
மாரீசன் விமர்சனம் | Maareesan review
மாரீசன் என்பது ராமாயணத்தில் வரும் பொன்னிற மாயமானைக் குறிக்கிறது. எப்படி மாரீசன் ராமனை ஏமாற்றித் தன் மாயத்தில் விழ வைக்கிறாரோ, அப்படி வேலாயுதம் பிள்ளையை ஏமாற்றி அவரது பணத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார் சிறையிலிருந்து விடுதலையாகும் தயாளன். மாரீசனின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.
படத்தின் நாயகன், வேலாயுதம் பிள்ளையாக நடித்துள்ள வடிவேலு தான். திரையில் அவரது பெயர்தான் முதலில் வருகிறது. வடிவேலுவின் குணசித்திர நடிப்பை, மாமன்னனில் மாரி செல்வராஜ் அழகாக வெளிக் கொண்டு வந்திருப்பார். நடிப்புப் பேரரக்கனான ஃபகத் ஃபாசிலையும், வடிவேலுவையும் முழுப் படத்திலும் காட்சிகளில் ஒன்றாகக் கொண்டு வந்தால் எப்படியிருக்கும் என்ற புள்ளியில்தான் மாரீசன் தொடங்கியதாக இயக்குநர் சுதிஷ் சங்கர் கூறியுள்ளார். அவர்கள் சந்திக்கும் புள்ளியில் தொடங்கும் சுவாரசியம், இடையில் கொஞ்சம் திகட்டுமளவு மெல்ல நிதா...















