Shadow

Tag: நான் கடவுள் இராஜேந்திரன்

ராயர் பரம்பரை விமர்சனம்

ராயர் பரம்பரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பரம்பரை பரம்பரையாக நம் அனைவருக்கும் தெரிந்த கதை தான் ராயர் பரம்பரை திரைப்படத்தின் கதை. ஒரு முனையில் காதல் பிடிக்காத அப்பா, க மறுமுனையில் காதலிக்கும் மகள், சண்டை, பிரச்சனை, இறுதியில் சுபம். இதுதான் ராயர் பரம்பரை. பரம்பரைக்கே பழக்கப்பட்ட கதையாக இருப்பது ஒன்றும் ஆகப் பெரிய தவறில்லை. ஆனால் அந்தக் கதை சுவாரசியமும் இல்லாமல், உணர்வோடும் ஒன்றாமல், சிரிக்கவும் வைக்காமல் அலைக்கழிப்பதைத் தவிர்த்திருக்கவேண்டும். கதை வலுவில்லாமல் இருக்கும் போது, அதன் திரைக்கதையாவது வலுவாக நின்று கதையைத் தாங்க வேண்டும். இப்படத்திலோ திரைக்கதை எங்கே போகிறது என்றே தெரியாமல் ஏதோ ஒரு திசையில் போய்க் கொண்டிருக்கிறது. முதற்பாதி முழுவதும் நாயகன் - நாயகி இருவரும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள். நாயகன் கழுகு கிருஷ்ணாவைக் காதலிப்பதாக சொல்லி அவரின் இரண்டு தோழிகள் லூட்டி அடிக்கிறார்கள். தங்கை ஓடிப் போனதால் காதலே பிடிக்காத ராயரா...
பவுடர் விமர்சனம்

பவுடர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பவுடர் என்பதைக் குறியீடான தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. பவுடர் போட்ட முகங்களுக்கும், அசலான முகங்களுக்கும் உள்ள வேறுபாடினைக் காட்ட முயற்சி செய்துள்ளார். படத்தின் நாயகன் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, மருத்துவர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான நிகில், மைனா வீட்டில் திருட வரும் ஆதவன் ஆகியோர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் பவுடர். கொரோனாக் காலகட்டத்தில் மிக எளிமையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இரவு ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்தில், ஓர் இரவில் நடக்கும் கதையாகப் படத்தை எடுத்துள்ளார். தாதா 87 படத்தில், இரண்டாம் ப...
ஆருத்ரா விமர்சனம்

ஆருத்ரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைளுக்கு எதிரான வன்முறையைப் பேசும் படமென பா.விஜயே, இசை வெளியீட்டில் படத்தின் ஒரு வரிக் கதையைச் சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு, இல்லையில்லை பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களே போலீஸாக இருந்து பாதுகாக்கவேண்டும் என்பது தான் படம் முன் வைக்கும் அழுத்தமான கருத்து. படம் ஆகாயவதத்தில் தொடங்கி, நிலசதுக்கத்தில் முடிகிறது. அதாவது பஞ்சபூதங்களைக் கொண்டு, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்குகிறார் படத்தின் நாயகனான சிவமலை. ஜல சமாதி, அக்னி சாபம், காற்றுப்படலம் என இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் வைத்துக் கொல்கிறார். ஆனால், படத்தின் முதற்பாதியில் பா.விஜய் மிகவும் இம்சிக்கிறார். நான் கடவுள் இராஜேந்திரனையும் கே.பாக்யராஜையும் கொண்டு மிக அசட்டுத்தனமான மலிவான நகைச்சுவை, திணிக்கப்பட்ட கவர்ச்சி, ஐட்டம் சாங் என அநியாயத்திற்கு ஒப்பேத்தி நெளிய வைத்துவிடுகிறார். எதிர் வீட்டுப் பெண்ணை நான் கடவுள் இராஜேந்தி...
குலேபகாவலி விமர்சனம்

குலேபகாவலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கல்யாண். குலேபகாவலி கோவில் மதில் சுவரருகே புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, நான்கு திருடர்கள் இணைந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படத்தின் வகைமை காமெடி என முடிவு செய்து விட்டதால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இயக்குநர் கல்யாண். பி.எம்.டபுள்யூ. கார் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மயில் வாகனமாக சத்யன் நடித்துள்ளார். அவருக்கு வாழ்வில் நான்கு எதிரிகள். அவர்களைப் பழி வாங்குவது தான் அவரது வாழ்நாள் லட்சியமென்பதாக ஒரு தனி அத்தியாயமே வைத்துள்ளனர் படத்தில். சபதத்தை எடுக்கவிட்டு சத்யனைக் கதையில் இருந்து ஓரங்கட்டி விடுகின்றனர் கதையில். இப்படி, கதாபாத்திர அறிமுகங்கள் கோர்வையில்லாமல் தனித்தனியே தொக்கி நிற்கின்றன. காரணம் படத்தில் அத்தனை கதாபா...
பிரம்மா.காம் விமர்சனம்

பிரம்மா.காம் விமர்சனம்

இசை விமர்சனம், சினிமா
பிரம்மா என்பது நேரடியாகப் படைக்கும் கடவுளையும், டாட் காம் என்பது தற்கால டிஜிட்டல் உலகத்தைக் குறிக்க உதவும் குறியீட்டுச் சொல்லாகவும் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாமம் போட்ட என்.டி.ஆரில் இருந்து படம் தொடங்குகிறது. ஆனால், படத்தில் லாஜிக் இல்லா மேஜிக்கைச் செய்வது சிவன் கோயிலில் தனி சன்னிதி அமையப் பெற்ற கடவுள் பிரம்மா தான். சிவன் அவரது தலையைக் கிள்ளி நான்முகனாக மாற்றிய பின், ‘நமக்கெதுக்கு வம்பு?’ எனப் புராணங்களிலேயே ஓரமாகத்தான் தள்ளி இருப்பார். ஆனால் இப்படத்தில் கலக்கலாய் திருவிளையாடல் புரிகிறார். காமேஸ்வரனுக்கு தான் ராமேஸ்வரனை விட எல்லா விதத்திலும் பெஸ்ட் என்பது எண்ணம். ஆனால், அனைவரையும் படைத்த பிரம்மன் சிலரிடம் ஓர வஞ்சனையாக நடந்து கொள்வதாகக் காமேஸ்வரன் கருத, பிரம்மன் காமேஸ்வரனின் விருப்பத்தைப் பூர்த்திச் செய்கிறார். பின் காமேஸ்வரனின் வாழ்க்கை என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ராம...
ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர் அநாமதேய நபர், பாலியல் நெடி கமழச் சொன்ன கதைகள் மிகப் பிரபலமாகப் பரவியது. அவர் தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த கொடையே 'ஹர ஹர மஹாதேவகி' எனும் அற்புதமான பதம். அந்த அநாமதேய ஆடியோவின் வெற்றிக்குக் காரணம், அவை ரகசியமாக அளித்த கிளுகிளுப்பே! அவ்வளவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இல்லாவிட்டாலும், பாலியல் இரட்டை அர்த்த வசனங்களை, இவ்வளவு பதற்றமின்றி இயல்பாகவே சபைக்குக் கொண்டு வந்தது நாட்டுப்புற கலைகள். அவற்றின் வீழ்ச்சியோடும், காலத்தின் நாகரீக மாற்றத்தாலும், பாசாங்கும் பாலியல் வறட்சியும் நம்மிடம் மிகுந்து விட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மொக்கையாய் இரட்டை அர்த்தத்தில் பேசி அதைப் போக்கிக் கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, சந்திரமுகி படத்தில் கேரம்போர்ட் விளையாடும் பொழுது, 'காயைப் பார்த்து அடிக்கணும்; முதலில் எல்லாத்தையும் கலைக்கணும்' என ரஜி...
பயமா இருக்கு விமர்சனம்

பயமா இருக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேயென்றால் ஜெய்க்கு பயம். ஆனால், அவன் மனைவி லேகாவே பேய் தானெனத் தெரிய வருகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமான சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் ஜெய்யாகப் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஜெய்யின் மனைவி கர்ப்பமாக உள்ள சமயத்தில், மனைவியின் அம்மா உதவியாக இருப்பாரென அவரைத் தேடி இலங்கைக்குப் பயணமாகிறான் ஜெய். ‘பயமா இருக்கு’ என்ற தலைப்புப் போடப்பட்ட பின், படம் இலங்கையில் தான் தொடங்குகிறது. சின்ன அத்தியாயமாக அது இருந்தாலும், மனதில் இனம் புரியாத ஓர் அச்சம் கவ்வுவதைத் தவிர்க்க முடியவில்லை. அங்குள்ள குழப்பமான போர்ச் சூழலால், ஜெய் இந்தியா திரும்ப நான்கு மாதம் ஆகிவிடுகிறது. லேகாவாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். படத்தில் இவர் தான் பேய். ஆனால், மிஷ்கினின் ‘பிசாசு’ படத்தில் வருவது போல், தேவதை அம்சம் பொருந்திய பேய் என்பது ஆறுதலான விஷயம். படத்தின் பிரத...
பாம்புசட்டை விமர்சனம்

பாம்புசட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே போல், தேவையின் பொருட்டு நல்லவன் எனும் சட்டையைக் கழட்ட நிர்பந்திக்கப்படுகிறான் நாயகன். நாயகன் தன் சட்டையை உரித்துக் கொள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளியாக சார்லி நடித்துள்ளார். ஒரே ஒரு சோற்றுப் பருக்கையைக் கீழே சிந்திவிடும் தனது இளைய மகளிடம், 'அரிசியைக் குப்பைக்குப் போக விடலாமா?' என அவர் நீண்ட தர்க்கத்துடன் கேட்கும் கேள்விக்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. சமீபமாய் வரும் படங்களில் சார்லி தான் ஏற்கும் குணசித்திர கதாபாத்திரங்களால் பெரிதும் ரசிக்க வைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், சாமானிய மனிதர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. நகைக் கடையில் வேலை செய்யும் பானு, கார்மென்ட்ஸில் வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷ், ஷேர் ஆட்டோ டிரைவர் நிவாஸ் ஆதித்தன், ஃபைனான்ஸ் குருசோம...
எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும் நண்பர்களைச் செல்லமாக 'அடிமைகள்' என்கிறார் இயக்குநர். அப்படி, ஐ.டி.யில் வேலை செய்யும் ஜெய்க்கு மூன்று அடிமைகள் உள்ளனர். அவர்கள், வங்கியில் கேஷியராக உள்ள கருணாகரன், ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், கஸ்டமர் கேரில் வேலை செய்யும் நவீன் ஆகியோர் ஆவர். காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ஜெய். அவரைத் தேடித் தடுக்க முயற்சி செய்யும் அவரின் 3 அடிமைகளுமே அநாவசிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அடிமைகளை எப்படிப் பிரச்சனையில் இருந்து ஜெய் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் நாயகன் நாயகி பெயரளவிற்குத்தான். கருணாகரனும், காளி வெங்கட்டும்தான் படத்தின் உண்மையான நாயகர்கள். ஷேர் ஆட்டோ பின்னால் சென்று ரத்தம் சூடேறுபவர்களுக்கு, காளி வெங்கட்டின் அறிமுக காட்சி மிக நெருக்கமாக அமையும். காளி வெங்கட்டின் கதாபாத்திரத்தை அனுபவித்து எழுத...
ரெமோ விமர்சனம்

ரெமோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத்துவர் காவ்யா மீது கண்டதும் காதல் கொள்கிறான் நடிகராகும் முயற்சியிலுள்ள எஸ்.கே. காதலில் வெற்றியடைய வேலையில்லா எஸ்.கே. எடுக்கும் தொடர் முயற்சிகள் தான் படத்தின் கதை. வழக்கமான ரோட் சைட் ரோமியோ தான் எஸ்.கே.வும். எதைப் பார்த்து ‘லவ்’ வந்தது என தமிழ்ப்பட நாயகனிடம் கேட்டால், ‘முகத்தைப் பார்த்து லவ் பண்ணலை. மனசைப் பார்த்து லவ் பண்ணேன்’ எனச் சொல்வார்கள். ‘ஏன் லவ் ஃபெயிலியர் ஆச்சு?’ எனக் கேட்டால், ‘இந்தப் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுக்கவே முடில’ என பாரில் (Bar) பெண்களைத் திட்டிப் பாட்டு பாடுவார்கள். முதலில் என்ன புரிந்ததோ, பின் என்ன புரியாமல் போனதோ?? தமிழ்ப் பட இயக்குநர்களுக்கே வெளிச்சம்! ஆனால், இப்படத்தில் எஸ்.கே.விற்குக் காவ்யாவின் முகத்தைப் பார்த்தோ, மனதைப் பார்த்தோ காதல் வருவதில்லை. மன்மதன் (Cupid) அம்பெய்து காதல் வரச் செய்து விடுகிறார். அதுவரை பெண்கள் விஷயத்தில் எஸ்.கே. சின்னத் தம்பி பிரபு ப...
யானைமேல் குதிரை சவாரி விமர்சனம்

யானைமேல் குதிரை சவாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தம்பியோடு வாழும் ஏழைப் பெண்ணின் திருமணத்தில் ஏற்படும் சிக்கல்கள்தான் படத்தின் கதை. ‘கதை தான் என் படத்தில் ஹீரோ’ என இயக்குநர் முடிவு பண்ணதால், நாயகன் இல்லாப் படமிது. அக்குறையைத் தீர்க்க ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ‘வழக்கு எண்’ முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி என நான்கு கதாபாத்திரங்களைக் கொண்டு ஒப்பேத்தியுள்ளார். 'நான் கடவுள்' ராஜேந்திரனும், 'லொள்ளு சபா' சுவாமிநாதனும் காமெடி வில்லன்கள். தன் பட்டுத் தறியில் வேலை செய்யும் பெண்களைப் படுக்கைக்குக் கூப்பிடுவது 'காமெடி'யாம், விருப்பமில்லா நாயகியை அடைய நினைப்பது வில்லத்தனமாம். முத்துராமனுக்கும் படத்தில் அதே கதாபாத்திரம்தான். ஆனால், நம்பியாரை வழிபடும் இவர் சோலோ காமெடி வில்லன்; சுவாமிநாதனும் ராஜேந்திரனும் ஜோடி. படத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துபவராக கிருஷ்ணமூர்த்தி மட்டுந்தான் படம் நெடுகே பயணிக்கிறார். படத்தின் முடிவில் அ...
தில்லுக்கு துட்டு விமர்சனம்

தில்லுக்கு துட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சேட்டு வீட்டுப் பெண்ணான காஜலைக் காதலிக்கிறான் லோக்கல் பையனான குமார். அது பிடிக்காத காஜலின் தந்தை, ஒரு பங்களாவில் வைத்து குமாரைக் கொல்ல நினைக்கிறார். அந்தப் பங்களாவிலோ இரண்டு பேய்கள் உள்ளன. அங்கு நடக்கும் சுவையான சம்பவங்கள்தான் படத்தின் கதை. கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தால் தேவலை என நினைக்கும் அளவுக்குச் சலிக்கச் சலிக்க பேய்ப் படத்தை வழங்கி வருகிறது தமிழ்ப் திரையுலகம். ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக சந்தானமும் அந்தக் கோதாவில் குதித்துள்ளார். முருக பக்தன் குமாராக ஆடல் பாடலுடன் அமர்க்களமாய் அறிமுகமாகிறார். குடித்து விட்டு, கருணாசுடன் பேசும் காட்சியில் மட்டும் பழைய சந்தானம் தெரிகிறார். விழுந்து விழுந்து நடனம் புரிவதாகட்டும், மிக ஸ்டைலிஷாகச் சண்டை போடுவதாகட்டும் சந்தானம் புதிய பரிமானத்துக்கு மிகவும் முயன்றுள்ளார். அவற்றை எல்லாம் சோதித்துப் பார்த்து விட்டு, இரண்டாம் பாதியில் தான் பேய் பங்களாவுக்குள் ...
எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அதீத ஹீரோயிசத்தையும், மாஸ் ஹீரோக்களையும், அப்படிப்பட்டவைகளை வியந்தோதிய படங்களையும் பகடி செய்யும் ‘ஸ்பூஃப்’ படமாக ரசிக்க வைக்கிறது இப்படம். தலைப்பே, அத்தகைய பகடியின் ஒரு வடிவம் தான். ‘நைனா’ எனும் அதீத அதிகாரத்தை வழங்கும் நாற்காலியில், உட்காரத் தகுதியான நபரைத் தேடுகிறான் தாஸ். ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வரும் ஜானியை, கொலைகள் புரியும் பெரிய ‘மாஸ்’ வீரனென நினைத்து தெரியாத்தனமாக நைனாவாகத் தேர்வு செய்து விடுகிறான் தாஸ். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கலகலப்பான கதை. Cigarette smoking is injurious to health என நான் கடவுள் ராஜேந்திரன் குரலில் ஆங்கில உச்சரிப்பைக் கேட்ட நொடி முதல், திரையரங்கில் கேட்கும் பார்வையாளர்களின் சிரிப்பொலி, அனேகமாக முதல் பாதி முழுவதும் எதிரொலிக்கிறது. அதுவும் இடைவேளைக் காட்சியில், சரவணனுக்கு முன் ஜீ.வி.பிரகாஷ் பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சி அதகளம். இப்படியொரு கலகல...
நையப்புடை விமர்சனம்

நையப்புடை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலுச்சாமி எனும் 70 வயது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் சைலண்ட் சூப்பர் ஹீரோயிசம்தான் படம். படம் பாரதியின் 'புதிய ஆத்திசூடி' வரிகளோடு தொடங்குகிறது. தலைப்பும், கதையும்கூட அதிலிருந்தே தான் எடுக்கப்பட்டுள்ளது. 'தேசத்தைக் காத்தல் செய்'தவரான வேலுச்சாமி, 'தீயோர்க்கு அஞ்சாமல்', 'கொடுமையை எதிர்த்து நிற்கிறார்'. இளைய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 'நேர்ப்படப் பேசு' நிகழ்ச்சியில் பங்கேற்று, 'வெடிப்புறப் பேசு'கிறார். மேலும், அச்சத்தினைத் தவிர்த்து, ஆண்மை தவறாமலும் சாவதற்கு அஞ்சாமலும், ரெளத்திரத்தினைப் பழகி, பாதகம் செய்வோர்களை "நையப்புடை" க்கிறார் வேலுச்சாமி. நாயகன் வேலுச்சாமியாக நடித்ததோடு மட்டுமல்லாமல், கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில், "நான் பல கேப்டன்களையும், தளபதிகளையும் உருவாக்கிருக்கேன்" எனச் சொல்லி சிறு இடைவேளைக்குப் பின், "மிலிட்டரில" என்கிறார். அஞ்சா...
ஜிப்பா ஜிமிக்கி விமர்சனம்

ஜிப்பா ஜிமிக்கி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜிப்பா என்பது நாயகனுக்கான குறியீடு, ஜிமிக்கி என்பது நாயகிக்கான குறியீடு. ஜிப்பாக்கும் ஜிமிக்கிக்குமான ஊடல்தான் திரைப்படத்தின் கதை. சென்னை டூ கூர்க், கூர்க் டூ சென்னை என படத்தின் பெரும்பகுதி பயணத்திலேயே கழிகிறது. நாயகனும் நாயகியும் வழியில் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் சுவாரசியமானவர்கள். முக்கியமாக கன்னட விவசாயியாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மனதைக் கனக்க வைக்கிறார். படத்தில் நெகிழ்ச்சிக்குரிய காட்சிகள் ஏராளமாக உண்டு. ஆடுகளம் நரேனும், விஜய் டி.வி. ‘தாயுமானவன்’ புகழ் செளந்தரராஜனும் பேசும் காட்சிகள், இளவரசு தன் மனைவியைப் பற்றிச் சொல்லும் ஃப்ளாஷ்-பேக் காட்சிகள், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் அவர் மனைவியும் வரும் காட்சிகளை ஆகியவை உதாரணமாகச் சொல்லலாம். படத்தில் வில்லன் இருந்தே ஆக வேண்டுமென்ற திரை இலக்கணத்தை மீறக் கூடாதென திணித்துள்ளனர் குபீர் வில்லனை. அதன் பிறகு வரும் லோ பட்ஜெட் மெடிக்கல் ...