“பகலறியான்: இளைஞர்களும் இசையமைப்பாளர்களும்” – பேரரசு
ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறியான்” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இசையமைப்பாளர் விவேக் சரோ, "இது என் முதல் படம். நான் பல டிவி விளம்பரங்கள் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்திருந்தாலும், திரைப்படம் என்பது மிகப் பெரிய விசயமாகத்தான் இருக்கிறது. இந்தப் படம் என்னால் முடியும் என நம்பி, என்னிடம் ஒப்படைத்த இயக்குநர் தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக 4,5 முறை மாற்றி, மாற்றி இசையமைத்துள்ளேன். இதுவரை பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டியுள்ளார்கள் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். நடிகர் வெற்றிக்கு இந்தப் படம் மிக வித்தியாசமானதாக இருக்...