Shadow

OTT

அம்மு – உணர்ச்சிகரமான த்ரில்லர் படம்

அம்மு – உணர்ச்சிகரமான த்ரில்லர் படம்

OTT, அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ப்ரைம் வீடியோ, தனது முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்முவின் உலகளாவிய பிரீமியர் அக்டோபர் 19 அன்று வெளியிடப்படும் என அறிவித்தது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக, கல்யாண் சுப்ரமணியன் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸின் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளனர், சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியிருக்கும் இப்படம், துன்பங்களை எதிர்கொண்டு பீனிக்ஸ் பறவை போல எழும் பெண்ணின் கதையான ஒரு டிராமா த்ரில்லர் படமாகும். குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்ணாக இருந்து, அவளது தன் மன மோதல்களைக் கடந்து, அவளது உள வலிமையைக் கண்டறிந்து, அவளது துஷ்பிரயோகம் செய்யும் கணவனுக்குத் திருப்பிக் கொடுப்பதற்கு, அம்மு சிலிர்ப்பான மாற்றத்தைக் காண்கிறாள். இப்படத்தில் நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி டைட்டில் ரோலில் நடிக்கிறார். இந்தியா மற்றும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் ...
ஆஹாவில் ஜீவா தொகுத்து வழங்கும் கேமிங் ஷோ | சர்க்கார் வித் ஜீவா

ஆஹாவில் ஜீவா தொகுத்து வழங்கும் கேமிங் ஷோ | சர்க்கார் வித் ஜீவா

Others, OTT, காணொளிகள், திரைத் துளி
ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரைத்தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவிகித பிரத்தியேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதளத் தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனைத் துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது.  இந்த விளை...
தி ரிங்கஸ் ஆஃப் பவர் – ட்ரெய்லர்

தி ரிங்கஸ் ஆஃப் பவர் – ட்ரெய்லர்

OTT, Trailer, Web Series, காணொளிகள்
மத்திய பூமியின் விரிவாக்கத்தையும், டோல்கீனின் புகழ்பெற்ற மற்றும் அனைவராலும் விரும்பப்படும் கதாபாத்திரங்கள் எப்படி முரண்பாடுகளைக் கடந்து அதிக தூரம் பயணித்ததையும், மத்திய பூமிக்கு வரும் தீங்குகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதையும், இரண்டு நிமிடம் மற்றும் 36 வினாடிகள் கொண்ட இந்தப் புதிய டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்புதிய தொடரில் தீங்குக்கு எதிராக விதியின் சோதனைக்கு எப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் உள்ளாகின்றன என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பல சீசன் சித்திரத்தின் முதல் இரண்டு எபிசோடுகள் ப்ரைம் வீடியோவில் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உலகம் முழுவதும் செப்டம்பர் 2 வெள்ளியன்று (நேர மண்டலம் சார்ந்தது) வெளியாகும் மற்றும் வாரந்தோறும் புதிய எபிசோடுகள் கிடைக்கும்....
தி ரிங்ஸ் ஆஃப் பவர் – மும்பையில் ப்ரீமியர் ஷோ

தி ரிங்ஸ் ஆஃப் பவர் – மும்பையில் ப்ரீமியர் ஷோ

OTT, Web Series, திரைத் துளி
‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரீமியர் மும்பையில் நடைபெற்றது. இதில் பார்வையாளர்களுடன் பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்தியேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹ்ரித்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர், தொடரின் தயாரிப்பாளரான ஜே டி பெயின் உடன் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர். ‘த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது. உலகளாவிய பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சாகசமும், கற்பனையும் ...
ஜீவி – 2 விமர்சனம்

ஜீவி – 2 விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி ஆகியவற்றை மையக்கருவாகக் கொண்ட படம் 'ஜீவி'. அப்படத்தின் இரண்டாம் ஆஹாவில் நேரடியாக வெளியாகியுள்ளது. முந்தைய பாகத்தில், தொடர்பியலைத் தெரிந்து கொள்வாரே அன்றி மையப்புள்ளியை அடையமாட்டார் நாயகன். ஆனால், முதற்பாகத்தின் வெற்றிக்குக் காரணம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குக் கிடைக்கும் நீதி தரும் ஆத்ம திருப்தியே! இந்தப் பாகத்தில், குடும்பச்சூழல் காரணமாக நாயகன் மீண்டும் திருடுகிறான் சரவணன். அதையொட்டி, தொடர்பியலின் காரணமாக, சரவணனைச் சுற்றி நடப்பவை அனைத்தும் தவறாகிறது. மையப்புள்ளியைக் கண்டடைந்தால் தான், இதை நிறுத்த முடியுமென உணருகிறான் சரவணன். மையபுள்ளியை எப்படி சரவணன் கண்டடைந்தான் என்பதே படத்தின் கதை. போலீஸ் அதிகாரி ஆதில் மொஹமத்தாக, நாசரின் தம்பி ஜவஹர் நடித்துள்ளார். மலையாள நடிகர் அனில் முரளிக்கு மாற்றாக இவர் நல்ல தேர்வாக அமைந்துள்ளார். நாயகன் வெற்றிக்கும், கரு...
மேதகு – 2 விமர்சனம்

மேதகு – 2 விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மேதகு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். மேதகு எனும் சங்கச்சொல்லுக்கு, மேன்மையான, மேன்மை பொருந்திய எனப் பொருள் கொள்ளலாம். வேலுப்பிள்ளை பிரபாகரன், மேன்மை பொருந்திய ஒப்பற்ற தலைவர் என்பதைச் சுட்டவே மேதகு எனத் தலைப்பிட்டிருந்தார் இயக்குநர் தி. கிட்டு. அப்படத்தின் தொடர்ச்சியாக, மேதகு 2 படத்தை இரா.கோ.யோகேந்திரன் இயக்கியுள்ளார். முதற்பாகமான மேதகு, 2021 ஆம் ஆண்டு ஜூன் 25 இல், ஓடிடி தளமான BS Value இல் வெளியானது. இலங்கையில், தமிழர்களுகளுக்கான விடுதலைப் போராட்டத்திற்கான தேவை ஏன் எழுந்தது பற்றியும், சிங்களப் பேரினவாதம், பிரபாகரன் எனும் சிறுவனின் மனதை எப்படிப் பாதித்தது பற்றியும், எந்தப் புள்ளியில் அவர் பேரினவாதத்தை எதிர்க்க முடிவெடுக்கிறார் என்பது பற்றியும், அந்தப் படம் அடித்தளம் இட்டிருந்தது...
எமோஜி விமர்சனம்

எமோஜி விமர்சனம்

OTT, Web Series, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஹாவில், மஹத் ராகவேந்திரா, தீபிகா சதீஷ், மானஸா செளத்ரி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த இணைய தொடர் வெளியாகியுள்ளது. எமோஷ்னலான காதல் கதை என்பதால் 'எமோஜி' எனத் தலைப்பிட்டுள்ளனர். எமோஷன்ஸை (உணர்ச்சிகள்) வரைபடங்களாகச் சித்தரிக்கப்படுவதை எமோட்டிகான் என்றோ, எமோஜி என்றோ அழைப்பார்கள். எமோஜி என்பது இரண்டு ஜப்பானிய சொற்களின் (E + moji) சேர்க்கையில் உருவான வார்த்தை. பிரார்த்தனா எனும் பெண்ணைக் காதலித்து, தீக்‌ஷாவைக் கல்யாணம் செய்யும் ஆதவ், விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறான். பிரார்த்தனாவுடன் எப்படி காதல் மலர்கிறது, ஏன் தீக்‌ஷாவைக் கல்யாணம் செய்கிறான், மகிழ்ச்சியாக வாழும்போதே ஏன் விவாகரத்துச் செய்கிறான் என்பதே இத்தொடரின் கதை. நாயகனின் நண்பனாக VJ ஆஷிக் நடித்துள்ளார். நடப்பனவற்றை எல்லாம் ராப் பாடல்களாக மாற்றும் ராப்பராக நிறைய பாடுகிறார். சனத் பரத்வாஜின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. பின்...
கடாவர் விமர்சனம்

கடாவர் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
கடாவர் (Cadaver) என்றால் உயிரற்ற உடல் எனப் பொருள். படப்பை காட்டுக்குள், காருடன் சேர்ந்து எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கிடைக்கிறது. முற்றிலும் உருக்குலைந்த அந்தச் சடலத்தைக் கொண்டு, போலீஸ் சர்ஜனான பத்ராவின் உதவியோடு கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காண்கிறது காவல்துறை. கொலை செய்யப்பட்ட நபர் யார், கொலையாளி யார், கொலைக்கான மோட்டிவ் என்ன என்பது போன்ற விசாரணைக்கான பதிலே படத்தின் முடிவு. இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ்க்குத் தமிழில் இது முதற்படம். மலையாளத்தில் அவரது முதற்படம் ஜோசஃப். இரண்டு படத்திற்குமான ஒற்றுமை என்னவென்றால், இரண்டின் கருவுமே ஏறக்குறைய ஒன்றேதான். சஸ்பென்ஸைத் தக்கவைக்க உதவும் ரஞ்சின் ராஜினுடைய பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏசிபி (ACP) விஷாலாக ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். பத்ரா தான் மாஸ்டர் ப்ரெயின் என்பதால், இவரது பாத்திரத்திற்கான டீட்டெயிலிங் கம்மியாகவே உள்ளது. ஆனாலும் தன்...
ஆன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

ஆன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

OTT, Web Series
ஆஹா தமிழில், ஜூலை 1 அன்று வெளியாகியிருக்கும் அமானுஷ்ய இணையத்தொடர். மிகுந்த கொடுமையான பால்யத்தைக் கொண்ட லாவண்யா எனும் இளம்பெண், தன் பால்யம் ஏற்படுத்திய வடுவிலிருந்து மீள வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறுவயதில், தன் சகோதரியால் லாவணி என அழைக்கப்படுவதால், சகோதரியின் மீதுள்ள கோபத்தால் அப்பெயரை ஆன்யா என மாற்றிக் கொள்கிறார். பேயும் இல்ல பிசாசும் இல்ல என நம்ப விரும்பும் ஆன்யா, தனது இன்ஸ்டாகிராம சேனலான ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’-இல் ஒப்பனை பற்றிய காணொளி போடும் பொழுது, அவளது பின்னால் ஓர் உருவம் பதிவாகிறது. அந்த வீடியோ மிகவும் வைரலாக, ஆன்யா அதன் மூலமாகக் கிடைக்கும் பிரபல்யத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். லாவணி எனும் ஆன்யாவாக நிவேதிதா சதீஷ் நடித்துள்ளார். ஆன்யாவின் மூத்த சகோதரி மதுவாக ரெஜினா கசாண்ட்ரா நடித்திருந்தாலும், நிவேதிதா தான் தொடரின் நாயகி. இருவருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளன...
O2 விமர்சனம்

O2 விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
கோவையில் இருந்து கொச்சிக்குச் செல்லும் பேருந்து நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து விடுகிறது. பேருந்தில் சிக்கியவர்கள் ஆக்சிஜனுக்காகப் போராடும் சர்வைவல் த்ரில்லர்தான் படத்தின் கதை. சர்வைவல் த்ரில்லர் என வகைமைப்படுத்தினாலும், தன் மகனுக்காகப் போராடும் ஒரு வீரத்தாயின் கதை என்ற சிறப்பும் உண்டு இப்படத்திற்கு. தன் மகனுக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவரது செல்ல அழகு மகனாக யூ-ட்யூப் புகழ் ரித்விக் நடித்துள்ளான். அவனது திறமைக்குத் தீனி போடுமளவிற்கான வாய்ப்பு இல்லையெனினும், கிடைத்த ரோலில் ஆழமாகத் தன் முத்திரையைப் பதிந்துள்ளான் சுட்டிப் பையன். படத்தின் ஆரம்பமே, இயற்கையைப் பற்றிய ஓர் 2டி அனிமேஷனில் இருந்து தொடங்குகிறது. அதை அழகாகக் க்ளைமேக்ஸில் கொண்டு வந்து முடித்திருப்பது சாதுரியமான முடிச்சு. இயக்குநர் G.S.விக்னேஷ் எடுத்துக் கொண்ட மாறுபட்ட களம் ஈ...
சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்

சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்

OTT, Web Series
தமிழில் வெளிவரும் அமேசான் ப்ரைமின் முதல் வெப் சீரிஸ் இது. புஷ்கர் - காயத்ரி இணை எழுதிய இத்தொடரை, பிரம்மாவும் அனுசரணும் இயக்கியுள்ளனர். குற்றம் கடிதல், மகளிர் மட்டும் இயக்கிய பிரம்மா, முதல் நான்கு அத்தியாயங்களையும், கடைசி நான்கு அத்தியாயங்களை இயக்குநர் அனு சரணும் இயக்கியுள்ளனர். மலைகள் சூழ்ந்த சாம்பலூர் எனும் சின்ன ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவி நிலா கடத்தப்படுகிறாள். அந்த வழக்கை விசாரிக்கும் சக்கரை எனும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் திருப்பமாக அமைகிறது. சக்கரையாக மிகத் திறம்பட நடித்துள்ளார் கதிர். இந்தத் தொடரின் நாயகன் இவரே! சின்னச் சின்ன முக பாவனைகளிலும் ஸ்கோர் செய்கிறார். இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸாக நடித்துள்ள ஷ்ரேயா ரெட்டி தான் தொடரின் நாயகி. இன்ஸ்பெக்டராக அவர் காட்டும் கம்பீரமும், ஓர் அம்மாவாக அவர் இளகும் இடமும் என கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் ...
சேத்துமான் விமர்சனம்

சேத்துமான் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
பெருமாள் முருகனின் 'வறுகறி' எனும் சிறுகதையை மிக நேர்த்தியாக சேத்துமான் எனும் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் தமிழ். பன்னியைக் கொங்கு வட்டாரத்தில் சேத்துமான் என்றழைப்பார்கள். கதை நடக்கும் களமாக மேற்கு கொடைக்கானலைத் தெரிவு செய்துள்ளனர். பெயர் போடும் போது ஒரு கதையை ஓவியத்தில் சொல்லி முடித்ததும், டைட்டில் க்ரெடிட் முடிந்த பின் படத்தின் கதைக்குள் செல்கின்றனர். மகனையும் மருமகளையும் இழந்த பூச்சியப்பன் தனது பேரனுடன் ஊரை விட்டு வெளியேறி, பண்ணாடி வெள்ளையனிடம் வேலைக்குச் சேருகிறார். உடல் சூட்டினைத் தணிக்க, பன்னியின் வறுத்த கறியைத் திண்பதில் ஆர்வம் காட்டுபவர் வெள்ளையன். ஆனால், ஊர் உலகமோ, பன்னிக்கறியை உண்பதை மிக ஏளனமாகப் பார்க்கிறது. குறிப்பாக வெள்ளையனின் மனைவியே, 'பீ திண்ணும் பன்னியைச் சாப்பிடுறது பீ திண்பதற்கு சமம்' என வெள்ளையனை அநியாயத்திற்கு அசிங்கப்படுத்துகிறார். கொண்ட கொள்கையில் உறுதியாக இரு...
ஆஹா ஒரிஜினலின் ‘குத்துக்கு பத்து’

ஆஹா ஒரிஜினலின் ‘குத்துக்கு பத்து’

OTT, Web Series, சினிமா, திரைத் துளி
மே 13ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும், ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைதளத் தொடர், திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சாம் ஆண்டன், ரத்ன சிவா, முத்துக்குமார், தாஸ் ராமசாமி, ‘குத்துக்கு பத்து’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் யூட்யூப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. இந்தத் தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தி...
சாணிக்காயிதம் விமர்சனம்

சாணிக்காயிதம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
க்வென்டின் டரான்டினோ படங்களின் பாதிப்பில், ரத்தமும் சதையும் தெறிக்கும் ஒரு பழிவாங்கும் படம் தமிழில் வந்தால் எப்படியிருக்கும்? சாதிப் பெருமிதம் எனும் கயமையால் நிகழ்த்தப்படும் கொடூரத்தைப் பொறுக்கமாட்டாமல், பாதிக்கப்பட்ட பொன்னி எனும் ஒரு பெண் பழிவாங்கப் புறப்படுவதே சாணிக்காயிதத்தின் கதை. தன் கணவனையும் மகளையும் உயிரோடு எரித்தவர்களைத் தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க ஒரு சாரார் முனையும் போது, சட்டமாவது மயிராவது என தனது கைகளாலேயே அனைவரையும் உயிரோடு எரித்துக் கொல்லும் வன்மத்துடன் தன் அண்ணன் சங்கையாவுடன் இணைந்து கொலை தாண்டவமாடுகிறார் பொன்னி. நகைமுரண் என்னவென்றால், புதுப்பேட்டையில் தனுஷைக் கொண்டு செல்வராகவன் காட்சிப்படுத்திய தனி மனிதனுள் தன்னிச்சையாக எழும் கொலைவெறியை, செல்வராகவனைக் கொண்டு காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அப்படத்தில் தனுஷுக்கான நியாயங்களை விட, இப்படத்தில் செல...
குத்துக்குப் பத்து – நோ பேச்சு ஒன்லி பன்ச்சு

குத்துக்குப் பத்து – நோ பேச்சு ஒன்லி பன்ச்சு

OTT, Teaser, Web Series, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்குப் பத்து’ வலைத்தளத் தொடருக்காக வித்தியாசமான முறையில் ‘குத்து’விட்டு விளம்பரப்படுத்தும் படக்குழுவினர். ‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் 'குத்துக்கு பத்து' என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரைப் பிரபலப்படுத்துவதற்காகக் குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பன்ச்சு’ என்ற வித்தியாசமான உத்தியைக் கையாண்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. இந்தத் தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்...