Shadow

Tag: யுவராஜ்

அன்பிற்கினியாள் விமர்சனம்

அன்பிற்கினியாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எத்தனை வசீகரமான தலைப்பு? படமும் அப்படியே! மலையாளத்தில் அன்னா பென் நடித்த ‘ஹெலன்’ எனும் வெற்றிப்படத்தைத் தன் மகள் கீர்த்தி பாண்டியனுக்காகத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் அருண்பாண்டியன். மகள் மீது பாசம் கொண்ட அன்பிற்கினியானான அருண் பாண்டியன், படத்திலும் கீர்த்திக்குத் தந்தையாக நடித்துள்ளார். சிக்கன் ஹப் எனும் கடையில் பணி புரியும் அன்பிற்கினியாள், ஓர் இரவு அக்கடையின் ஃப்ரீஸர் அறையில் சிக்கிக் கொள்கிறார். -15 டிகிரிக்குக் கீழ் செல்லும் அந்த ஃப்ரீஸர் அறையில் இருந்து எவ்வாறு மீண்டார் என்பதுதான் படத்தின் கதை. ஆனால், படத்தின் கிளைக் கதைகளான தந்தை – மகள் உறவு; கடனிலுள்ள அன்பிற்கினியாளுக்கும், வாழ்க்கையைச் சீரியசாகப் பாவிக்காத சார்லஸ் செபஸ்டியனுக்கும் உள்ள காதல்; அனைவர் மீதும் எரிந்து விழும் சிக்கன் ஹப்பின் மேனஜர்; அலட்சியமே உருவான போலீஸ் அதிகாரி; சிறையிலிருக்கும் மனிதாபிமானமுள்ள கைதி; சிரித்த முகமா...
சூரரைப் போற்று விமர்சனம்

சூரரைப் போற்று விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
சூரன் என்றால் அநாயாசமான திறமை படைத்தவன் எனப் பொருள். விமானத்தில் செல்வதென்பதே எட்டாக்கனியாக இருக்கும் ஒருவன், ஏர்லைன்ஸ் ஆரம்பித்துக் காட்டுகிறேன் என்ற கனவு கண்டு, அதை நனவாக்கிய அசாத்திய சாகசம்தான் 'சூரரைப் போற்று' படத்தின் கதை. Simply fly! (தமிழில்: வானமே எல்லை) என்ற சுயசரிதைப் புத்தகத்தைத் தழுவி, ஒரு சுவாரசியமான புனைவாக்கத்தைக் கொடுத்துள்ளார் சுதா கொங்கரா. திரையரங்கில் பார்க்க வேண்டிய படமென்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது படம். திரையரங்கில் வெளியிட்டாலும், ரசிகர்கள் செல்லத் தயாராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், நேர்த்தியான விஷூவலும், ஜி.வி.பிரகாஷின் அற்புதமான இசையுமே! திரையரங்கில் பார்க்க வேண்டிய கொண்டாட்டத்தைப் படம் கொண்டுள்ளது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும், கொண்டாட்டத்திற்கான மேஜிக்கைச் செய்கிறது 'மண்ணுருண்ட', 'வெய்யோன் சில்லி', 'கா...
காமிக்ஸ்தான் போட்டியாளர்கள்

காமிக்ஸ்தான் போட்டியாளர்கள்

சமூகம்
பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்-அப் காமெடியனாகவும் இருக்கும் மாயாண்டி கருணாநிதி, நகைச்சுவைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர். பெங்களூருவைச் சேர்ந்த மாயாண்டி, மெதுவாக, உறுதியாக தனது லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறார். சென்னை, கோவை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் 300க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை மாயாண்டி நடத்தியிருக்கிறார். பல்வேறு கார்ப்ரேட் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் பார்ட்டிகளிலும் மக்களைச் சிரிக்க வைத்துள்ளார். அடிப்படையில் மாயாண்டி ஒரு சோம்பேறி நபர். தற்போது, 'தள்ளிப் போடுவதை நிறுத்தி இன்றே கடின உழைப்பு செய்யுங்கள்' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். 2055 ஆம் ஆண்டு இதைப் பிரசுரிக்கும் திட்டம் வைத்துள்ளார். இப்போதைக்கு இவரது திட்டம், அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் ‘செம காமெடிப்பா’ நிகழ...
ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

சினிமா
'அசுரன்', 'சூரரைப் போற்று' என்று தொடரும் ஜீ.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளார். உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் தனது தடத்தை வலுவாகப் பதிப்பார். 'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜீ.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாய்ச்சலுக்கு உறுதுணையாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்து 17 ஆம் தேதி இந்தப் பாடலை இருவரும் வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜீ.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள். ஒவ்வொருவருடைய பெயராக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியி...
வி | நானியின் 25வது படம்

வி | நானியின் 25வது படம்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திராகாந்தியுடன் நானியின் மூன்றாவது திரைப்படம் இது. நானியின் அறிமுகத் திரைப்படமான 'ஆஷ்தா சம்மா'வின் இயக்குநரும் மோகன கிருஷ்ணாவே! தனது 12 வருட பயணம் குறித்துப் பேசியிருக்கும் நானி, "நான் எப்போதுமே நல்ல நடிகனாக, ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்குத் தருபவனாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். 'ஆஷ்தா சம்மா' வெளியாகி 12 வருடங்கள் கடந்து விட்டன. 'வி' திரைப்படம் மூலம் அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தெலுங்கு ரசிகர்கள் என்னை அவர்களில் ஒருவனாகப் பார்ப்பதை எனக்குக் கிடைத்த ஆசிர்வாதமாக உணர்கிறேன். ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் எனது பொறுப்பு அதிகமாகிறது. ரசிகர்களின் பொழுதுபோக்குக்குத் தொடர்ந்து நல்ல திரைப்படங்களைத் தருவேன். 'வி' திரைப்படத்தைச் சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. என் மீது என்றும் அன்பைப் பொழியும் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக...
காமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்

காமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்

சமூகம்
அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியான காமிக்ஸ்டான் இந்தியில் 2 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிய பிறகு அதன் தமிழ் வெர்ஷனை இப்போது பெறுகிறது. பிரபல நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் 8 எபிசோடுகளுக்கு போட்டியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் நடுவர்களாகவும் இருந்து அடுத்த சிறந்த ஸ்டேண்ட் - அப் நகைச்சுவைக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பார்கள். மும்பை, இந்தியா, 3 செப்டம்பர் 2020 - அமேசான் ப்ரைம் வீடியோ இன்று காமிக்ஸ்தான் செம காமெடி பா-வின் டிரெய்லரை வெளியிட்டது, இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்தானின் தமிழ் வெர்ஷன். இந்த தொடரின் வெளியீடு தமிழில் ஒரிஜினல் கண்டெண்ட் வருவதில் ப்ரைம் வீடியோவின் ஆர்வத்தை குறிக்கிறது. இந்தப் புதிய தொடரில், தமிழ் காமெடித் துறையின் வல்லுநர்களாக இருக்கும், மூன்று பெரிய நகைச்சுவைக் கலைஞர்களா...
நானி வில்லனாக நடிக்கும் “வி” திரைப்படம்

நானி வில்லனாக நடிக்கும் “வி” திரைப்படம்

சினிமா, திரைத் துளி
நானியும், சுதீர் பாபுவும் நடித்துள்ள ‘வி’ படத்தின் ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தாய்லாந்தில் நடந்த அயல் நாட்டுப் படப்பிடிப்போடு சேர்த்து இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்கிற சிறப்பம்சம் பெற்றுள்ள திரைப்படம் இது. 'வி' திரைப்படத்தை ரசிகர்களுக்கு சுவாரசியமான பொழுதுபோக்கு படமாக மாற்ற பல விஷயங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக இந்தப் படத்தை மாற்ற காட்சி ரீதியாக ஒரு நிலையான அனுபவத்தைத் தர முயற்சி செய்திருப்பதாக இயக்குநர் மோகன கிருஷ்ணா கூறியுள்ளார். "பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களில் வழக்கமாக காட்சி ரீதியாக, வண்ணங்களில் வேறுபாடு இருக்கும். ஆனால் எங்கள் நோக்கமே வண்ணங்களில் அப்படி வேறுபாடு இல்லாமல் நிலையான ஒரு காட்சி அனுபவத்தைத் தருவது தான். இரவோ, பக...
காமிக்ஸ்தான்: அமேசான் Vs ட்விட்டர் காமெடியன்ஸ்

காமிக்ஸ்தான்: அமேசான் Vs ட்விட்டர் காமெடியன்ஸ்

சமூகம்
ரசிகர்களுக்குப் புதிய படைப்புகளைத் தருவதில் அமேசான் ப்ரைம் வீடியோ முன்னோடியாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவர்கள் விளையாட்டுகளும் சுவாரசியமானவையே. முன்னதாக இன்று, ப்ரைம் வீடியோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட் பகிரப்பட்டது. அதில் "ஹே மச்சான், ஒரு ஜோக் சொல்லட்டா. ஓப்பன் மைக்குக்கும், 2020 கிரிக்கெட் மைதானத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? ரெண்டுத்தையுமே நேர்ல பார்க்க ரசிகர்கள் வர மாட்டாங்க #OruJokeSollata 🤪 @evamkarthik @Comedy_Praveen #ComicstaanSemmaComedyPa" https://twitter.com/primevideoin/status/1300672989466304512?s=21 பல நகைச்சுவையாளர்களுக்கும், ப்ரைம் வீடியோவுக்கும் இடையே நகைச்சுவையான ஒரு உரையாடல் தொடங்கியது. நகைச்சுவையாளர் கார்த்திக் குமார் இந்த ட்வீட்டுக்கு பதில் பதிவிடுகையில், "ஐயோ, நெஞ்சுலியே அடி. ஃபீலிங்ஸ் பாதிப்பு. ஆனா இந்த ஜோக்குக்கு 4/10 தா...
தி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்

தி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்

Movie Posters, கேலரி, சினிமா
கார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், குழந்தை மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறைந்த நடிகர்களை வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவினருடன் 'தி சேஸ்' உருவாகியுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். இந்நிறுவனத்துக்காக கார்த்திக் ராஜு இயக்கி வரும் 'சூர்ப்பனகை' திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'தி சேஸ்' பணிகளை முடித்துவிட்டு, 'சூர்ப்பனகை' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 'தி சேஸ்' கதைக்களத்துக்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பொருத்தமான இடமாக இருந்ததால், அங்கேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு திரும்பியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பு...
ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

சமூகம்
சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பது நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். எப்போது நம்ம ஆட்கள் இப்படியெல்லாம் ஆல்பம் தயாரித்து வெளியிடுவார்கள் என்ற ஏக்கம் இருந்தது. அதையும் இப்போது ஒருவர் செய்து முடித்துள்ளார். ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ். 'அசுரன்', 'சூரரைப் போற்று' என இசைக்களத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜீ.வி.பிரகாஷ், இப்போது இந்த ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தைத் தொடங்குகிறார். 'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில்...
“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

சமூகம், சினிமா, திரைத் துளி
திரையரங்கு உரிமையாளர்களின் கடும் அதிருப்திக்கும், கோபத்திற்கும் இடையில், "பொன்மகள் வந்தால்" படம் அமேசான் ப்ரைமில் மே 29 அன்று வெளியாகவுள்ளது. ஓடிடி என்பது சினிமாவிற்கு மாற்றா, இல்லை சினிமா என்பதே தியேட்டரில் பார்த்து மகிழும் ஓர் அனுபவம், அதற்கு எந்தப் பாதிப்பும் மாறாது என விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா தனது படத்தைப் பற்றியும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்தும் பேசியுள்ளார். "எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால் தான் 2டி நிறுவனம் எனக்குப் பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். சில படங்கள் எந்தளவுக்குப் பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொ...
பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்

பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்

சினிமா, திரைத் துளி
அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்தியச் சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி* மக்களை இந்த ட்ரெய்லர் சென்...
“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

சினிமா, திரைத் துளி
ஓடிடி (OTT) பிளாட்ஃபாரத்தில் நேரடியாக வெளியாகும் முதல் இந்திய மெயின்ஸ்ட்ரீம் திரைப்படம் என்ற பெருமையைப் 'பொன்மகள் வந்தாள்' பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பினைத் தூண்டியுள்ள இந்தப் படத்தைப் பற்றி ஜோதிகா, "இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில்  5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் எப்படித் தங்களுடைய கதாபாத்திரத்துக்குத் தயார் செய்து கொள்கிறார்கள், நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாகக் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் 3 - 4 நீளமான வசனக் காட்சிகள் இருக்க...
கயிறு விமர்சனம்

கயிறு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்திற்கு ‘பூம்பூம் மாடு’ என்றே தலைப்பிட்டிருக்கலாம். கந்தன் எனும் ஒரு பூம்பூம் மாட்டையும், சின்ராசு எனும் பூம்பூம் மாட்டுக்காரனையும் சுற்றியே கதை நகர்கிறது. கதையின் மையமான மாட்டை, நாயகன் கயிற்றில்தானே கட்டி வச்சிருப்பார்! ஆக, மாடு வாங்குவதை விட அதற்கு மூக்கணாங்கயிறு வாங்குவது முக்கியமென்ற உயரிய கருத்தை உணர்த்துவதாக படத்தின் தலைப்பைக் கொள்ளலாம். நன்றாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டிடம், குறி கேட்பவர் கேள்விகளை முன்வைக்க, மாடு தலையாட்டுவதைக் கொண்டு பலன்கள் சொல்வர் பூம்பூம் மாட்டுக்காரர்கள். கோயில் திருவிழா போன்று மக்கள் கூடுமிடங்களிலோ, அல்லது ஒவ்வொரு வீடாகச் சென்று குறி சொல்லி காணிக்கை பெறுவதே அவர்களது ஜீவிதம். ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கும் கந்தன், பாண்டிய மன்னன் போல் மணமகன் கிடைப்பான் என சமத்துவபுரத்தைச் சேர்ந்த தாமரைக்குக் குறி சொல்லுகிறான் சின்ராசு. சின்ராசுக்கும், தாமரைக்கும் காத...