Shadow

Tag: Hollywood movie vimarsanam in Tamil

SISU விமர்சனம்

SISU விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதையின் களம் வடக்கு ஃபின்லாந்தில் லேப்லாந்து (Lapland) எனும் பகுதியில் நிகழ்கிறது. ஒரு ஃபின்லாந்து வீரன், 30 பேர் கொண்ட நாஜிப்படையை எதிர்கொள்கிறான். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன், இரண்டு விஷயங்கள் தெரிந்திருந்தால் படத்தைப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும். முதலாம் சோவியத் – ஃபின்னிஷ் போரில், 30 நவம்பர் 1939 முதல் 13 மார்ச் 1940 வரை, ரஷ்யாவைத் தனி ஆளாக எதிர்கொண்டது ஃபின்லாந்து. மூன்று மாதங்கள் நடந்த அப்போரின் பொழுது, குளிர் மைனஸ் 43° செல்ஷியஸில் வாட்டியதால், அப்போருக்கு ‘குளிர்காலப் போர் (Winter War)’ எனப் பெயரிடப்பட்டது. பின், இரண்டாம் சோவியத் – ஃபின்னிஷ் போரில், ஃபின்லாந்தும் ஜெர்மனியும் தோளோடு தோள் சேர்ந்து, சோவியத் ரஷ்யாவை 1941 முதல் 1944 வரை எதிர்த்துப் போரிட்டது. செப்டம்பர் 1944 இல், ரஷ்யாவுடன் உடன்படிக்கை ஏற்பட்டு, ஜெர்மனியப் படைகளை ஃபின்லாந்து எல்லையை விட்டுத் துரத்தச் சம்மதி...
Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்

Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் டேபிள் டாப் விளையாட்டின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட படமிது. டன்ஜியன் என்றால் பாதாளச் சிறை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் பதினான்காம் நூற்றாண்டில் வழக்கத்திற்கு வந்த இந்த ஆங்கிலச் சொல், ஃப்ரெஞ்சு சொல்லின் மூலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘அரண்மனையின் கோபுரம்’ என்ற பொருளிலேயே உபயோகப்படுத்தியுள்ளனர். காலப்போக்கில், பாதாளச் சிறையைக் குறிக்கும் சொல்லாக டன்ஜியன் மாறியுள்ளது. டிராகன் என்பது ஐரோப்பியத் தொன்மவியலில் வரும் நெருப்பைக் கக்கும் அமானுஷ்ய விலங்காகும். இறந்துவிடும் தன் மனைவியின் உயிரை மீட்பதற்காகத் தேவைப்படும் ஒரு மந்திரப்பதக்கத்தைத் திருட முற்படுகிறான் எட்கின் டார்விஸ். தோழி ஹோல்கா கில்கோர், இளம் மந்திரவாதி சைமன் ஒளமர், ஃபோர்ஜ் எனும் ஏமாற்றுக்காரக் கலைஞர், சிவப்புச் சூனியக்காரி சோஃபினா ஆகியோருடன் குழுவாகச் சென்று, மந்திரப்பதக்கத்தைத் திருடிவிட்டாலு...
ஜான் விக் 4 விமர்சனம்

ஜான் விக் 4 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ரஷ்யத் தொன்மவியலின்படி, பாபா யாகா என்பவர் யாராலும் கொல்லப்பட முடியாத மிகவும் ஆபத்தான மனிதர். அவரது பூர்வீகமும் எவருக்கும் தெரியாது, அவரைப் புதைத்தாலும் அவர் மீண்டும் வருவார் என்பது தொன்மவியலின் நம்பிக்கை. அத்தகைய புதிரான குணாதிசயங்களை ஜான் விக்கும் பெற்றிருப்பதால், பாபா யாகா என குற்றவியல் உலகால் அச்சத்துடன் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார். அப்படிப்பட்ட அதி பயங்கரமான ஜான் விக்கின் தலைக்கு, 20 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 40 மில்லியன் டாலர் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முதல் பாகத்தில், ஜான் விக்கின் தலைக்கு விலை 2 மில்லியன் அமெரிக்க டாலர்தான். இப்படத்தில், அவரது உயிருக்கான விலைமதிப்பு 200 மடங்காகக் கூடுகிறது. அந்தப் பணத்திற்கு ஆசைப்பட்டு, உலகின் மூலை முடுக்கிலுள்ள வெகுமதி வேட்டையர்கள் பெரும்பாலானோர், ஜான் விக்கைக் கொல்ல சாரை சாரையாகக் கிளம்புகிறார்கள். ஜான் விக் எப்படி இந்தச் சி...
Shazam! Fury of the Gods விமர்சனம்

Shazam! Fury of the Gods விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
டிசி காமிக்ஸின் ஷசாம் எனும் படம், 2019 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பில்லி பேட்ஸன் எனும் பதின்ம வயது சிறுவனுக்கு எதிர்பாராதவிதமாக, சூப்பர் ஹீரோவாகும் மந்திர சக்தி கிடைக்கிறது. பதின்ம வயது மனத்துடன் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தைக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் மையக்கரு. முதற்பாகத்தில், தத்தெடுக்கப்படும் புதிய குடும்பத்தில் தன்னை ஓர் அங்கமகாக இணைத்துக் கொள்ளாமல், தன் பெற்றோரைத் தேடியவண்ணமே இருப்பான் பில்லி. இப்படத்தில், ‘குடும்பம்தான் எல்லாம்’ என தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மீது அதீத பாசத்தோடு இருக்கிறான் பில்லி. விரைவில் பதினெட்டு வயது எட்டப் போகும் தன்னைக் குடும்பத்தை விட்டு அனுப்பிவிடுவார்களோ, மீண்டும் குடும்பத்தைப் பிரியவேண்டுமோ என கவலையிலே உள்ளான் பில்லி. ஷசாம் படத்தின் அழகே, சிறுவன் பில்லி தனக்குக் கிடைக்கும் சக்திகளைத் தன் சகோதர சகோதரிகளுக்குப் பகி...
65 விமர்சனம்

65 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆறரை கோடி வருடங்களுக்கு முன், சோமாரிஸ் எனும் கிரகத்தில் இருந்து, ஒரு விண்கப்பல் கிளம்புகிறது. பயணத்தின் போது சிறுகோளின் (Asteroid) துகள் மோதி, மனித இனம் தோன்றியிராத பூமியில் வந்து விழுகிறது அக்கப்பல். கப்பலைச் செலுத்தி வந்த மில்ஸும், கடுங்குளிரியல் உறக்கத்தில் (Cryogenics sleep) இருக்கும் கோவா எனும் சிறுமி மட்டும் உயிர் பிழைக்கின்றனர். கடுங்குளிரியல் உறக்கத்தில் இருக்கும் மற்ற பயணிகள் அனைவரும் இறந்து விடுகின்றனர். மில்ஸும் கோவாவும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள். அவர்கள் இருவரும் அந்தக் கோர விபத்தில் இருந்து மீண்டு எப்படி டைனோசர் போன்ற கொடிய மிருகங்களிடம் இருந்து உயிர்பிழைத்துத் தப்பிக்கின்றனர் என்பதே படத்தின் கதை. ஹாலிவுட் படங்களில் ஒரு டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துவார்கள். இயற்கைப் பேரழிவு என்றாலும், உயிர்பிழைக்கும் சர்வைவல் த்ரில்லர் என்றாலும் சரி, பிரதான பாத்திரங்களுக்கிடையேயான பாசத்தைம் ப...
அவதார் 2 விமர்சனம்

அவதார் 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பலவருட கனவும், பதிமூன்று வருட உழைப்பும், அவதார் 2 ஆகத் திரை கண்டுள்ளது. ஒரு முழுமையான படமாகப் பார்த்தால் எந்தவிதத்திலும் குறைவில்லாத திரைப்படம் அவதார். எந்த ஒரு தருணத்திலும் நம் கண்களைத் திரையை விட்டு அகலச் செய்யாத காட்சிகள். உணர்வுபூர்வமான பல தருணங்கள் என்று சிற்சில மாயாஜாலங்கள் நிகழாமல் இல்லை. ஆனாலும், அவதார் ஒன்றுடன் சடுதியில் நிகழ்ந்துவிட்ட இணைப்பு அவதார் இரண்டில் நடக்கவில்லை என்பது மட்டுமே உள்ளுக்குள் இருக்கும் ஒரே உறுத்தல். மூன்றே கால் மணி நேரப்படத்தில், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்குமான இணைப்புக் கதையாகச் சொல்லப்படும் கதையை அவசர அவசரமாக சொல்லிச் சென்றது கூட அந்த இணைப்பை உருவாக்கத் தவறியிருக்கலாம். அத்தனை நாவிக்கள் செத்துக் கிடக்கும்போது, நாயகன் தன் குழந்தையை மட்டும் தேடிப் பரிதவிக்கும் காட்சியினால் கூட அந்த விலகல் ஏற்பட்டிருக்கலாம். காரணம், நாயகன் தன் குழந்தைக்கு அப்பன...
தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடவுள்களைக் கொல்லும் கோர், நிழல் உருவங்களை ஏவி புது ஆஸ்கார்டின் குழந்தைகளைக் கடத்தி விடுகிறான். நிழல் உலகில் சிறைப்பட்டிருக்கும் குழந்தைகளை தோர் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்க்குப் பிறகு, மார்வெலின் படங்களில் அவர்களது மேஜிக் மிஸ்ஸாகிறது. மாயாஜாலங்களை மட்டுமே நம்பிக் களங்கமிறங்குவதை மார்வெல் என்டர்டெயின்மென்ட் தவிர்க்கவேண்டும். டிசி என்டர்டெயின்மென்டில் இருந்து கிறிஸ்டியன் பேலை மார்வெல் என்டர்டெயின்மென்டின் வில்லனாக வருகிறார். தானோஸ் போலொரு வில்லனுக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் புது வில்லன்கள் யாரும் அச்சுறுத்தவோ, ஈர்க்கவோ இல்லை. கிறிஸ்டியன் பேல் போலொரு நடிகரை வில்லனாக ரசிக்கத்தக்கும் வகையில் பயன்படுத்தாதது படத்தின் குறை. ‘தோர்: ரக்னோரக்’ படத்தை இயக்கிய டைக்கா வாட்டிட்டி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முயற்சி செய்திர...
Afterlife of the party விமர்சனம்

Afterlife of the party விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடப் பார்ட்டிக்குச் செல்லும் கேஸி, பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். இறந்த கேஸி, சொர்க்கத்திற்கும் செல்லாமல், நரகத்திற்கும் செல்லாமல் இடைப்பட்ட ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். ஐந்து நாளில், அவளது மரணத்தில் பாதிக்கப்பட்ட அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்க்கையில் கார்டியன் ஏஞ்சலாக இருந்து உதவினால், மேலே சொர்க்கத்திற்குச் செல்லலாம். இல்லையேல் கீழே நரகத்திற்குச் செல்ல வேண்டி வருமென்று கேஸிக்குச் சொல்லப்படுகிறது. கேஸியால், எவ்விதச் சக்திகளுமற்ற கார்டியன் ஏஞ்சலாக இருந்து தன் தோழிக்கும், அம்மாவுக்கும், அப்பாவுக்கும் உதவ முடிந்ததா என்பதே படத்தின் கதை. இயக்குநர் ஸ்டீஃபன் ஹெரெக், தத்துவார்த்தமாகவும் இறங்காமல், முழுநீள நகைச்சுவையாகவும் இல்லாமல், சென்ட்டிமென்ட்டையும் கூட்டாமல், அனைத்துக்கும் பொதுவானதொரு இடைவெளியில் படத்தை...
Babel (2006) விமர்சனம்

Babel (2006) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
புகழ் பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநர்,அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டு (Alejandro Iñárritu) தயாரித்து, இயக்கிய திரைப்படம். இதே இயக்குநர், “மரணம்” என்ற தீமை மையமாக கொண்டு இயக்கிய 'அமரோஸ் ஃபெரோஸ்', '21 கிராம்ஸ்' ஆகிய படங்களின் தொடர்ச்சி ட்ரையாலஜியாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. பேபல் படம் ஹைப்பர்-லிங்க் திரைக்கதையைக் கொண்டது. அதாவது, சம்மந்தமே இல்லாத நாலைந்து கிளைக் கதைகளை க்ளைமாக்ஸில் ஏதோ ஒரு வகையில் லிங்க் செய்து ஒற்றைக்கதையாக மாற்றும் திரைக்கதை வடிவத்தை ஹைப்பர்-லிங்க் என்பார்கள். போன வருடம் தமிழில் வந்த சூப்பர் டீலக்ஸ் போல! திரைப்படம், பைபிளில் கூறப்படும் ஒரு நாட்டார் கதையுடன் துவங்குகிறது. முன்பெல்லாம் மனிதர்கள் உலகம் முழுக்க ஒரே மொழியைப் பேசிக் கொண்டிருந்தனர். நோவாவின் வழித் தோன்றலான பாபிலோன் என்பவர் கடவுள் வாழும் சொர்க்கத்துக்கு மனிதர்கள் எல்லாரும் போவதற்காகப் பூமியிலிருந்து வான...
Untraceable (2008) விமர்சனம்

Untraceable (2008) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடந்த ஒரு வாரம் பத்து நாட்களாக, ஃபேஸ்புக்கில் பெரியாரியம், பெண்ணியம், பாலியல் சுதந்திரம் குறித்து இரண்டு முற்போக்கு குழுக்கள் விவாதம் செய்து வருகின்றன. பரஸ்பரம் குற்றம் சாட்டியும் வருகின்றன. சில அந்தரங்கப் பேச்சுகள், வீடியோக்கள் என விவாதம் தனிப்பட்ட தாக்குதலைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த இரண்டு குழு பற்றியும் எனக்குப் பெரிய அக்கறை இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் தந்தை பெரியாரைத் தனது துணைக்குக் கூப்பிட்டுக் கொள்கிறார்கள். அது தான் வருத்தம். பாவம் பெரியார். இந்த இரண்டு குழுவைச் சார்ந்தவர்கள் இதற்கு முன்பும் பெண்ணியம், சுதந்திரம், பகுத்தறிவு என பல தலைப்புகளில் மிகச் சிறப்பான பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதிகம் கவனிக்கப்படாத அந்தப் பதிவுகளை விட, பெண்ணுடல், ஆபாசப் பேச்சு என பதிவுகள் வந்ததும் அங்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளும் பின்னூட்டங்களும் குவிந்து வருகிறது. அங்கு லைக்...
The Sum of All Fears விமர்சனம்

The Sum of All Fears விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஜேக் ரையன் என்பவர் ஜேம்ஸ் பாண்ட், ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல ஒரு சாகசகார ஸ்பெஷல் ஏஜென்ட் கதாபாத்திரம். டாம் க்ளென்ஸி எனும் எழுத்தாளர் படைத்த கற்பனை கதாபாத்திரம் இது. கதைப்படி, ஜேக் ரையன், அமெரிக்காவின் உளவுத்துறையில் டேட்டா அனலிஸ்ட்டாக வேலை செய்பவன். உலகெங்கும் நடக்கும் அசாதாரணச் செயற்பாடுகளைக் கண்காணித்து அது குறித்து அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் அளிக்கும் வேலை. ஆனால், இவனுக்கு டெரரான ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அமெரிக்காவின் மெரைன் (கடல் சார்ந்த) ராணுவத்தில் பணியாற்றி, விபத்தால் முதுகுதண்டு உடைந்து குணமான பிறகு மிலிட்டரி அனலிஸ்ட்டாக மாறியவன். இந்தக் கதாபாத்திரத்தை வைத்து டாம் க்னென்ஸி பல கதைகள் எழுதியிருக்கிறார். அனைத்தும் பெரிய ஹிட். இந்தக் கதைகள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன. அந்த சீரிஸில், 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் "த சம் ஆஃப் ஆல் ஃபியர்ஸ்". வழக்கமான ஆக்‌ஷன் படமாக இல்லாமல், ப...
தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பாறையில் கடல் அலைகள் மோதி, அந்த நீரலைகள் கீழே விழும் பொழுது 'தி இன்விசிபிள் மேன்' எனப் பெயர் போடுவதே அட்டகாசமாக உள்ளது. மலையுச்சியில் இருக்கும் பங்களாவில் இருந்து செசிலியா காஸ் எனும் பெண், தப்பிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்குத் தொற்றிக் கொள்ளும் பதற்றம் படம் முழுவதுமே தொடர்கிறது. பல இடங்களில், பெஞ்சமின் வால்ஃபிஷின் பின்னணி இசை மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது. அந்தத் தொந்தரவு, செசிலியா காஸிற்குக் கண்ணுக்குப் புலனாகாத அவளது காதலன் ஆட்ரியன் தரும் டார்ச்சர். தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடும் ஆட்ரியன், தான் கண்டுபிடித்த மாயமாகும் உடையை அணிந்து கொண்டு, செசலியா காஸ் யாருடனெல்லாம் நெருக்கமாக இருக்கிறாளோ அவர்களிடம் இருந்தெல்லாம் பிரிக்கிறான். மனதளவில் அவளை முடக்கும் முயற்சியில், செசிலியாவின் சகோதரியையே கொன்று அந்தப் பழியையும் செசிலியா மீது போடுகிறான் ஆட்ரியன். கண்ணுக்குத் தெரியாத ஒ...
தி க்ரட்ஜ் விமர்சனம்

தி க்ரட்ஜ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘ஜு-ஆன்: தி க்ரட்ஜ்’ என 2002 இல் வெளிவந்த ஜப்பானியப் படத்தின் ரீமேக்காக, ஆங்கிலத்தில் ‘தி க்ரட்ஜ்’ எனும் படம் 2004 இல் வெளியானது. அதைத் தொடர்ந்து, ‘தி க்ரட்ஜ் 2 (2006)’, ‘தி க்ரட்ஜ் 3 (2009)’ ஆகிய படங்கள் வெளிவந்தன. ஜப்பானில் இருந்து ஒரு சாபத்தைத் தன்னோடு அமெரிக்கா கொண்டு வருகிறாள் நர்ஸ் ஃபியோனா லேண்டர்ஸ். இப்படத்தினை, 2004 இல் வெளிவந்த ‘தி க்ர்டஜ்’ படத்தின் இணைப்பாகமாகக் (sidequel) கொள்ளலாம். 2004 இல் லேண்டர்ஸ் குடும்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது.அதை விசாரிக்க வந்த போலீஸ்காரர் மீதும் சாபம் படிகிறது. பின், அந்த வீட்டை யார் யாரெல்லாம் மிதிக்கிறார்களோ அவர்கள் அனைவரின் மீதும் சாபம் படிகிறது. அப்படி, 44 எனும் இலக்கமிட்டு அந்த வீட்டிற்குச் சென்று, அதன் துர் அமானுஷ்யத்தைக் கண்டு அஞ்சும் லோர்னா, காரில் தப்பித்துச் செல்ல முற்படுகையில் விபத்தில் எரிந்து போகிறாள். அவ்வூருக்கு 2006 இல் மாற்றலா...
ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர். எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது. படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் அந்த நடிகை, ஸ்பென்சர் மிங் வடிவத்தை ஏற்கும் பொழுதும், பின் முதியவர் எட்டி அவ்வடிவத்தை எடுக்கும் பொழுதும் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார். திரையரங்கில் குழந்தைகள் ரசித்து மகிழும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நெருப்புக்கோழிகள் துரத்தும் பொழுது தப்பிக்கும் சாகசம், நகர...
சார்லிஸ் ஏஞ்சல்ஸ் விமர்சனம்

சார்லிஸ் ஏஞ்சல்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கெலிஸ்டோ எனும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை ஆயுதமாக மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அவை திருடப்படுகின்றன. அது தீயவர்களின் கையில் சிக்காமல் தடுக்கின்றனர் சார்லிஸ் ஏஞ்சல்ஸ். தொலைக்காட்சித் தொடராகத் தொடங்கப்பட்ட பொழுது, கவர்ச்சியில் தாராளமாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. 2000 இலும், 2003 இலும், இத்தொடர் படமாக எடுக்கப்பட்ட பொழுது கேமரூன் டயஸ், ட்ரூ பேரிமோர், லூசி லியோ ஆகியோரையும் கூடக் கவர்ச்சிக்கென சில காட்சிகளில் பயன்படுத்தியிருந்தனர். 'இப்படத்தில் அத்தகைய குறைகள் இருக்காது' என இயக்குநர் எலிசபெத் பேங்க்ஸ் உறுதியளித்திருந்தாலும், படத்தின் தொடக்கக் காட்சிகளில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெண் இயக்குநர் என்பதால், ஒரு பெண்ணின் பார்வையில், ஏஜென்ட்களாக இருப்பதின் சங்கடங்கள் போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். தயாரிப்பாளர்களில் ஒருவராகக் களமிறங்கியதோடு, திரைக்கதையையும் எழுதியுள்ள...