Shadow

Tag: சூர்யா

VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர்

VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் #VD12 படத்திற்கு 'கிங்டம்' என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது.  டீசரில், சூர்யா தமிழுக்கும், ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான கதையாக இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைக்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்குநராக அவினாஷ் கொல்லா பணியாற்றுகிறார். ஜோமோன் டி.ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன் இருவரும் ஒளிப்பதிவு செய்கின்றனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்...
கங்குவா விமர்சனம்

கங்குவா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தந்தைக்கும் மகனுக்குமான ஜென்மாந்திர பந்தத்தைப் பேசுகிறது படம். நவீன ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தப்பிக்கும் ஜீடோ எனும் சிறுவன், ஃபிரான்சிஸ் தியோடரிடம் அடைக்கலம் புகுகிறான். இது 2024 இல். பெருமாச்சியின் வீரனும் இளவரசனுமான கங்குவா, பெருமாச்சிக்குத் துரோகம் செய்யும் கொடுவாவின் மகனைத் தத்தெடுத்துக் காப்பதாக வாக்களிக்கிறார். அடைக்கலம் புகுந்தவனை ஃபிரான்சிஸ் காப்பாற்றுகிறாரா, கொடுவாவின் மகனைக் கங்குவா காப்பாற்றுகிறாரா என இரண்டு கதைகள் இணையாகப் பயணிக்கிறது. பெருமாச்சி, அரத்தி, முக்காடு, வெண்காடு, மண்டையாறு என ஐந்து தீவுகள் பாரதத் தேசத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்றன. பாரதத் தேசத்தைப் பிடிக்க, 25000 வீரர்களோடு அரசர் அரிலியஸின் ரோமானியக் கப்பற்படை வருகிறது. போருக்கு முன், பயிற்சி எடுக்க நிலம் தேவைப்படுகிறது. இதுவரைக்கும் கதை சரி. சிலுவைப் போர் தொடங்குவதற்கு முன்னான ஆரம்பகட்ட பூசல்கள் நிக...
ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
டி10 தொடர் இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில்  சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர்.அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர்.இந்நிலையில், சென்னை அணியின் உரிமையை தமிழின் முன்னணி நடிகரான சூர்யா பெற்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 10 ஓவர்களை கொண்ட போட்டிகளாக இந்த ஐஎஸ்பிஎல் தொடர் நடத்தப்படும். இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உ...
இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சூர்யா 41

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சூர்யா 41

சினிமா, திரைத் துளி
அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா 41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://twitter.com/Suriya_offl/status/1529742532791238657?s=20&t=0VRPPjoh8KUtaJS8KluL3A தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ்த் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான ‘நந்தா’, ‘பிதாமகன்’ என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியைக் குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களைப் பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலைத் தூண்டியத...
‘ஓ மை டாக்’ திரைப்படம் | ஜான்டி ரோட்ஸ்

‘ஓ மை டாக்’ திரைப்படம் | ஜான்டி ரோட்ஸ்

சினிமா, திரைத் துளி
ஏப்ரல் 21 வியாழனன்று, தென்னாஃப்ரிக்கக் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் நடிகர் சூர்யாவுக்கு ஒரு ட்வீட் செய்தார். அதில் "ஒரு செல்லப்பிராணி காதலனாக, இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜாண்டியின் ட்வீட்டுக்கு சூர்யா பதிலளித்தார். அதில், “மிக்க நன்றி! நான் ஜான்டி ரோட்ஸ் உடைய பெரிய ரசிகர்! உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார். https://twitter.com/JontyRhodes8/status/1516742916894445568?t=2sC22H8g5w9YF28haWpTsQ&s=19 மகேந்திரன், "#OhMyDog இந்த திரைப்படத்தில் #அர்னவ்விஜய் நடிப்பைப் பார்த்து என் இதயம் பூரித்தது. படத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களை ஒன்றாகப் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. @arunvijayno1 அண்ணா நிஜத்திலும், திரையிலும் சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். லவ் யூ...
ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறிமுக குழந்தை நட்சத்திரம் அர்னவ் விஜய் பேசுகையில்,'' இந்தப் படத்தில் நடிப்பதற்...
ஓ மை டாக் – டிஸ்னியின் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்

ஓ மை டாக் – டிஸ்னியின் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், ''ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் குழ...
“கேள்விகளுக்குப் பயந்த சூர்யா” – சிவகுமார்

“கேள்விகளுக்குப் பயந்த சூர்யா” – சிவகுமார்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ‘ஓ மை டாக்’ படக்குழுவினருடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ந்த்து. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமார் பேசுகையில், ''வால்ட் டிஸ்னி நிறு...
மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி

மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி

சினிமா, திரைச் செய்தி
பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா - சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 ஆவது படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மென்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் மேற...
“இதயம் சொல்வதைக் கேளுங்கள்” – சூர்யா

“இதயம் சொல்வதைக் கேளுங்கள்” – சூர்யா

சினிமா, திரைச் செய்தி
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், வினய், சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி. இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், ''சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ...
சூர்யா: நடிப்பு நாயகன் – புரட்சி நாயகன்

சூர்யா: நடிப்பு நாயகன் – புரட்சி நாயகன்

சினிமா, திரைச் செய்தி
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், வினய், சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி. இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகை பிரியங்கா மோகன், ''படப்பிடிப்பின் முதல் நாளே காதல் காட்சி என...
ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலில் ‘ஜெய்பீம்’

ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலில் ‘ஜெய்பீம்’

சினிமா, திரைத் துளி
ஆஸ்கர் விருது குழு, விருது பெறும் கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் "சூரரைப் போற்று" 93 ஆவது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால்  ஒடுக்கப்பட்டதை அருமையாக கையாண்டததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் அகாடமி குழுவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இத்திரைப்படத்தின் பின்னணி வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு இது சர்வதேசத் திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்...
‘ஜெய்பீம்’ ஸ்பெஷல் வீடியோ | ஆஸ்கர் யூட்யூப் சேனல்

‘ஜெய்பீம்’ ஸ்பெஷல் வீடியோ | ஆஸ்கர் யூட்யூப் சேனல்

காணொளிகள், சினிமா, திரைத் துளி
சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றி பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’இன் அதிகாரபூர்வமான யூட்யூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார். 'சீன் அட் த அகாடெமி' என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஆஸ்கர் யூட்யூ...
ஜெய் பீம் விமர்சனம்

ஜெய் பீம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
'ஆர்ட்டிகிள் 15' போல் ஒரு திரைப்படம் தமிழில் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளது ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், காண்பவர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. நம்முடன் வாழும் சக மனிதர்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கின்றனரா என பொதுச் சமூகத்தின் அங்கலாய்ப்பை சமூக ஊடகங்கள் எங்கும் காண முடிகிறது. படத்தின் மாபெரும் வெற்றிக்கு அவை கட்டியம் கூறுகின்றன. காவல்காரர்கள் எப்படி இருளர்கள் மீதும், குறவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் எனும் குரூரமான உண்மையைத் தொட்டு படம் தொடங்குகிறது. அப்படி கைது செய்யப்படும் ராசாகண்ணு எனும் இருளர் இளைஞனைப் போலீஸ் அடித்து நையப்புடைக்கிறது. அவரது மனைவி செங்கேணி, வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். மனித உரிமை வழக்குகளுக்காகா ஆஜாராகும் வக்கீல் சந்துரு, காவல்...
ஜெய் பீம் – பற்ற வைக்கும் சுடர்

ஜெய் பீம் – பற்ற வைக்கும் சுடர்

சினிமா, திரைத் துளி
வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையூட்டும் நற்செய்தியை, தீபாவளி அன்று வெளியாகும் சூர்யாவின் ’ஜெய் பீம்’ திரைப்படம் ரசிகர்கள் மனதில் சுடர் விடச் செய்யவுள்ளது.. ஜெய்பீம் படத்தின் டீஸரே, இப்படம் ஒரு நீதிமன்றம் சார்ந்த கதை என்பதையும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை என்பதையும் சொல்லியிருக்கிறது. குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வழக்கறிஞர் சந்துருவாக நடிக்கிறார் சூர்யா. படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா உலா வரும் அதே வேளையில், பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ் எனப் பலரும் நடித்திருப்பார்கள். ஒரு நல்ல கதை, பாதி வெற்றியைத் தரும். ஆனால் அதைக் கொண்டு சேர்க்க நல்ல நடிகர்கள் வேண்டும். அப்போது தான் உயிர் கிடைக்கும். ட்ரெய்லரைப் பார்த்தாலே படத்தின் உயிரோட்டத்தை உணர முடிகிறது.. படத்தின் முதல் காட்சி தொட்டு, கடைசிக் காட்சி வரை கேமராவின் மாய வித்தை நம்மைக் க...