Shadow

Tag: ஜெயம் ரவி

ஜீ5 இல் ஸ்ட்ரீமாகிறது ‘பிரதர்’ திரைப்படம்

ஜீ5 இல் ஸ்ட்ரீமாகிறது ‘பிரதர்’ திரைப்படம்

OTT, இது புதிது, சினிமா
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான் ‘பிரதர்’ திரைப்படம் ஜீ5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. கமர்ஷியல் காமெடிப் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படம் தற்போது ஜீ5 தளத்தில் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இயக்குநர் ராஜேஷ் M, “பிரதர் திரைப்படம் மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு. திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் தந்த வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஜெயம் ரவியை இயக்கியது மி...
ஜீனி | வித்தியாசமான வேடத்தில் ஜெயம் ரவி

ஜீனி | வித்தியாசமான வேடத்தில் ஜெயம் ரவி

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே.கணேஷ், 'ஜீனி' படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு வியக்க வைக்கும் சினிமா அனுபவத்தைக் கொடுக்கவுள்ளார். ஜெயம் ரவி நடித்துள்ள இந்தப் படத்தின் வித்தியாசமான முதல் பார்வையே இதற்குச் சான்று. இயக்குநர் மிஷ்கினின் ’பிசாசு’ மற்றும் ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணீயாற்றிய அர்ஜூனன் Jr. இதில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி, “ஜெயம் ரவியுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஸ்கிரிப்ட் விவாதங்கள் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். ஆனால், படப்பிடிப்பை அரை நாளில் முடித்து விடுவோம். ஒரு சரியான ஷாட்டுக்காகக் கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்” என்றார் அர்ஜுனன் Jr. மேலும், “...
சைரன் விமர்சனம்

சைரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நாயகன் 16 வருட காலமாக பரோலில் செல்ல மறுத்து வருகிறான். ஒரு கட்டத்தில் பரோலில் செல்ல சம்மதிக்கிறான். அவன் பரோலில் வெளிவந்த தருணத்தில் அவன் வழக்கோடு தொடர்புடைய நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். போலீஸின் சந்தேகம் நாயகன் பக்கம் திரும்ப துவங்க நாயகன் அப்பழியை மறுக்கிறான். இறந்தவர்கள் எப்படி இறந்து போனார்கள் நாயகனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிப்பதே இந்த சைரன் திரைப்படத்தின் கதை.. துவங்கும் போது லாக்கப் மரண வழக்கு விசாரணையில் வென்று தன் காக்கி யூனிபார்மை மீண்டும் போடும் நாயகி நந்தினி, மற்றும் கைதி யூனிபார்மை கலைந்து தன் சொந்த ஆடையை அணிந்து பரோலில் வெளி வரும் நாயகன் திலகவர்மன் என முரணான பின்னணியுடன் துவங்குகிறது திரைப்படம். பின்னர் நாயகனின் முரணான செய்ல்பாடுகளின் மூலம் காட்சிகளின் வழியே திரைக்கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது. Shadow போலீஸ் ஆக வரும் யோகிப...
பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொன்னியின் செல்வன் நாவலே எழுத்தாளர் கல்கியின் புனைவு எனும் பட்சத்தில், இப்படத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதென்பது பாலைவனத்தின் மத்தியில் கடல்மீன்களைத் தேடும் அநாவசிய முயற்சியாகும். ஆக, புனைவை ஆராயாமல் ரசிக்க முடிந்தால், பொன்னியின் செல்வன் 2, அதன் முதல் பாகத்தை விடவுமே சிறப்பாக உள்ளதை உணரலாம். போரில்லாமல் வரலாற்றுப் புனைவை முடிக்கக் கூடாதென்ற வணிக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, ஒரு போர்க்காட்சியை அமைத்துள்ளனர். அந்தப் போர்க்களக் காட்சி இல்லாமலேயே படம் முழுமையடைந்திருக்கும். காதலியை இழந்த வேதனையும், தீனமான நிலையில் இருந்த வீரபாண்டியனின் தலையைக் கொய்த குற்றவுணர்ச்சியும் ஆதித்த கரிகாலனை என்ன பாடுபடுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. யானையின் மொழி அறிந்தவர் என அருண்மொழி வர்மனைப் பற்றி கல்கி புகழ்ந்திருப்பார். அதை விஷுவலாக, இடைவேளையின் பொழுது ஜெயம்ரவிக்கான மாஸ் சீனாக மாற்றியிருப்பார் மணிரத்ன...
சகாப்தம் படைத்த பொன்னியின் செல்வன்

சகாப்தம் படைத்த பொன்னியின் செல்வன்

சினிமா, திரைச் செய்தி
‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழகத் தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி.கே.எம். தமிழ்குமரன், ''பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து கைவி...
கோமாளி விமர்சனம்

கோமாளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ட்ரெய்லர் வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியை நீக்கி, நாஞ்சில் சம்பத்தை மாற்றாக அக்காட்சியில் கொண்டு வந்துள்ளது படக்குழு. அதோடு நில்லாமல், கீழே எழுத்தாக, கோமாளி படத்தில் இருந்து ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கம் எனப் பதிந்து, படையப்பா ரஜினி செந்திலைக் கலாய்ப்பது போல் ரஜினி ரசிகர்களைச் சாமர்த்தியமாகக் கலாய்த்துள்ளது படக்குழு. ஒரு விபத்தில் 16 வருடங்கள் கோமாவில் விழுந்து விடுகிறான் ரவி. அவன் அதிலிருந்து மீண்டதும், அசுர மாற்றம் அடைந்திருக்கும் அனைத்தையும் பார்த்துக் குழம்பி, 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?' என இந்த உலகத்தைப் பார்த்து கோமாளி போல் கேள்வி எழுப்புகிறான். கோமாளி ரவிக்குச் சொந்தமான சிலை ஒன்று, எம்.எல்.ஏ. தர்மராஜிடம் இருப்பது தெரிய வர, அதை மீட்டெடுத்து அவரால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரி செய்ய முடிகின்றதா என்பதுதான் படத்தின் கதை. முதல் பாதி ஜால...
ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம்

ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம்

சினிமா, திரைத் துளி
மாஸ் படங்களில் நடித்து கைத்தட்டல்களையும், விசில் ஒலியையும் பெறும் அதே நேரத்தில், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார் ஜெயம் ரவி. அவரது அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.  "நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களைத் தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்ச...
அடங்க மறு விமர்சனம்

அடங்க மறு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நேர்மையான அதிகாரியாகப் பணி புரிய நினைக்கும் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷ், தன் உயரதிகாரிகளால் பணிந்து போகச் சொல்லி அடக்கப்படுகிறார். அதையும் மீறி, அவர் நேர்மையாக இருக்க முயல்வதால் அவரது குடும்பத்தையே இழக்கிறார். அதன் பிறகாவது சுபாஷ் அடங்குவான் என நினைத்தவர்களுக்கு, சுபாஷ் கொடுக்கும் பதிலடி தான் படம். பழிவாங்கும் கதை என ஒரு வரியில் சுருக்கலாம். எனினும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்யப் பயப்படவேண்டும் என்பதுதான் படத்தின் தீம். சகல வித்தைகளையும் கரைத்துக் குடித்த ஒரு ஹை-டெக் காப்பாக சுபாஷ் எனும் பாத்திரத்தில் ஜெயம் ரவி கலக்கியுள்ளார். அவருக்கும் இன்னும் தனி ஒருவன் ஹேங் ஓவர் போகவில்லை என்றே சொல்லவேண்டும். சுபாஷின் அழகான காதலி அனிதாவாக ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள். கோடீஸ்வர தந்தை நால்வர், அவர்களது நான்கு உருப்படாத அயோக்கிய மகன்கள். இவர்களின் கதாபாத்திர வார்ப்பி...
டிக்: டிக்: டிக் விமர்சனம்

டிக்: டிக்: டிக் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வங்காள விரிகுடாவில் விழவிருக்கும் விண்கல்லைப் பூமிக்கு வெளியேவே அணு குண்டை ஏவிப் பிளக்கவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு, ஆந்திரம், இலங்கை ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு, சுமார் 4 கோடி மக்கள் அழிந்துவிடுவர். இந்தியத் தற்காப்புப் படை, எப்படி நான்கு கோடி மக்களைக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி என்ற வகையில் அசத்தியுள்ளனர் என்றே சொல்லவேண்டும். கன்னி முயற்சியில், நடை தளருவது இயற்கை எனினும் விழாமல் இலக்கை அடைவது சாதனையே! அந்தச் சாதனையை மெனக்கெடலில்லாத் திரைக்கதையால் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. 1998 இல் வெளிவந்த, 'ஆர்மகெடான்' ஹாலிவுட் படத்தில் இருந்து மையக்கருவை எடுத்துள்ளனர். உள்ளபடிக்குச் சொன்னால், அது ரசிக்கும்படியே உள்ளது. #னாவின் (அதாவது ஏதோ ஒரு நாட்டின்) அணு ஆயுதத்தைத் திருடும் அத்தியாயம் தான் படத்தின் ஸ்பீட் பிரேக்கர். விண்வெளி ஆராய்ச்சி நிலை...
போகன் விமர்சனம்

போகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனி ஒருவன் வெற்றி ஜோடியான அரவிந்த் சாமி – ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்குப் பிரதான காரணம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். ‘போகன்’ என்றால் புலன்களால் பெறும் இன்பத்தை அனுபவிப்பவன் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, வாழ்விலுள்ள ராஜ சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் பெரும் இச்சையுடைய போகனாக அரவிந்த் சாமி கலக்கியுள்ளார். தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள, ஆய கலைகளில் 52வது கலையான ‘பரகாயப் பிரவேசம்’ எனும் சக்தியை அரவிந்த் சாமி பிரயோகிப்பதாகக் காட்டியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன். ஆனால், கூடு விட்டு கூடு பாய்தல் என்பது இறந்த உடலில் ஒருவர் தன் உயிரினைப் புகுத்திக் கொள்வதாகும். படத்தில் காட்டப்படுவது ‘கூடு மாறுதல் (Body Swapping)’ எனும் கலை. இந்த அழகான ஹாலிவுட் கற்பனைக்கும், சித்தர் போகர் அருளியதாகப் படத்தில் காட்டப்படும் பரகாயப் பிரவ...
ஃபேண்டசியா விழாவில் மிருதன்

ஃபேண்டசியா விழாவில் மிருதன்

சினிமா, திரைத் துளி
இன, மொழி, தேசிய பேதமற்று உலக மக்கள் அனைவரையும் கவரும் கண்ணியாக இருக்கும் விஷயங்களில் பிரதானமானது சினிமாவே! சமீபமாக தமிழ் சினிமாக்களும் உலகளாவிய அளவில் கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அப்படிக் கவனம் பெறும் பட்டியலில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் திரைப்படமும் சேர்ந்துள்ளது. கனடாவில் நடைபெறும், ‘ஃபேண்டசியா சர்வதேசத் திரைப்படா விழா 2016’ -இற்கு மிருதன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முதல் ஜோம்பி படமான மிருதன், அதன் பிரம்மாண்டட்தாலும் நேர்த்தியான திரைக்கதையாலும் இப்பொழுது உலகளாவிய ரசிகர்களையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. திரையில் மட்டுமன்று நிஜ வாழ்விலும் சிறந்த மகனான ஜெயம் ரவி தன்னுடைய மகிழ்ச்சியை, அன்னையர் தினத்தன்று அனைத்து அம்மாக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், இத்தகைய அங்கீகாரங்கள் தன்னை மேலும் நன்றாக உழைக்கணுமென உந்துகிறது எனச் சொன்னார் ஜ...
மிருதன் விமர்சனம்

மிருதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிருதம் - பிணம்; மிருதன் - பிணமாய் வாழ்பவன் (ஜோம்பி) ஒரு வைரஸால் மனிதர்கள் மிருதர்களாக உருமாறுகின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அமைச்சராக வரும் R.N.R. மனோகர், அவரது அறிமுகக் காட்சியைத் மற்ற காட்சிகளில் எல்லாம் அதகளப்படுத்துகிறார். செக் போஸ்ட்டில் அவர் கெத்து காட்டி விட்டு, ஜெயம் ரவியைப் பார்த்து, "இதுக்குத்தான் தம்பி அரசியலில் கொஞ்சம் டச் வேணுங்கிறது" எனும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. அதே போல், காளி வெங்கட்டின் சுடும் திறமைக்கும் சிரிப்பொலி எழுந்து அடங்குகிறது. ட்ராஃபிக் போலிஸ் கார்த்தியாக ஜெயம் ரவி ஜம்மென்று இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா அண்ணன் தான் என்றாலும், தங்கை அனிகாவின் (என்னை அறிந்தாலில் த்ரிஷாவின் மகள்) க்யூட்னெஸால் அதுவும் ரசிக்கும்படி இருக்கிறது. மிருதர்கள் சுடப்படும் பொழுது, அவர்கள் வெறும் நோயாளிகள் என்று பரிதாபப்படும் மருத்துவர் ரேனுகா, க்ளைமே...
பூலோகம் விமர்சனம்

பூலோகம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பூலோகம் என்ற குத்துச் சண்டை வீரனுக்கும், ஒரு தொலைக்காட்சி நிறுவன முதலாளிக்கும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. தொடக்கம் முதல் இறுதி வரை படம் பார்வையாளர்களைக் கட்டிப் போடுகிறது. சொல்லப் போனால், உலோகம் போன்ற இறுகிய உடம்புடனும், கனல் தெறிக்கும் பார்வையுடனும் பூலோகமாகக் கட்டிப் போடுகிறார் ஜெயம் ரவி. தனி ஒருவன் வெற்றியில் இருந்தே மீளாத ஜெயம் ரவிக்கு, 2015-ஐ மறக்கமாலிருக்க மற்றொரு வலுவான காரணமாக இப்படமும் சேர்ந்து கொள்ளும். "நான் ஒரு எச்சக்கல பொறுக்கி" என தன் ஊழியர்கள் முன்பே சொல்லிக் கொள்ளும் 'மிகக் கெட்ட முதலாளி'யாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். வடச்சென்னையின் மனிதர்களை இயல்பாகச் சித்தரித்திருக்கும் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன், வில்லன்களைக் கோமாளிகளாகச் சித்தரித்துள்ளார். தன் பெரிய கனவுகளையும் லட்சியங்களையும் குயுக்தியையும் பார்வையாளர்களுக்குப் பேசியே கடத்துகிறார்; அதே போல், ஸ்கர்ட் அணிந்த...
திரிசங்கு சொர்க்கத்திலிருந்து மீண்ட ராஜா

திரிசங்கு சொர்க்கத்திலிருந்து மீண்ட ராஜா

சினிமா, திரைத் துளி
“12 வருடம் திரிசங்கு சொர்க்கத்தில் இருந்தேன். ரீமேக் படம் மட்டுமே எடுக்கிறேன் எனச் சொன்னாங்க. நான் நிஜமாவே படம் எடுக்கிறேனா? நான் இயகுநர்தானா என்றெல்லாம் சந்தேகமாக இருந்தது” என்று மிகவும் கலங்கிப் போயிருந்ததாகச் சொன்னார் மோகன் ராஜா. “எங்கண்ணனோட திறமை என்னென்னு எங்க குடும்பத்தினருக்கே மட்டுமே தெரிந்த விஷயம் இப்ப அனைவருக்கும் தெரிந்திருக்கு. இந்த வெற்றி எனக்கு ஆச்சரியம் தரலை. அதற்காக அவர் எப்படிலாம் உழைச்சாருன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும். இந்தக் கதை காம்ப்ளக்ஸ்ன்னா மைன்ட் கேம். நான், எங்கண்ணன் என்பதால் ஒத்துக்கிட்டேன். ஆனா கணேஷ் வெங்கட்ராம், ராகுல், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண் எல்லாம் எங்கண்ணனை நம்பி வந்தாங்க. இப்ப எங்க குடும்பத்தில் ஒருத்தராகிட்டாங்க. தம்பி ராமையா சார் கலக்கிட்டார். அவர் நடிச்ச கேரக்டருக்கு ரெஃபரன்ஸே கிடையாது. ஆனா ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிட்டார். சுரேஷ் சார், பாலா சார் ...