Shadow

Tag: மயில்சாமி

சபாநாயகன் விமர்சனம்

சபாநாயகன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காதலும் கடந்து போகும்; அது காலம் செல்ல செல்ல மறந்து போகும் என்கின்ற 2கே கிட்ஸ்கான டேக் இட் ஈஸி காதல் கதை தான் இந்த சபாநாயகன்.அரவிந்த் என்று சொல்லப்படும் ச.பா.அரவிந்திற்கு பள்ளியில் ஒரு காதல், கல்லூரியில் டிகிரி முடிக்கும் போது ஒரு காதல், பின்னர் சிங்கப்பூரில் இருக்கும் அம்மா அப்பாவை பார்க்கச் சென்ற போது அங்கு ஒரு குட்டி காதல், மீண்டும் பள்ளிகால க்ரஷ் திரும்ப வாழ்க்கையில் வந்ததால் மீண்டும் அவளுடன் காதல், பிறகு எம்.பி.ஏ படிக்கும் போது மற்றுமொரு காதல் இப்படி பல்வேறு காதல்கள் அடங்கிய அரவிந்த்-தின் ஆட்டோகிராப் டைரியே இந்த சபாநாயகன்.படம் எப்படியோ தொடங்கி, எப்படியோ நகர்ந்து எப்படியோ முடிந்து போகிறது.  பள்ளிகால காதலோ, கல்லூரி காலக் காதலோ, எம்.பி.ஏ கால காதலோ எதுவுமே மனதில் ஒட்டவில்லை. நாயக கதாபாத்திரமோ தன் காதல் மீதோ, தன் காதலி மீதோ எந்தவித பிடிப்பும் அழுத்தமும் தீவிரத்தன்மையும் இல்லாமல் இர...
கண்ணகி விமர்சனம்

கண்ணகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெண்ணுக்கு தாலி தான் பாதுகாப்பு என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் ஒரு பெண்ணுக்கு அந்த தாலி அவள் எதிர்பார்த்த பாதுகாப்பைக் கொடுக்கவில்லை என்றால் அவளது வாழ்க்கை என்னவாகும் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியே “கண்ணகி” திரைப்படத்தின் மையக்கரு. கலை (அம்மு அபிராமி)-க்கு எப்படியாவது ஒரு பெரிய இடத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று பெரும் சிரத்தையுடன் முயற்சி செய்கிறது கலையின் குடும்பம்.  குழந்தை பிறக்கத் தகுதியில்லை என்பதைக் காரணம் காட்டி வலுக்கட்டாயமாக விவாகரத்து கேட்டு நிற்கும் நேத்ராவின் கணவன் குடும்பம், திருமணமே செட் ஆகாது என்கின்ற எண்ணத்துடன்  லிவிங் டுகெதரில் இருக்கும் நதி கதாபாத்திரம்,  வயிற்றில் கலைக்க முடியாத சூழலில் இருக்கும் நான்கு மாத கருவைக் கலைக்க, தன் காதலனுடன் சேர்ந்து பெரும் போராட்டம் நடத்தும் கீதா கதாபாத்திரம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் வாய...
“மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்” – அசோக்செல்வன்

“மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்” – அசோக்செல்வன்

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன் ஆகும். நாயகிகளாக மேகா ஆகாஷும், கார்த்திகா முரளிதரனும், சாந்தினி செளத்ரியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூட்யூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமனும், பிரபு ராகவும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். Clear water பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், i Cinem...
மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’

மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’

சினிமா, திரைச் செய்தி
அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய ராதா ரவி, "சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படிப் பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியைப் பாராட்டுகிறேன். சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்தார். பார்க்க பார்க்க தான் மக்களுக்கு படம் பிடிக்கும். உடனே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இன்னும் நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறி வந்தேன். சிறு படங்களுக்கு குறைந்தது 5 நாட்களாக திரையரங்கில்...
களவாணி 2 விமர்சனம்

களவாணி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம். மடந்தையான மகேஸ்வரிக்கும், களவாணி அறிக்குக்கும் ஆன காதல், முதற்பாகத்தில் அற்புதமானதொரு உணர்வைத் தரும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். நாயகன், நாயகிக்குள்ளான ஈ...
கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

சினிமா, திரைச் செய்தி
4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். "காமெடியை எப்படிக் கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குநர் சாம் ஆண்டன். யோகி பாபு இரவு பகலாகத் தூங்கக் கூட நேரமே இல்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் இந்தப் படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய 'முகம்' இந்தப் படத்தைக் காப்பாற்றும்" என்றார் நடிகர் மனோபாலா. ட்ரெய்லரில் ஒரு காட்சி வரும். 'என் முகம் என்ன...
துக்ளக், அமைதிப்படை வரிசையில் LKG

துக்ளக், அமைதிப்படை வரிசையில் LKG

சினிமா, திரைச் செய்தி
எல்.கே.ஜி. படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், "எல்.கே.ஜி எனது ஹோம் பேனரின் முதல் தயாரிப்பாகும். என் தந்தை ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைவதற்கு ஒரு கனவு கண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 46 வயதில் காலமானார். இந்தப் படத்தின் மூலம் அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய மொத்த குழுவும் சொன்னபடியே படத்தை முடித்துத் தந்திருக்கிறார்கள். எனவே அது எங்கள் ஸ்டூடியோவில் வெளியாகும் முதல் படமாகி இருக்கிறது. காரில் ஒன்றாகப் பயணிக்கும்போது ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படத்தின் அடிப்படைக் கருத்தை எனக்கு விளக்கினார். அது என்னை மிகவும் ஈர்த்தது. உடனடியாக படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். நேற்று இரவு நாங்கள் இந்தப் படத்தின் இறுதிப்பிரதியைப் பார்த்தோம். ஆர்.ஜே.பாலாஜியைப் பாராட்டுவதை என்னால் நிறுத்த முடியவில்லை. இது மற்றவர்களைக் கலாய்த்த...
காசு மேலே காசு விமர்சனம்

காசு மேலே காசு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிகச் சுலபமாய்க் கோடீஸ்வரராகப் பார்க்கிறார் மயில்சாமி. அதற்காக தன் மகனை, ஒரு பணக்கார பெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் காதலிக்க ஊக்குவிக்கிறார். ஆனால் நாயகியோ, ஒரு பிச்சைக்காரரின் மகள். பணக்கார வீட்டில் வேலை செய்பவரைப் பணக்காரி என நினைத்துக் கொள்கிறான் நாயகன். அந்தக் காதல் என்னானது என்பதும், மயில்சாமியின் பேராசை என்னானது என்பதுமே படத்தின் கதை. குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் மிக ஜாலியான படம். மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள நம்புறாங்க, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி முதல் முறையாக இயக்கியுள்ள படமிது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு அன்றி கதாநாயகியின் தந்தையாகவும் நடித்துள்ளார் பழனி. படத்தின் பலம் அதன் கலகலப்பான வசனங்கள். உதாரணத்திற்கு, மயில்சாமியின் மனைவி, “ஏன் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டிருக்கீங்க?” எனக் கேட்பார். அதற்கு, “நீ குட்டி போட்ட ப...
என்ன தவம் செய்தேனோ விமர்சனம்

என்ன தவம் செய்தேனோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகளை, மாப்பிள்ளையை, அவர்களது கைக்குழந்தையைக் கொல்லத் தேடி அலையும் சாதிச் செருக்குள்ள தந்தை, ஒரு கட்டத்தில் தன் மகளைப் பெற்றதற்கு, 'என்ன தவம் செய்தேனோ!' என உணருவதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. இயக்குநர் பேரரசின் உதவியாளரான முரபாசெலன் இப்படத்தை இயக்கியுள்ளார். 'மாயிலைத் தோரணம்' எனப் பெயர் சூட்டப்பட்டு சென்சார் செர்ட்டிஃபிகேட் வாங்கியுள்ளனர். சுப நிகழ்வுகளுக்குக் கட்டப்படுபவை மாயிலைத் தோரணங்கள். அப்படியொரு சுப நிகழ்வை நோக்கித்தான் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகிறது. ஆனால், படத்தில் தொடர் 'ட்விஸ்ட்'களைத் தொடக்கம் முதலே அளித்துக் கொண்டு வருகிறார் இயக்குநர். க்ளைமேக்ஸிலும் அதைத் தொடர்கிறார். "பாக்கியம்மாஆ" எனத் தன் மகளை அன்போடு வாரி அணைக்கும் ஒரு தந்தையால் எப்படித் தன் மகளைக் கொல்ல வெறியோடு அலைய முடிகிறது? சாதிப் பெருமிதம் என்ற முட்டாள்த்தனம் ரத்தப்பாசத்தையும் விடக் கனமானதா என்ன? ஆனால், ஏனோ படம்...
காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'வெயிட்டிங் லிஸ்ட்' என்பதன் தமிழாக்கமாகத் தலைப்பைப் புரிந்து கொள்ளலாம். படம் இரயில்வே ஸ்டேஷனில், அதாவது இரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்கிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். காதலைச் சொல்லிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருப்போரின் பட்டியல் என்றும் தலைப்பிற்கு ஓர் உபப்பொருளை ஒரு பாடலின் வரியில் அளித்துள்ளனர். சத்யாவும் மேகலாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாளன்று தாம்பரம் இரயில்வே போலீஸாரினால் கைது செய்யப்படுகிறான் சத்யா. அவர்களின் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். புதுமையான கதைக்களன், கலவையான கதாபாத்திரங்கள் எனச் சுவாரசியமாகத் தொடங்குகிறது. எனினும் படம், 'தன்னைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டும்' எ...
கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக் க...
என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்

என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ஆவி கம் கேம் (Cam)’ எனும் நிகழ்ச்சி நடத்துபவர் விஷால். ஆவிகளை அறிந்து, அதன் தேவைகளைப் புரிந்து, அதனிடம் பேசி அவைகளை அமைதிப்படுத்தி மறு உலகிற்கு அனுப்பி வைக்கிறார். கோட்டைமேடு எனும் ஊரில் இரத்தக் காட்டேரி உலாவுவதாகத் தெரிய வர, அங்கே கேமிரா மேனுடன் செல்கிறார் விஷால். அங்கே நடக்கும் நம்ப முடியாத அமானுஷ்யச் சம்பவங்கள்தான் படத்தின் கதை. விஷாலாக அர்வி நடித்துள்ளார். பேயின் இருப்பைக் கண்டறிய ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார் அர்வி. உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத உறைந்த முகம் அவருக்கு. இருட்டான இடங்களில் கருவியோடு அலைந்து, 'எனிபடி இஸ் தேர்?' எனக் கேட்டு, ஆவிகள் எழுப்பும் சத்தத்தை ரெக்கார்ட் செய்து, அவற்றைக் கேட்டு, உணர்ந்து அவைகளின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு அவைகளுக்கு உதவுகிறார் விஷால். ஆவிகள் எழுப்பும் ஒலிகள் வழக்கமான தமிழ்ப்பட பேயின் சத்தங்களாக இல்லாமல், கான்ஜூரிங் போன்ற ஹாலிவுட் படப் பே...