Shadow

Tag: Hollywood movie vimarsanam in Tamil

டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்

டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்களைக் கொல்ல, எதிர்காலத்தில் இருந்து இயந்திரங்களால் பூமிக்கு அனுப்பப்படும் கொலை இயந்திரங்களே டெர்மினேட்டர்கள். 1984 இல் தொடங்கிய 'டெர்மினேட்டர்' தொடரின் எல்லாப் பாகங்களுக்கும் அநேகமாய் ஒரே கதை தான். என்ன செய்தாலும் அழிக்க முடியாத டெர்மினேட்டர் எனும் அதி நவீன வில்லனுக்கும், என்ன செய்தாவது டெர்மினேட்டர் கொலை செய்ய நினைக்கும் டார்க்கெட்டைக் காப்பாற்ற நினைக்கும் எதிர்கால மனிதர்கள் அனுப்பும் கலப்பு (ஹைப்ரிட்) மனிதனுக்கும் இடையே நடக்கும் துவந்த சண்டையே படத்தின் கதை. 1991 இல் வந்த 'ஜட்ஜ்மென்ட் டே' படம் இன்று பார்த்தாலும் ரசிக்க முடியும். ஆனால், தொடர்ந்து எடுக்கப்படும் தொடர் படங்களில், கதையில் புதிய விஷயங்கள் ஏதும் சேர்க்கப்படாதது, இந்தத் தொடர்ப்படங்களின் மிகப்பெரிய பலவீனம். இப்படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஆனால், இம்முறை ரேவ்-9 எனும் அதிநவீன டெர்மினேட்டரால் இரு உர...
அன்னபெல் – கம்ஸ் ஹோம் விமர்சனம்

அன்னபெல் – கம்ஸ் ஹோம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் செல்வது என்பார்களே அப்படி ஓர் அனுபவம் தான் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு பேய்படம் பார்ப்பதும். அந்த இரவில் அந்த அமைதியில் அந்த திகிலில் ஜிலீரென நம்முன் வந்து நிற்கும் அந்தப் பேயை நினைத்துப்பாருங்கள். கற்பனை செய்து பார்க்கவே ஜிலீரென்று இல்லை! அன்னபெல் - கம்ஸ் கோம் நள்ளிரவு காட்சிக்கு முன்பதிவு செய்யும் போது என்னையும் சாண்டியையும் தவிர அரங்கில் வேறு யாரும் முன்பதிவு செய்திருக்கவில்லை. ஒருவேளை கடைசிவரை யாருமே முன்பதிவு செய்யாதிருந்தால் அந்த அனுபவம் இன்னும் திகிலாக இருந்திருக்கும். விதி வலியது. பாதி அரங்கம் நிறைந்திருந்தது. AMC Dolby Sound system உடனான அரங்கம். இசையின் துல்லியமும் உச்சத்தில் இருக்கும். காஞ்ஜூரிங் சீரஸ் பார்க்கும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், இவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டவை என்பது தான். எட் ...
டாய் ஸ்டோரி 4 விமர்சனம்

டாய் ஸ்டோரி 4 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
"நட்புன்னா என்ன?" - ஃபோர்க்கி "நானும், நீயும்தான்" - வுட்டி "குப்பையா?" - ஃபோர்க்கி மேலே உள்ள அந்த இமேஜும், இந்த வசனங்களும் தான் ஒட்டுமொத்த படத்தின் சாராம்சமே! போனி எனும் சிறுமி, குப்பைத் தொட்டியில் வீசப்படும் ஃபோர்க் வகை ஸ்பூனில் இருந்து ஒரு பொம்மையைச் செய்கிறாள். அந்த பொம்மைக்கு உயிர் வந்துவிடுகிறது, ஆனாலும் அது தன்னை ஒரு பொம்மையாக ஏற்றுக் கொள்ள முடியாமல், தானொரு குப்பைதானே என மனமுடைந்து, குப்பைத் தொட்டியைத் தேடி அதில் சென்று விழ சதா முயன்று கொண்டே இருக்கிறது. ஃபோர்க்கி விழும் ஒவ்வொரு முறையும், டாய் ஸ்டோரி 1,2,3 பாகங்களின் நாயகன் ஷெரிஃப் வுட்டி, ஃபோர்கியை சிறுமி போனியிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறான். ஒருமுறை ஓடிக் கொண்டிருக்கும் வேனில் இருந்து ஃபோர்க்கி வெளியில் குதித்துவிடுகிறது. போனிக்கு ஃபோர்கியைப் பிடிக்கும் என்பதால், ஃபோர்கியை மீட்க வுட்டியும் வேனில் இருந்து குதிக்கிறான். வுட்...
தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என்ன செய்யும் என்ற முதல் பாகத்தின் கதைதான், கலகலப்பான இரண்டாம் பாகத்தின் கதையும். மேக்ஸ், ட்யூக், கிட்ஜெட், ஸ்னோ பால் என தி சேக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் படத்தில் வந்த பிரதான கதாபாத்திரங்கள் அப்படியே வருகின்றன. மேக்ஸையும், ட்யூக்கையும் வளர்க்கும் கேட்டிக்குக் கல்யாணமாகி, லியாம் எனும் குழந்தையும் பிறக்கிறது. கைக்குழந்தையான லியாமிடம் மேக்ஸ் படும்பாடு கொஞ்சம் நஞ்சமில்லை. பின், லியாம் கொஞ்சம் வளர்ந்ததும், அவர்களுக்குள் பிரிக்கவியலாப் பந்தம் உருவாகிறது. குழந்தைகளுக்கும், செல்லப்பிராணிகளுக்குமான உறவு மிகவும் அலாதியானவை. படம் முடிந்ததும், சில அழகான லைவ் ஃபூட்டேஜையும் போட்டு அசத்துகின்றனர். படத்தில் மொத்தம் மூன்று கிளைக்கதைகள். கேட்டி தனது குடும்பத்தோடு ஒரு பண்ணை வீட்டுக்குச் சுற்றுலா போக, பயந்தாங்க...
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் வில்லன் (!?) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன பாதிக்கும் மேற்பட்ட மனித இனத்தை மீட்க, எஞ்சியிருக்கும் அவெஞ்சர்ஸ் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். இறுதியில் சூப்பர் ஹீரோகளுக்கே வெற்றி! முடிவு சுபம் தான் எனினும், அந்த வெற்றியை அடைய அவர்கள் மேற்கொள்ளும் அந்த உணர்ச்சிகரமான பயணம், இந்தப் படத்தைத் திரையுலக வரலாற்றின் மிக முக்கியமான படமாக உயர்த்துகிறது. ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில், சூப்பர் ஹீரோ படம் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும். அவெஞ்சர்ஸில் சிலர் அதி சக்தி படைத்தவர்கள், சிலர் மிகவும் புத்திசாலிகள், சிலர் நவீன உபகரணங்களுடன் தங்கள் பராக்கிரமத்தை உயர்த்திக் கொண்டவர்கள். அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு புள்ளி என்றால், ஒரு குடும்பமாக இணைந்து உலகைக் காக்கவேண்டுமென்ற அவர்களது எண்ணமே. எத்தனை புரிதலின்மைகள் உருவாகி உரசிக் கொண்டாலும், இறுதியில் ஒற்ற...
கேப்டன் மார்வெல் விமர்சனம்

கேப்டன் மார்வெல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' படத்தில் தானோஸினை மண்ணைக் கவ்வச் செய்யும் போகும் சக்தி எது? கேப்டன் மார்வெல் என்ற க்ளூவினை 'அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார்' படத்தில் கொடுத்திருப்பார்கள். யார் அவர், அவரது சக்தி என்ன போன்ற விஷயங்களுக்குப் பதிலாக வந்துள்ளது கேப்டன் மார்வெல் படம். மார்வெலின் கதை சொல்லும் பாணிக்கு, இப்படம் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், கேப்டன் மார்வெல் தானோஸ்க்குப் பெரும் சவாலாக இருப்பார் எனும் நம்பிக்கையைத் தருகிறது. யூ.எஸ். ஏர் ஃபோர்ஸில் பைலட்டாக இருக்கும் கெரோல் டென்வெர்ஸ் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என நான்-லீனியராகச் சொல்லியுள்ளனர். வொண்டர் வுமன் படத்தில் கேல் கேடோட் கதாபாத்திரத்தின் நோக்கம் மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், கேப்டன் மார்வெலான ப்ரீ லார்சனுக்கு அந்தக் கொடுப்பிணை வாய்க்காததுதான் படத்தின் ஈர்ப்பளவில் சுணக்கம் ஏற்படுவதற்குக் காரணம்...
மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம்

மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து. அத்தகைய சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்ற கர்வம் கொண்ட இங்கிலாந்து அரசின் தலைநகரமான லண்டன் ஒருவேளை நகரத் தொடங்கினால்? ஆம், முழு நகரமே பெரிய வாகனம் போல் சக்கரங்களில் நகரத் தொடங்கிவிட்ட காலத்தில், லண்டன் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதுதான் படத்தின் கதை. பிலீப் ரீவ், 2001 இல் எழுதிய 'மார்டல் இன்ஜின்ஸ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. கதிர்வீச்சின் பாதிப்பில் நிலமும் நீரும் பாழாகி விட, மக்கள் ராட்சஷ வாகனங்களில் அடைக்கலம் புகுகின்றனர். அதற்கும், 'அழியக்கூடிய இயந்திரங்கள்' எனப் பொருள்படும்படி தலைப்பு வைத்துள்ளனர். எல்லாமும் அழியும், இங்கிலாந்து பேரரசிலும் சூரியன் அஸ்தமிக்கும் என்பதே படத்தின் உட்கரு. ஒரு பெரும் நகரமே சக்கரங்களில் பயணிக்கிறது என்ற மிகு கற்பனையை மிக அற்புதமாகத் திரையில் கொண்ட...
கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம்

கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம். மயிர்க்கூச்சு என்றால் பயத்தினாலோ, குளிரினாலோ உடலிலுள்ள முடிகள் குத்திட்டு நிற்கும் நிலை. சானியும் சாமும், பொக்கிஷம் எனக் கருதி ஒரு பெட்டியைத் திறக்க, ஒரு புத்தகம் கிடைக்கிறது. அதைத் திறந்ததும் ஸ்லாப்பி எனும் டம்மி பொம்மை திடீரென அவர் முன் தோன்றுகிறது. அதன் பாக்கெட்டில் உள்ள சிறு பேப்பரை எடுத்து, அதிலுள்ள மந்திரத்தை உச்சரித்து, தெரியாத்தனமாக ஸ்லாப்பிக்கு உயிர் கொடுத்துவிடுகின்றனர். உயிர் கிடைத்ததால் ஹேப்பியாகும் ஸ்லாப்பி, சானியிடமும், அவள் சகோதரி சாராவிடமும், தான் அவர்களது சகோதரன் என்றும், நாமெல்லாம் ஒரு குடும்பம் என்றும், அது தன் வீடு என்றும் சொல்கிறது. ஸ்லாப்பியின் மந்திர சக்தியும், அதை அது பயன்படுத்தும் விதத்தாலும் பயப்படும் சாரா, அந்த உயிருள்ள டம்மி பொம்மையை வீட்டில் இருந்து அகற்ற நினைக்கிறது. ஸ்லாப்பியோ மீண்டும் தோன்றி, தனக்கு ஓ...