
“உதவும் மனப்பான்மை வணிகமாக மாறி குற்றச்சம்பவத்திற்கு வழி வகுக்கிறது” – அதிஷா | DNA
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, கடந்த இருபதாம் தேதியன்று வெளியான DNA திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் வெற்றிக்குக் காரணமான இணை கதாசிரியரும் எழுத்தாளருமான அதிஷா, '' இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவுப் பயணம். இந்தத் தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன்.
இந்த க...















