Shadow

Tag: 2D Entertainment

எளிய மக்களைக் காக்கும் சூரன் – ‘ஜெய் பீம்’

எளிய மக்களைக் காக்கும் சூரன் – ‘ஜெய் பீம்’

சினிமா, திரைச் செய்தி
சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம், இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இயக்குநர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். இப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம், பழங்குடி இனத்தைச் சேர்ந்த தம்பதியான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைது செய்யப்பட...
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
யார் ஆண்டாலும் கவலையில்லாமல் வாழ கெட்டப் பய காளியால் 1978 இல் முடிந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில், யார் ஆண்டாலும் அவர்களால் ஒரு பயனும் இல்லையென்ற விரக்தியிலேயே மக்கள் வாழ்கின்றனர். படத்தின் மையப்பகுதியாக அந்த விரக்தியே உழல்கிறது. பூச்சேரி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த குன்னிமுத்து என்பவர் வளர்க்கும் காளை மாடுகளான வெள்ளையனும் கருப்பனும் காணாமல் போய் விடுகிறது. அவை சமூகத்தில் ஏற்படுத்தும் சலசலப்பைப் பற்றியும், அச்சலசலப்பு, மாடுகள் கிடைக்க எந்த அளவு உதவின என்பதாகப் பயணிக்கிறது படத்தின் திரைக்கதை. அரசியல் நையாண்டி தான் படத்தின் ஜானர். 'இன்ஜினியரிங் படித்த பரோட்ட மாஸ்டர்கள் தேவை' என ஒரு போர்டின் மூலம் போகிற போக்கில் சமூக அவலத்தை நையாண்டி செய்திருந்தாலும், சில காட்சிகளை வலிந்து திணித்துள்ளனர். உதாரணத்திற்கு, பெட்ரோல் விலை ஏற்றிக் கொண்டே உள்ளனர் என்பதால் மண்திண்ணி என்பவர் தனது டிவிஎஸ் 50-ஐ...
“காணாமல் போன 2 காளைகளைத் தேடி!” – இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

“காணாமல் போன 2 காளைகளைத் தேடி!” – இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

சினிமா, திரைச் செய்தி
அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப். 15) நடிகர் சூர்யா வெளியிட்டார். எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கை பற்றி நையாண்டித்தனத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், செப்டம்பர் 24ஆம் தேதி அன்று, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ ஒரு கிராமீய வாழ்வியலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் திரைப்படம். மனிதநேய உணர...
சூரரைப் போற்று – ஹிந்தி ரீமேக்!

சூரரைப் போற்று – ஹிந்தி ரீமேக்!

சினிமா, திரைச் செய்தி
'சூரரைப் போற்று' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய‌ நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான, 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனமும், அபூன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனமும் இணைந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்தப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபுன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் ஆகியவை இணைந்து சூரரைப்ப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கினைத் தயாரிக்கக் கூடாது எனவும், ஹிந்தி ரீமேக் படத்தின் பணிகளுக்கு உடனடியாக தடை விதிக்குமாறும் சென்னை உய...
பொன்மகள் வந்தாள் விமர்சனம்

பொன்மகள் வந்தாள் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகள் மீது நடக்கப்படும் பாலியல் வன்முறையினால், அக்குழந்தைகளுக்கு ஏற்படும் வாழ்நாள் மன அதிர்ச்சியைப் (mental trauma) பற்றிப் படம் பேசுகிறது. போலீஸ் எப்படி பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சோடிக்கும் என்பதையும் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. இரட்டைக் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட ஜோதியை, சைக்கோ என முத்திரை குத்தி, 2004 இல் என்கவுண்ட்டர் செய்து விடுகிறது போலீஸ். அந்த வழக்கை மறுவிசாரணைக்குக் கொண்டு வருகிறார் பெட்டிஷன் பெத்துராஜ். இறந்துவிட்ட ஜோதிக்கு ஆதரவாக வெண்பா எனும் வக்கீல் களமிறங்க, 15 வருடத்துக்கும் முன் நிகழ்ந்த உண்மையைப் பார்வையாளர்களுக்குக் கதையாகச் சொல்கிறார் வெண்பா. வெண்பாவாக ஜோதிகா நடித்துள்ளார். பாதி படத்திற்கு மேல், நீதிபதியாக வரும் பிரதாப் போத்தனை, விஜய் டிவி ஜட்ஜ் என நினைத்துக் கொண்டு ஜோதிகா அழுது தீர்க்கிறார். படத்தின் சீரியஸ்னஸை அது நீர்த்துப் போகச் செய்கிறது. 'அந்தக...
“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

சமூகம், சினிமா, திரைத் துளி
திரையரங்கு உரிமையாளர்களின் கடும் அதிருப்திக்கும், கோபத்திற்கும் இடையில், "பொன்மகள் வந்தால்" படம் அமேசான் ப்ரைமில் மே 29 அன்று வெளியாகவுள்ளது. ஓடிடி என்பது சினிமாவிற்கு மாற்றா, இல்லை சினிமா என்பதே தியேட்டரில் பார்த்து மகிழும் ஓர் அனுபவம், அதற்கு எந்தப் பாதிப்பும் மாறாது என விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா தனது படத்தைப் பற்றியும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்தும் பேசியுள்ளார். "எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால் தான் 2டி நிறுவனம் எனக்குப் பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். சில படங்கள் எந்தளவுக்குப் பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொ...
“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

சினிமா, திரைத் துளி
ஓடிடி (OTT) பிளாட்ஃபாரத்தில் நேரடியாக வெளியாகும் முதல் இந்திய மெயின்ஸ்ட்ரீம் திரைப்படம் என்ற பெருமையைப் 'பொன்மகள் வந்தாள்' பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பினைத் தூண்டியுள்ள இந்தப் படத்தைப் பற்றி ஜோதிகா, "இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில்  5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் எப்படித் தங்களுடைய கதாபாத்திரத்துக்குத் தயார் செய்து கொள்கிறார்கள், நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாகக் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் 3 - 4 நீளமான வசனக் காட்சிகள் இருக்க...
45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி

45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி

சமூகம்
புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், 'தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்' என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 45 ஆவது துப்பாக்கி சுடுதல் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, பறந்து சென்ற தட்டுகளைத் துப்பாக்கி தோட்டாக்களால் சுட்டு வீழ்த்தினர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் மற்றும் மிக்ஸடு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் சர்வதேச வீரரான பிரித்விராஜ் தொண்டைமான் சிங்கிள் டிராப் பிரிவில் 50 தோட்டாக்களுக்கு 49 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டைச் சுட்டு வீழ்த்தி புதிய...
ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

சினிமா, திரைச் செய்தி
2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி, ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ந்தது. விழாவில் பேசிய ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா, "ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை ஃபைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸ்ட்க்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்" என்றார். நடிகை சச்சு, "கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். படம் பண்ணுவது சிவக்குமார் ஃபேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் ஆரம்பத்தில் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா ...
உறியடி 2 விமர்சனம்

உறியடி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2016 இல் வெளியான உறியடி மிக ஃப்ரெஷான அரசியல் படமாக ரசிகர்களைக் கவர்ந்தது. பிரித்தாளும் அரசியல்வாதிகள் Vs ஒற்றுமையான மாணவர்கள் என்பதாகப் படம் மறக்கவியலாததொரு அனுபவத்தை அளித்தது. இப்படமும் அப்படியே மனதில் தங்கும். போபால் விஷ வாயு கசிவைக் கண் முன் கொண்டு வந்து மிகப் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளார். மக்களின் உயிரை மயிறுக்குச் சமானமாக நினைக்கும் கொழுத்த தொழிலதிபர்தான் படத்தின் வில்லன். மக்கள் ஏன் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகின்றனர், மக்களுக்கான அரசாங்கம் எப்படி தொழிலதிபருக்காகச் சேவகம் செய்கிறது என்ற குரூரமான யதார்த்தத்தையும் படம் சித்தரிக்கிறது. படம் தொட்டுள்ள களத்தின் தீவிரம் தாங்கமுடியாததாய் உள்ளது. ஆனால், முதற்பாகம் போல் திரைக்கதை அவ்வளவு இன்டென்சாக இல்லை. காரணம், முதற்படத்தில் விஷத்தைக் கக்கும் அரசியல்வாதிகள், கண்ணுக்குத் தெரியாமல் நம் அருகிலேயே உள்ளவர்களாக இருந்த...
உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

சினிமா, திரைச் செய்தி
2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், “இந்த படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தைக் கெடுக்கும். அதுபோன்ற வீரியமுள்ள படைப்பு இது” என்றார். படத்தின் இயக்குநர் விஜய் குமார் பேசுகையில், “இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது; திறமை இருக்க வேண்டும்; டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுள் இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைக் கோவிந்த...
உறியடி 2 – புரையோடிய சாதி அரசியலுக்குத் தீர்வு

உறியடி 2 – புரையோடிய சாதி அரசியலுக்குத் தீர்வு

சினிமா, திரைத் துளி
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி 2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், "உறியடி, உறியடி 2 எடுப்பதற்கான காரணம் என்ன?" என்பதற்கு அழகான ஆழமான பதிலைச் சொல்லி இருக்கிறார். "இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கான காரணம்" என்கிறார். மேலும், "எனக்குக் கம்யூனிசச் சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்பப் பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற ...
குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்

குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்

சினிமா, திரைச் செய்தி
முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி மூவி பஃப் நடத்திய ஃபர்ஸ்ட் கிளாப் எனும் குறும்படப் போட்டியின் முடிவுகள் கோலாகலமாக சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் எழில், இயக்குநர் வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி, இயக்குநர் S.U.அருண் குமார், 2டி எண்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன், திரை விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, படத்தொகுப்பாளர் K.L.பிரவீன், ஒலிப்பதிவாளர் உதயகுமார், இயக்குநர் ஹரி விஸ்வநாத், சென்னை சர்வதேச குறும்பட விழா இயக்குநர் ஸ்ரீனிவாச சந்தானம், காமன் மேன் மீடியா சந்தோஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இவர்கள், இறுதிச் சுற்றுக்குக் குறும்படங்களைத் தேர்ந்தெடுந்தெடுத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. “பார்வையாளர்களைத் திரையரங்கை நோக்கி ஈர்க்க வல்ல புது திறமை...