வரலட்சுமி சரத்குமார் | மைக்கேல்
சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவன தயாரிப்பில் உருவாகும், பன்மொழி இந்தியப் படமான “மைக்கேல்” படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
பல மொழிகளிலும் வெற்றி பெற்ற தனித்துவமான நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சந்தீப், அவரது சிறப்புமிக்க திரைக்கதை தேர்வுகள் அவரைச் சிறந்ததொரு நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. தற்போது சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும், ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் எண்டர்டெய்னரான “மைக்கேல்” படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். பன்மொழி இந்தியத் திரைப்படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக, இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார். மிக முக்கிய...