
பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review
இந்திய அணிக்குத் தேர்வான மணத்தி P. கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையைக் கருவாக எடுத்துக் கொண்டு தன்னோட வலிகளையும் ஏக்கங்களையும் இணைத்து பைசனை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். அவரது முந்தைய படங்கள் பேசிய அரசியலையும் கைவிடாமல், படத்தின் பின்னணியாக வெங்கடேச பண்ணையார் - பசுபதி பாண்டியன் பகையின் பின்னணியில், கபடியில் சாதிக்க நினைக்கும் கபடி வீரனின் சமூகச் சூழலையும் மனநிலையையும் பதிந்துள்ளார்.
கபடி என்றால் வனத்தி கிட்டான்க்கு உயிர். அவனது திறமையைக் கண்டு ஊக்குவித்துத் தொடர்ந்து விளையாட வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கந்தசாமி. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் சார்பில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட இடம் பிடிக்கிறார். கிட்டானின் இந்த சாதனைப் பயணம் எத்தகையது என்பதைப் பற்றிய படம்தான் பைசன் காளமாடன்.
கிட்டானின் குலதெய்வம் காளமாடன் ஆவார். சீறிப் பாயும் கிட்டானின் திறம்பட்ட விளையாட்டைச் ச...













