பேச்சி விமர்சனம்
ஐந்து நண்பர்கள் ட்ரெக்கிங் போகக் காப்புக்காட்டுக்குள் செல்கின்றனர். உடன் வந்த அந்த ஊரைச் சேர்ந்த வனக்காப்பாளர் பேச்சை மீறி, தடை செய்யப்பட்ட பகுதிகளை ஆராயும் ஆர்வத்துடன் எல்லை மீறுகின்றனர். அவர்கள் மாயமான் காட்டின் அமானுஷ்யத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பேய்ப்படங்களை நகைச்சுவையாக்கியும், ஒரு டெம்ப்ளட்டிற்குள் பழிவாங்கும் கதையாகச் சுருக்கியும் வைத்துவிட்டனர் கோலிவுட்டினர். ஹோலிவுட்டும் தேவைக்கு அதிகமான பேய்ப்படங்கள் எடுத்ததன் காரணமாகப் புதிதாய் வரும் பேய்த் திரைப்படங்களில் எந்த சிலிர்ப்பையும் உணராமல் தேமோவென அமர்ந்திருக்கின்றனர் பார்வையாளர்கள். பேச்சி இத்தகைய வகைமையில் இருந்து விலகி, ஒரு சீரியஸான அமானுஷ்ய படத்திற்கு உத்திரவாதம் அளிக்க முயன்று உள்ளது.
பேச்சி என்ற சூனியக்காரியை, ஓர் அச்சுறுத்தும் பொம்மையில் ஆவாஹனம் செய்து, அப்பொம்மையை மரத்தில் ஆணியாலடித்து விடுகின்றனர். கொல்லி மலையின் ...