லவ்வர் விமர்சனம்
80 மற்றும் 90களின் காலகட்ட காதல்களில் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான காதல்கள் சொல்லாமலே முடிந்து போயிருக்கும். ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டுத் தலைமுறையின் காதல்கள், பார்த்த மறுகணத்தில் காதலைச் சொல்லியும், காதலியுடன் கை கோர்த்து சுற்றியும், ஒன்றாக பழகியும், படுக்கையை பகிர்ந்தும் கூட தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான காதல்கள் கல்யாணத்தில் கைகூடாமல் கலைந்துவிடுகிறது. படுக்கையை பகிர்வதையே உச்சகட்ட லட்சியமாகக் கொண்டு இயங்கியிருக்கும் காதல்கள் அதில் சில பல இருக்கலாம். ஆனால் அவைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உண்மையாகவே காதலை வாழ்க்கைத் துணைக்கான தேடலாகப் பார்த்தோ, இல்லை காதலியையோ காதலனையோ உருகி உருகி உண்மையாக காதலிப்போர் கூட இறுதியில் சேராமல் பிரிந்துவிடுகிறார்கள். அதன் பின்னணியில் உள்ள சமூகவியலையும் உளவியலையும் ஒரு சேர பேசும் படம் தான் “லவ்வர்”.
கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து ...