Shadow

Tag: சக்தி சரவணன்

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே'. தணிக்கை கெடுபிடிகளுக்காக, தலைப்பில், பெண் என்பது 'பென்'னாக மாறியுள்ளது. ப்ளே பாயாக சுற்றித் திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி பணம் பார்ப்பான். இல்லையெனில், எடுத்தவற்றை விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பர். அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அவ்வழக்கினைப் போலீசார் துப்புத் துலக்கத் தொடங்குகிறார்கள். அரவிந்த், அடுத்து நந்தினி எனும் பெண்ணைக் காதலிக்க, இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர் செல்கிறார்கள்...
ஜனவரி 7 முதல் ‘அடங்காமை’

ஜனவரி 7 முதல் ‘அடங்காமை’

சினிமா, திரைத் துளி
"திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக 'அடக்கமுடைமை' அதிகாரத்தில் முதலில் வரும் 'அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்' என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும். ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை ஜனவரி 7 முதல் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்" என்றனர் தயாரிப்பாளர்கள் பொன் புலேந்திரனும், மைக்கேல் ஜான்சனும். திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத்திரைப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகின்றனர். தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத்தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்க...
#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

சினிமா, திரைத் துளி
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. நாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதா ராவ் பேசும்போது, "என் கணவர் நடித்ததால் என்று மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் தான். படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் நான் அதிர்ந்தேன். இது என்ன தலைப்பு என்று எனக்குக் கோபமாக வந்தது. அவர் பேசிய பிறகுதான் புரிந்தது. இந்தப் படம் பார்த்த பிறகு பெண்களுக்குச் சுற்றிலும் உள்ள மனிதர்களால், பழகும் மனிதர்களால் உள்ள ஆபத்தைப் பற்றி யோசிக்க வைக்கும். நல்லவர்கள் தானே என்று நம்பும் நாம் அவர்களைப் பற்றி சரியானவர்கள் தானா என்று சிந்திக்க வைக்கும். யாராவது படத்தைப் பார்த்த ஒரு பெண் யோசித்த...
“செல்ஃபோனால் கலாச்சார சீர்கேடுகள்” – இயக்குநர் பேரரசு குற்றச்சாட்டு

“செல்ஃபோனால் கலாச்சார சீர்கேடுகள்” – இயக்குநர் பேரரசு குற்றச்சாட்டு

சினிமா, திரைச் செய்தி
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு, “'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது என்று சொன்னார்கள். சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்ல...
‘துரத்தும் பட்டாசு பாலு’ – பசுபதி | இயக்குநர் பேரரசு

‘துரத்தும் பட்டாசு பாலு’ – பசுபதி | இயக்குநர் பேரரசு

சினிமா, திரைத் துளி
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, “சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும், விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தால் பொழுதுபோக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும். அப்புறம் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. சினிமா சரியாக இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு படங்கள் வந்தால் தான் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம். இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்...
நடப்பு அரசியலைத் தோலுரிக்கும் படத்தில் நாயகன் ப்ரஜின்

நடப்பு அரசியலைத் தோலுரிக்கும் படத்தில் நாயகன் ப்ரஜின்

சினிமா, திரைத் துளி
ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா, ஜனவரி 4 ஆம் தேதி அன்று வளசரவாக்கத்தில் நடந்தது. இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை 'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். இந்த புதிய படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும் நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா , சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு விசுவாசம் படத்தில் பணியாற்றிய ஜிஜு, உடன்பிறப்பே படத்தில் பணியாற்றிய முஜிபுர் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார். ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்றிருக்கும் ஒருவனுக்கும், ‘எப்படியும் வாழலாம்’ என்று இருக்கும் இன்னொருவனுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை. "இப்படம் அரசியல், நகைச்சுவை, காதல்,...
MUDDY திரை விமர்சனம்

MUDDY திரை விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சகதியும் சேறும் நிரம்பிய கரடுமுரடான பாதையில், விறுவிறுப்பான கார் சேஸிங் (chasing) காட்சிகளை ரசிப்பவர்களுக்கான ஆக்ஷன் திரைப்படம். மட்டி ரேஸை (mud race) மையமாகக் கொண்டு, இந்திய சினிமாவில் வந்துள்ள முதல் படமிது. பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ்  பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் மட்டி. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் மலையாளப் படமான இது, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அண்ணன் தம்பி இருவர், ஒரு பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள். தம்பி கல்லூரியில் வில்லனை ஒரு விவகாரத்தில் சீண்ட, அந்த வில்லன், 'உன்னை மட்டி ரேஸில் தோற்கடித்து எப்படி அழிக்கிறேன் பார்!' என சபதம் எடுக்கிறார். இந்த நிலையில் தம்பியைக் காக்க அண்ணன் வருகிறார். அண்ணன் தம்பி இருவரும் இணைந்து வில்லனை மட்டி ரேசில் ஜெயித்து எப்...
“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

சமூகம், சினிமா, திரைச் செய்தி
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் சங்கத் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, "இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளைப் பாடலில் பார்த்தோம். கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும். ஏன் என்றால் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் நன்றாக ஓடியது. அது மாதிரி சில படங்களும் ஓடின. அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான் பயந்தேன். மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூடப் போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது. அதே போல் இந்தப் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கின்றன. நிறைய காட்சிகள் எடுத்து சிலவற்றைத்தான் இதில் வைத்த...
நீ சுடத்தான் வந்தியா – டிக்டாக் புகழ் இலக்கியா நாயகியாக அறிமுகமாகும் படம்

நீ சுடத்தான் வந்தியா – டிக்டாக் புகழ் இலக்கியா நாயகியாக அறிமுகமாகும் படம்

சினிமா, திரைச் செய்தி
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நாயகனும் தயாரிப்பாளருமான அருண்குமார் பேசும்போது, " எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை. எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன். பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை. எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன். நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை. அதற்கு ஒரு முன் தயாரிப்பாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு பொன்ராஜ் என்பவர் எனக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். பிறகுதான் நடிக்க...
‘பெண்’ – குறும்படப் பாடல்

‘பெண்’ – குறும்படப் பாடல்

சமூகம், சினிமா
பெண்கள் தினத்தை முன்னிட்டு "பெண்" என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது. வெங்கட் பிரபுவிடம் உதவியாளராகப் பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார். இப்பாடலில் வளர்ந்துவரும் பிரபல முன்னனி பாடலாசிரியர் அருண்பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி 2, திமிரு புடிச்சவன், கொலைகாரன், களவாணி 2, கபடதாரி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.  தனது நடிப்பு அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அருண்பாரதி, "பாடலுக்குப் பின்னால் பணியாற்றிய நான், முதன் முறையாகப் பாடலுக்கு முன்னால் தோன்றி முகம் காட்டியிருக்கிறேன். தொடர்ந்து சமூகத்திற்குப் பயன்படும் நல்ல படைப்புகளைக் கொடுப்பது என் கடமை" என்று கூறினார். இப்பாடலுக்கு அபுபக்கர் இசையமைக்க, P.T தினேஷ் மற்றும் தமிழ்செல்வன் இரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து இப்பாடலை எழுதியுள்ளனர்....
சூப்பர் டூப்பர் திரைப்படம்

சூப்பர் டூப்பர் திரைப்படம்

சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் என்பது விலை மதிப்புமிக்க போதைப் பொருள் ஒன்றின் பெயர். டூப்பர் என்பது, ஏமாற்றுக்காரனான தன்னைத் தானே நாயகன் அழைத்துக் கொள்ளும் ஒரு பட்டப்பெயர். நிழலுலகத்து மைக்கேலிற்குச் சொந்தமான சூப்பர், டூப்பரிடம் சிக்கிக் கொள்கிறது. மைக்கேல் சூப்பருக்காக டூப்பரைத் துரத்த, டூப்பர் மைக்கேலிடம் இருந்து தப்பித்து, பின் சூப்பர் டூப்பர் அவதாரமெடுத்து, மைக்கேலைத் தன் வழியிலிருந்து அகற்றுவதுதான் படத்தின் கதை. கோமாளி படத்தில் மனநல மருத்துவராக நடித்திருக்கும் சாரா, இப்படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். நாயகனின் மாமாவாக மீசை வைத்தும், ஐபிஎஸ் விக்ரமாக மீசை இல்லாமலும் வருகிறார். ஷிவா ஷா ரா எனத் திரையில் அவரது பெயரும் நீளம் பெற்றுள்ளது. பேசியே கொல்கிறார், ஆனால் நகைச்சுவைக்குக் கொஞ்சமும் உதவவில்லை. இந்தப் படத்தில் இவர் ஏன் இரண்டு பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள அடுத்த பாகத்திற்குக் காத்த...
புன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்

புன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்

சினிமா, திரைத் துளி
கதையின் பிரதான பாத்திரம் ஏற்று ஏராளமான வசனங்கள் பேசி நடித்திருக்கும் முன்வரிசை கதாநாயகர்கள் தவிர, அந்த முன்வரிசை முகங்கள் தவிர பிற முகங்கள் மனதில் பதிவதில்லை. அதற்கடுத்த இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்கள் காலதாமதமாகவே பார்வையாளர் மனதில் பதிவார்கள். மூன்றாவது வட்டத்தில் இருப்பவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம் பெரும்பாலும் வணிகப் படங்களில் அவர்கள் முகம் நமக்குள் பதிய முகாந்திரம் இல்லாமல் போகிறது. இப்படி மூன்றாவது வட்டத்திலிருந்து இரண்டாவது வட்டத்திற்குப் போராடும் நடிகர்களில் ஒருவர் தான் ஜி.எம்.சுந்தர். இவர் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களால் ' புன்னகை மன்னன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். கமலின் 'சத்யா' படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு ' படத்திலும் மு...
“வாழ்க விவசாயி: மக்களை விவாசயம் பக்கம் திருப்பும் படம்” – அப்புக்குட்டி

“வாழ்க விவசாயி: மக்களை விவாசயம் பக்கம் திருப்பும் படம்” – அப்புக்குட்டி

சினிமா, திரைத் துளி
இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் 'வாழ்க விவசாயி'. விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது .மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி. "எனக்கு 'அழகர்சாமியின் குதிரை' படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்தது. அதற்குப் பிறகு, நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக 'வாழ்க விவசாயி 'கதை அமைந்திருக்கிறது . அந்தக் கதையைச் சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. நான் ஆசைப்பட்டு ...
‘செளந்தர்யா: ஒரு அண்ணனின் நினைவுகள்’ – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

‘செளந்தர்யா: ஒரு அண்ணனின் நினைவுகள்’ – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

சினிமா, திரைச் செய்தி
'தண்டகன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், மேகா பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், "இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார். அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. உலகம் சினிமாவைப் பற்றி தவறாகப் பேசும் போது ஒரு நடிகை இயக்குநரை அப்பா என்று அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம்? எவ்வளவு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருந்தால் இப்படிக் கூறி இருப்பார்? சினிமா ஒரு நல்ல அருமையான தொழில். இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது. இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது. அது பலருக்கும் தெரிவதில்லை. நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்ய வ...
தண்டகன் – ராமாயணக் கதாபாத்திரத்தின் பெயரிலொரு படத்தலைப்பு

தண்டகன் – ராமாயணக் கதாபாத்திரத்தின் பெயரிலொரு படத்தலைப்பு

சினிமா, திரைத் துளி
புகழ் பெற்ற இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை 'தண்டகன்' படம் பார்த்தால்தான் உணர முடியும். இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். இப்படத்திற்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே. மகேந்திரன். இவருக்குச் சொந்த ஊர் திருப்பூர். தொழிற்துறையில் முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே, கலைத்துறையில் தண்டகன் மூலம் தடம் பதிக்க வந்துள்ளார். தண்டகன் எனும் தீய குணம் கொண்ட ஒருவனின் பல கொடூரமான செயல்களினால், இந்தச் சமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்ற மிகச் சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்தத் தண்டகன் திரைப்படம். பார்வையாளர்...