Shadow

Tag: ஹரிஷ் கல்யாண்

லப்பர் பந்து விமர்சனம்

லப்பர் பந்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வெற்றி என்பது இலக்குகளைத் தீர்மானித்து ஓடுவது அல்ல நான்கு பேருக்கு நன்மை பயக்கும் விதமான மாற்றத்துக்கு முன்னுரிமை தருவதென்ற மிக மெச்சூர்டான விஷயத்தைப் பேசியுள்ளது படம். கிரிக்கெட் மீதான ஈடுபாடு, ஈகோ, காதல், குடும்பம், உறவுகளுக்குள் உண்டான பிணைப்பு, ஈகோவைத் துறத்தல்,மென்னுணர்ச்சி (Sentiment), எமோஷன்ஸ், நட்பு, சாதி, சமூக நீதி என இப்படம் கலந்து கட்டி ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ரசிக்க வைக்கிறது. "கெத்து" என அழைக்கப்படும் 39 வயது நட்சத்திர பேட்ஸ்மேனை ஆஃப் சைடில் பந்து போட்டுத் தன்னால் அவுட்டாக்க முடியுமெனத் தன் நண்பனிடம் சொல்கிறான் நட்சத்திர ஆல்-ரவுண்டரான அன்பு. அதைக் கேட்டுவிடுகிறார் கெத்தின் நண்பன். சின்னதாய்த் தொடங்கும் இந்த மோதல், கெத்து - அன்புக்கிடையே பலமான ஈகோவாக வளர்ந்து விடுகிறது. கெத்தின் மகளைத்தான் தான் காதலிக்கிறோம் என அன்புவிற்குத் தெரிய வருகிறது. காதலா, மோதலா, கிரிக்கெட்டா, குடும்...
“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்

“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்

இது புதிது, சினிமா, திரைத் துளி
பார்க்கிங் படத்தைப் போல் ஒரு அசத்தலான கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இதுவரை ஹரிஷ் கல்யாண் நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தமிழரசன் பச்சமுத்து இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் லப்பர் பந்து படத்தைத் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக அ. வெங்கடேஷ் இணைந்துள்ளார். இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க கதாநாயகிகளாக ‘வதந்தி’ சீரிஸ் புகழ் சஞ்சனா, சுவாசிகா விஜய் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், தேவதர்ஷினி, பாலசரவணன், டி எஸ்கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 20ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ளது. படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பகிர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், “பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதற்காக பேசிக்கொண்டிருந்த ...
பார்க்கிங் விமர்சனம்

பார்க்கிங் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மனிதனின் அடிப்படை குணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று காமம், மற்றொன்று கோபம். இந்த இரண்டு உணர்ச்சிகள் மட்டும் தான் அடிப்படையான உணர்ச்சிகள். மற்ற உணர்ச்சிகளான காதல், அன்பு, பாசம், நேசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரக்கம் காட்டுதல் இப்படி எல்லா உணர்வுகளும் நம் கற்பிதங்களால் மனிதனுக்குள் வளர்க்கப்பட்ட விடயங்களே.  இது போன்ற உணர்வுகளை நாம் தலைமுறை தலைமுறையாக கற்பித்துக் கற்பித்து, இன்று மனித இனம் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு உயர் நிலைக்குச் செல்வதே மனிதனுக்கும் மனிதகுலத்திற்கும் பெருமை. ஆனால் ஒரு சூழலில் அதுவும் குறிப்பாக ஈகோ நம் மனதிற்குள் நுழையும் போது, மற்ற எல்லா உணர்வுகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு நம் மனதிற்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான கோபத்திற்கு மட்டும் நாம் தீனி போடத் துவங்கினால் நாம் முற்றிலும் மனிதத்தை இழந்து மிருகமாக மாறிவிடுவோம்....
“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

சினிமா, திரைச் செய்தி
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளைக் கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னைத் தயார...
LGM விமர்சனம்

LGM விமர்சனம்

இசை விமர்சனம், இது புதிது, சினிமா
தங்களுக்குள் காதல் ஒத்துவருமா என்று தெரிந்து கொள்ள 2 வருட அக்ரிமென்ட், கல்யாணம் செய்து மாமியாருடன் ஒரே வீட்டில் வாழ்வது ஒத்து வருமா என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ட்ரிப். இது தான் LGM இன் கதை. இந்தியக் கிரிக்கெட்டின் இன்றைய அடையாளமாகவும், சென்னையின் தவிர்க்கமுடியாத அடையாளமாகவும் மாறி இருக்கும் தல தோனியின் தோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தோனியின் மனைவி ஷாக்ஷி தோனி தயாரித்திருக்கும் திரைப்படம் LGM என்பதால் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைத் திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறது என்பதே உண்மை. தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கெளதம், மீராவிற்கும் ஒருவரையொருவர் பிடித்திருக்கிறது. ஆனாலும் இருவருக்குள்ளும் செட் ஆகுமா என்பதைத் தெரிந்து கொள்ள நவீனகால யுக்தியான 2 வருடம் பழகிப் பார்க்கும் கான்செப்டை கையில் எடுக்கிறார்கள். ஒரு வழியாக இருவருக்கும் ஒத்துப் போக...
தாராள பிரபு விமர்சனம்

தாராள பிரபு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘விக்கி டோனர்’ என 2012இல் வெளிவந்த ஹிந்திப் படத்தின் ரீமேக்காக இப்படம் வெளிவந்துள்ளது. ஜுஹி சதுர்வேதியின் கதையை, விவேக்கை உள்ளே கொண்டு வந்து மேலும் நகைச்சுவையாகப் படத்தை எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. ‘என்னது நீ ஸ்பேர்ம் டோனரா?’ என நாயகி கேட்கும் பொழுது கேவலமாகத் தெரியும் தொழில், விவேக் ஸ்பேர்ம் (விந்து) பற்றிப் பேசும்பொழுதெல்லாம் ரசிக்க முடிகிறது. படத்தின் நாயகனே விவேக் தான் எனச் சொல்லுமளவு, முதல் ஃப்ரேமில் இருந்து கடைசி வரை அதகளம் புரிந்துள்ளார். தன் வசன உச்சரிப்பாலும், கண்ணை உருட்டும் நடிப்பாலும் படத்திற்குக் கலகல டோன் கொடுத்துள்ளார் விவேக். ஜாலியான படத்திற்குத் தனியொரு நபராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தடம் படத்து நாயகி தான்யா ஹோப், நிதி மந்தனா எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். அதிகம் பேசாதவராக அறிமுகமாகி, மெல்ல நாயகன் மேல் விருப்பம் கொண்டு, மிக மெச்சூர்டாக த...
திகங்கனா சூர்யவன்ஷி @ தனுசு ராசி நேயர்களே

திகங்கனா சூர்யவன்ஷி @ தனுசு ராசி நேயர்களே

சினிமா, திரைத் துளி
தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்குப் பதிலாக பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இச்செய்தியை உறுதி செய்த இயக்குநர் சஞ்சய் பாரதி கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை நாயகிகளில் ஒருவராகப் பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது. இருப்பினும், நடிகை ரியா அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் ...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோவக்கார இளைஞனான கெளதம் மீது தாராவிற்குக் காதல் மலர்கிறது. அந்தக் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ஹரிஷ் கல்யாண் அருகில் ஒரு கதாநாயகி மிளிர்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். பியார் பிரேமா காதல் படத்திலும் கூட ரெய்ஸாவைப் பின்னுக்குத் தள்ளி தன் பிரகாசமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை வெளிப்படுத்தியிருப்பார் ஹரிஷ். இப்படத்திலும், கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத்க்கு அதே பிரச்சனைதான். அவரது நடிப்பாலும், ஃப்ரேமில் தனியாகத் தெரியும்பொழுது ஈர்த்தாலும், நாயகனுடனான க்ளோஸ்-அப் காட்சியில் சோடை போகிறார். மஞ்சுளாவைக் கல்லூரி மாணவியாகவும் ஏற்றுக் கொள்ளச் சிரமமாக உள்ளது. எனினும், இதய ராணியாக அவரது நடிப்பு மிகவும் அற்புதமாக உள்ளது. முடிவெடுக்க முடியாமல் குழம்பி, அக்குழப்பத்தை நாயகன் மேல் கோபமாகக் காட்டும் காட்சி என தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக நடித்துள்ளார். படத்தின் பலமே, பிரதான பாத்திரங்களின் கே...
பியார் பிரேமா காதல் விமர்சனம்

பியார் பிரேமா காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல். நிறையக் காதல் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். மிகச் சாதாரணனான ஸ்ரீகுமாரும், அதி நவீனமான சிந்துஜாவும் காதலிக்கின்றனர். ஸ்ரீகுமார்க்குக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் குட்டியோடு வாழ ஆசை; சிந்துஜாவிற்குத் தன் லட்சியக் கனவை அடைய கல்யாணமும் குழந்தையும் தடையாக இருக்கும் என எண்ணும் லிவ்விங் டுகெதர் யுக பெண். அப்போ இருவருக்குமிடையேயான காதல்? அதுதான் படத்தின் கதை. படத்தில் மூன்று நாயகர்கள். ஒன்று படத்தைத் தயாரித்து, இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா. அடுத்து, கலை இயக்குநர் E.தியாகராஜன். கடைசியாகப் பிரதான நாயகனெனச் சொல்லக் கூடிய அளவு இளமைத் துள்ளலை வண்ணமயமாகத் திரையில் காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சர்யா. பாடல் காட்சிகள் தோன்றும் பொழுதெல்லாம், திரையரங்கில் இளைஞர்களின் ஆரவாரம்தான். ஸ்ரீகுமாராக ஹரிஷ் கல்யாண். சிந்துஜாவாக நடித்துள்ள கதாநாயகி ரெய்ஸாவைக் காட்டிலும் க்யூட்டான முகபாவனைகளில்...