Shadow

Tag: இன்பராஜா ராஜலிங்கம்

எக்கோ விமர்சனம்

எக்கோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நம்மிலிருந்து புறப்படும் ஒலிகள் சில நேரம் சென்று தேங்கவோ, பதுங்கவோ, கரைந்து போகவோ வழியின்றி வெற்றிடத்தில் பட்டு மீண்டும் நம்மிடமே திரும்பி வரும். அந்த எதிரொலியை ஆங்கிலத்தில் எக்கோ என்கிறோம். முதல் வாக்கியத்தில் இருக்கும் ஒலிகள் என்கின்ற வார்த்தையை எடுத்துவிட்டு வினைகள் என்று வார்த்தையை நிரப்பி அதே வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படித்தால் அது தான் இந்த எக்கோ படத்தின் ஒன்லைன். புதுமணத் தம்பதியாக தங்கள் மணவாழ்க்கையைத் துவங்கவிருக்கும் ஸ்ரீகாந்த், பூஜா ஜாவேரி இணைக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஸ்ரீகாந்திற்கு விசித்திரமான சத்தங்கள் காதைக் கிழிப்பது போல் கேட்கத் துவங்குகிறது. அது போல் துணி தொங்கும் இடத்தில் நகக்கீறல்கள், கால் பாதத்தில் படிந்து அடுத்த நொடி காணாமல் போன இரத்தம், திரைச்சீலை அவரின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயல்வது போன்ற பல அசம்பாவிதங்கள் நடக்க, அவரின் வேலைத் திறன் பாதிக்கப்படுகிறது....
கொலை விமர்சனம்

கொலை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விடியும் முன் படத்தினை இயக்கிய பாலாஜி K. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொலை. பிரபல மாடலும் பாடகியுமான லைலா என்னும் பெண் பூட்டப்பட்ட தன் வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள். அவளை கொன்றது யார் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் படலம் தான் இந்தக் கொலை. இயக்குநர் பாலாஜி K. குமாரின் முந்தைய படமான ‘விடியும் முன்’ திரைப்படமே அது உருவாக்கப்பட்ட விதத்திலும், அதில் பயன்படுத்தப்பட்ட ஒளிக் கீற்றுகள், வண்ணங்கள் ஆகியவற்றின் பலத்தினாலும் இந்திய வரைவியலுக்கு உட்பட்ட கதைக்களமான நிலத்தை ஹாலிவுட் காட்சியமைப்போடு காட்டி மிரட்டியதற்காக வெகுவாக பாராட்டும் வரவேற்பும் பெற்றது. அது போல் தான் கொலை திரைப்படமும். படத்தின் ஆரம்பத்தில் கருப்பு வெள்ளையில் வரும் காட்சி பிம்பங்கள் மட்டுமன்றி ஒட...
பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
புட் சட்னி யூ-டியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ்மோகனும், ப்ளாக் ஷீப் யூ-டியூப் சேனல் குழுவினர் மொத்த பேரும் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருப்பதாலோ என்னவோ மொத்த படமும் ஒரு யூ-டியூப் வீடியோ பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது. இப்படத்தை ராஜ்மோகன் இயக்கி ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார். மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ளக்கூடாது. எதுவாக இருந்தாலும் மனம் விட்டுப் பேச வேண்டும் என்பது தான் பத்தின்ட கரு. ஆனால் இந்தக் கருத்தை சொல்வதற்கான கதையோ, திரைக்கதையோ படத்தில் இருக்கிறதா என்றால் சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனம். 2k கிட்ஸ்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே படம் எடுத்தது போல் இருக்கிறது. அவர்களுக்கு அட்வைஸ் என்றால் பிடிக்காது, சீரியஸ்னஸ் என்றால் ஆகவே ஆகாது, செண்டிமென்ட் என்றால் கிரிஞ்ச் என்பார்கள். அவர்களுக்கு ஜாலியாக இருப்பது மட்டுமே பிடிக்கும். ஆனாலும் அவர்கள் மிகுந்த பொறுப்பு...
மாவீரன் விமர்சனம்

மாவீரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மண்டேலா என்னும் மகத்தான க்ளாசிக் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அஸ்வினின் இரண்டாவது படம். டான், ப்ரின்ஸ் என தரை லோக்கல் அளவிற்கு காக்டெயில் கமர்ஷியல் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என இவர்கள் இருவரின் இணைவையும் ஒட்டு மொத்த திரையுலகு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ்நாடே உற்றுப் பார்த்தது. படம் மாஸாக வருமா, க்ளாஸாக வருமா என இப்படி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்தான் மாவீரன். ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படமாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படம் இல்லை. ஏனென்றால் சூப்பர் ஹீரோ செய்யும் எந்தவொரு செயலையும் மாவீரன் செய்வதில்லை. நம்மூர் ஹீரோக்கள் செய்யும் வேலையைத் தான் செய்கிறார். ஏதோ குரல் கேட்கிறது குரல் கேட்கிறது என்று டிரைலரில் வருவதை வைத்துப் பார்த்தால் ஒரு வேளை உளவியல் சம்பந்தமான திரைப்படமாக இருக்குமோ என்...
Infinity விமர்சனம்

Infinity விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் காட்சியில் ஒரு பெண் எரித்து கொல்லப்படுகிறாள். அவளின் பெற்றோர் புகார் அளிக்க இரு நாட்கள் கழித்து வர, அந்த இனிய நன்நாளில் மேலும் இரண்டு கொலைகள் விழுவதோடு, இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார். வேறு வழியின்றி இந்த வழக்கு இரண்டே நாளில் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிபிஐ-ஆக வரும் நட்டி முதல்பாதி முழுக்க ஜீப்பில் சுற்றுவதும், கீழ்நிலை அதிகாரியா அல்லது பணியாளா என்று கூடத் தெரியாத ஒரு கதாபாத்திரத்திற்கு கட்டளைகள் பிறப்பிப்பதுமாக இருந்துவிட்டு, படத்தின் கடைசி பத்து நிமிடத்தில் இவர்கள் தான் குற்றவாளி என்று சிலரைச் சுட்டுக் கொல்கிறார். படம் முடிந்தது என்று நாம் நினைக்கும் போது, இவர்களுக்குப் பின்னால் இருந்த ஒரு மாபெரும் வில்லன் வந்து ஆட்டம் இனி தான் தொடங்கப் போகிறது என்று உண்மையாகவே நம்மை மிரட்ட, INFINITY என்னும் தலைப்புக்கு ஏற்றார் போல் பாகம் 2 என்று போட்டு படத்தை ம...
ராயர் பரம்பரை விமர்சனம்

ராயர் பரம்பரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பரம்பரை பரம்பரையாக நம் அனைவருக்கும் தெரிந்த கதை தான் ராயர் பரம்பரை திரைப்படத்தின் கதை. ஒரு முனையில் காதல் பிடிக்காத அப்பா, க மறுமுனையில் காதலிக்கும் மகள், சண்டை, பிரச்சனை, இறுதியில் சுபம். இதுதான் ராயர் பரம்பரை. பரம்பரைக்கே பழக்கப்பட்ட கதையாக இருப்பது ஒன்றும் ஆகப் பெரிய தவறில்லை. ஆனால் அந்தக் கதை சுவாரசியமும் இல்லாமல், உணர்வோடும் ஒன்றாமல், சிரிக்கவும் வைக்காமல் அலைக்கழிப்பதைத் தவிர்த்திருக்கவேண்டும். கதை வலுவில்லாமல் இருக்கும் போது, அதன் திரைக்கதையாவது வலுவாக நின்று கதையைத் தாங்க வேண்டும். இப்படத்திலோ திரைக்கதை எங்கே போகிறது என்றே தெரியாமல் ஏதோ ஒரு திசையில் போய்க் கொண்டிருக்கிறது. முதற்பாதி முழுவதும் நாயகன் - நாயகி இருவரும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள். நாயகன் கழுகு கிருஷ்ணாவைக் காதலிப்பதாக சொல்லி அவரின் இரண்டு தோழிகள் லூட்டி அடிக்கிறார்கள். தங்கை ஓடிப் போனதால் காதலே பிடிக்காத ராயராக ...
பம்பர் விமர்சனம்

பம்பர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பம்பர் என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது. பம்பர் ப்ரைஸ் தானே. பல்வேறு விதமான பம்பர் ப்ரைஸ் இருக்கின்றன. ஆனால் லாட்டரியின் பம்பர் ப்ரைஸுக்கு தனி மவுசு. கூவிக் கூவி மூலை முடுக்கெல்லாம் லாட்டரி சீட்டை விற்ற காலம் 2003ஆம் ஆண்டோடு தமிழகத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்னும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் தடையின்றி இயங்கி வருகின்றன. குறிப்பாக நம் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டை அரசாங்கமே ஏற்று நடத்தி வருகிறது. எதற்கு இந்தத் தகவல் என்றால், படத்தின் டைட்டிலைப் போல், படத்தின் மையமே அந்தப் பம்பர் தான். பம்பர் பரிசாக விழும் 10 கோடி ரூபாய் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகின்றது, அதே நேரம் ஒரு மனிதனை மட்டும் மாற்ற முடியாமல் எப்படி அவன் காலடியில் அது தோற்கிறது என்பதே இந்த “பம்பர்” திரைப்படத்தின் கதை. மேற்சொன்ன விசயங்களை வைத்தே நீங்கள் நூல் பிடித்தாற் போல் இதுதான் கதையென்று...
மாமன்னன் விமர்சனம்

மாமன்னன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் அருபெரும் முயற்சியால், பட்டியலினச் சமூகம் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அதிகார அமைப்புக்குள் வர வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சரத்தாகவே நிறைவேற்றிய சமாச்சாரம் தான் “தனித் தொகுதி” திட்டம். இது கிட்டத்தட்ட 1932 ஆம் ஆண்டு காலம் தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். இதற்கு முதன்முதலாக 1891ஆம் ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பியவர்கள் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தான். ஆரம்பக் காலகட்டங்களில் பட்டியலினச் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் பட்டியலினப் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இஸ்லாமிய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மக...
பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கண் பார்வைக் குறைபாடுள்ள நாயகனுக்கு, தன் குடும்ப உறவைக் கொன்றது யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொலையாளி யார், கொலையாளியை எப்படிக் கண்டுபிடித்தார், குடும்ப உறவுக்கும் கொலையாளிக்கும் என்ன பகை போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் கதை. படத்தின் ஆரம்பக் காட்சியில் ஆட்டோவில் பயணம் செய்யும் விக்ரம் பிரபு நடுரோட்டில் பைக் பஞ்சர் ஆனதால் தவித்துக் கொண்டிருக்கும் ஓர் இளம் கணவன் மனைவிக்கு லிஃப்ட் கொடுத்து உதவுகிறார். ஆட்டோவில் ஏறும் அந்த இளம்பெண்ணோ விக்ரம் பிரபுவை மயக்கமடையச் செய்ய முயற்சி செய்கிறார். ‘ஏன்?’ என்கின்ற விறுவிறுப்போடு படம் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் திரைக்கதையைச் சுவாரசியமாக்குகின்றன. ஒரு கட்டத்தில் அவர்கள் குறி வைப்பது விக்ரம் பிரபுவையா இல்லை அவரது வீட்டில் உள்ளவர்களையா என்கின்ற குழப்பம் வரும் போ...
தலைநகரம் 2 விமர்சனம்

தலைநகரம் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைநகரம் சென்னையை மூன்று ரெளடிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மூவருக்குமே தான் மட்டுமே ஒட்டுமொத்த சென்னையை ஆள வேண்டும் என்பது ஆசை. இதனால் ஒருவரையொருவர் போட்டுத் தள்ளத் துடிக்கின்றனர். அதே நேரம் பழைய ரெளடியான ‘ரைட்டு’, ‘இந்தக் கத்தி, இரத்தம் இதெல்லாம் வேண்டாம்’ என்று ஒதுங்கி, மாலிக் பாய் (தம்பி இராமையா) உடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். ஆனால் காலமும் சூழலும் ரைட்டைத் தன் கையில் மீண்டும் கத்தி தூக்க வைக்க, ஒட்டு மொத்த சென்னையும் அவன் கட்டுப்பாட்டில் வருகிறது. அது எப்படி என்பதைச் சுவாரசியத்துடன் சொல்லி இருக்கிறது தலைநகரம் 2. படத்தின் மிகப் பெரிய பலமே அந்த மூன்று ரெளடிகளும், அவர்களின் பின்கதையும் தான். நஞ்சப்பா, வம்சி, மாறன் என மூன்று ரெளடிகள். இந்த மூன்று ரெளடிகளுக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திர வடிவமைப்பு. நஞ்சப்பா 5 - 6 இளம் ரெளடிகளை வைத்துக் கொண்டு தொழில்...
அழகிய கண்ணே விமர்சனம்

அழகிய கண்ணே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு படம் எதைப் பற்றி பேச வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் சுவாரசியமான சவாலைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது இந்த ‘அழகிய கண்ணே’ திரைப்படம். படத்தின் ஆரம்பக் காட்சியில் நாயகனை ஏரி அருகே இருக்கும் ஒரு இடத்தில் வைத்து எரிக்கப் பார்க்கும் போது, இது ஓர் அதிரடி திரைப்படம் போல என்று தோன்றியது. முதல் பாடல் கருத்தாக ஒலிக்கும் போது, சரி இது சமூக கருத்துள்ள படம் போல என்று தோன்றியது. எதிர் வீட்டு அய்யர் பொண்ணுக்கு டிராமாவிற்கு கதை எழுதிக் கொடுத்து கரெக்ட் செய்து காதலிக்க தொடங்கியவுடன் சரி இது காதல் கதைதான் என்று தீர்மானித்திற்குத் தள்ளியது படம். இடையில், அறிமுக நாயகன் லியோ சிவகுமார் இயக்குநர்களுக்கு கடிதமாக எழுதித் தள்ளி இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகப் போகிறேன் என்று சென்னை கிளம்புகிறான். லியோ சிவகுமார், திண்டுக்கல் லியோனியின் மகனாவார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். அங்குப் போனது...
தண்டட்டி விமர்சனம்

தண்டட்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை. இந்தப் பயணத்திற்கு நடுவே அழகான வலி மிகுந்த இரண்டு குட்டி காதல் அத்தியாயங்களும் படத்தில் உண்டு. அவை தான் கதையின் மையப்பொருளான இந்த தண்டட்டி படத்திற்கு உயிர்நாடி. 57 வயது தங்கப் பொண்ணாக ரோகிணி. குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பைக் கொடுப்பதில் தான் சீனியர் என்பதை நிரூபிக்கும் வகையில் செவ்வனே செய்திருக்கிறார். சிறு வயது ரோகிணி கதாபாத்திரத்தில்...