Once Upon A Time In Madras விமர்சனம்
தன் வீட்டு மரத்து மாங்காயை அடித்துத் தின்ற சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். அந்தத் துப்பாக்கி, யார் யார் கைகளில் கிடைக்கிறது, அவர்கள் வாழ்வில் என்ன நேருகிறது என்பதுதான் படத்தின் கதை.
நான்கு கதைகளை இணைக்கும் hyperlink ஆகப் படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. மகளாகப் பருவ மாற்றம் அடையும் மகனைப் பெற்ற தாயிடமும், அரசியல் கொலை புரியும் கொலைக்காரன்க்கு உடந்தையாக இருக்கும் ஓட்டுநரிடமும், டொமஸ்டிக் வயலன்ஸிற்கு உள்ளாகும் புது மருமகளிடமும், சாதிவெறி பிடித்த பத்திரிகையாளரிடமும் துப்பாக்கி கிடைக்கிறது.
படத்தின் முதற்பாதி, கோர்வையற்ற காட்சிகளாக நகர்ந்து இடைவேளையில் ஆவலைத் தூண்டும் விதமாக முடிகிறது. இரண்டாம் பாதியின் முடிவில் எல்லாக் கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் இணைந்து திருப்திக்கரமாகப் படம் முடிகிறது. நான்கு க...