Shadow

Tag: இன்பராஜா ராஜலிங்கம்

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை கைப்பற்றிய அனிமல் திரைப்படம் !!

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை கைப்பற்றிய அனிமல் திரைப்படம் !!

சினிமா, திரைச் செய்தி
ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் அர்ஜன் வைலி  பாடல் NYC மற்றும் LA இல் விளம்பர பலகைகளை அலங்கரித்துள்ளது !நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகிய இப்படம், பாக்ஸ் ஆபிஸில் உலகளாவிய வசூல் மூலம் பல சாதனைகளை முறியடித்து வரும் அதே வேளையில், சர்வதேச அளவில்  அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடதக்கது. நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் அனிமல் படப்பாடலான அர்ஜன் வைலி, விளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் ஹோர்டிங்குகளில் இடம்பெற்றுள்ளது. இந்த இடங்களில் இசைக்கப்படும் முதல் இந்தியப் பாடல் இதுவாகும். உலகம் முழுவதும் அர்ஜன் வைலி பாடல், பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுதுடன் எட்டுதிக்கும் கேட்கும் பாடலாக சாதனை படைத்து வருகிறது.  அனிம...
டங்கி டிராப் 5 “ஓ மஹி” பாடலின் க்ளிம்ப்ஸே வெளியிட்ட SRK

டங்கி டிராப் 5 “ஓ மஹி” பாடலின் க்ளிம்ப்ஸே வெளியிட்ட SRK

சினிமா, திரைச் செய்தி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டங்கி டிராப் 1, டங்கி டிராப் 2 லுட் புட் கயா, டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே மற்றும் டங்கி டிராப் 4, டிரெய்லர் என வரிசையாக டங்கி அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள். ராஜ்குமார் ஹிரானி உருவாக்கிய அன்பான, அழகான திரை உலகத்தைப் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பை இது நிச்சயமாக அதிகரித்துள்ளது. தற்போது ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் டங்கி டிராப் 5, ஓ மஹி பாடலை வெளியிட தயாராகி வருகின்றனர். இந்த பாடலின் வீடியோவை வெளியிடுவதற்கு முன்னதாக அதிலிருந்து ஒரு கிளிம்ப்ஸே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.சமீபத்திய #AskSRK அமர்வில், கிங் கான் இந்தப் பாடலைத் திரைப்பட ஆல்பத்தில் இருந்து தனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டார், எனவே ரசிகர்கள் இப்பாடலை ஆவலுடன...
“டங்கி” படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில்  வெளியிடும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம்

“டங்கி” படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம்

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான, விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளது !!'ஜவான்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம் மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி, இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இப்படம் டிசம்பர் 21 முதல், திரையரங்குகளில் வெளியாகிறது.ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 'டங்கி' படத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது. கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில் பெரும...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டங்கி படத்திற்காக சிறப்பு பாடலொன்றை படமாக்கியுள்ளார் ஷாருக்கான் !!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டங்கி படத்திற்காக சிறப்பு பாடலொன்றை படமாக்கியுள்ளார் ஷாருக்கான் !!

சினிமா, திரைச் செய்தி
சமீபத்தில் வெளியான டங்கி டிராப் 4 படத்தின் மீதான எதிர்பார்ப்பை, உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ரசிகர்கள் ஒரு அற்புதமான திரை அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உணர்ச்சிகள் நிறைந்த, ஒரு மகத்தான மனதைக் கவரும் உலகத்தை வடிவமைத்திருக்கும் விதத்தைப் பார்வையாளர்கள் பாராட்டினாலும், படத்தின் மையத்தை அழகாக வெளிப்படுத்தும் பாடல்களையும் அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதுவரை வெளியான பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்போது அவர்களின் உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில் மேலும் ஒரு அப்டேட் வந்துள்ளது. விளம்பர நோக்கங்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்ட “டங்கி” படத்திற்கென ஒரு சிறப்புப் பாடலைப் படமாக்க SRK ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தந்த தகவலின் படி , "ஷாரூக் மற்றும் ஹிரானி ...
“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

சினிமா, திரைச் செய்தி
ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக...
ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சினிமா, திரைச் செய்தி
KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவினில்..திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீ...
பார்க்கிங் விமர்சனம்

பார்க்கிங் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மனிதனின் அடிப்படை குணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று காமம், மற்றொன்று கோபம். இந்த இரண்டு உணர்ச்சிகள் மட்டும் தான் அடிப்படையான உணர்ச்சிகள். மற்ற உணர்ச்சிகளான காதல், அன்பு, பாசம், நேசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரக்கம் காட்டுதல் இப்படி எல்லா உணர்வுகளும் நம் கற்பிதங்களால் மனிதனுக்குள் வளர்க்கப்பட்ட விடயங்களே.  இது போன்ற உணர்வுகளை நாம் தலைமுறை தலைமுறையாக கற்பித்துக் கற்பித்து, இன்று மனித இனம் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு உயர் நிலைக்குச் செல்வதே மனிதனுக்கும் மனிதகுலத்திற்கும் பெருமை. ஆனால் ஒரு சூழலில் அதுவும் குறிப்பாக ஈகோ நம் மனதிற்குள் நுழையும் போது, மற்ற எல்லா உணர்வுகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு நம் மனதிற்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான கோபத்திற்கு மட்டும் நாம் தீனி போடத் துவங்கினால் நாம் முற்றிலும் மனிதத்தை இழந்து மிருகமாக மாறிவிடுவோம்....
நாடு விமர்சனம்

நாடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘எங்கேயும் எப்போதும்’,  ‘ இவன் வேற மாதிரி’  போன்ற  திரைப்படங்களை இயக்கிய  சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம் புலி, ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படம் “நாடு”.  மருத்துவர் ஒருவர் இல்லாமல் சொல்லொன்னா துன்பத்திற்கு உள்ளாகும் மலைவாழ் கிராம மக்கள், இறுதியாகத் தங்கள் கிராமத்திற்கு வரும் ஒரு பெண் மருத்துவரைத் தங்கள் கிராமத்தில் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் போராட்டமே இந்த “நாடு” திரைப்படம். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைத் தொடரில் இருக்கும் ஒரு மலைவாழ் கிராமத்தின் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால்,  உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த மலைக்கிராமத்திற்கு நியமிக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும்  ஒரு வாரம் அல்லது ஒரு மாத காலத்திற்குள் மாற்றல் வாங்கிக் கொண்டு கிளம்பிவ...
“நானும் ரன்பீரும் விலங்குகள் போல் சண்டையிடுவோம்” – பாபி தியோல்

“நானும் ரன்பீரும் விலங்குகள் போல் சண்டையிடுவோம்” – பாபி தியோல்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கும் வருகை தந்திருந்தனர். தயாரிப்பாளர் பூஷன் குமார், “இது சந்தீப் வங்காவின் படம். அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து பணியாற்றினோம். அவர் எங்களிடம் அனிமல் கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றித் தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். இப்படத்திற்காக ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமைய...
“மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்” – அசோக்செல்வன்

“மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்” – அசோக்செல்வன்

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன் ஆகும். நாயகிகளாக மேகா ஆகாஷும், கார்த்திகா முரளிதரனும், சாந்தினி செளத்ரியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூட்யூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமனும், பிரபு ராகவும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். Clear water பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், i Cinem...
குய்கோ விமர்சனம்

குய்கோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதைக்காகத் திரைக்கதைக்காகப் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நிறைய உண்டு. ஆனால் காட்சிகளில் இருக்கும் நகைச்சுவைக்காகவும் நையாண்டிக்காகவும், அரசியல் பகடிகளுக்காகவும், கதாபாத்திர வடிவமைப்பிற்காகவும், இயல்பான யதார்த்தமான நடிப்பிற்காகவும் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நம்மிடையே மிகவும் குறைவு. அமைதிப்படை, களவாணி, தமிழ்ப்படம், ஒரு கிடாயின் கருணை மனு, ஆண்டவன் கட்டளை என வெகு சில படங்களே! அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த "குய்கோ". அமைதிப்படை திரைப்படம் நம் நாட்டின் அரசியல் சூழலையும் அரசியல்வாதிகளையும் பகடி செய்த திரைப்படம். தமிழ்ப்படம், நம் தமிழ் சினிமாவில் இருந்த க்ரிஞ்சான விசயங்களையும், அவலங்களையும் பகடி செய்தது. அந்த வரிசையில் நாம் வாழும் வாழ்க்கையையும், நம்மிடம் இருக்கும் அறியாமையையும், பகட்டான வாழ்க்கை மீது...
”சந்தானத்திற்கு  30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்” – ஞானவேல்ராஜா

”சந்தானத்திற்கு 30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்” – ஞானவேல்ராஜா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன்,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன்,  தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ்  ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட  தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியதாவது, இப்படத்தின் இயக்குநர் கல்யாண் அவர்களை  2015 காலகட்டத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் வரிசையாக ஆறு படங்களை இயக்கி இருந்தாலும் கூட அவருடைய மொபைல் எண்ணை நான் KSP கல்யாண், அதாவது கதை சொல்லப் ...
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கத்தியால் ஒருவர் கண்ணில் வரவழைக்கும் கண்ணீரை விட, கலையால் ஒருவர் கண்ணில் வரவழைக்கப்படும் கண்ணீர் துளி சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்துவதற்கான உயிர்த்துளி என்பதை ஒருவித கோணத்தில் கூறிய திரைப்படம் ஜிகர்தண்டா. அதே கருத்தை மற்றொரு மாற்றுக் கோணத்தில் இன்னும் அழுத்தமாக, தீவிரமாகப் பேசியிருக்கும் திரைப்படம் தான் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. ”கலையை நீ தேர்ந்தெடுக்கவில்லை; கலை தான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறது” என்கின்ற கனமான கவித்துவமான வரிகளுடன் துவங்குகிறது திரைப்படம். அந்த வரிகளுக்கான நியாயத்தை ஒவ்வொரு காட்சியிலும் சிறுகச் சிறுக கடத்தி, படம் முடியும் அந்தக் கடைசி ஃப்ரேமில் அந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மையை நிரூபிக்கிறது. 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் இருக்கும் சில சாயல்கள் இப்படத்திலும் உண்டு. உதாரணத்திற்கு ஊரே பார்த்து நடுங்கும் ஒரு கொலைகார ரெளடி, அவனை நாயகனாக வைத்து படம் எடுக்க வேண்டிய நி...
“கட்டில் – நினைவுகளின் வலியைப் பதிந்துள்ள திரைப்படம்” – கவிப்பேரரசு வைரமுத்து

“கட்டில் – நினைவுகளின் வலியைப் பதிந்துள்ள திரைப்படம்” – கவிப்பேரரசு வைரமுத்து

சினிமா, திரைச் செய்தி
Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்” ஆகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர், நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எடை போடுவது? அதை காலம் காட்டிக் கொடுத்து விடும். நேரம், தோல்வி, வெற்றி எல்லாம் தாண்டி என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகப் பயணித்து வருகிறார். அவர் என் அன்புக்குரியவர். கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர...
கிடா விமர்சனம்

கிடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 மதுரை மாநகரின் ஒட்டு மொத்த ஊரும் அடுத்த நாளின் தீபாவளி கொண்டாட்டங்களுக்காக  தயாராகிக் கொண்டிருக்க,  ஊருக்கு வெளிப்புறம் இருக்கும்  ஒரு சிறு கிராமத்தில், வயதான பெரியவரும் அவரின் பேரனும் தவிப்போடு அமர்ந்திருக்கின்றனர்.  பெரியவருக்கு தன் பேரன் ஆசையாக கேட்ட ஆடையை வாங்கிக் கொடுப்பதற்காக அவன் ஆசையோடு வளர்த்த ”கிடா”-வை விற்கத் துணிந்தும், அதை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன ஆள் இன்னும் வரவில்லையே என்கின்ற பதட்டம். பேரனுக்கோ தான் ஆசைப்பட்டு கேட்ட ஆடைக்காக தான் ஆசை ஆசையாக வளர்த்த கிடாவை நம்மிடம் இருந்து பிரித்துவிடுவார்களோ என்கின்ற பதட்டம்.  இவர்கள் இருவரின் பதட்டம் இதுவென்றால்,  கறிக் கடையில் ஆடு வெட்டுவதையே தொழிலாக கொண்ட தன்னை, குடிக்கிறேன் என்கின்ற காரணத்தால், தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும் போது கடையை விட்டு அனுப்பிய தன்முதலாளி மகனுக்கு எதிராக தீபாவளி...