
புத்தி க்ளினிக் – 10 ஆம் ஆண்டு விழா
நவம்பர் 30, புத்தி க்ளினிக்கின் 10 ஆண்டு விழாவைச் சிறப்பிக்க, சிறப்புப் பேச்சாளர்கள் திரு. அனுராக் சர்மா, லோக்சபா M.P. மற்றும் இயக்குநர் - Baidhyanath குழுமம்; ப்ரொஃபசர் பர்மீந்தர் சச்தேவ், நியூரோ சைக்காட்ரி இன்ஸ்டிட்யூட், சிட்னி, ஆஸ்திரேலியா; வேணு ஸ்ரீநிவாசன், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக அரங்கில், இறப்போர் எண்ணிக்கையில் இறப்பிற்கான காரணங்களில், மாரடைப்பிற்கு அடுத்தபடியாக 9 மில்லியனில் அணிவகுத்து நிற்பது நியூரோலாஜிகல் உபாதைகளே! நியூரோலாஜிகல் மற்றும் மனவளம் சம்மந்தப்பட்ட நோய்களுடனும், அதன் குறைபாட்டுடனும் வாழவேண்டிய ஓர் அவல நிலை பெருகி வருகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் இது பொருந்தும்.
புத்தி க்ளினிக், மூளை மற்றும் மனவளம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், சீர்நிலையை மீண்டும் கொண்டு வருவதிலும் இந்நிற...















