
எளிய மக்களைக் காக்கும் சூரன் – ‘ஜெய் பீம்’
சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம், இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இயக்குநர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். இப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது.
பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம், பழங்குடி இனத்தைச் சேர்ந்த தம்பதியான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைது செய்யப்பட...