Tag: யுவராஜ்

பார்வதி நாயர் இஸ் எ டோஸ்ட்மாஸ்டர்
உலக அளவில் இலாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான டோஸ்ட்மாஸ்டர், 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் இந்த 'டோஸ்ட்மாஸ்டர்' தன்னார்வ தொண்டு நிறுவனம், கல்வியியல் துறையில் ஆக்கபூர்வமாக செயல்படும் தலைவர்களையும், தலைமைப் பண்புடன் கூடிய பேச்சாளர்களையும், மனதின் மாசுகளை அகற்றி, வலிமையான உளவியல் உத்திகளுடன் முன்னேற்றத்தை நோக்கி செல்வதற்கான பாணியை எளிதாக விளக்கும் சுயமுன்னேற்ற பேச்சாளர்களையும் உருவாக்கியிருக்கிறது. இவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள கௌரவ விருந்தினராக அழைக்கப்படுவதற்கே ஏராளமான தகுதிகள் வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் அனுபவ ஆளுமையுடன் சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கும் திறமையாளர்களையும், சாதனையாளர்களும் மட்டும்தான் இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு கௌரவ விருந்தினர்களாக அல்லது பேச்சாளர்களாகவும் அழைக்கப்படுவர். உதாரணமாக்க் ...

பார்டர் – அருண்விஜயின் ஆக்ஷன் த்ரில்லர்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்ஷன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் 'அருண்விஜய்யின் பார்டர்'. ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படமும் இணைகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் அருண் விஜயும் ஒருவர். 'அருண்விஜய்யின் பார்டர்' படத்திலும் துணிச்சல் மிக்க கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகையு...

துக்ளக் தர்பார் விமர்சனம்
அமாவாசைகளால் நிரம்பியது அரசியல்களம். சிங்கம் என்றழைக்கப்படும் சிங்காரவேலன் அப்படியொரு நபர். எதிர்பாராத விதமாக அவருக்குத் தலையில் அடிபட, சிங்கத்துக்குள் இருந்து ஒரு நல்ல மனம் படைத்த ஆளுமை பெளர்ணமி போல் உருவாகிறான். சிங்கத்துக்குள் இருக்கும் பெளர்ணமி மக்களுக்கு நல்லது செய்யப் பார்க்க, அமாவாசையோ மக்களை வஞ்சித்துச் சம்பாதிக்கப் பார்க்கிறான். துக்ளக் தர்பார் போல், சிங்கத்திற்குள் இருக்கும் ஆளுமைகள் சிங்கத்தைத் தன்வயப்படுத்த அவனை ஒரு வழி செய்கின்றனர். சிங்கத்தை எந்த ஆளுமை வசப்படுத்தியது என்பதே படத்தின் கதை.
கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மங்களமாக பகவதி பெருமாள் நடித்துள்ளார். தன்னிடத்தை நேற்று வந்தவன் பிடித்து விடுவான் என்ற பதற்றத்திலேயே இருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சிங்காரவேலனின் நண்பன் வாசுவாகக் கருணாகரன் நடித்துள்ளார். உற்ற துணையாக இருக்கும் நண்பன் கதாபாத்தி...

“நான் தான் அந்த பஃபூன்” – மீண்டும் வடிவேலு!
லைகா நிறுவனம் சார்பில் 'புரொடக்சன் 23' என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் இயக்குநர் சுராஜ் பேசுகையில், ''கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோகமயமாக இருந்தபோது நானும் வடிவேலுவும் சிரித்துப் பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ-என்ட்ரி முழுநீள நகைச்சுவைப் படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்துச் சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனைத் தொடங்க நினைத்த போது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன் மூலம் சுபாஷ்கரனிடம் பேசினோம். அவர் வடிவேலுவின் பிரச்சனைகளைத் தீர்...

டாக்டர் – 100% பொழுதுபோக்கு சினிமா
KJR ஸ்டுடியோஸ் மற்றும் SK ப்ரொடக்ஷன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில், ‘டாக்டர்’ படத்தின் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. டாக்டர் படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி J.ராஜேஷ், “டாக்டர் திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்தத் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழில் புதுமையான, இது போன்ற ஒரு ப்ளாக் காமெடி திரைப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது. டாக்டர் திரைப்படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால், அந்தக் காலகட்டத்தில் பல்வேறு OTT தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அப்போதும் டாக்டர் திரைப்படத்தைப் பெரிய ...

டிக்கிலோனா விமர்சனம்
ஓர் அம்பாஸிடர் கார் டிக்கியில் இருந்து படம் தொடங்குகிறது. ஷங்கரின் 'ஜென்டில் மேன்' உலகத்திற்கு அளித்த indoor game களில் ஒன்று 'டிக்கிலோனா'. இந்தப் படமும், சில விளையாட்டுகளை (!?) அடிப்படையாகக் கொண்டதே என்பதால் இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என படக்குழு தீர்மானித்திருக்கலாம்.
'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா; நயன்தாராக்கு த்ரிஷாவே மேல்' என்பது தான் படத்தின் ஒன்லைன்.
எதிர்பார்ப்புகள் பொய்த்து விரக்தியான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு கால இயந்திரம் (Time machine) கிடைத்து, தனது கடந்த காலத்தை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்? டிக்கிலோனா படத்தின் கதை அது தான். தன் மணவாழ்க்கையை மாற்றிக் கொண்டால் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறும் என காலப்பயணம் மேற்கொள்கின்றான் மணி.
காலப்பயணக் (Time travel) கதையை நகைச்சுவையுடன் சொல்ல முற்பட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் யோகி.
சந்தானம் மிக ஸ்லிமாக ஸ்மார்ட்டாக உள்ளார...

லாபம் விமர்சனம்
ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவுக் குரலாக தமிழ்த்திரையில் எஸ்.பி.ஜனநாதனின் குரல் எப்பொழுதும் ஒலிக்கும்.
தன் படங்களின் வழியே எளிய மக்களுக்கு எதிராக இருக்கும் முதலாளித்துவத்தையும், அதற்கு துணைபோகும் அமைப்புகளையும் அரசையும் அவரது படங்கள் கேள்வி கேட்கும். லாபத்திலும் அந்தக் கேள்வியை எழுப்பி, கேள்விக்கான விடைகளை வசனங்களாக அள்ளித் தெளித்துள்ளார்.
கம்னியூசத்தை அவ்வளவு எளிதில் மக்களுக்குப் புரிய வைக்க முடியாது என்ற பொதுப்புத்தியில் சம்மட்டி வைத்து அடிப்பது எஸ்.பி.ஜனநாதனின் பாணி. எதையுமே மிக எளிதாகப் புரிய வைக்கும் வல்லமை அவரிடம் உண்டு. அதை இப்படத்தில் சற்று அதிகமாகவே முயற்சி செய்து பார்த்துள்ளார். லாபத்தைப் பற்றியும் லாபத்தில் இருந்தே அனைத்து ஊழலும் உருவாகிறது என்பதையும் ஒரு குழந்தைக்கு விஜய் சேதுபதி சொல்லிக் கொடுக்கும் காட்சி வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கும் புரிய வைத்துள்ளார் ஜனநாதன்...

சூரரைப் போற்று – ஹிந்தி ரீமேக்!
'சூரரைப் போற்று' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான, 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனமும், அபூன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனமும் இணைந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்தப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபுன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் ஆகியவை இணைந்து சூரரைப்ப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கினைத் தயாரிக்கக் கூடாது எனவும், ஹிந்தி ரீமேக் படத்தின் பணிகளுக்கு உடனடியாக தடை விதிக்குமாறும் சென்னை உய...

லாபம் படத்தின் கதையென்ன? – எஸ்.பி.ஜனநாதன் | விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குநர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத...

ஆலம்பனா – குழந்தைகளை மகிழ்விக்க வரும் பூதம்
குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வித்தியாசமான படங்களுக்குத் தமிழ்த் திரையுலகு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதால், அவர்களைக் கவர்வது மிகவும் கடினம். இந்தக் கவரும் யுக்தியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே செய்திருக்கிறது 'ஆலம்பனா' படக்குழு. இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.
இது ஒரு ஃபேண்டஸி படம் என்பதை மட்டுமே தகவலாகப் படக்குழு தெரிவித்தது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் மூலமாகக் குழந்தைகள் முதல் முதியோர் வரை குஷிப்படுத்தும் பூதத்தை மையப்படுத்தி 'ஆலம்பனா' உருவாகியுள்ளது. இப்படத்தில் பூதமாக நடித்து அனைவரது மனதைக் கொள்ளைக் கொள்ளவுள்ளார் முனீஸ்காந்த். நாயகன் வைபவ் மற்றும் முனீஸ்காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெ...

டெடி விமர்சனம்
இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனின் ஐந்தாவது படம் டெடி. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்: டிக்: டிக் என அவரது அனைத்துப் படங்களுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வித்தியாசமான கரு கொண்ட படங்கள். டெடியும் அப்படியே!
OBE – Out of Body Experience. உடலுக்கு வெளியே நிகழும் அனுபவத்தை அழகான புனைவுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார் சக்தி செளந்தர் ராஜன். அவ்வனுபவத்தில் உடலை விட்டு உயிர் வெளியேறி விடும். அவ்வுயிருக்கு ஏற்படும் அனுபவங்களையே OBE என அழைப்பார்கள். புனைவின் சுவாரசியத்திற்காக, கோமாவில் உள்ள ஸ்ரீயின் உயிர், டெடி எனும் கரடி பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது. அதாவது ஸ்ரீயின் உயிர் ஒரே சமயம் அவரது உடலிலும் இழையோடுகிறது, கரடியின் உடலிலும் இருக்கிறது. மாயாஜாலம் போல! அது புனைவிற்கு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது.
அழகான சயிஷா, படத்தில் டெடியாக மட்டும் வலம் வருவது சற்றே வருத்தமான விஷயம். எனினும் டெடியின்...

தீதும் நன்றும் விமர்சனம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
கணியன் பூங்குன்றனாரின் மிகச் சிறப்புமிக்க இவ்விலக்கியச் செவ்வியல் வரிகளைத் தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் ராசு ரஞ்சித். அதற்காக அவருக்கு ஓர் எக்ஸ்ட்ரா பாராட்டுகள்.
ஒருவருக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும், அவரவரே காரணம் அன்றி, பிறரால் அது நிகழாது என்பதே கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்குப் பொருள். படத்தின் மையக் கதாபாத்திரங்களான ஈசனும், சிவாவும் தனக்கான தீமையை அவர்களே தேடிக் கொள்கின்றனர்.
மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஈசனும், சிவாவும் நண்பர்கள். மாறன் எனும் நண்பன் ஊருக்கு வரும் நாட்களில், முகமூடி அணிந்து கொள்ளையடிக்கவும் செய்கின்றனர். அதனால் ஈசனும் சிவாவும் சிறைக்குச் செல்ல நேருகிறது. வெளியில் வந்த பின்னும், சூழ்நிலை காரணமாகக் கடைசியாக ஒருமுறை திருடலாம் என முடிவெடுக்கின்றனர். மாறனோ, கொள்ளையடிக்க என நண்பர்களை அழைத்து, ஒரு கொலை ச...

சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி
எழும்பூரில் உள்ள பழைய கமிஷ்ணர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர் பயிற்சி நடத்தப்படுகிறது. கிளப்பில் முன்பதிவு அடிப்படையில் மாணவ உறுப்பினர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிளப் அதன் தலைவர் காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் தலைமையிலும், துணைத் தலைவர் திரு. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையிலும் இயங்குகிறது.
கௌரவ செயலர் ராஜசேகர் பாண்டியன் கூறும்போது, "துப்பாக்கிச் சுடுதலை கற்றுக் கொண்டு அதில் சிறந்து விளங்க ஆர்வம் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. இந்த மாணவர் பயிற்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே, துப்பாக்கிச் சுடுதல் என்பது ஒரு எட்டாக்கனி என்ற கருத்தை மாற்றத்தான். இந்த விளையாட்டை அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக ஆக்குவதே இந்தப் ...

மோகன்தாஸ் – ஓர் எமோஷனல் த்ரில்லர்
வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.
'மோகன்தாஸ்' படத்தைக் 'களவு' படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளா...



