
Chennai City Gangsters விமர்சனம்
பசுபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க பாண்டியும் பூச்சியும் சைக்கோ சலீமிடம் பணத்தைத் திருடி, அதை டாஸ்மாக்கில் தொலைக்கின்றனர். அந்தப் பணத்தை ஈடு செய்ய, ஸ்பிலிட் சூசை, மெமரி தாஸ், டமார லால், குடி குமார் எனும் கொள்ளையர்களுடன் இணைந்து வாவ் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். இந்த கேங்ஸ்டர்களின் முயற்சி என்னானது என்பதே படத்தின் கதை.எழுதி இயக்கியுள்ள இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வரும், அருண் கேசவும் கதாபாத்திர வடிவமைப்பில் அசத்தியுள்ளனர். ஸ்பிலிட் சூசையாக ஆனந்த்ராஜும், மெமரி தாஸாக மொட்டை ராஜேந்திரனும், டமார லாலாக ஜான் விஜயும், கட்டிங் குமாராக வைபவின் அண்ணன் சுனிலும் நடித்துள்ளனர். பதினைந்து வருட காவல்துறை சித்திரவதையில், ஜான் விஜய் கேட்கும் திறனை இழக்கிறார், மொட்டை ராஜெந்திரன்க்கு மறதி பிரச்சனை எழுகிறது, ஆனந்த்ராஜோ அளுமைப் பிளவு ஏற்பட்டு விடுகிறது. சைரன் சத்தம் கேட்டால் ஆனந்த்ராஜ் தன்...











