Shadow

Tag: நிகில்

பாகுபலி – 1000 கோடி நாயகன்

பாகுபலி – 1000 கோடி நாயகன்

சினிமா, திரைச் செய்தி
பாகுபலி 2-இன் நட்சத்திர நாயகன் பிரபாஸ், வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்தியத் திரைப்பட நாயகன் என்ற பெருமையை ஈட்டியுள்ளார். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு மாபெரும் சரித்திரமாகும். பாகுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது. இந்தக் காவிய படைப்பில், அமரேந்திர பாகுபலியாய்த் தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிப்படுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாகுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்ற...
நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்

நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்

சினிமா, திரைத் துளி
தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் மூன்று பரிமாணங்களில் முதன் முறையாகத் தோன்றும் "நாளை நமதே" படத்தை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குநர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதீஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது....
யாத்ரீகா மியூசிக் வீடியோ – ப்ரோமோ

யாத்ரீகா மியூசிக் வீடியோ – ப்ரோமோ

Trailer, காணொளிகள், சினிமா
கூடைப்பந்து வீராங்கனையான வைஷாலி கெம்கர் தோன்றும் இந்த மியூசிக் வீடியோவை, நிகிதா கணேசன் இயக்குகிறார். காதல் பிரிவைத் தைரியமாக எதிர்கொள்ளும் பெண் பற்றிய வீடியோ அது. சிக்மகளூர் மலைப்பாதையில், ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ரைடர் ஓட்டிச் செல்கிறார். சோகமாகத் தொடங்கும் பாடல், பெண்ணின் தைரியத்தையும் நம்பிக்கையின் அளவையும் பறைசாற்றும் விதமாக வீடியோவை எடுத்துள்ளார் நிகிதா கணேசன். ஸ்ரீராம் ராகவன் ஒளிப்பதிவில், அல்-ருஃபீயான் இசையில், "யாத்ரீகா" வீடியோ உருவாகிறது. சியா ஸ்ரீ உடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த வீடியோ வெளியாகவுள்ளது. தேசிய அளவு போட்டியாளரான வைஷாலி, கூடைப்பந்து விளையாட்டில் நிலவும் சகிக்க முடியாத பாலிடிக்ஸை (ஊழலால்) வெறுத்து, மாடலிங் பக்கம் தன் கவனத்தைத் திசை திருப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   ...
இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி

இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி

சினிமா, திரைச் செய்தி
“சிவலிங்கா அபடத்தில் அழகா வர்றார் லாரன்ஸ். எப்பவும் அமைதியா தான் பேசுவார். ஆனா புரட்சி உள்ளம் படைச்சவர். இல்லைன்னா, ஒரு மனுஷன் ஜல்லிக்கட்டில் வந்து உட்காருவானா? நிறைய பேர் சொன்னாங்க, விளம்பரத்துக்காக வந்து உட்கார்ந்தார்னு. அவருக்கு விளம்பரம்லாம் தேவையில்ல! ‘கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும். எங்கண்ணன் படத்தில் வரும் வசனம்’ என மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ராகவா வசனம் பேசியிருப்பார். படம் ஃபுல்லா நான் சொல்லியிருப்பேன். அவர் ரஜினி ரசிகர்னு எனக்குத் தெரியும். என் ரசிகர்கள் என்னிடம், ‘பாருங்க சார். உங்க மேல லாரன்ஸ்க்கு எவ்ளோ பிரியம் பாருங்க சார்’ எனச் சொன்னாங்க. ‘டேய், அவர் ரஜினிய சொன்னார்டா. நீ வேற ஒரு புரியாத பயல்டா’ எனச் சொன்னேன். ஏன் சொல்றேன்னா நம்ம மக்கள் புரியாத பயலுக. எதை நினைக்கிறது, எதை யோசிக்கிறது, எதை பண்றதுன்னு நம்ம மக்களுக்கு எதுவும் தெரியாது. ‘நல்லவன் வாழ்வான்’ படத்தி...
அசோகமித்திரன்: ஆரவாரமில்லா எழுத்து – வைரமுத்து

அசோகமித்திரன்: ஆரவாரமில்லா எழுத்து – வைரமுத்து

சமூகம்
எழுத்துலகில் நல்லெழுத்து, வணிக எழுத்து என்று இரண்டு உண்டு. வணிகச் சந்தையிலும்கூட நல்லெழுத்தே எழுதியவர் அசோகமித்திரன். அவரெழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணிவரிசையில்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் தகித்துக் கிடந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் நேர்கிறது. உடலுக்கு நேரும் மரணத்தால் ஒரு மனிதன் முதல்முறை மரிக்கிறான். அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக்கொண்டேயிருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் மரிக்கும்போது இரண்டாம் மரணம் எய்துகிறான். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு இரண்டாம் மரணம் இல்லை. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் வலியை அவரைப்போல் எதார்த்தமாக எழுதியவர்கள் குறைவு. ‘கரைந்த நிழல்கள்’ என்ற நாவலில் ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நடிகையையும் படைத்திருக்கிறார். “படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று ஓர் இளம் நடிகை அடம்பிடிப்...