Shadow

Tag: அதுல்யா ரவி

எண்ணித்துணிக விமர்சனம்

எண்ணித்துணிக விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு நகைக்கடைக் கொள்ளையில் மூன்று பேர் கொல்லப்பட, நாயகன் கொள்ளைக்காரர்களைத் தேடி அவர்கள் முன் நிற்கத் துணிகிறான். குற்றவாளிகளைத் தப்ப விடாமல் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பதை மீறி நாயகனிடம் ஒரு சாகச உணர்வு தொற்றிக் கொள்கிறது. ‘அவங்க முன்னாடி போய் நிற்கணும்’ என்ற தீர்மானத்துடன் உள்ளார். அப்பொழுது போலீஸ்? ஐடியில் வேலை செய்யும் நாயகன் அளவிற்குக் கூட விசாரணையை மேற்கொள்ளாமல் சுதாரிப்பின்றி உள்ளனர். அதிலும் அமைச்சர் ஒருவர், போலீஸுக்குப் பயங்கர குடைச்சல் தருகிறார். அமைச்சராக வைபவின் அண்ணன் சுனில் நடித்துள்ளார். முதல் பாதியில், காலில் வெந்நீர் ஊற்றியது போல் ஓர் அவஸ்தையோடு வருபவர், இரண்டாம் பாதியில் ரசிக்க வைக்கிறார். அவரது ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தும், தனது ஸ்க்ரீன் பிரசென்ஸால் மற்ற இருவரை விடத் தனித்துத் தெரிகிறார். கொள்ளைச் சம்பவத்தில் தன் கணவனை இழ...
வட்டம் – ஆண் பெண் உறவிற்கு இடையே!

வட்டம் – ஆண் பெண் உறவிற்கு இடையே!

சினிமா, திரைச் செய்தி
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குநர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையின் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். தயாரிப்பாளர் SR பிரபு, “கமலக்கண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும். அதை இந்தப் படம் பேசும். நடிகர் சிபி தான் இந்தக் கதையை எடுத்துச் செல்லச் சரியாக இருப்பார் என நினைத்து இந்தப் படத்திற்குள் அவரைக் கொண்டு வர நின...
சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை

சிபிராஜின் ‘வட்டம்’ – சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கை

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினைப் பிரத்தியேகமாக நேரடித் திரைப்படமாக வெளியிடுகிறது சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்குக் கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'வட்டம்' படத்தினை நேரடித் திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘வட்டம்’ ஒரு த்ரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாபாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்தத் தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்...
என் பெயர் ஆனந்தன் விமர்சனம்

என் பெயர் ஆனந்தன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
6 அத்தியாயம் படத்தில், "சித்திரம் கொல்லுதடி" எனும் அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசனின் தனி முதல் படம். அந்தப் படத்தின் சொல்லிக் கொள்ளும்படியான தனித்துவ முயற்சியாக, அவரது குறும்படம் மட்டும் தனித்துக் கவர்ந்தது. 'அடிமை சுதந்திரம்' எனும் குறும்படத்திற்காக சர்வதேச விருதுகள் பெறும் இயக்குநர் சத்யாவிற்கு, திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பின் பொழுது, அவரை முகமூடி அணிந்த நபரொருவர் கடத்தி விடுகிறார். யாரால் ஏன் கடத்தப்பட்டார் என்பதுதான் படத்தின் கதை. தெருக்கூத்துக் கலைஞராக அருணும், நாடகக் கலைஞராக அரவிந்த் ராஜகோபாலும் நிறைவாக தன் பங்கினைச் செய்துள்ளனர். ஜோஸ் ஃப்ராங்கிளினின் இசையில், கலைஞர்கள் தங்கள் வயிற்றுப்பாடினைப் பாடும் பாடல் மனதை ஊடுருவித் துளைக்குமளவு அட்டகாசமாக உள்ளது. புருஷோத்தமன் வீரையனின் பாடல்வரிகள் அவ் உணர்வெழுச்சியைத் தான் படம் தந்திருக்கவேண்டும்....
அடுத்த சாட்டை விமர்சனம்

அடுத்த சாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே கதை சொல்லிவிடுகின்றனர் சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன். அப்பா கலை கல்லூரியில், ஒரு டிப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களின் வகுப்பில் கதை நிகழ்கிறது. சாதி வெறியில் ஊறிய பிரின்சிபல் சிங்க பெருமாளின் மகன் பழனியால் வகுப்பில் சாதிப் பிரிவினை ஏற்படுகிறது. படத்தின் முதற்பாதியில் மகன் திருந்தி விட, இரண்டாம் பாதியில் பிரின்சிபலும் திருந்தி விட படம் சுபமாய் முடிகிறது. சமுத்திரக்கனி முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சாட்டையை அட்வைஸ்களாகச் சுழற்றியபடியே உள்ளார். அவருக்கு இதே வேலையாகப் போய்விட்டதென அவர் சொல்வதை யாரும் காதில் வாங்கவேயில்லை. ஆனால், நாயகியான போதும்பொண்ணு, “நான் அந்த சாதியைச் சேர்ந்த பையனைக் காதலிக்கவில்லை. எனக்கு உன்னைத்தான் பிடிக்கும். அவனைக் கூடப் பிறந்தவனா நினைச்சுத்தான் பழகுறேன்” என்று நாயகனிடம் சொன்னதும், ஒட்டுமொத்த கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கும் ச...
இந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

இந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

மற்றவை
‘உதவும் உள்ளங்கள்’ என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அக்டோபர் 20 அன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர். நிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார். நிகழ...
சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளையர்கள் வங்கியைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓட, அவர்களை விரட்டுகின்றனர் கோவைக் காவல்துறையினர். கொள்ளையர்கள் R.S.புரத்திற்குள் நுழைய, அந்த ஏரியாவிற்குள் யாரும் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளிருப்பவர்கள் வெளியே வரமுடியாதளவும் சுற்றி வளைக்கிறது காவல்துறை. காவல்துறையின் பிடியில் குற்றவாளிகள் சிக்கினரா என்பதுதான் படத்தின் கதை. கொள்ளையர்கள் பணத்தைத் திருடும் வங்கி, ஒரு மாலின் (mall) மாடியில் இருக்கிறது. நான்கு பேரில் ஒருவன் கூட, வாகனத்தில் தப்பியோடத் தயார் நிலையில் காத்திருக்காமல் ஏன் அப்படியொரு சொதப்பலான திட்டத்தைத் தீட்டினர் எனத் தெரியவில்லை. காரில் இருவர் தான் ஏறுகின்றனர். போலீஸைத் தவிர்க்க அந்தக் கார், பார்க்கிங்கில் இறங்கியதும், மீதமுள்ள இருவர் அங்கு வந்து ஏறிக் கொள்கின்றனர். இப்படியான காட்சிகள், என்ன ஏது என உள்வாங்கிக் கொள்ளும் முன், தடதடவெனக் காட்சிகள் வேகமாய் ஓடுகிறது. திருடர்கள் ஓடு...
சுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும்

சுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும்

சினிமா, திரைத் துளி
"ஜூன் 14ஆம் தேதி அன்று, உலகமெங்கும் வெளியாகும் 'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குநர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்தப் படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்று விளக்கினார். "அவர்கள் வெறும் இயக்குநர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், அவர்களின் நுணுக்கமான நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். ஸ்கிரிப்ட்டில் நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர்கள், அவர்களை இயக்கும்போது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள்...
ஏமாலி விமர்சனம்

ஏமாலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாலீஸ்வரனுக்கு ரித்து பிரேக்-அப் சொல்லிவிடுகிறாள். தன்னை ஏமாளியாக உணரும் மாலி, அவரது நண்பர் அரவிந்துடன் இணைந்து ரித்துவைக் கொல்லத் திட்டமிடுகிறார். அந்த ஆப்ரேஷனின் பெயர் A.Maali (ஏமாலி), அதாவது A for அரவிந்தன் & Maali for மாலீஸ்வரன். அந்த ஆப்ரேஷனின் முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை. மாலியாக சாம் ஜோன்ஸும், அரவிந்தாக கொலைக்கான திட்டமிடலைப் போலீஸின் விசாரணைக் கோணத்தில் இருந்து தொடங்குகின்றனர். எனவே திரைக்கதை நான்-லீனியராக, உண்மை - கற்பனை என இரண்டு கோணங்களில் நகர்கிறது. இந்தத் திரைக்கதை யுக்தியைக் குழப்பமில்லாமல் இயக்குநர் துரை கையாண்டிருந்தாலும், படத்தின் முடிவு ஒரு வகையான ஏமாற்றத்தைத் தருகிறது. ட்ரெண்டியாக, ஜாலியாக, யூத் ஃபுல்லாகச் சென்ற படம் அதற்கான நிறைவைத் தரவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள் மொக்கையாகவோ, எல்லை தாண்டாமலோ இருப்பது ஆறுதல். 'கஸ்கா முஸ்கா' என்று ஜெயமோகன் தனது வசனங்களா...