Shadow

Tag: எஸ்.ஏ.சந்திரசேகர்

ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

Trailer, காணொளிகள், சினிமா
'ஆலகாலம்' திரைப்படத்தின் ட்ரெய்லரைப் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார். ட்ரெய்லரைப் பார்த்த அவர், அதில் வந்த காட்சிகள் பிடித்துப் போகவே படத்தின் முழுக் கதையையும் கேட்டறிந்தார். படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ஜெய கிருஷ்ணாவின் நடிப்பையும் பாராட்டினார். 'ஆலகாலம்' என்கிற திரைப்படம் உருக வைக்கும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. 'ஆலகாலம்' என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையைச் சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம். இதில் இருந்து இவர்கள் மீண்டார்க...
எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது

சினிமா, திரைத் துளி
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்குத் திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது. நவம்பர் 21 ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் 'விஸ்காம்' எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின் ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் திரையுலகில், தனித்துவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. ஏ.சி.சண்முகம் அவர்கள் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் 'விருதினை வழங்கினார். விருது வழங்கும் முன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பிடப்பட்டு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் திரு. அருண்குமாரும் உடன் இருந்தார். இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி திருமதி ஷ...
சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
லட்சுமி  கிரியேஷன்ஸ்  தயாரிப்பில்  உருவாகியுள்ள  திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்.  இயக்குநர் சேரன் கதாநாயகனாக  நடித்துள்ள இந்த படத்தை  'பெட்டிக்கடை' , 'பகிரி'  ஆகிய படங்களை  இயக்கிய  இசக்கி கார்வண்ணன்  இயக்கியுள்ளார். முக்கிய  வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி,  துருவா, 'மிக மிக அவசரம்'  புகழ்  ஸ்ரீபிரியங்கா,  தீபிக்ஷா,  அருள்தாஸ்,  ரவிமரியா மற்றும் பலர்  நடித்துள்ளனர்.  இந்தப்  படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.  ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை  கார்த்திக்  மேற்கொண்டுள்ளார்.  ‘தமிழ்க் குடிமகன்’ திரைப்படத்தின்  இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக‌ பிரபலங்கள்  முன்னிலையில்  சென்னையில்  இன்று  நடைபெற்றது. நிகழ்ச்சியின்  முக்கிய அம்சங்கள் வருமாறு: படத்தின் இயக்குந‌ர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது...
“மாநாடு: வெற்றி கிடைத்ததும் மாறக்கூடாது” – STRஇன் போக்கைக் கண்டித்த SAC

“மாநாடு: வெற்றி கிடைத்ததும் மாறக்கூடாது” – STRஇன் போக்கைக் கண்டித்த SAC

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன்.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஒரு கதையை சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற வகையில் இயக்கியுள்ள வெங...
எஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.

எஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.

சினிமா, திரைத் துளி
ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது. M.G.R. பிலிம் சிட்டியில், பிரம்மாண்டமனஅ அரங்கம் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது. என் காதல் ராணி என்னைத் தூக்கி வீசிட்டா என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா என்று ஹரிசரண் பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர்ஃபுல்லாகப் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்காக ஜெய் மிக சிரத்தை எடுத்துச் சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீலஃப் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். C.M. யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்கள...
“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

சினிமா, திரைச் செய்தி
வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், "நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா.விஜயைப் பிடிக்கும். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா.விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்தக் கேரக்டரில் நடித்தாலும், அந்தக் கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தோன்றிவிடுவார். ஆனால் ...
கொடி விமர்சனம்

கொடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதோடு அரசியல்வாதியாகவும் நடிக்கிறார். அதை விடக் குறிப்பிடத்தக்க விஷயம், தனுஷ்க்குச் சமமான முக்கியத்துவத்தோடு த்ரிஷா பாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளதே! நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் படத்தில், நாயகியொருவருக்கு மிக அழுத்தமான கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டது சொல்லொன்னா மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியலால் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமென நம்பும் கருணாஸ், தனது இரு மகன்களில் ஒருவரான கொடியின் முன் தீக்குளித்து விடுகிறார். அதன் பின், கட்சியே கதியெனக் கிடக்கும் கொடிக்கு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ருத்ரா மீது காதல் வருகிறது. எதிரெதிர் கட்சிகளில் இருக்கும் தனுஷ் - த்ரிஷா காதல் என்னானது என்றும், தம்பி தனுஷ் ஏன் அரசியலுக்குள் வருகிறார் என்பதும்தான் கதை. தனுஷின் ஒல்லியான உருவம் பேராசிரியர் கதாபாத்திரத்திற்கும் அந்நியமாக இருக்கிறது; அரசியல்வாதி பாத்திரத்தோடும் ஒட்டவ...
நையப்புடை விமர்சனம்

நையப்புடை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலுச்சாமி எனும் 70 வயது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் சைலண்ட் சூப்பர் ஹீரோயிசம்தான் படம். படம் பாரதியின் 'புதிய ஆத்திசூடி' வரிகளோடு தொடங்குகிறது. தலைப்பும், கதையும்கூட அதிலிருந்தே தான் எடுக்கப்பட்டுள்ளது. 'தேசத்தைக் காத்தல் செய்'தவரான வேலுச்சாமி, 'தீயோர்க்கு அஞ்சாமல்', 'கொடுமையை எதிர்த்து நிற்கிறார்'. இளைய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 'நேர்ப்படப் பேசு' நிகழ்ச்சியில் பங்கேற்று, 'வெடிப்புறப் பேசு'கிறார். மேலும், அச்சத்தினைத் தவிர்த்து, ஆண்மை தவறாமலும் சாவதற்கு அஞ்சாமலும், ரெளத்திரத்தினைப் பழகி, பாதகம் செய்வோர்களை "நையப்புடை" க்கிறார் வேலுச்சாமி. நாயகன் வேலுச்சாமியாக நடித்ததோடு மட்டுமல்லாமல், கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில், "நான் பல கேப்டன்களையும், தளபதிகளையும் உருவாக்கிருக்கேன்" எனச் சொல்லி சிறு இடைவேளைக்குப் பின், "மிலிட்டரில" என்கிறார். அஞ்சா...