Shadow

மருத்துவம்

NSI இன் ‘இளம் நியூரோசர்ஜண்ஸ் ஃபோரம்’

NSI இன் ‘இளம் நியூரோசர்ஜண்ஸ் ஃபோரம்’

மருத்துவம்
‘நியூராலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Neurological society of India)’ என்கிற அமைப்பு, 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 3200 அங்கத்தினரோடு திறம்படச் செயற்பட்டு வருகிறது. இதன் ஒரு கிளைதான், ‘யங் நியூரோசர்ஜன்ஸ் ஃபோரம் (Young Neurosurgeons Forum)’ ஆகும். நரம்பியல் அறுவை சிகிச்சையில் (Neurosurgery) முதுகலை பட்டம் பெற்று, பத்து வருடங்கள் பயணித்து, 45 வயதிற்குள் இருந்தால், இந்த அமைப்பில் அங்கத்தினராகச் சேர இயலும். இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் இத்துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் புதிய வளர்ச்சி பரிமாணங்கள் போன்றவற்றைப் பற்றி விவாதிக்க, செயற்பாட்டு முறைகளைப் பற்றி கலந்துரையாடவும் இரண்டு நாள் மாநாடு (ஜூன் 11 & 12) ஏற்பாடாகியிருந்தது. இந்தியா முழுவதிலிருந்தும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்மாதிரியான அமைப்புகளை மேலும் நிறுவவும், இத்துறையின் வருங்கால வளர்ச்சிப்பாதையில் திறம்படப...
உலகத்தர சிகிச்சையைச் சாத்தியமாக்கும் மேம்படுத்தப்பட்ட “புத்தி கிளினிக்”

உலகத்தர சிகிச்சையைச் சாத்தியமாக்கும் மேம்படுத்தப்பட்ட “புத்தி கிளினிக்”

மருத்துவம்
நரம்பியல், மன வளம் மற்றும் முதியோர் நலம் பேணுதல் முதலானவற்றிற்கு உகந்த சிகிச்சை அளிக்க உன்னதமான ஓர் இடம் - புத்தி கிளினிக்! சென்னை தேனாம்பேட்டையில், உலக தரத்தில் இயங்கும் இந்த சிகிச்சை மையம் தனது செயல்பாடுகளை மேலும் சிறப்பாக விரிவாக்கம் செய்ய புதியதொரு பரிமாணத்துடன் புதியதொரு கட்டட வளாகத்தில் தனது சேவைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. நான்கு மண்டலங்களாக இவ்வமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. 1. The Alchemist Zone மருத்துவ அமைப்புகள், வரவேற்பறை, பரிசோதனை அறை, ஆராய்ச்சி அமைப்புகள், பரிசோதனை கூடம் மருந்தகம் முதலியன. 2. The Mindfulness Zone நரம்பியல் மற்றும் மூளை சம்பத்தப்பட்ட சிகிச்சை முறைகள், அவற்றை செயல்பட வைக்கும் செயல்முறைகள், யோகா பயிற்சிகள், மன, குண இயல்புகளின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பின் அடிப்படையில் சிகிச்சை முறை முதலியன. 3. The Rehab Zone வலி மற்றும் இடம் பெயர்தல் ஆகியவற்றிற்கான சி...
கொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி

கொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி

மருத்துவம்
புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், புற்றுநோய் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஒரு கருத்தரங்கை நிகழ்த்தினார். "கொரோனா தொற்றுக் காலத்தில், சமூகத்தில் மருத்துவர்களான நமது பங்கு அளப்பரியது. அதிலும் குறிப்பாகப் புற்றுநோய் துறை மருத்துவர்களுக்கு, கூடுதல் பொறுப்பு உள்ளது. நாம், மத்திய மற்றும் மாவட்ட அரசுகள் வழிகாட்டுதல்களை அறிந்து கொண்டு, அது படி நடக்கவேண்டியது நம் கடமையாகும். கொரோனா யொற்றுக் காலத்தில், புற்றுநோய்க்கான சிகிச்சைகளை முன்னிலைப்படுத்தி இயங்க இயலாது. எனினும் நாம் நம் முக்கியத்துவத்தை உணர்ந்து, எளிதில் பாதிப்படையக் கூடிய புற்றுநோய் பிணியாளர்களின் பொருட்டு சரியாகத் திட்டமிடவேண்டும். சில கேன்சர் நோயாளிகளுக்குக் கொரோனா தோற்று ஏற்பட்டால், அவர்கள் மீதான நோயின் தாக்கம் மிகவும் அதிகமாகும். • கீமோதெரபி அல்லது ரெடியோதெரபி எடுத்துக் கொள்பவர்கள், • ரத்தப்புற்று (Leukaem...
நியூரோ அப்டேட் 2020

நியூரோ அப்டேட் 2020

மருத்துவம்
‘நியூரோ அப்டேட் 2020’ எனும் கருத்தரங்கத்தை மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வை மருத்துவர் திரு. மொஹமெட் ரேலா தொடங்கி வைத்தார். சென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்டை 1993 ஆம் ஆண்டு, பேராசிரியர் அர்ஜுன்தாஸ் தலைமையில் தொடங்கினர். இதன் பிரதான நோக்கம், மேற்படிப்பு படிப்பவர்களுக்கும், நரம்பியல் துறையில் பணி புரிபவர்களுக்கும் துறை சார்ந்த முன்னேற்றத்தை அறிய தந்து உதவுவதுதான். தேசிய மற்றும் சர்வதேச அளவில், CME நிகழ்ச்சிகளை நடத்தி, நியூரோ சயின்ஸ் துறையின் தொடர் முன்னேற்றத்தையும், சமீப சாதனையையும் அதன் உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வருடத்து நியூரோ அப்டேட் கருத்தரங்கத்தில் – நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்த் தொற்று, தூக்கத்தின் பொழுது உடலியல் (Sleep Physiology), உறக்கச் சீர்கேடுகள், வெர்டிகோ எனும் தலைச்சுற்றல் ஆகியன பற்றி விவாதிக்...
புத்தி க்ளினிக் – 10 ஆம் ஆண்டு விழா

புத்தி க்ளினிக் – 10 ஆம் ஆண்டு விழா

மருத்துவம்
நவம்பர் 30, புத்தி க்ளினிக்கின் 10 ஆண்டு விழாவைச் சிறப்பிக்க, சிறப்புப் பேச்சாளர்கள் திரு. அனுராக் சர்மா, லோக்சபா M.P. மற்றும் இயக்குநர் - Baidhyanath குழுமம்; ப்ரொஃபசர் பர்மீந்தர் சச்தேவ், நியூரோ சைக்காட்ரி இன்ஸ்டிட்யூட், சிட்னி, ஆஸ்திரேலியா; வேணு ஸ்ரீநிவாசன், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். உலக அரங்கில், இறப்போர் எண்ணிக்கையில் இறப்பிற்கான காரணங்களில், மாரடைப்பிற்கு அடுத்தபடியாக 9 மில்லியனில் அணிவகுத்து நிற்பது நியூரோலாஜிகல் உபாதைகளே! நியூரோலாஜிகல் மற்றும் மனவளம் சம்மந்தப்பட்ட நோய்களுடனும், அதன் குறைபாட்டுடனும் வாழவேண்டிய ஓர் அவல நிலை பெருகி வருகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் இது பொருந்தும். புத்தி க்ளினிக், மூளை மற்றும் மனவளம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், சீர்நிலையை மீண்டும் கொண்டு வருவதிலும் இந்ந...
தி புத்தி – மூளையின் மூப்பு

தி புத்தி – மூளையின் மூப்பு

மருத்துவம்
பால்டிமோர் நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏஜிங்-இல் ஆராய்ச்சி நிபுணராக உள்ள மருத்துவர் மாதவ் தம்பிசெட்டியும், சென்னையின் தி புத்தி க்ளினிக்கின் நிறுவனருமான மருத்துவர் எண்ணப்பாடம் S. கிருஷ்ணமூர்த்தி, மூளை மற்றும் மனதின் மூப்பு பற்றிய சுவாரசியமான மிக நீண்ட உரையாடலை முன்னெடுத்தனர். அவற்றிலிருந்து சில. 65 வயதிற்கு மேல், புறணி (Cortex), மூளையின் க்ரே மேட்டர், கார்டிசால் (Cortisol) ஆகியவை 5 எம்.எல். அளவுக்குத் தேய்கிறது. அதனால் அறிவாற்றல் (Cognitive ability), புலன் உணர்ச்சி (Sensory perception), சமநிலை உணர்ச்சி (Emotinal balance) ஆகியவைப் பாதிப்படைகின்றன. 2010 ஆம் ஆண்டு, இந்தியாவில், மூளைத்தேய்வால் (Dementia) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.7 மில்லியனாக இருந்தது.  2030 இல் அது இரட்டிப்பாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தி புத்தி க்ளினிக், தன் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ...
ஆட்டிசம் 2019

ஆட்டிசம் 2019

Others, காணொளிகள், மருத்துவம்
ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, AVTISM: Think Different என்ற கருத்தரங்கை நிடத்தினார்கள். ராதிகா செளந்தரராஜன், நித்யா மோகன், உஷா ராமாகிருஷ்ணன், விவேக் மிஸ்ரா, ரேமா ரகு ஆகிய மருத்துவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. அதில் குறிப்பாக, ‘Neuromodulation for challenging behaviours” என்ற தலைப்பில், TMS சிகிச்சை முறை பற்றி மருத்துவர் விவேக் மிஸ்ரா விளக்கியது ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவல்லது. TMS – Transcranial Magnetic Stimulation ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தலையில் கருவி பொறுத்தி, மூளையின் புரணியில் (Cortex) மின்காந்தப் புலத்தால் தூண்டுவதுதான் இச்சிகிச்சை முறையாகும். இதனால் குழந்தைகளின் anxiety அளவு குறைவதோடு, அவர்களின் intrapersonal skills-ஸும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில், மன அழுத்தத்த...
இன்றைய நியூரோசயின்ஸ்

இன்றைய நியூரோசயின்ஸ்

மருத்துவம்
ஜனவரி 28 அன்று, பேராசிரியர் B.ராமமூர்த்தி மூன்றாவது சொற்பொழிவினை, அட்வான்ஸ்ட் நியூரோசயின்ஸ் ஃபெளண்டேஷன் ட்ரஸ்ட், MGM ஹெல்த்கேருடன் இணைந்து நிகழ்த்தியது. இதில் 200 நரம்பியல் வல்லுநர்கள் பங்கு கொண்டனர். “Preservation and reconstruction of facial nerve in neurosurgery” என்ற தலைப்பில் மருத்துவர் மத்ஜித் சமீ (Madjid Samii) பேசினார். 1950 இல், அரசு பொது மருத்துவமனையில், நரம்பியல்துறைக்கெனத் தனிப் பிரிவை உருவாக்கியவர் பேராசிரியர் B.ராமமூர்த்தி. 1967 இல், Head injury ward என தலைக்காயங்களுக்காகத் தனிப் பிரிவைத் தொடங்கினார். ‘குரு சமர்ப்பனம்’ என்ற பெயரில் அவரது வாழ்வும் பணியும் பற்றி, மருத்துவர் K.ஸ்ரீதரால் தயாரிக்கப்பட்ட சிறப்புக் குறும்படமொன்று நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது. “நவீன கருவிகளால் மூளை அறுவைச்சிகிச்சை எளிமையாகி விட்டது என்றாலும், நான்கைந்து அடிப்படையான கருவிகளும், அறுவைச்சிகிச்சை செய்வ...
நியூரோ அப்டேட் 2019

நியூரோ அப்டேட் 2019

மருத்துவம்
சென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்டை 1993 ஆம் ஆண்டு, பேராசிரியர் அர்ஜுன்தாஸ் தலைமையில் தொடங்கினர். இதன் பிரதான நோக்கம், மேற்படிப்பு படிப்பவர்களுக்கும், நரம்பியல் துறையில் பணி புரிபவர்களுக்கும் துறை சார்ந்த முன்னேற்றத்தை அறிய தந்து உதவுவதுதான். தேசிய மற்றும் சர்வதேச அளவில், CME நிகழ்ச்சிகளை நடத்தி, நியூரோ சயின்ஸ் துறையின் தொடர் முன்னேற்றத்தையும், சமீப சாதனையையும் அதன் உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர். கல்வி நிறுவனங்கள் நவீன கருவிகள் உதவுகிறது நியூரோ ட்ரஸ்ட். கால்கை (காக்காய்) வலிப்பு உடையவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வொர்க்-ஷாப் நடத்தியுள்ளனர். வலிப்பு மற்றும் அடைப்பு குறித்து, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிறைய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தியுள்ளனர். ஒவ்வொரு வருடத்தின் ஜனவரி மாதத்திலும், 300 – 400 நரம்பியல் நிபுணர்கள் ஒன்றாய்க் குழுமி, தேசிய அளவ...
புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்

புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்

மருத்துவம்
புத்தி இம்மர்ஷன் (Buddhi Immersion) ஒருங்கிணைத்த “ப்ராப்ளம் சைல்ட் (Problem Child)” என்ற கருத்தரங்கை ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். ஆளுநர், “இந்திய மக்கள் தொகையில் சுமார் 39% இருக்கும் 50 கோடி குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவது மிக முக்கியமான செயலாகும். பல திட்டங்களை வகுத்து முனைந்து முன்னெடுத்தாலும், பேறுகால மற்றும் குழந்தைகளின் ஊட்டக்குறைவு, தொற்று நோய்கள் போன்ற பிரச்சனைகள் இந்தியாவின் மனசாட்சியை இன்னும் உலுக்கிக் கொண்டே தான் உள்ளன. சமூகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் குழந்தைகளின் கற்றல், மற்றவருடன் தொடர்பு கொள்ளல் போன்ற குறைபாடுகளைக் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்க உள்ளனர். அரசாங்கம் குழந்தை நலனில் அக்கறை காட்டி வந்தாலும், சமூக நலனில் அக்கறை கொண்டு இத்துறை வல்லுநர்களும் மற்ற தனியார் நிறுவனங்களும் குழந்தைகள் பிரச்சனையைக் கலைவதைக் கையிலெடுத்திருப்பது வரவே...
புற்றுநோயியல் 2018

புற்றுநோயியல் 2018

மருத்துவம்
மனித இனத்தை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். அந்த நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வில், வருடந்தோறும் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது மருத்துவ உலகம். ‘2018 இல், அன்காலஜியில் புதிதாய் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன?’ என்ற தலைப்பில் கருத்தரங்கினை ஒருங்கிணைத்தார் மருத்துவர் அனிதா ரமேஷ். டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னையிலுள்ள ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் இந்தக் கருத்தரங்கம் நிகழ்ந்தது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து கருத்தரங்கில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட மருத்துவப் பிரதிநிதிகள் பங்கு கொண்டு, இந்தியப் பார்வையில், புற்றுநோயை எப்படி அணுகி சிகிச்சை அளிக்கின்றனர் என்பது பற்றிக் கலந்துரைத்தனர். >> உடல் திசு ஆய்வின் மூலம், புற்று நோயைக் கண்டறியும் பழைய வழிக்குப் பதிலாக, ‘லிக்விட் பயாப்ஸி (Liquid Biopsy)’ எனும் முறை...
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

மருத்துவம்
உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவத் தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். அப்பொழுது ஜீ கிளினிக்கின் நிர்வாக இயக்குநரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.சேதுராமன், உடற்பயிற்சி ஆலோசகர் அஜித் ஷெட்டி, ஊட்டச்சத்து நிபுணர் வீணா சேகர் , அலர்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘கூல்ஸ்கல்ப்டிங் ’என்ற கொழுப்புச் செல்களை உறையவைத்து, உடல் எடையைக் குறைய வைக்கும் இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பச் சிகிச்சையை உலகத்தின் முன்னணி உணவு மற்றும் மருந்திற்கான தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் எஃப் டி ஏ (F D A) எனும் சர்வதேச அமைப்பு ஏற்றுக்கொண்டு அனுமதியளித்திருக்கிற...