Shadow

Tag: கெளதம் கார்த்திக்

தேவராட்டம் விமர்சனம்

தேவராட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போல் தேவராட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. ஆனால் அத்தகைய கலைக்கும் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதாலும், படத்தில் வானுலக மனிதர்கள் இல்லாததாலும், படத்தின் தலைப்பிற்கு நேரடியாக ஒரே பொருளைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. தொழிலுக்காகக் கொலை செய்பவரையும், கொலையைத் தொழிலாகச் செய்பவரையும் பகைத்துக் கொள்கிறார் வெற்றி. அவர்கள் இவரை வெட்டப் பார்க்க, காவற்கார வம்சத்தைத் சேர்ந்த இவர் அனைவரையும் வெளுக்க, படம் முழுவதும் ஒரே வெட்டாட்டம் தான். கடைக்குட்டி சிங்கம் படம் இயக்குநரை ரொம்பப் பாதிச்சிருக்கும் போல, நாயகனுக்கு ஆறு அக்காக்கள். போஸ் வெங்கட், ஆறுபாலா, சூரி, முனீஷ் ராஜா முதலியவர்கள் அக்கா கணவர்களாக நடித்துள்ளனர். மூத்த அக்கா, மாமாவாகப் போஸ் வெங்கட்டும், வினோதினி வைத்தியநாதனும் குணச்சித்திரப் பாத்திரத்தில் அசத்தியுள்ளனர். நாயகனுடன் நெருக...
மிஸ்டர் சந்திரமெளலி விமர்சனம்

மிஸ்டர் சந்திரமெளலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும் தந்தை மகனாகவே நடித்துள்ளதால் விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள படம். படத்தின் முதற்பாதி முழுவதுமே நவரச நாயகனுக்காக என்று பிரத்தியேகமாக எடுத்துள்ளனர். ஆனால், கதையோடு இயைந்து அதைக் கொடுக்காமல், இந்தக் காட்சியில் கார்த்திக் நடக்கிறார், கார்த்திக் காமெடி பண்ணுகிறார், இந்தக் காட்சியில் அவரது பிரத்தியேகமான மேனரிசம் வெளிப்படுகிறது எனக் கதையோடு ஒட்டாத காட்சிகளாக வைத்துள்ளனர். "நவரச நாயகன் கார்த்திக்கே, கெளதம் கார்த்திக்கிற்கு அப்பாவாக நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்" என்ற ரேஞ்சிற்கு உள்ளது திரைக்கதை. மெளன ராகத்தில், ரேவதியின் தந்தையாக வரும் ரா.சங்கரன், சந்திரமெளலி என்ற கதாப்பாத்திரமாக நினைவில் என்றும் நிற்பார். ஆனால், இந்தப் படத்தில், சந்திரமெளலி என்ற பாத்திரம் தெரிந்து விடவே கூடாது; கார்த்திக், கார்த்திக்காகவே தெரியவேண்டும் என்றே மெனக...
“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. அடல்ட் ஹாரர் காமெடி வகை சேர்ந்த படம் என்பதாலும், ஹர ஹர மஹாதேவகி இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கியுள்ளதாலும், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் உள்ளது. படத்தின் இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில், "நான் இயக்கும் இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்? கருத்துச் சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்துத் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜானர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்தப் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாகப் பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் எ...
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆந்திராவின் யமசிங்கபுரத்தில் யமதர்மராஜாவைக் குலதெய்வமாக வணங்கித் திருட்டுத் தொழிலைச் செய்யும் திருடர் குலத்தின் தலைவர் விஜய் சேதுபதி. பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் திருடும் பொழுது, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் நாயகியைப் பார்க்கிறார். சென்னையில் படிக்கும் நாயகியை, நண்பர்களின் உதவியுடன் கல்லூரியிலிருந்து யமசிங்கபுரத்துக்கு கடத்திக் கொண்டு செல்கிறார். கடத்தப்படும் நாயகியை மீட்க கெளதம் கார்த்திக் தன் நண்பன் டேனியலுடன் இணைந்து யமசிங்கபுரத்துக்கு இருவரணிப் படையாகச் செல்கிறார். விஜய் சேதுபதியின் யதார்த்த இயல்புடன் கலந்த நடிப்பு எப்போதும் போல நம்மைக் கவர்கிறது.  நிறுவுமுறைத் திரைப்படத்துக்குத் தகுந்த பாணியில் நடித்துக் கொடுத்திருந்தாலும், தனக்கே உரிய  வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அவரது உத்தி இப்படத்துக்குக் கைகொடுத்திருக்கிறது. மெளன ராகம் கார...
கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
7சி எண்டர்டெயின்மென்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுககுமார் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தைப் பார்த்த எல்லோருமே விஜய் சேதுபதி பற்றி தான் எல்லா இடத்திலும் என்னை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவரோடு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் நான் பேசிய ஒரு வசனம் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்புறேன்” என்றார் நடிகர் டேனியல். “படத்தில் ஒப்பந...
இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ஒருவருக்குத் துணையாக வேலைக்குச் சேர்கிறான் துறுதுறு இந்திரஜித். மருத்துவக் குணம் கொண்ட விண்கல் ஒன்றைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அந்தக் குழு, சவால்களையுக் எதிரிகளையும் சமாளித்துச் சாதித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் எந்தக் காட்சியும் மனதில் பதியவில்லை. ரோலர் கோஸ்டர் பயணம் போலவும், அவசரமானதொரு சாகசப் பயணம் போலவும் படம் முடிகிறது. ராசாமதியின் ஒளிப்பதிவில் கேரளக் காடுகளும், கோவா காடுகளும் கண்களுக்கு மிகக் குளிர்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பசுமையையும், இயற்கையின் செழுமையையும் தான் படத்தின் மிகப் பெரிய ஆறுதல். சோனாரிகா என்றொரு கதாநாயகி மின்னல் போல் மின்னி மறைகிறார். பாடலுக்காக மட்டும் வந்து போகிறார். யானை மீது அறிமுகமாகும் அஷ்ரிதா ஷெட்டி தான் படத்தின் நாயகி. அவரும் பாடலுக்காகத்தான் என்றாலும் மின்னி மறையாமல் படம் நெடுகேவும் வருகிறார். ...
இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

சினிமா, திரைச் செய்தி
25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திரஜித் படத்தைக்கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சக்கரக்கட்டி படத்தை இயக்கிய அவரது இளைய மகன் கலாபிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நாயகனாகவும், சோனாரிகாவும் அஷ்ரிதா ஷெட்டியும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். அக்டோபர் 15 அன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் ட்ரெயிலர் திரையிடப்பட்டது. சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுமென்ற நம்பிக்கையை ட்ரெயிலர் ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவும், VFX-உம் உள்ளதென மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‘இந்தப் படம் கண்டிப்பாகக் காலத்தின் கல்வெட்டாக இருக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்கு இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தான் காரணமெனப் பார்க்கும் பொழுதே தெரியும்படி உள்ளது’ எனப் புகழ்ந்தார். கவிஞர் அறிவுமதியின் மகன் இராசாமதி தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாண்டிச்சேரியில...
ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர் அநாமதேய நபர், பாலியல் நெடி கமழச் சொன்ன கதைகள் மிகப் பிரபலமாகப் பரவியது. அவர் தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த கொடையே 'ஹர ஹர மஹாதேவகி' எனும் அற்புதமான பதம். அந்த அநாமதேய ஆடியோவின் வெற்றிக்குக் காரணம், அவை ரகசியமாக அளித்த கிளுகிளுப்பே! அவ்வளவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இல்லாவிட்டாலும், பாலியல் இரட்டை அர்த்த வசனங்களை, இவ்வளவு பதற்றமின்றி இயல்பாகவே சபைக்குக் கொண்டு வந்தது நாட்டுப்புற கலைகள். அவற்றின் வீழ்ச்சியோடும், காலத்தின் நாகரீக மாற்றத்தாலும், பாசாங்கும் பாலியல் வறட்சியும் நம்மிடம் மிகுந்து விட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மொக்கையாய் இரட்டை அர்த்தத்தில் பேசி அதைப் போக்கிக் கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, சந்திரமுகி படத்தில் கேரம்போர்ட் விளையாடும் பொழுது, 'காயைப் பார்த்து அடிக்கணும்; முதலில் எல்லாத்தையும் கலைக்கணும்' என ரஜி...
ரங்கூன் விமர்சனம்

ரங்கூன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரங்கூன் என்ற தலைப்பு இப்படத்திற்குப் பொருத்தமானதா என்பதே ஐயம்தான். ரங்கூன் என்ற நகரம் படத்தின் கதைக்குப் பெரிதும் உதவாததோடு, சில நிமிடங்களே படத்தில் வந்து போகிறது. நாயகனின் சொந்த கிராமம் கூட ரங்கூனில் இருந்து 90 கி.மீ.இலுள்ள ‘டேடயே’ என்றே காட்சிப்படுத்தியுள்ளனர். பர்மாவிலிருந்து சிறு வயதிலேயே அகதியாகச் சென்னைக்கு வரும் கெளதம் கார்த்திக்கிற்கு வாழ்க்கை அளிக்கும் படிப்பிணை தான் படத்தின் கதை. கெளதம் கார்த்திக்கின் நண்பர் 'அத்தோ' குமாராக லல்லு கலக்கியுள்ளார். அவர் வடச்சென்னைத் தமிழில் வெகு சரளமாய்ப் பேசி ரசிக்க வைக்கிறார். வெங்கட் என்கிற வெங்கடேசனாக வருன் கெளதம் கார்த்திக்கைக் கூட வடச்சென்னைக்காரராக ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கெளதமை முழுவதுமாக மாற்றியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இதுவரையிலுமான கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படங்களிலேயே, இப்படம்தான் குறிப்பிட்டுச் சொல்ல...
“அடுத்த சிம்ரன்!” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

“அடுத்த சிம்ரன்!” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

சினிமா, திரைச் செய்தி
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும், ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் R.H.விக்ரமும், விஷால் சந்திரசேகரும் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார். “இரட்டையர்கள் என்றாலே ஒரு மேஜிக் மாதிரி தான். அவர்களுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு எனக்கு எப்பவுமே பயம். ஆனால் இந்தப் படத்தில், என்னைப் போலவே இருக்கும் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன். இயக்குநர் ராஜ்குமார் சில முக்கிய தருணங்களில் நான் தான் நடிக்கணும் என எனக்காக நின்றார். ரொம்ப அன்பானவர். தெளிவான இயக்குநர்” என...