் செய்தி
‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ எனும் படத்தில் விஷாலும் கார்த்தியும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள். சத்ரியன் முதலிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் K.சுபாஷ், இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இரட்டை எழுத்தாளர்களான சுபா வசனமெழுதுகின்றனர். இப்படத்தை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தனது ஐந்தாவது படமாகத் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இயையமைக்கிறார். இரண்டு நாயகர்கள் இணைந்து நடிக்கும் இப்படம், அமிதாப் பச்சனும் தர்மேந்திராவும் நடித்துப் பெரும்புகழ் ஈட்டிய ஹிந்திப் படமான “ஷோலே” போல் இருக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநரான பிரபுதேவா, “கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்பது நிறமில்லை. அஹிம்சைக்கும் வன்முறைக்கும் நடக்கின்ற போராட்டத்தைக் குறிக்கின்றது” என்றார். படத்தில் ஒரே கதாநாயகி தான். வனமகன் படத்தில் அறிமுகமாகும் சாயிஷா சைகல் தான் கார்த்திக்கிற்கு ஜோடியாக நட...
செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பே கதை. நாயகனைக் கழற்றி விட்டு விடுகிறார் நாயகி. பின் நாயகனின் நிலை என்ன ஆனதென்றும், அவனை ஏமாற்றிய நாயகியை அவன் என்ன செய்தான் என்பதும்தான் படத்தின் கதை. நாயகனின் மனநிலையை அலசியது போல், நாயகியின் மனமாற்றத்திற்கான காரணத்தை அலசாமல், ‘சில பொண்ணுங்க இப்படித்தான்! ஆள் மாத்திட்டுப் போயிட்டே இருப்பாங்க’ என்ற வலிந்து திணிக்கப்பட்ட தொனியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். 106 நிமிடங்களே படம்! படத்தின் முதற்பாதி போனதே தெரியாமல் விறுவிறுப்பாய்ச் செல்கிறது. ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் நாயகனின் அம்மாவும் தங்கையும், தூக்கில் தொங்குவதற்காகக் கட்டப்பட்டிருக்கும் துணியை நடு வீட்டில் காண்கின்றனர். நாயகனை ஐந்து நாட்களாகக் காணவில்லை. அவனைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்காமல் தவிக்கின்றனர் அவனது நண்பர்கள். இடையிடையே, நாயகனுக்கும் நாயகிக்கும் எப்படிக் காதல் மலர்கின்றதெனச் சொல்கின்றனர். இரண்டாம் பாதியில்த...
இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி

இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி

சினிமா, திரைச் செய்தி
“சிவலிங்கா அபடத்தில் அழகா வர்றார் லாரன்ஸ். எப்பவும் அமைதியா தான் பேசுவார். ஆனா புரட்சி உள்ளம் படைச்சவர். இல்லைன்னா, ஒரு மனுஷன் ஜல்லிக்கட்டில் வந்து உட்காருவானா? நிறைய பேர் சொன்னாங்க, விளம்பரத்துக்காக வந்து உட்கார்ந்தார்னு. அவருக்கு விளம்பரம்லாம் தேவையில்ல! ‘கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும். எங்கண்ணன் படத்தில் வரும் வசனம்’ என மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ராகவா வசனம் பேசியிருப்பார். படம் ஃபுல்லா நான் சொல்லியிருப்பேன். அவர் ரஜினி ரசிகர்னு எனக்குத் தெரியும். என் ரசிகர்கள் என்னிடம், ‘பாருங்க சார். உங்க மேல லாரன்ஸ்க்கு எவ்ளோ பிரியம் பாருங்க சார்’ எனச் சொன்னாங்க. ‘டேய், அவர் ரஜினிய சொன்னார்டா. நீ வேற ஒரு புரியாத பயல்டா’ எனச் சொன்னேன். ஏன் சொல்றேன்னா நம்ம மக்கள் புரியாத பயலுக. எதை நினைக்கிறது, எதை யோசிக்கிறது, எதை பண்றதுன்னு நம்ம மக்களுக்கு எதுவும் தெரியாது. ‘நல்லவன் வாழ்வான்’ படத்தி...
பாரத் சீனியின் ‘அனிரூத்’ கதாபாத்திரம்

பாரத் சீனியின் ‘அனிரூத்’ கதாபாத்திரம்

சினிமா, திரைத் துளி
தன்னை ஒரு படைப்பாளியாகக் 'கடுகு' திரைப்படம் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். வர்த்தக ரீதியான வெற்றியும், சினிமா விமர்சகர்கள் ரசிகர்களின் பாராட்டுகளும் விஜய் மில்டனின் குழுவிற்கு மேலும் ஊக்கத்தைத் தந்து இருக்கின்றது. கடுகு படத்தின் தயாரிப்பாளரான பாரத் சீனி, இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "பாரத் சீனியின் 'அனிரூத்' கதாபாத்திரம், நாங்கள் எதிர்பார்த்தததை விட எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கின்றது. அவருடைய யதார்த்தமான நடிப்பு, சூர்யா சாரை வெகுவாகக் கவர்ந்து இருப்பது மட்டுமின்றி அவரின் பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றது. மேலும் பாரத் சீனி இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர். அந்த வகையில் அவரை ஒரு நடிகராக திரையில் ...
ரித்திகா சிங் – முதல் ஹீரோ

ரித்திகா சிங் – முதல் ஹீரோ

சினிமா, திரைச் செய்தி
“பாக்ஸராக இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங்கைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பயம். கையில் வித்தை வச்சிருக்காங்க எனச் சொன்னாங்க. நான் நேர்ல ரிங்லயே அதைப் பார்த்திருக்கேன். சிவலிங்கா படத்தில் தான் தைரியமாக அவங்க கூட நடிக்கிறேன். அவங்க நேச்சுரல் ஆர்டிஸ்ட். நதி போல். படத்தில் பிரமாதமா பண்ணியிருக்காங்க” என்றார் ராதாரவி. “எனக்குத் தெலுங்கில் ரவி தேஜா ரொம்ப பிடிக்கும். ரொம்ப எனர்ஜிட்டிக்கான நடிகர். அதே போல், ஹீரோயின்ஸ்ல ரித்திகா சிங் ரொம்ப பிடிக்கும். அவங்க ரொம்ப எனர்ஜிட்டிக்கா நடிக்கிறாங்க. தெலுங்கில் இப்போ ‘குரு’ படம் ஹிட் ஆகியிருக்கு. இந்தப் படமும் அதே போல் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்கிறார் ரித்திகா சிங். “சிவலிங்கா படத்தில் முதல் ஹீரோ ரித்திகா சிங் தான்; இரண்டாவது ஹீரோ வடிவேலு; மூன்றாவது ஹீரோ சக்தி வாசு; நான்காவது ஹீரோ தான் நான்” என்றார் ராகவா லாரன்ஸ்....