OTTThe Great Indian Kitchen விமர்சனம்
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ எனும் மலையாளப் படத்தை ஓடிடி தளங்களான அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் முதலியவை வாங்க மறுத்த நிலையில், நீஸ்ட்ரீம் எனும் தளத்தில், அப்படம் ஜனவரி 21, 2021, அன்று வெளியானது. ஒரு படத்தை வாங்குவதும் வாங்காததும், ஓடிடி தளங்களது தனிப்பட்ட நிர்வாக முடிவே எனினும், அவை வாங்க மறுப்பதற்குச் சுட்டிக் காட்டிய ஒரு காரணமே இப்படத்தின் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவ்வசனம், ‘உச்சநீதி மன்றத்தினுடைய சபரிமலைத் தீர்ப்பு என்பது பெண்களின் கோயில் […]











