Shadow

Tag: நிகில்

ரித்திகா சிங் – முதல் ஹீரோ

ரித்திகா சிங் – முதல் ஹீரோ

சினிமா, திரைச் செய்தி
“பாக்ஸராக இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங்கைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பயம். கையில் வித்தை வச்சிருக்காங்க எனச் சொன்னாங்க. நான் நேர்ல ரிங்லயே அதைப் பார்த்திருக்கேன். சிவலிங்கா படத்தில் தான் தைரியமாக அவங்க கூட நடிக்கிறேன். அவங்க நேச்சுரல் ஆர்டிஸ்ட். நதி போல். படத்தில் பிரமாதமா பண்ணியிருக்காங்க” என்றார் ராதாரவி. “எனக்குத் தெலுங்கில் ரவி தேஜா ரொம்ப பிடிக்கும். ரொம்ப எனர்ஜிட்டிக்கான நடிகர். அதே போல், ஹீரோயின்ஸ்ல ரித்திகா சிங் ரொம்ப பிடிக்கும். அவங்க ரொம்ப எனர்ஜிட்டிக்கா நடிக்கிறாங்க. தெலுங்கில் இப்போ ‘குரு’ படம் ஹிட் ஆகியிருக்கு. இந்தப் படமும் அதே போல் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்கிறார் ரித்திகா சிங். “சிவலிங்கா படத்தில் முதல் ஹீரோ ரித்திகா சிங் தான்; இரண்டாவது ஹீரோ வடிவேலு; மூன்றாவது ஹீரோ சக்தி வாசு; நான்காவது ஹீரோ தான் நான்” என்றார் ராகவா லாரன்ஸ்....
டோரா விமர்சனம்

டோரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கால் டேக்சி நிறுவனம் தொடங்குவதற்காக நயன்தாரா பழைய மாடல் கார் ஒன்றை வாங்குகிறார். அக்காரினுள் குடி கொண்டிருக்கும் டோரா எனும் நாயின் ஆவி சிலரைப் பழிவாங்குகிறது. அவர்கள் யார், அவர்களை நாய் ஏன் எப்படிப் பழிவாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை. பவளக்கொடியாக நயன்தாரா நடித்துள்ளார். தூங்கி எழுந்தாலும் சரி, கொலையைப் பார்த்து மிரண்டு ஓடி வந்தாலும் சரி, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை, பளீச்சோ பளீச்சென இருக்கிறார். நாயகன் இல்லாததால் டூயட்டும் இல்லை ஆடைக்குறைப்பும் இல்லை. படத்தைச் சுமப்பது பளீச் நயன் மட்டுமே! நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். நயன்தாராவின் தந்தையாகத் தம்பி ராமையா நடித்துள்ளார். கதைப்படி அவரது மனைவி ஓடி விட, நயன்தாராவிற்கு எல்லாமே தனது தந்தை தான். அவர்கள் இருவருக்கிடையில் இயல்பாய் இருக்க வேண்டிய பாசத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறியுள்ளனர...
கவண் விமர்சனம்

கவண் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சமமற்ற இருவருக்குள் நடக்கும் சண்டைக்கு, பைபிளில் வரும் கோலியத், டேவிட் கதையை உதாரணம் காட்டுவார்கள். சிறுவனான டேவிட் உண்டிவில் கொண்டு ஆஜானபாகு கோலியத்தை வீழ்த்திவிடுவான். அப்படி, வில்லன் ஆகாஷ்தீப்பின் கார்பொரேட் டி.வி. நிறுவனமான ஜென் 1-ஐத் தகர்க்கிறார் முத்தமிழ் டி.வி. நிருபரான விஜய்சேதுபதி. படத்தின் சர்ப்ரைஸ் விஷயமென்றால், அது பவர் ஸ்டார் வரும் காட்சிதான். முதல் முறையாக, அவர் தோன்றும் காட்சியொன்று ரசிக்கும்படியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் பேசும் வசனமும் துணை புரிந்துள்ளது. எழுத்தாளர்கள் சுபா மற்றும் கபிலன் வைரமுத்துவின் வசனங்கள் படத்திற்கு உதவி செய்துள்ளன. ஆனால், டி.ராஜேந்தர் தான் வழக்கம் போல் இடம் பொருள் ஏவல் பிரக்ஞையின்றி அடுக்கு மொழியில் கடுப்பேற்றுகிறார். எனினும் க்ளைமேக்ஸில், 'வாடா என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜி' என டேபிளைத் தட்டிக் கொண்டே பாடும் பொழுது திரையரங்கில் ...
கலக்கப் போகும் கவண்

கலக்கப் போகும் கவண்

சினிமா, திரைத் துளி
சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என மனிதனின் வாழ்வில் நிகழும் அத்தனையையும் தொடும் சுவாரசியமாகப் படமாக இருக்கும் "கவண்". இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும், விஜய் சேதுபதியுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று டி.ராஜேந்தரும் நடித்துள்ளார். அவரது அடுக்குமொழி வசனமும், அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கப் போகிறது. டி.ஆர் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் அரங்கை அதிரவைக்கப் போகின்றதாம். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். மேலும், பாண்டியராஜன், விக்ராந்த், 'அயன்' ஆகாஷ், போஸ் வெங்கட், 'நண்டு' ஜகன், பவர் ஸ்டார் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 'கனா கண்டேன்' முதல் இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் இரட்டை எழுத...
எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும் நண்பர்களைச் செல்லமாக 'அடிமைகள்' என்கிறார் இயக்குநர். அப்படி, ஐ.டி.யில் வேலை செய்யும் ஜெய்க்கு மூன்று அடிமைகள் உள்ளனர். அவர்கள், வங்கியில் கேஷியராக உள்ள கருணாகரன், ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், கஸ்டமர் கேரில் வேலை செய்யும் நவீன் ஆகியோர் ஆவர். காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ஜெய். அவரைத் தேடித் தடுக்க முயற்சி செய்யும் அவரின் 3 அடிமைகளுமே அநாவசிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அடிமைகளை எப்படிப் பிரச்சனையில் இருந்து ஜெய் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் நாயகன் நாயகி பெயரளவிற்குத்தான். கருணாகரனும், காளி வெங்கட்டும்தான் படத்தின் உண்மையான நாயகர்கள். ஷேர் ஆட்டோ பின்னால் சென்று ரத்தம் சூடேறுபவர்களுக்கு, காளி வெங்கட்டின் அறிமுக காட்சி மிக நெருக்கமாக அமையும். காளி வெங்கட்டின் கதாபாத்திரத்தை அனுபவித்து எழுதிய...
அசோக் அமிர்தராஜ் – ஐ.நா.வின் இந்திய நல்லெண்ணத் தூதர்

அசோக் அமிர்தராஜ் – ஐ.நா.வின் இந்திய நல்லெண்ணத் தூதர்

சமூகம்
இந்தியாவில் நீடித்த வளர்ச்சி திட்டங்களுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக, பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும், சர்வதேச விம்பிள்டன் டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைட் பார்க் எண்டர்டெய்ன்மெண்ட் குழுமத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் திரு. அமிர்தராஜ், ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், இப்பெருமையினைப் பெறும் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதும் அவருக்குக் கிடைத்துள்ள கூடுதல் அங்கீகாரம். சென்னையில் பிறந்து, சர்வதே அளவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான அஷோக் அமிர்தராஜ் தனது 30 வருட திரையுலக வாழ்வில் 100க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். அவரது வெற்றிகரமான திரை வாழ்க்கையில் உலகளாவிய பாராட்டுகளையும், 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வசூலையும் அவர் படங்கள் பெ...
அதே கண்கள் விமர்சனம்

அதே கண்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1967 இல், இயக்குநர் திரிலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் படம் "அதே கண்கள்". அந்தப் படத்திற்கு மிகக் கச்சிதமாகத் தலைப்பு பொருந்தியது போல், இப்படத்திற்குப் பொருந்தவில்லை. ரெஸ்டாரன்ட் ஓனரான சமையல் கலைஞர் வருணுக்குத் தீபா மீது காதல் ஏற்படுகிறது. தீபாவிடம் காதலைச் சொன்ன அன்றே ஏற்படும் விபத்தில், கண் பார்வையை மீண்டும் பெறுகிறான் வருண். ஆனால், அவனது காதலி தீபா பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. நெடுஞ்சாலை, ஜீரோ ஆகிய படங்களிலேயே தன் நடிப்பை நிரூபித்து விட்டவர் ஷிவதா. எனினும் இந்தப் படத்தின் மூலம் தான் பரவலாகக் கவனிக்கப்படுவார் என்பது திண்ணம். தீபா எனும் பாத்திரத்தில் பார்வையாளர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறார். அறிமுக காட்சியிலேயே அசத்திவிடுகிறார். அவரது குணாம்சமும் கடைசி ஃப்ரேம் வரை ஈர்க்கி...
பலம் விமர்சனம்

பலம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
காபில் என்ற ஹிந்தி வார்த்தைக்குத் 'திறமையுள்ள' அல்லது 'சாதித்து முடிக்கக் கூடிய' எனப் பொருள் கொள்ளலாம். தமிழில், 'பலம்' என்ற தலைப்பில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். ரோஹன் பாண்டியராஜ்க்கும், சுப்ரியாவுக்கும் கண் பார்வை இல்லையெனினும், முதல் சந்திப்பிலேயே சுப்ரியா மீது காதல் வயப்படுகிறார் ரோஹன். திருமணம் ஆன இரண்டாவது நாளே அவர்கள் வாழ்வின் போக்கையே இரண்டு நபர்கள் சீர்குலைக்கின்றனர். விவேகத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் ரோஹன், தன் வாழ்க்கையை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. உறுத்தாத டப்பிங் மிகப் பெரிய ஆறுதல். சில இடங்களில் கைதட்டலும் பெறுகிறது. ரோஹன் தன் மனைவி சுப்ரியாவிடம் ரஜினி குரலில் பேசும் காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். படத்தின் நாயகனான ரோஹனும் டப்பிங் ஆர்டிஸ்ட் தான்; அதுதான் அவன் பலமும். ஒட்டுமொத்த படமும் ஒரு மென்கவிதை போல் ...