Shadow

Tag: யுவராஜ்

அருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்

அருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்

கேலரி, சினிமா
     View this post on InstagramTeam #AV31 Celebrated #Holi at #Agra after a Packed Schedule! @arunvijayno1 @ReginaCassandra @dirarivazhagan @stefyPatel #VijayaRaghavendra @SamCSmusic @editorsabu @SaktheeArtDir @reddotdzign1 @DoneChannel1 @shiyamjack @proyuvraaj #AV31HoliCelebration A post shared by இது தமிழ் (@ithutamil) on Mar 11, 2020 at 6:47am PDT
பிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு

பிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு

சினிமா, திரைத் துளி
பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரொடக்சன்ஸ் கலை, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இந்தப் படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூடத் திரைப்படம் என்றால் பழைய நினைவுகளைக் குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்தத் திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது. இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை...
வெல்வெட் நகரம் விமர்சனம்

வெல்வெட் நகரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொடைக்கானல் மலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானதல்ல எனக் கோரும் நடிகை கெளரி கொல்லப்படுகிறாள். அத்வைதா எனும் நிறுவனம், மலையில் செய்த சதியை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகப் பத்திரிகையாளர் உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்படுகிறார் கெளரி. ஏன் யாரால் கெளரி கொல்லப்படுகிறார் என்பதும், உஷா கெளரியின் கொலைக்கும், மலைக்கிராம மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரா என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் கதை 48 மணி நேரத்திற்குள் நடப்பதாக அமைந்துள்ளது. முதல் நாள் இரவு கெளரி இறக்க, அவர் சேகரித்த தரவுகள் அடங்கிய கோப்பினைத் தேடி பிரியா வீட்டுக்குச் செல்கிறார் பிரியா. அன்றைய இரவு, பிரியாவின் வீட்டுக்குள் நுழையும் மைக்கேல் குழுவின் தலையீடால் என்னாகிறது என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி. பிரியாவாக மாளவிகா சுந்தர் நடித்துள்ளார். அவரது கணவர் முகிலனாக பிரதீப் பெனி...
“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை

“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை

சினிமா, திரைச் செய்தி
அறிமுக கதாநாயகனான துருவ் விக்ரம், "ஆதித்யா வர்மா படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்திக் கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. இசையமைப்பாளர் ரதன் உழைப்பு மிகப் பெரியது. கிரிசாயா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். தனுஷ் (படத்தில் நண்பனாக நடித்தவர்) முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா (படத்தின் இணை இயக்குநர்) நல்ல உழைப்பாளி. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூடப் படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாகச் செய்வார். அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப் படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எஃபெர்ட் தான் படமே. அவர்கள...
ஆதித்ய வர்மா விமர்சனம்

ஆதித்ய வர்மா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து, 2017 இல் வெளிவந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தின் தமிழ் ரீமேக்காய் வந்துள்ளது ஆதித்ய வர்மா. விக்ரம் தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்துள்ள படமிது. விக்ரமிற்கு, ‘ப்ரேக்’ கொடுத்த படம், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘சேது’. ஒரு பிராமணப் பெண்ணை உருகி உருகிக் காதலிக்கும் கோபக்கார இளைஞனான சேதுவிற்கும் இப்படத்திற்கும் ஓர் ஒற்றுமையுண்டு. முக்கியமானதொரு வேற்றுமையும் உண்டு. அது, சேது படத்திலுள்ள நேட்டிவிட்டி இந்தப் படத்தில் மிஸ்ஸிங். இவன் தான் நாயகனென உள்வாங்கிக் கொள்ள சிரமமாக உள்ளது. முக்கியமாகப் படத்தின் முதற்பாதி ஒட்டாமல் மிக அந்நியமாக உள்ளது. இரண்டாம் பாதியும் ஸ்லோவாகப் போனாலும், நாயகனின் வலியையும் காதலையும் தன் அநாயாசமான நடிப்பால் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். வசனங்களை மிகக் கவனமாகக் காது கொடுத்து கேட்டாலன்றி முழுவதுமாகப் புரியவில்லை. சட்டென ...
ஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி

ஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி

சினிமா, திரைச் செய்தி
துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ்த் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்தப படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில்," நான் பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ்த் திரைத் துறையில் தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யார் பெஸ்ட் எனக் கேட்கிறார்கள். விஜய் தேவர...
45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி

45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி

சமூகம்
புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், 'தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்' என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 45 ஆவது துப்பாக்கி சுடுதல் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, பறந்து சென்ற தட்டுகளைத் துப்பாக்கி தோட்டாக்களால் சுட்டு வீழ்த்தினர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் மற்றும் மிக்ஸடு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் சர்வதேச வீரரான பிரித்விராஜ் தொண்டைமான் சிங்கிள் டிராப் பிரிவில் 50 தோட்டாக்களுக்கு 49 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டைச் சுட்டு வீழ்த்தி புதிய...
மகாமுனி விமர்சனம்

மகாமுனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகாமுனி என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் கெளதம புத்தர். இந்தியப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேடினால் சில பெயர்கள் கிடைக்கலாம். ஆனால், மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை, மகாமுனி என்றால் புத்தர்தான். சத்திரியனாக இருந்து துறவு மேற்கொண்டு முனியானவர் என்பதைப் படத்தோடு பொருத்திக் கொள்ளலாம். சகோதரர்களான முனிராஜும் மகாதேவனும் சிறு வயதிலேயே பிரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரின் வாழ்வும் ஒரு புள்ளியில் இணைந்து மகாமுனியாய் பரிமாணம் பெறுவதுதான் படத்தின் கதை. இயக்குநர் சாந்தகுமார், படம் தொடங்கியதுமே ஒரு கனமான போர்வையைப் பார்வையாளர்கள் மீது படர விடுகிறார். இறுதி வரை அதை விலக்க முடியாமல், பார்வையாளர்கள் அதன் கனத்தைச் சுமந்தவண்ணமுள்ளனர். அடுத்து என்ன என்ற பதைபதைப்போ, சுவாரசியமோ இல்லை. திரையில் காணும் பிரதான கதாபாத்திரங்களோடு பார்வையாளர்களால் தங்களைப் பொருத்திப் பார்த்துக் ...
இசை தான் என் ஜீவன் – அஜீஸ்

இசை தான் என் ஜீவன் – அஜீஸ்

சினிமா, திரைத் துளி
  7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசையமைப்பாளராகத் தனது தடத்தை அழுத்தமாகப் பதித்துள்ளார் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார். 2009 சூப்பர் சிங்கர் சீசன் 2 இல் குரலால் வசீகரித்தவர். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்பொழுதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய, 'இதுவரை' பாடல் மிகவும் பிரபலம். பாபி சிம்ஹா நடித்த பாம்புசட்டை படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கின்ற சர்பத் படத்தில் ஐந்து பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், "இசை தான் என் ஜீவன்" என்கிறார். மேலும் ஒரு வெப்சீரிஸுக்கும் இசையமைத்து வரும் அஜீஸ் சர்பத் படத்தின் இசை வெளி...
சிறந்த நடிகராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு

சிறந்த நடிகராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு

சினிமா, திரைச் செய்தி
நாச்சியார், சர்வம் தாளமயம் போன்ற படத்தில் வித்தியாசமன பாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்த ஜி.வி.பிரகஷ்க்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசை ஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாகக் கொண்ட இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றது. ஜப்பானில் நடைபெற்ற டோக்கி...
ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

சினிமா, திரைச் செய்தி
2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி, ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ந்தது. விழாவில் பேசிய ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா, "ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை ஃபைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸ்ட்க்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்" என்றார். நடிகை சச்சு, "கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். படம் பண்ணுவது சிவக்குமார் ஃபேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் ஆரம்பத்தில் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா ...
A1 விமர்சனம்

A1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐயங்கார் பெண்ணான திவ்யா, சரவணனை ஐயங்கார் பையனென நினைத்துக் காதலிக்கிறார். சரவணனோ லோக்கல் பையன். திவ்யாவின் அப்பாவோ இக்காதலை ஒத்துக் கொள்ளவில்லை. நாயகனின் நண்பர்கள் இணைந்து நாயகியின் தந்தையைக் கொன்றுவிடுகின்றனர். பின், சரவணன் - திவ்யா காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. என்ன தான் நகைச்சுவைப் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது அடிப்படை விதி என்றாலும், காதல் வர இவ்வளவு மொக்கையான காரணத்தை வைத்திருக்கவேண்டாம் இயக்குநர் K.ஜான்சன். சண்டை போடும் ஐயங்கார் பையன் என்பதால் நாயகிக்கும்; முதல் முறை பார்த்ததுமே காதலைச் சொல்லி, அதை உறுதிபடுத்த உதட்டில் முத்தமே கொடுத்துவிடுவதால் நாயகனுக்கும் காதல் வந்துவிடுகிறதாம். ஷ்ஷ்ப்ப்பாஆஆ.. நாயகனின் தந்தை லோகுவாக எம்.எஸ்.பாஸ்கர் செமயாக நடித்துள்ளார். கதாபாத்திரங்களின் டைமிங் டயலாக்கால், காமெடியில் ஸ்கோர் செய்யும் படம் இது. ஆனால் தேர்ந்த நடிப்பையும், உடற்மொழ...
A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

சினிமா, திரைச் செய்தி
சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் ஜுலை 26 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி.செளத்ரி வெளியிடுகிறார். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், "சூது கவ்வும் படத்திற்குப் பிறகு எனக்கு மிகப் பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் எப்பவாவது வரும். இந்தப் படமும் சமத்துவத்தை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்துக் கொண்டு மக்களை என்டெர்டெய்ன் பண்றது ரொம்பக் கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். இந்தப் படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம் இந்தப் படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் இந்தப் படம் நல்லா இருக்கும் என்று நம்பிக்க...
கடாரம் கொண்டான் விமர்சனம்

கடாரம் கொண்டான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மலேஷியாவின் கேதா எனும் மாநிலத்தின் பண்டைய தமிழ்ப்பெயர் கடாரம் ஆகும். அந்த மாநிலத்தில், பரவலாக ஒரு கலவரத்தினை உருவாக்கும் அளவு செல்வாக்கு கொண்டவன் நாயகன் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். 2010 இல் வெளிவந்த 'ஆ பூ போர்தான்த் (À bout portant)' என்ற ஃப்ரென்ச் படத்தை அடிப்படையாக வைத்து எழுதி இயக்கியுள்ளார் தூங்கா வனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் ம செல்வா. 'ஆ பூ போர்தான்த்' என்றால் "மிக அருகில்" எனப் பொருள். இதே ஃப்ரெஞ்சு படத்தைத் தழுவி, நெட்ஃப்ளிக்ஸால் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படத்திற்கு 'பாயின்ட் பிளான்க்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது என அதற்குப் பொருள். தமிழிலோ, நாயகன் துதி பாடும் தலைப்பாய் மாற்றப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. சிறைக்குச் சென்று, வெளியில் வந்து அமைதியாக வாழும் கே.கே.வை ஒரு கொலைவழக்கில் சிக்க வைத்துக் கொல்லப் பார்க்கிறான் வின்சென்ட். கே.கே. ...