Shadow

Tag: ஐசரி கணேஷ்

சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’

சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’

Movie Posters, கேலரி, சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'அரண்மனை 4' படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' படம் உருவாகிறது. தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாகத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ஸ் ஃபிலிம...
PT சார் | “சவாலான நெகடிவ் ஷேடில் நடித்துள்ளேன்” – மதுவந்தி

PT சார் | “சவாலான நெகடிவ் ஷேடில் நடித்துள்ளேன்” – மதுவந்தி

சினிமா, திரைச் செய்தி
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'PT சார்' வரும் மே 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'PT சார்' ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 ஆவது படமாகும். இதனைக் கொண்டாடும் விதமாகப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், மொத்த குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். நடிகை மதுவந்தி, “இந்தப் படத்தில் நடிக்க முக்கிய காரணம் கார்த்திக் தான். ‘நான் நடிப்பேனா?’ என ஒரு வதந்தியே திரையுலகில் இருக்கிறது. அதைத் தாண்டி நான் தான் வேண்டுமென, என்னை நடிக்க வைத்த இயக்குநர் குழுவிற்கு நன்றி. இந்தக் குழுவினர் அர்ப்பணிப்புடன் கச்சிதமாகப் பணியாற்றினார்கள். எனக்கு நெகடிவ் ஷேட் உள்ள பாத்திரம். அதைச் செய்வது எனக்குச் சவாலாக இருந்த...
”சவாலான ஸ்டண்ட்களை விரும்பியே ஏற்றுக் கொண்டேன்” – நடிகர் கிருஷ்ணா

”சவாலான ஸ்டண்ட்களை விரும்பியே ஏற்றுக் கொண்டேன்” – நடிகர் கிருஷ்ணா

சினிமா, திரைச் செய்தி
மிகச் சில நடிகர்களே கதையம்சம் சார்ந்த படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதற்காகப் பாராட்டப்படுவார்கள். அவர்களை ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதில் நடிகர் கிருஷ்ணாவும் ஒருவர். தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் கிருஷ்ணா. அவர் முதல்முறையாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வில்லனாக நடிக்கிறார். இயக்குநர் கெளதம் தனது படங்களில் வலுவான வில்லன் கதாபாத்திரங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்றவர். கிருஷ்ணா சந்தேகத்திற்கு இடமின்றி 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தில் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை சரியாகத் திரையில் பிரதிபலித்துள்ளார். படம் தொடர்பாக வெளியாகியுள்ள புரோமோ காட்சிகளிலேயே இது தெளிவாகத் தெரிகிறது. படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள தனது அனு...
‘ஜோஷ்வா இமை போல காக்க’ “நான் எந்தப் படத்திலும் செய்யாத ஒரு விஷயம்.” -கெளதம் மேனன்

‘ஜோஷ்வா இமை போல காக்க’ “நான் எந்தப் படத்திலும் செய்யாத ஒரு விஷயம்.” -கெளதம் மேனன்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது! தமிழ் சினிமாவில் தன்னுடைய காதல் கதைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் கெளதம் மேனன். அப்படி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச்1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். படம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய மற்றப் படங்களைப் போல இல்லாமல் அதிக...
சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறுவயதில் சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்யப் போகும் போது இல்லாத தன்னம்பிக்கை முடி திருத்தம் செய்து முந்நூற்று அறுபது டிகிரி கண்ணாடிகளில் நம்மையும் திருத்தப்பட்ட நம் தலையையும் பார்த்து,, “ச்சே நாம கூட நல்லாதான்டே இருக்கோம்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வெளியேறும் போது தன்மானம் தாறுமாறாக ஏறியிருக்கும். நம்மை இப்படி அழகாக்கி அனுப்பிய சலூன் கடைக்காரர் மீது மரியாதை கலந்த அபிமானமும்,  அதே சீப்பு தான் வீட்டிலும் இருக்கிறது, ஆனால் இவர் சீவுவது மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது என்கின்ற கேள்வியோடு வீடு திரும்புவோம். இந்த அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் படத்தின் நாயகனாக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கும்  முடி திருத்துநராக வரும் லால் இருவருக்கும் இடையே நடக்கிறது. மேற்சொன்னபடி அப்படியே நடக்காமல் அறிமுகம் வேறு ஒரு புதிய திணுசில் ரசிக்கும்படியே நடக்க...
பங்குச்சந்தையில் – வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்

பங்குச்சந்தையில் – வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்

சமூகம்
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தை வணிகத்தில் மார்ச் 22 அன்று பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான பிரத்தியேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அவ்விழாவிற்கு, தேசிய பங்குச்சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி புரியும் கம்பட்டா செக்யூரிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தினைச் சார்ந்த விபின் அகர்வால், இந்நிறுவனத்தின் நிதித் தணிக்கையாளரான சுந்தர்ராஜன், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஐசரி கே. கணேஷ், முதன்மை நிர்வாக அதிகாரி...
மூக்குத்தி அம்மன் விமர்சனம்

மூக்குத்தி அம்மன் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அமீர் கானின் PK படம் தான் இப்படத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்றாலும், ஆன்மிகத்தின் பெயரால் கற்பனைக்கு எட்டாத அளவு சம்பாதிப்பவர்களைக் கலாய்த்து ஒரு படத்தை உருவாக்கிவிட்டார் RJ பாலாஜி. NJ சரவணனோடு இணைந்து, முதல் முறையாக இயக்கத்திலும் கவனம் செலுத்தியுள்ளார் RJ பாலாஜி.  மூக்குத்தி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 11000 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த நினைக்கிறார் பகவதி பாபா எனும் கார்போரெட் சாமியார். அதை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லப் போராடும் நிருபரான எங்கல்ஸ் ராமசாமியின் முன் பிரசன்னமாகும் அவரது குலதெய்வமான மூக்குத்தி அம்மன், அவரது கோயிலை உலகப் புகழடையுமாறு செய்யும்படி கேட்டுக் கொள்கிறார். ராமசாமியால் பகவதி பாபாவைத் தடுக்க முடிந்ததா, அம்மனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. ஸ்னீக்-பீக்கில், ஏசுவை தனது நண்பரென மனோபாலாவிடம் சொல்லும் மூக்குத்தி அம்மன், திருப்பதி வெங்கடாசலப...
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சங்கரதாஸ் அணி

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சங்கரதாஸ் அணி

சினிமா, திரைச் செய்தி
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது. "ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம். ...
துக்ளக், அமைதிப்படை வரிசையில் LKG

துக்ளக், அமைதிப்படை வரிசையில் LKG

சினிமா, திரைச் செய்தி
எல்.கே.ஜி. படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், "எல்.கே.ஜி எனது ஹோம் பேனரின் முதல் தயாரிப்பாகும். என் தந்தை ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைவதற்கு ஒரு கனவு கண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 46 வயதில் காலமானார். இந்தப் படத்தின் மூலம் அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய மொத்த குழுவும் சொன்னபடியே படத்தை முடித்துத் தந்திருக்கிறார்கள். எனவே அது எங்கள் ஸ்டூடியோவில் வெளியாகும் முதல் படமாகி இருக்கிறது. காரில் ஒன்றாகப் பயணிக்கும்போது ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படத்தின் அடிப்படைக் கருத்தை எனக்கு விளக்கினார். அது என்னை மிகவும் ஈர்த்தது. உடனடியாக படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். நேற்று இரவு நாங்கள் இந்தப் படத்தின் இறுதிப்பிரதியைப் பார்த்தோம். ஆர்.ஜே.பாலாஜியைப் பாராட்டுவதை என்னால் நிறுத்த முடியவில்லை. இது மற்றவர்களைக் கலாய்த்த...
இது உலக சினிமா செல்லம்

இது உலக சினிமா செல்லம்

சினிமா, திரைச் செய்தி
இன்னமுமே உடற்தேய்வு நோய் (AIDS) பற்றிய கற்பிதங்கள் பலவாறாக இருக்கும் சூழலில், அந்நோய் பற்றிப் போதிய விழிப்புணர்வு இங்கில்லை. அதை மையமாக வைத்து, எட்டுக் கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு மருத்துவமனையைச் சுற்றி நிகழும் படமாக ‘சில சமயங்களில்’ படம் உள்ளது. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படம் ‘கோல்டன் க்ளோப்’ விருதுகளுக்காகப் போட்டியிடத் தேர்வாகியுள்ளது. அதற்காக, அக்டோபர் 6 ஆம் தேதி திரையிடப்படுகிறது. வாக்கெடுப்பில் சிறந்த பத்து அயல் மொழிப் படங்களில் ஒன்றாகத் தேர்வாகுமென படக்குழுவினர் நம்பிக்கையோடு உள்ளனர். ஆஸ்கர் லட்சியத்திற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். ரசிகர்களுக்குத் திரையிடப்படும் முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து பல பரிசுகளை அள்ளுமென்றும் திண்ணமாக உள்ளனர். “நான் நடித்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் நடிக்கணும் என்றால் என் கணவரும், புகுந்த வீட்டினரும் ஒத்...