32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 39 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 39)
முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம் அயல் சினிமா

முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம்

நிலம் சார்ந்த போராட்டத்தை மையப்படுத்திய படமாக முஃபாசா அமைந்துள்ளது. பெரு வெள்ளத்தில் தன் தாய் தந்தையரைப் பிரிந்த, முஃபாசா என்ற குட்டிச் சிங்கம், இன்னொரு நிலம் வந்தடைகிறது. ஆறு, மலை கடந்து தான் வாழ ஒரு நிலமும், அங்கு தன் இனமும் இருப்பதாக முஃபாசாவிற்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. நிலம் மாறி வந்த முஃபாசாவிற்கு டேக்கா எனும் குட்டிச் சிங்கம் தன் தாய் தந்தையிடம் பேசி, தங்கள் நிலத்தில் தங்குவதற்கு அனுமதி வாங்குகிறது. இரு சிங்கங்களும் நண்பர்களாக […]

21/12/2024 Dinesh R
விடுதலை பாகம் – 2 விமர்சனம் இது புதிது

விடுதலை பாகம் – 2 விமர்சனம்

முழு உண்மைக்கும், அதிலிருந்து எடுத்துப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் செய்திக்குமான வித்தியாசம் எவ்வளவு என்பதைப் படம் பேசுகிறது. அதிகாரம் என்பது நினைத்ததைச் செயல்படுத்துவதாக இருந்தாலும், அது நிகழாத பட்சத்தில், நடப்பதை எல்லாம் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் புனைவுத் திறமை உடையது என்பதைப் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. அதிகாரச் சக்கரத்தின் ஏதோ ஒரு பல்லில், ஒட்டிக் கொள்ள இடம் கிடைத்தாலும், சக்கரத்தின் சுழற்சிக்குத் தக்கவாறு தனது தனிப்பட்ட நலனையும் வளர்ச்சியையும் முதன்மைப்படுத்திக் கொண்டு, யார் மீதாவது, எதன் மீதாவது […]

20/12/2024 Dinesh R
சூது கவ்வும் 2 விமர்சனம் இது புதிது

சூது கவ்வும் 2 விமர்சனம்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பொழுது, இந்த நாடும் நாட்டு மக்களும் என்னாவார்கள் என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றுள்ளது படம். ‘சொதப்பினா ஒத்துக்கணும்’ என்ற கடைசி விதிக்கு உட்பட்டு, கடத்தல்காரர்களின் தலைவன் குருநாத் சிறைக்குச் செல்கிறார். அவர் சிறையில் இருந்து வந்ததும், அவருக்கு மட்டுமே தெரியக்கூடிய அம்முவின் மரணத்திற்குக் காரணம் நிதி அமைச்சர் அருமை பிரகாசம் என குருநாத்திற்குத் தெரிய வருகிறது. அருமை பிரகாசத்தைப் பழிவாங்க நினைக்க, அது குருநாத் குழுவை எங்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் […]

14/12/2024 Dinesh R
Once Upon A Time In Madras விமர்சனம் இது புதிது

Once Upon A Time In Madras விமர்சனம்

தன் வீட்டு மரத்து மாங்காயை அடித்துத் தின்ற சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். அந்தத் துப்பாக்கி, யார் யார் கைகளில் கிடைக்கிறது, அவர்கள் வாழ்வில் என்ன நேருகிறது என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. நான்கு கதைகளை இணைக்கும் hyperlink ஆகப் படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. மகளாகப் பருவ மாற்றம் அடையும் மகனைப் பெற்ற தாயிடமும், அரசியல் கொலை புரியும் கொலைக்காரன்க்கு உடந்தையாக இருக்கும் […]

11/12/2024 Dinesh R
இயக்குநர் வ.கெளதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ இது புதிது

இயக்குநர் வ.கெளதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ ஆகிய படங்களையடுத்து வ.கௌதமன் இயக்கும் மூன்றாவது படமாகும். ‘மகிழ்ச்சி’யைத் தொடர்ந்து நாயகனாக அவருக்கு இது இரண்டாவது திரைப்படம். மண்ணையும் மக்களையும் காக்க வீரம், ஈரம், அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இப்படம். படையாண்ட மாவீரனுக்கு எதிராக மன்சூரலிகான், ‘ஆடுகளம்’ நரேன், ‘பாகுபலி’ […]

09/12/2024 Dinesh R
ஜனவரி 2025 இல் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ Teaser

ஜனவரி 2025 இல் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான S.U. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் […]

09/12/2024 Dinesh R
ராஷ்மிகா மந்தனா | தி கேர்ள்பிரண்ட் – அழகான காதல் கவிதை Teaser

ராஷ்மிகா மந்தனா | தி கேர்ள்பிரண்ட் – அழகான காதல் கவிதை

ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் “தி கேர்ள்பிரண்ட்” ஆகும். பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள “தி கேர்ள்பிரண்ட்” படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் டீசரை, நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று வெளியிட்டார். […]

09/12/2024 Dinesh R
கலகலப்பிற்கு உத்திரவாதமளிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ Teaser

கலகலப்பிற்கு உத்திரவாதமளிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

சசிகுமார், கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீசர் வெளியாகியுள்ளது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், […]

07/12/2024 Dinesh R
நந்தமூரி மோக்‌ஷக்ஞ்யா – புராண இதிகாசப்படத்தில் அறிமுகம் அயல் சினிமா

நந்தமூரி மோக்‌ஷக்ஞ்யா – புராண இதிகாசப்படத்தில் அறிமுகம்

சுதாகர் செருகூரியின் SLV சினிமாஸ், லெஜண்ட் புரொடக்‌ஷன்ஸ் M தேஜேஸ்வினி நந்தமூரி வழங்கும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் நந்தமூரி மோக்‌ஷக்ஞ்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது. பழம்பெரும் நடிகர் நந்தமூரி தாரக ராம ராவின் பேரனும், நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமூரி மோக்‌ஷக்ஞ்யா, தனது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹனுமான் மூலம் அறியப்பட்ட கிரியேட்டிவ் ஜெம் பிரசாந்த் வர்மா இயக்கும், ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். மோக்ஷக்ஞ்யாவின் முதல் படம் பிரசாந்த் வர்மா […]

03/12/2024 Dinesh R
சொர்க்கவாசல் விமர்சனம் இது புதிது

சொர்க்கவாசல் விமர்சனம்

‘இந்தப்  படத்தின் வகைமை சர்வைவல் த்ரில்லர். இதைப் புரிந்து கொண்டு ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும்’ என ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார் எழுத்தாளர் தமிழ் பிரபா. செய்யாத கொலைக்காகச் சிறைக்குச் செல்கிறான் பார்த்திபன். சிறையைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சிகாமணியை ஒடுக்க நினைக்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார். எதிர்பாராத விதமாக சிகாமணி இறந்து விட, சிறைக்குள் கலவரம் மூள்கிறது. அந்தக் கலவரத்தை யார் யார் எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. […]

29/11/2024 Dinesh R
Parachute விமர்சனம் OTT

Parachute விமர்சனம்

பாராசூட் என்பது டிவிஎஸ் XL இன் பெயர். தந்தையின் அடிக்கு மிகவும் பயப்படும் பதினொரு வயதாகும் சிறுவன் வருண், தன் ஏழு வயது தங்கை ருத்ராவை மகிழ்விக்க பாராசூட்டில் அவளை அழைத்துச் செல்கிறான். வண்டி காணாமல் போய்விடுகிறது. தந்தையின் கோபத்தை எதிர்கொள்ள அஞ்சி, பாராசூட்டை மீட்கும் முயற்சியில் இறங்கும் சிறுவர்கள் ஒரு பக்கம், பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்கள் மறுபக்கம் என தொடர் நல்லதொரு எமோஷ்னல் ஜர்னிக்கு உத்திரவாதம் அளித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான மூர்த்தி, பிலிப்ஸ் எனும் குடிகார […]

29/11/2024 Dinesh R
ஜீ5 இல் ஸ்ட்ரீமாகிறது ‘பிரதர்’ திரைப்படம் OTT

ஜீ5 இல் ஸ்ட்ரீமாகிறது ‘பிரதர்’ திரைப்படம்

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான் ‘பிரதர்’ திரைப்படம் ஜீ5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. கமர்ஷியல் காமெடிப் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை […]

28/11/2024 Dinesh R
ஸ்வீட் ஹார்ட் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிலம்பரசன் – யுவன் சினிமா

ஸ்வீட் ஹார்ட் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிலம்பரசன் – யுவன்

ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்புத் […]

27/11/2024 Dinesh R
கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா அயல் சினிமா

கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் “கேம் சேஞ்சர்” ஆகும். இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ்ப் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கெனவே உலகம் […]

27/11/2024 Dinesh R
“பெண்குயின் டூ ஜீப்ரா” – இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் அயல் சினிமா

“பெண்குயின் டூ ஜீப்ரா” – இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராகக் கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது ஜீப்ரா திரைப்படம். சென்னையில், பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர் படக்குழுவினர். தயாரிப்பாளர் தினேஷ், “பத்திரிகை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக் கதை […]

27/11/2024 Dinesh R