Shadow

சினிமா

ஜவான்- விமர்சனம்

ஜவான்- விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் இவைகளில் நாம் கேட்கக்கூடாத கேள்வி கதை என்ன என்பது.  ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான்.  நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையை தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். ஹீரோ மீண்டு வந்து பழிவாங்குவார்.  சில சமயங்களில் ஹீரோ பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார்.  இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.  உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள்.’தெறி’ தன் குடும்பத்தை சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’  தன் அப்பா அம்மாவை கொன்றவனை பழி வாங்கும் மகன்(கள்), “...
ரங்கோலி – விமர்சனம்

ரங்கோலி – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புள்ளி வைத்து கோலம் போடுவது ஒரு அழகான கலை. கோலத்தின் முதல் புள்ளி எது..? முற்றுப்புள்ளி எது என்பதை எவராலும் கண்டறிய முடியாது. ஏனென்றால் கோலத்தினை நீங்கள் எங்கும் தொடங்கலாம், எங்கும் முடிக்கலாம்.  அதன் அழகியலே ஒரு புள்ளியில் தொடங்கி ஒவ்வொரு பக்கமும் அழகாய் விரிவது தான்.  ஆனால் இந்த வரையறை பெரும்பாலும் சினிமாவிற்கு ஒத்துவராது.  ஒரு புள்ளியில் தொடங்கி பல்வேறு பக்கங்களில் விரிவதற்கான அழகியல் அல்ல சினிமா.  அது பல்வேறு கதைகளாகத் துவங்கி ஒரு புள்ளியை நோக்கி குவிதற்கான அழகியல்.  ரங்கோலி திரைப்படம் தவறவிடுவது அதைத்தான்.படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்ததும், “DON’T JUDGE THE BOOK BY ITS COVER” என்ற சொல்லாடல் நினைவிற்கு வந்தது.  அடுத்து இன்னும் சில காட்சிகள் கடந்ததும், “SOMETIMES WE HAVE TO JUDGE THE BOOK BY IT’S COVER ITSELF” என்று எண்ண வைத்தது.  ஏனென்றால்  படம் துவங்கிய சில நிமிடங்கள...
குஷீ விமர்சனம்

குஷீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு.  படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம்  மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா எனும் தமிழ் திரைப்படத்தை நினைவு கூறும் வசனம்,  படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது,  படத்தின் இயக்குநர் சிவ நிர்வானா ஒரு தீவிரமான மணிரத்னத்தின் ரசிகர் என்று கூறி, அதனால் படத்தில் அவரின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார். இருக்கலாம். தவறில்லை.  அதற்காக அவரின் படத்தையே திருப்பி எடுத்தால் எப்படி..? படத்தின் முதல்பாதி பம்பாயின் சாயல் என்றால் இரண்டாம் பாதி முழுக்க அலைபாயுதேவின் அலை வீசுகிறது.  இருப்பினும் ஷாலினி இடத்தில் சமந்தாவைப் வைத்துப் பார்க்கும் போது மனம் அலைபாயத்தான் செய்கிறது.  மேலும் துறுதுறுப்புக்கும் வசீகரத்திற்கும் பேர் போன மாதவனை ஈடு செய்யும் விதமாக அங்கு விஜய் தேவரகொண்டா நிற்கும் போது,  சிவ நிர்வான...
‘தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – ஷாருக் கான்

‘தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – ஷாருக் கான்

சினிமா, திரைச் செய்தி
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு  முன்னதான விளம்பரப்படுத்தும்  நிகழ்வு சென்னையில்  பிரமாண்டமாக  நடைபெற்றது.சென்னையில்  உள்ள  தனியார்  கல்லூரி  வளாகத்தில்  அமைந்திருக்கும் கலை  அரங்கில்  ஆயிரக்கணக்கான  மாணவ,  மாணவிகள்  மற்றும் ரசிகர்களுடன்  நடைபெற்ற  இந்நிகழ்வில்  படத்தை தமிழகம்  மற்றும்   கேரளாவில்  வெளியிடும்  விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம்  கோபாலன்  உள்ளிட்ட  படக்குழுவினர்  கலந்து  கொண்டனர். இவ்விழாவிற்கு  வருகை  தந்திருந்த  அனைவரையும்  விநியோகஸ்தரான  ஸ்ரீ கோகுலம்  கோபாலன்  வரவேற்றார். இந்நிகழ்வில்  இசையமைப்பாளர்  அனிருத்  பேசுகையில்,  '' என் மீது நம்பிக்கை  வைத்து  எனக்கு  வாய்ப்பளித்த  ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட்  நிறுவனத்திற்கும்,  பூஜா தட்லானி  மற்றும்  கௌரி கான்  ஆகியோருக்கும்  நன்றி.  பாடலா...
பாட்னர் விமர்சனம்

பாட்னர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். அவரிடம் இறந்த நபர்களின் டி.என்.ஏ-வை எடுத்து உயிருள்ள மற்றொரு நபரின் உடலில் செலுத்தி இறந்தவரின் குணநலன்களையும் அறிவையும் உயிருள்ளவரின் உடலுக்குள் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய ஒரு பென் டிரைவ், அதை கொள்ளையடிக்க துடிக்கும் அவரின் முன்னாள் உதவியாளரான ஜான் விஜய்,   அந்த பணியை செய்ய முன்னாள் உதவியாளர் நியமிக்கும்  ரோபோ சங்கர் அடங்கிய ஒரு டம்மி டீம்,  திருடுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனியில் பணியாற்றும்  யோகி பாபு, ஊரில் தன் தங்கை திருமணத்தை நிறுத்த 25 இலட்சம் தேவை என்று யோகி பாபுவை தேடி வரும் நாயகன் ஆதி.  திருட்டு கம்பெனிக்கு தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வரும் அரசியல்வாதி ரவிமரியா.  இவர்களுக்குள் நடக்கும் வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டும்,  அதற்கிடையேயான ஆள்மாறாட்ட விளையாட்டும், அதன் பிறகு அ...
ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!

சினிமா, திரைச் செய்தி
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்,  ராகவா லாரன்ஸ்  நடிப்பில்  உருவான ‘சந்திரமுகி 2’  படத்தின்  இசை  வெளியீட்டு  விழா  நேற்று  நடைபெற்றது.  இந்த  விழாவில்  லைகா  நிறுவனத்தின்  சேர்மன்  சுபாஷ்கரன்  கலந்து கொண்டார்.இந்த  நிகழ்ச்சி  சிறப்பாக  நடந்து  முடிந்த  நிலையில்  திடீரென எந்தவிதமான திட்டமிடலும்  இல்லாமல்  ராகவா லாரன்ஸ்  நடத்தி  வரும் அறக்கட்டளைக்கு  சுபாஷ்கரன்  ஒரு  கோடி  ரூபாய்  நன்கொடை  அளித்தார்.ராகவா லாரன்ஸ்  ஏற்கனவே பல  குழந்தைகளை  தத்தெடுத்து  வளர்த்து வருகிறார்  என்பதும்,  குறிப்பாக  மாற்றுத்திறனாளி  குழந்தைகளுக்கு  உதவி செய்து வருகிறார்  என்பதும்  தெரிந்ததே.  இது  குறித்து  கேள்விப்பட்ட சுபாஷ்கரன்  அவரது  அறக்கட்டளைக்கு  ஒரு  கோடி  ரூபாய்  நன்கொடை வழங்கியுள்ளார்.அதுமட்டுமின்றி  ராகவா  லாரன்ஸின்  ஆதரவுடன்  இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள்  கொண்ட  நடன குழுவினருடன்  மேடையில் ...
King of Kotha விமர்சனம்

King of Kotha விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறாம் (1996) காலகட்டத்தில் கோதா என்னும் ஊரைத் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் சில கூட்டங்களுக்கு இடையேயான யுத்தமும், ஒட்டு மொத்த கூட்டத்தையும் துடைத்துத் தூக்கிப் போட நினைக்கும் காக்கிச் சட்டைகளின் காய் நகர்த்துதலுக்கும் இடையேயான அன்பும் நட்பும் காதலும் ஏமாற்றமும் துரோகமும் வயோதிகமும் இரத்தமும், இதனோடு பெண்களின் அரசியலையும் உள்ளடக்கியது தான் ‘கிங் ஆஃப் கோதா’வின் கதை. கோதா என்னும் ஊர் எப்படி நிர்மாணிக்கப்பட்டது என்பதான கார்ட்டூன் கதை சொல்லலுடன் தொடங்கும் கதை, அந்த ஊருக்குப் புதிதாக வந்து சேரும் உதவி ஆணையரின் பார்வையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யார் என்று ஆய்வாளர் மூலம் விளக்கப்படும் காட்சிகளின் மூலம் பெரும் கதையாக விரிகின்றது. ‘கண்ணன் பாய்’ என்கின்ற ஒருவனின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும் ஊர், போதைக் கலாச்சாரத்தில் தள்ளாடு...
அடியே விமர்சனம்

அடியே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பள்ளிக்காலத்தில் தன்னோடு பயிலும் நாயகியிடம் காதலைச் சொல்ல எத்தனிக்கும் நாயகனின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக திசை மாறிப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து விரக்தியின் உச்சத்தில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணியும் தருணத்தில் நாயகி இன்னும் தன் நினைவுகளோடு இருப்பது தெரிய வர, தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதாக நினைக்கும் நாயகன், நாயகியைச் சந்தித்து தன் காதலை சொல்ல முனைகிறான். அதற்கு இடையில் நடக்கும் குழப்பங்களை மீறி நாயகனின் காதல் வெற்றி பெற்றதா என்கின்ற கேள்விக்கான விடை தான் திரைப்படத்தின் கதை. கதையாகப் பார்க்கும் போது, வெகு சாதாரணமான, காதலும், காதல் கைகூடுமா என்கின்ற கேள்வியையும் தவிர்த்து ஒன்றுமே இல்லாத கதையாகத் தோற்றமளிக்கும் ‘அடியே’, அதன் திரைக்கதையினால் வித்தியாசப்படுகிறது. ‘டைம் டிராவல்’ கதைகள் நமக்கு சற்றே பரிச்சயமான கதைகள் தான். அந்த டைம் டிராவல் கதைக்குள் “மல்டி வெர்ஸ்” அதாவ...
ஜெயிலர் படத்தின் வணிக வெற்றியும், மக்கள் மனநிலையும்

ஜெயிலர் படத்தின் வணிக வெற்றியும், மக்கள் மனநிலையும்

சினிமா
எதிலுமே அதீத நேர்மையோ, ஒழுக்கமோ, அறமோ தேவையில்லை என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்களோ? கலியுகம் என்கின்ற வார்த்தை இந்தக் கருத்தியலுக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. இருப்பினும் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. இப்பொழுது மக்களின் எதிர்பார்ப்பு என்பது ‘குறைந்தபட்சம்’ எனச் சுருங்கிவிட்டது. ‘லஞ்சம் குடுக்காம எப்டிங்க வேலை நடக்கும்?’, ‘லஞ்சம் குடுத்தா உடனே நடந்திரும்’, ‘ஹெல்மெட்டெல்லாம் போட்டுக்கிட்டு எதுக்கு சார்? எல்லா நாளுமா மாட்றோம்! மாட்றப்ப ஒரு 200 குடுத்தா போதும்’, ‘கொள்ளையடிக்காத அரசியல்வாதி எங்க சார் இருக்காங்க? கொள்ளையடிச்சாலும் மக்களுக்கு ஏதாவது செய்வாங்க சார்’ என்பதான குறைந்தபட்ச நேர்மை, ‘எதுல சார் கலப்படம் இல்லாம இருக்கு?’ என்பதான குறைந்தபட்ச அறம், ‘அனைவரையும், குறிப்பாகப் பெரியவர்களை எள்ளி நகையாடும் எடுத்தெறியும் போக்கு’ என்பதான குறைந்தபட்ச ஒழுக்கம் என இப்படி எ...
“நான் முதலில் பெரியாரிஸ்ட்; அதன் பிறகே நடிகன்” – சத்யராஜ்

“நான் முதலில் பெரியாரிஸ்ட்; அதன் பிறகே நடிகன்” – சத்யராஜ்

சினிமா, திரைச் செய்தி
ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்குத் திரும்பியுள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் பிரபல டோலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலைய...
மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

Movie Posters, அயல் சினிமா, கேலரி, சினிமா, திரைச் செய்தி
தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் தனது ‘பிம்பிசாரா’ திரைப்படம் மூலம் பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும். மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவ...
ஜவான் – ஆறு சர்வதேச சண்டைப்பயிற்சி இயக்குநர்களின் கைவரிசையில்

ஜவான் – ஆறு சர்வதேச சண்டைப்பயிற்சி இயக்குநர்களின் கைவரிசையில்

சினிமா, திரைத் துளி
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் சர்வதேச அளவில் பிரபலமான அதிரடி சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் ஆறு அதிரடி ஆக்சன் இயக்குநர்கள் பணியாற்றியுள்ளனர். 'ஜவான் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காகச் சர்வதேச அளவில் பிரபலமான ஆறு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்த படங்களுக்கு வியப்பளிக்கும் வகையிலான சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர். ஜவான் பரந்த அளவிலான ஆக்சன் காட்சிகளை உள்ளடக்கிய திரைப்படம். இதில் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டைக் காட்சி, உற்சாகமூட்டும் பைக் காட்சிகள், இதயத்தைத் தடதடவைக்கும் டிரக் மற்றும் கார் துரத்தும் காட்சிகள் என பல வகையான ச...
”இயக்குநர் அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுத்தார்” – ஜி.வி.பிரகாஷ்

”இயக்குநர் அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுத்தார்” – ஜி.வி.பிரகாஷ்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
ஜி.வி பிரகாஷ்குமார், கெளரி கிஷன் இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் “அடியே”.  இத்திரைப்படம் வரும் ஆக்ஸ்டு 25ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.  இப்படத்தில் மதும்கேஷ் பிரேம், ஆர்.ஜே.விஜய், வெங்கட் பிரபு, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.  மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். திட்டம் இரண்டு திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருக்கிறார்.  கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டிஸ் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.பேரலல் யுனிவர்ஸ் மற்றும் அல்டர்நேட் ரியாலிட்டி கதைக்கருவை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித...
“குஷி – முகத்தில் புன்னகையும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும்” – விஜய் தேவரகொண்டா

“குஷி – முகத்தில் புன்னகையும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும்” – விஜய் தேவரகொண்டா

சினிமா, திரை விமர்சனம்
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தth திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். இப்படத்தினைத் தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என்.வி. பிரசாத்தும், மலையாளத்தில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தாவும் வெளியிடுகின்றனர். இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்...
15M + பார்வை கொண்டாட்டத்தில் “வேற மாறி ஆபிஸ்”

15M + பார்வை கொண்டாட்டத்தில் “வேற மாறி ஆபிஸ்”

சினிமா, திரைச் செய்தி
ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் “வேற மாறி ஆபிஸ்”. மூன்று எபிசோடுகள் வெளியான நிலையில்  வெற்றிகரமாக பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த தொடர் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் சென்னை வடபழனியில் உள்ள  நெக்சஸ் ஃபோரம் மாலில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது.இந்த நிகழ்வில் ‘வேற மாறி ஆபிஸ்”-ன் நட்சத்திரங்களான விஷ்ணு விஜய், ஆர்.ஜே.விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ் ஆகியோருடன் இத்தொடரின் இயக்குநரான சிதம்பரம் மற்றும் தயாரிப்பாளர் சிவகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.ஆஹா ஓடிடி இணையதளத்தின் தலைமை நிர்வாகப்  பொறுப்பில் இருக்கும் பவித்ரா குமார் பேசும் போது, “இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைத்து...